சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி

பெப்ரவரி 21, அனத்துலகத் தாய்மொழி தினம். யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அனைத்துலகத் தாய்மொழி தினம் மலாயா பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் அங்சானா லெக்சர் ஹாலில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 லிருந்து இரவு மணி…

காணொளி குறித்து அம்னோ தலைமைச் செயலாளர் ஆத்திரம்

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்,  நேற்றுத் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு காணொளி சித்திரிப்பதுபோல், பிஎன் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகளை வழங்கியதில்லை என்று மறுத்துள்ளார். விவேகக் கைபேசி வழி தமக்கு அனாமதேயமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அக்காணொளி  மாற்றரசுக் கட்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர். அந்தக்…

50 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கூட்டரசு அரசாங்கம் 50 ஆண்டுகளுக்குமேலாக பினாங்கைப் புறக்கணித்து வந்திருப்பதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார். “கூட்டரசு அரசாங்கம் பினாங்கில் பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்ததில்லை. துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றிலும் முதலீடு செய்ததில்லை”, என லிம் இன்று டவுன் ஹாலில் (நகராட்சி மண்டபத்தில்)  "Penang…

பிஎன் ஆதரவு இணையத் தளத்திலிருந்து EIU அறிக்கை எடுக்கப்பட்டது

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்மையில் பெர்னாமா வெளியிட்ட அறிக்கை இரண்டு வாரங்களுக்கும் முன்பு இன்னொரு செய்தி இணையத் தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான கட்டுரையைப் போன்று உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி வெளியான அந்த பெர்னாமா கட்டுரை The Choice எனப்படும் பிஎன் ஆதரவு…

அத்துமீறியதாகச் சொல்லப்படுவதை பிபிபி மறுத்துள்ளது

ஒர் அவதூறு கட்டுரை எனக் கூறப்பட்டதின் தொடர்பில் பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி உறுப்பினர்கள் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள மலேசிய நண்பன் தலைமையகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தத் தமிழ் நாளேடு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை அந்தக் கட்சி இன்று மறுத்துள்ளது. மலேசிய நண்பன் புதன் கிழமை…

ஜோகூர் ஆலய விசேஷத்தின்போது பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டைகளுக்குத் தடை

இவ்வாண்டு ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலத்தில் கலந்துகொள்வோர் பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இந்த ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலம் தேசிய கலாச்சார பாரம்பரிய நிகழ்வு என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தெய்வங்களின் வீதி உலா என்ற பெயரில் பிரபலமாக…

பாலாவைச் சந்திக்கும் திட்டமில்லை என்கிறார் தீபக்

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், மலேசியாவுக்குத் திரும்பி இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகும் சுயேச்சை துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியத்தைச் சந்திப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று கூறினார். அதுவும் ஞாயிற்றுக்கிழமை பாலசுப்ரமணியம் நாடு திரும்பும்போது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் சென்று தீபக் அவரைச் சந்திக்க மாட்டார். “இப்போதைக்கு…

பிஎன் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி ‘திசை திருப்பும்’ நாடகம் என்கிறது…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி, ஊழல் என்னும் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் 'திசை திருப்பும்' நாடகம் என டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் சாடியிருக்கிறார். TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பு தயாரித்துள்ள அந்த வாக்குறுதி…

சினார் ஹரியான் ‘இனவாத’ கட்டுரைக்காக மன்னிப்பு கோரியது

மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், அதன் பத்தி எழுத்தாளர் ரிதுவான் டீ அப்துல்லா எழுதிய இனவாத கட்டுரையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. பிப்ரவரி 18--இல் வெளியிடப்பட்ட அக்கட்டுரையைக் கண்டித்து பல அரசுசாரா அமைப்புகளின் பேராளர்கள் ஷா  ஆலமில்  அச்செய்தித்தாளை வெளியிடும் காராங்கிராப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு விளக்கமும் மன்னிப்பும் கோரியதை…

‘திடீர் குடி மக்களில்’ கீழறுப்பு சக்திகளும் இருக்கலாம் என ஆர்சிஐ-யிடம்…

சட்ட விரோதமாக நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற்ற அந்நியர்களில் கீழறுப்புச் சக்திகளும் இருக்கக் கூடும் என்றும் அதனால் அடையாளக் கார்டு திட்டம் (Project IC) தேசியைப் பாதுகாப்புக்கு மருட்டலானது என போலீஸ் சிறப்புப் பிரிவு இன்று கூறியது. "அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பது…

லாஹாட் டத்து ஊடுருவல் பற்றி உள்ளூர் மக்கள் கருத்து

பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கடற்கரையில் உள்ள தண்டுவோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தரையிறங்கியுள்ள தகவல் வெளியானதும் அருகில் இருந்த லஹாட் டத்து நகரத்தில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. சபா கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமான லஹாட் டத்துவில் உள்ள ஜாலான் சிலாபுக்கான் வழியாக  அந்த…

