ஊழல் தடுப்புத் திட்டத்தைக் காட்டுங்கள் என பக்காத்தானுக்கு அம்பிகா சவால்

அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை எவ்வாறு ஒடுக்கப் போகிறோம் என்பதற்கான திட்டங்களை வழங்குமாறு பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்த்தரப்பு பக்காத்தான் கூட்டணியை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று அலோர் ஸ்டாரில் நிகழும் பக்காத்தான் மாநாட்டில் மக்கள் குரல் அங்கத்தில் பேசினார். நாட்டிலிருந்து…

ஏஜி: பொதுக் கூட்ட மசோதா பேச்சுச் சுதந்திரத்துக்கு ஊக்கமூட்டுகிறது

பெரிதும் குறை கூறப்பட்டுள்ள அமைதியான பொதுக் கூட்ட மசோதா 'பேச்சுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதை' நோக்கமாகக் கொண்டுள்ளது என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். எந்த ஒரு சட்டமும் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் வெகு வேகமாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா குறித்து…

பிஎன் உள்-ஆட்கள் பொதுத் தேர்தலில் பக்காத்தானில் வெற்றி பெற உதவுகின்றனர்

ஆளும் கூட்டணியை வீழ்த்துவதற்கு பிஎன் உறுப்பினர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு எதிர்த்தரப்புக்கு உதவி வருவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று கூறிக் கொண்டுள்ளார். அவர் பக்காத்தான் ராக்யாட் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிகழும் கடைசி பக்காத்தான் மாநாடாக அது…

கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

முன்னாள் தலைமை நீதிபதி சாலே அபாஸ் மற்றும் இரு நீதிபதிகளையும் அவர்களுடைய பதவிகளிலிருந்து 1988 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தூக்கி எறிந்தார். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நீதி வழங்கப்பட்டது. ஆனால், 2001 ஆம் ஆண்டில் கம்போங் மேடான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரையில் நீதி மறுக்கப்பட்டுள்ளது.…

ரஷிட்: PSC யோசனைகளை ‘ஒரு வாரத்தில்’ அமலாக்கி விடலாம்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) யோசனைகள் வெறும் நடைமுறை மாற்றங்களே. அவற்றை ஒரு வாரத்தில் அமலாக்கி விடலாம் என்று தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறுகிறார். "பிஎஸ்சி தெரிவித்துள்ள யோசனைகளை தேர்தல் விதிமுறைகளை மாற்றினால் போதும். அதனை…

அன்வார்: அவர்கள் மேல் முறையீடு செய்கின்றார்களா இல்லையா என்பது பற்றி…

தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டது மீது அரசு தரப்பு மேல் முறையீடு செய்து கொள்கிறதா இல்லையா என்பது பற்றி எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் கவலைப்படவில்லை. "அது (முறையீடு) என் வேலை அல்ல. என்றாலும் அதற்குச் சட்டத்திலும் அரசமைப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை நான் அறிவேன்."…

வாக்குறுதி அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் வரையில் தேர்தல் இல்லை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை நீதிமன்றம் விடுவித்துள்ளதைத் தொடர்ந்து தேர்தல் தேதி குறித்த ஊகங்கள் சூடு பிடித்து வரும் வேளையில் விரைவில் தாம் தேர்தலை நடத்த முடியும் எனத் ததம் நம்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார். என்றாலும் ஜனநாயகச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதாக தாம் அண்மையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்…

இந்துவாகப் பிறந்த மாது தன் முஸ்லிம் தகுதி குறித்து எதிர்…

1989ம் ஆண்டு தாம் ஏழு வயதாக இருந்த போது இஸ்லாத்துக்குத் தம்மை தவறாக மதம் மாற்றியதாக கூறுகின்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு தொழிற்சாலை ஊழியரான எஸ் பங்காரம்மாவுக்கு இறுதியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பினாங்கில் தாம் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் இருந்த போது தம்மை இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது செல்லாது என…

ஹசான் அலியை ஆட்சி மன்றத்திருந்து அகற்ற சுல்தான் ஒப்புதல்

முன்னாள் பாஸ் ஆணையாளர் ஹசான் அலியின் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்துச் செய்ய வேண்டும் என தாம் தெரிவித்த யோசனைக்குச் சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "அவர் பாஸ் கட்சியில் இனிமேலும் உறுப்பினராக இல்லாததால் அவர் ஆட்சி மன்ற…

அமானாவை அரசியல் கட்சியாக்குமாறு அழுத்தம் அதிகரிக்கிறது

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான அமானா என்ற Angkatan Amanah Merdeka வை அரசியல் கட்சியாக மாற்றி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புடன் இணைய வேண்டும் என அதன் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். என்றாலும் அம்னோவைச் சேர்ந்த குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா…

இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் இண்டர்லோக்; தொடர்கிறது போராட்டம்!

