பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகா இளைஞர் பிரிவு ஆதரவு தேடாது

13வது பொதுத் தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு ஆதரவு தேட மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி மோகன் விரும்பவில்லை. வேட்பாளாராக தெரிவு செய்யப்படும் யாரையும் அவர் ஆதரிப்பார். இருந்தாலும் தாம் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளாராக நிறுத்தப்பட வேண்டுமா இல்லையா  என்பதை முடிவு செய்யும் பொறுப்பை…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் ‘மிகுந்த ஏமாற்றம்’…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் 'மிகுந்த ஏமாற்றம்' தெரிவித்துள்ளது. அது மலேசிய இந்திய சமூகத்தின் நலன்களைப் புறக்கணித்து விட்டதாக அது கூறியது. "எங்கள் ஏமாற்றம் ஆழமானது, கவலை அளிக்கிறது- அதற்கு அது சொல்லியிருப்பது காரணமல்ல, மாறாக அது சொல்லாமல் விட்டது தான்." "பக்காத்தான் தனது வாக்குறுதிகளில்…

‘மாற்றரசுக் கட்சிகளில் பிகேஆர்தான் பெரிய கட்சியாக இருக்கும், டிஏபி அல்ல’

எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமானால் எதிர்தரப்பில் மிகப் பெரிய கட்சியாக பிகேஆர்தான் இருக்கும் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப் பகுதித் தலைவர் டோனி புவா. பக்காத்தான் ரக்யாட்டில் டிஏபிதான் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மறுத்து அவர்…

BR1M பாரோ மன்னர்களின் செயலைப் போன்றதல்ல : பாத்வா மன்றம்

மத்திய அரசாங்கத்தின் 1மலேசியா மக்கள் உதவி (BR1M) எகிப்திய பாரோ மன்னர்களின் செயல்களைப் போன்றது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறியுள்ளதை தேசிய பாத்வா மன்றம் மறுத்துள்ளது. பிரிமின்வழி அரசாங்கம் பொதுமக்களுக்கான கடமையைத்தான் செய்கிறது என்றும் அதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என்றும் மன்றத் தலைவர் அப்துல்…

மஇகா இளைஞர் பிரிவு: ரித்துவான் தீ மீது உள்துறை அமைச்சு…

Universiti Pertahanan Nasional என்னும் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளர் ரித்துவான் தீ அண்மையில் எழுதிய ஒரு கட்டுரை இந்திய சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகக் கூறிக் கொண்ட மஇகா இளைஞர் பிரிவு அவருக்கு 'ஒரு பாடம்' கற்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சினார் ஹரியானில் கடந்த வாரம்…

இந்திய மலேசியர்கள் யாருடைய ‘வைப்புத்தொகையும்’ அல்ல : எம். மனோகரன்

ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார் ஒரு சுவாரசியமான, என்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில், 13வது பொதுத் தேர்தலின் முடிவு குறித்து ஆருடம் கூறப்படாத நாளோ பொழுதோ இல்லை எனலாம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒன்றைச் சொல்வது பிறகு பல்டி அடிப்பது என்றிருப்பதால் நிறைய ஆதரவை…

பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ பொருளாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்

Fiscal Capital Sdn Bhd என்ற நிறுவனத்தின் வழியாக 60 பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ தலைமைப் பொருளாளர் அப்துல் அஸிம் முகமட் ஜாபிடிக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மீது ஆறு தொலைத் தொடர்பு switch-களை கொள்முதல் செய்ததில் ஏமாற்றியதாகவும் மோசடி செய்ததாகவும் ஆவணங்களைப் போலியாக தயாரித்தததாகவும் 12…

பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் “தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்”

சபா கடலோரப் பகுதியில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து தாங்கள் ஆக்கிரமித்துள்ள கிராமத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதற்குப் படைபலத்தை மலேசியப் போலீசார் பயன்படுத்தினால் எதிர்த்துப் போராடப் போவதாக பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் அறிவித்துள்ளனர். "நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்," என சுலு சுல்தான் என தம்மை சுயமாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ள…

எப்படி காரியத்தைச் சாதிப்பது டாக்டர் மகாதீர் பாணி

"நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்தாலும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த டெண்டர் வழியாக கிடைத்தால் தவிர பெட்ரோனாஸ் குத்தகைகளில் சம்பந்தப்படவே கூடாது" டாக்டர் மகாதீர்: என் புதல்வருடைய பெட்ரோனாஸ் குத்தகைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை மிலோசெவிக்: மலேசிய அரசியலில் மய்யமாக அவர் இருந்த…

அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு பிடிஎன்…

பிடிஎன் என அழைக்கப்படும் தேசிய குடியியல் பிரிவு வழங்கும் சர்ச்சைக்குரிய பயிற்சிகளை அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆதரித்துள்ளார். 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாங்கள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அரசாங்கக் கொள்கைகளை தாமும் தமது சகாக்களும்…

இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு!

கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் மேதகு வே.…

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் (Water Fountain, Brickfields) நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும்  கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல்…

ஆத்திரமடைந்துள்ள டிஏபி நஜிப்புக்கு எதிராக போலீசில் புகார் செய்தது

இஸ்லாம் மீதான டிஏபி நிலை எனக் கூறப்பட்டு சுமத்தப்பட்ட "தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள்" தொடர்பில் பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக டிஏபி இன்று போலீசில் புகார் செய்தது. நஜிப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரமில்லாதவை என அந்தப் புகாரைச் செய்த டிஏபி…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் விடுபட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்

பக்காத்தான் ராக்யாட் தனது  தேர்தல் கொள்கை அறிக்கையில் நீண்ட கால விளைவுகளைக் கொண்ட பல துணிச்சலான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவை மலேசியாவைன் அடித்தளத்தையே முற்றாக உருமாற்றி விடும். என்றாலும் மக்கள் ஒப்பந்தம் மக்கள் நம்பிக்கை எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆவணத்தில் சில அம்சங்கள் விடுபட்டுள்ளன. அது பக்காத்தான் கொள்கைகளுக்கு…

அன்வார்: பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை

பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை, இனங்களையெல்லாம் கடந்து செல்கிறது. அதில், இந்தியர்கள் உள்பட எந்தச் சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்கிறார் அன்வார் இப்ராகிம். பள்ளிகளை எடுதுக்காட்டாகக் குறிப்பிட்ட அன்வார், சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் மிஷனரி பள்ளிகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்றார். “குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே அது குறியாகக் கொள்ளவில்லை. இதுவே-…

கொள்கை அறிக்கையில் 3 மாநிலங்கள் விடுபட்டு விட்டதை பக்காத்தான் ஒப்புக்…

பெட்ரோனாஸிடமிருந்து முழு எண்ணெய் உரிமப் பணம் பெற வேண்டிய மாநிலங்களில் கிளந்தான், திரங்கானு, பாகாங் ஆகியவையும் அடங்கும் என்பதை குறிப்பிடாமல் விட்டு விட்டதை பக்காத்தான் ராக்யாட் இன்று ஒப்புக் கொண்டுள்ளது. "அது தவறாகும். சபா, சரவாக் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களும் என அது வாசிக்கப்பட வேண்டும்,"…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் பிஎன் பதில் பெற…

பக்காத்தான் ராக்யாட்டின் 13வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டவுடன் பக்காத்தான் வாக்குறுதிகளை சிறுமைப்படுத்தும் கருத்துக்களை பிஎன் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் கருத்துக்கள் நாட்டின் முக்கிய நாளேடுகளில் இடம் பெற்றுள்ளன. பக்காத்தான் உறுதிமொழிகள் வெற்று வாக்குறுதிகள் என்றும் தேர்தல் இனிப்புக்கள் என்றும் அவர்கள் வருணித்தனர். ஆக்கப்பூர்வமான கொள்கை…

‘பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை கொள்கைகளை மட்டுமே கொண்டது’

பக்காத்தான் ரக்யாட், அதன் 2013 தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையில்  ஊராட்சித் தேர்தல், தகவல் உரிமைச் சட்டம், சொத்து அறிவிப்பு போன்ற அதன் இலட்சியங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் அவற்றை அது மறந்துவிடவில்லை. கொள்கைவிளக்க அறிக்கை, கொள்கைகளை மட்டுமே கொண்டது. அதில் அவைபோன்ற  முக்கியமான விசயங்கள் ‘விடுபட்டிருப்பதை’ச் சில தரப்பினர்…

ஒப்புதல் அளிக்க புத்ராஜெயாவுக்கு இரண்டு வார காலக்கெடு

பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்புக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடுவை பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. கூட்டரசு அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கத் தவறினால் பினாங்கில் உள்ள இரண்டு நகராட்சி மன்றங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு உண்டு பிரகடனம் செய்யுமாறு…

பெகிர், ஷானாஸுக்கு ரிம 902,200 கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஷானாஸ் ஏ. மஜிட்டின் வழக்குரைஞர்கள் அவரின் முன்னாள் கணவர் சரவாக் முதலமைச்சரின் மகன் மஹமூட் அபு பெகிர் தாயிப் பராமரிப்புச் செலவாக ரிம902,,000-க்கு மேற்பட்ட ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும் என்ற இடைக்கால நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். பிரிட்டனின் கல்வி பயிலும் அவர்களின் மகனின் தங்குமிடம், உணவு, படிப்பு…

அன்வார்: பிரதமர் தேர்வு ஒரு பிரச்னையே அல்ல

பக்காத்தான் ரக்யாட் ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். நேற்று பக்காத்தான் மாநாட்டிலேயே இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்கிறபோது மற்றவர்கள் ஏன் இதை “ஒரு பிரச்னையாக” நினைக்கிறார்கள் என்றவர் வினவினார். “பிஎன் கொள்கைவிளக்க அறிக்கையிலும்கூட…

பிகேஆர் நிகழ்வில் 1மலேசியா என்று கூவி அதிர்ச்சி ஏற்படுத்திய அறிவிப்பாளர்

அண்மையில் ஜாவியில் சாப் கோ மே தினத்தில் கால்-மெரோதோன் போட்டியை ஏற்பாடு செய்ததற்காக நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது பிகேஆர். அதற்காக அதை பிஎன் கடுமையாகக் குறைகூறியிருந்தது. அதைவிட மோசமாக அந்த நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் பிகேஆருக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வின் அறிவிப்பாளர் “1மலேசியா” என்று உரக்கக்…

மலேசிய இழுபறி மீது சுல்தானை எச்சரிக்கிறார் பிலிப்பீன்ஸின் அக்கினோ

மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதமேந்திய தமது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இழுபறியை சுலு சுல்தான் முடிவுக்குக் கொண்டு வரா விட்டால் 'சட்டத்தின் முழு பலத்தையும்' அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பிலிப்பீன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ எச்சத்துள்ளார். சுல்தான் ஜமாலுல் கிராம் lll ஆயுதமேந்திய 30 பேர் உட்பட தமது…