‘இண்ட்ராப், நாம் மாறத்தான் வேண்டும்; ஆனால், சரியான திசைநோக்கி மாற…

உங்கள் கருத்து: ‘நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை.... நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி’. தவறான தடத்தில் இண்ட்ராப் நல்லநாளாக இருக்கட்டும்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஒரு தீவிரமான நிலையைக் கைக்கொண்டிருக்கும்போது இது நியாயமான வாதமாக தெரிகிறது.…

புத்ராஜெயாவின் கருத்துக்களை புஞ்சாக் நியாகா நாடுகின்றது

சிலாங்கூரில் தண்ணீர் தொழில் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு ஈடாக மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளது குறித்து, சபாஷ் நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரர் என்ற முறையில் கூட்டரசு  அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டியுள்ளதாக Puncak Niaga Holdings Bhd கூறுகிறது. சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் KDEB நிறுவனம் அனுப்பிய…

அம்னோ அரசியல் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது

"கடந்த காலத்தை கடந்த காலமாகவே விட்டு விட அம்னோ தயாராக இல்லை எனத் தோன்றுகிறது. அதற்கு வெறுப்பு மட்டும் தான் தெரியும் என்றால் நாம் அதனை கடந்த காலமாக்கத் தயங்கக் கூடாது" தண்டா புத்ரா இரு பக்கமும் கூர்மையான கத்தி அபசலோம்: தண்டா புத்ரா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நேரம்…

பக்காத்தானுக்கு பரப்புரை செய்வதற்காக நாடு திரும்புகிறார் சுயேச்சை துப்பறிவாளர் பாலா

மங்கோலிய பெண் அல்டான்துனியா கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு சத்திய பிரமானங்களைச் செய்ததன்வழி பிரபலமான முன்னாள் சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறார். மலேசியாகினியுடன் மின்னஞ்சல்வழி தொடர்புகொண்ட பாலசுப்ரமணியம், வரும் பொதுத் தேர்தலிலில் பக்காத்தான் ரக்யாட்டுக்காக…

பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் தலைமையகத்திற்குள் அத்துமீறல்

பிபிபி கட்சியை அவமானப்படுத்தியுள்ளதாக தாங்கள் கூறிக் கொள்ளும் ஒரு கட்டுரை மீது மலேசிய நண்பன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரி நேற்று அந்தத் தமிழ் நாளேட்டின் தலைமையகத்தை அதிருப்தி அடைந்துள்ள 60 பிபிபி உறுப்பினர்கள் 'ஆக்கிரமித்து' கொண்டனர். அந்த ஐந்து மணி நேர 'முற்றுகை' நேற்று பிற்பகல்…

தி கியாட்: வேட்பாளர்களை முடிவு செய்பவர் பிரதமர், சொய் லெக்…

பாண்டான் எம்பி ஒங் தி கியாட், தம்மை வரும் தேர்தலில் வேட்பாளராக நியமனம் செய்வதில்லை என்ற மசீச முடிவால் கலக்கமடையவில்லை. ஏனென்றால்,  பிஎன் வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு செய்பவர் பிஎன் தலைவரான நஜிப் அப்துல் ரசாக்தான் என்கிறார் அவர். இன்று தம் சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டம்…

பாஸ்: அஜிஸான் கெடாவில் தேர்தலில் நிறுத்தப்படுவார்

கெடா மந்திரி புசார் உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்கிய போதிலும் வரும் பொதுத் தேர்தலில் அவரை நிறுத்துவது எனப் பாஸ் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது. "அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்," எனக் கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொன்னார்.…

முதலமைச்சர்: நஜிப் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி ‘வெறுமையானது’

பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி "ஏதுமில்லாத வெற்று அறிவிப்பு" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்கும் என்பதற்கும் சொத்துக்கள் முழுமையாக பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்பதற்கும் தெளிவான கடப்பாட்டை அந்த வாக்குறுதி வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார். "நஜிப்பும்…

சிலாங்கூர் வழங்குவதை சாதகமாக பார்க்கும் Splash, மேல் விவரங்களைக் கோருகின்றது

சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான Splash எனப்படும் Syarikat Pengeluar Air Selangor Holdings Berhad, தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ள தொகை குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள மாநில அரசாங்கத்தைச் சந்திக்கும். மாநில…

எஸ்எம்இ-கள், குறைந்தபட்ச சம்பள அமலாக்கத்தை ஓர் ஆண்டு தள்ளிவைக்கலாம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள சிறிய நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்இ-கள்), குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இச்செய்தியை சின் சியு டெய்லியும் நன்யாங் சியாங் பாவும் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அமைச்சர் ஒருவர்…

நாட்டுப் பற்றுடையவை அல்ல எனக் கூறப்படுவதற்கு எதிராக இரண்டு அரசு…

பினாங்கைத் தளமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு போராடும் இரண்டு அரசு சாரா அமைப்புக்கள் பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜாசா தலைமை இயக்குநர் புவாட் ஹசான் சொல்வதை அந்த இரு அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன. ஜாசா என்பது தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் சிறப்பு விவகாரப் பிரிவு…