கிள்ளான் மாவட்டத்தின் நான்குக்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகளில் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை பெற்றோர் ஆசியர் சங்கம் உட்பட இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன. கிள்ளான் மாவாட்டத்தில் எஸ்எ.ம்.கே ராஜா மஹாடி, எஸ்எம்கே ஷா பண்டார் மற்றும் எஸ்.எம்.கே ஸ்ரீஅண்டளாஸ் ஆகிய மூன்று பள்ளிகளும் இண்டர்லோக் நாவலை மாணவர்களுக்கு…

பக்காத்தான் மாநாடு நாளை அலோர் ஸ்டாரில் நிகழ்கிறது

பக்காத்தான் ராக்யாட் நாளை ( ஜனவரி 14 ) கெடா, அலோர் ஸ்டாரில் தனது மூன்றாவது மாநாட்டை நடத்துகிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி பக்காத்தான் மாநாடாக அது இருக்கும் என கருதப்படுகிறது. சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா அரங்கத்தில் காலை மணி 9.30 தொடக்கம்…

அரசாங்கம் ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்களை நெருக்குகிறது

நில, சுரங்கத் துறை ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது- ஜனவரி 30ம் தேதிக்குள் எம்ஆர்டி நிறுவனத்துடன் உடன்பாடு காணுங்கள் அல்லது நிலத்தை இழக்க வேண்டி வரும் என்பதே அந்த எச்சரிக்கையாகும். ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் சுல்தான் பாதுகாப்புக் குழுத் தலைவர் யோங் இயூ…

கருவூலத்துக்கான பாதை அடைக்கப்பட்டால் மட்டுமே சீர்திருத்தம் தொடங்கும்

"அம்னோவில் பரவியுள்ள புரவலர் முறை அந்தக் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. அது புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை." கோர்பாஷேவ்-வை பின்பற்றுங்கள் என நஜிப்புக்கு அறிவுரை பேஸ்: நஜிப் அளவுக்கு அதிகமாக அழுக்கை சுமந்து கொண்டிருப்பதால் சீர்திருத்தங்களை உதட்டளவில் மட்டுமே வலியுறுத்த முடியும். அவரால் சீர்திருத்தங்களை தொடங்க முடியாது.…

இண்டர்லாக்கை மீட்டுக் கொள்வது குறித்த உத்தரவு 80 பள்ளிக்கூடங்களுக்கு கிடைக்கவில்லை

இண்டர்லாக் நாவலை மீட்டுக் கொள்வது என அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்த போதிலும் கடந்த ஆண்டு ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அதனை மீட்பதற்கான உத்தரவு இன்னும் 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்குக் கிடைக்கவில்லை. நியாட் எனப்படும் தேசிய இண்டர்லாக் நடவடிக்கைக் குழுவின் தலைவர் தஸ்லீம் முகமட்…

என்எப்சி மீதான விசாரணையை ஒட்டி ஷாரிஸாட் விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் என்னும் முறையில் தாம் நாளை தொடக்கம் மூன்று வாரங்களுக்கு விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஷாரிஸாட் அப்துல் ஜலில் இன்று அறிவித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தமது விடுமுறை விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளதாக அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். "என் கணவர் முகமட் சாலே…

901 குண்டுகள்: உத்துசான் செய்தி வெறும் ஊகமே என்கிறது போலீஸ்

திங்கட்கிழமையன்று குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் மூன்று இடங்களில் வெடி பொருட்களை வெடிக்கச் செய்த குற்றவாளிகளின் அடையாளம் குறித்து ஆரூடங்களைத் தெரிவிக்க வேண்டாம் என போலீஸ் இன்று பொது மக்களை எச்சரித்துள்ளது. நேற்று உத்துசான் மலேசியாவில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி…

வரும் பொதுத் தேர்தல் “இது வரை இல்லாத அளவுக்கு மிகவும்…

"அதிகாரத்தில் நிலைத்திருக்க ஊழலான அம்னோ தலைவர்களும் ஆதரவாளர்களும் எதனையும் செய்வார்கள் என்பதால் வரும் 13-வது பொதுத் தேர்தல் இது வரை இல்லாத அளவுக்குக் 'கறை படிந்ததாக' இருக்கும்." இவ்வாறு மலேசியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் ஆர் மாலோட் ஆரூடம் கூறியிருக்கிறார். அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கு II-லிருந்து விடுதலை…

EGM-க்கு முன்னதாக NFC சொத்துக்களை முடக்குக என அரசுக்கு வேண்டுகோள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் இந்த வாரம் மறுசீரமைப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் சொத்துக்களை முடக்குமாறு பிகேஆர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் அந்த நிறுவனம் மீதான போலீஸ் புலனாய்வுகள் பாதிக்கப்படும் என அது கருதுகிறது. இந்த வாரத்தில் அவசரப் பொதுக்…

பினாங்கு முதலமைச்சரும் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் சொத்துக்களை அறிவித்தனர்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களும் இன்று கொம்தாரில் பகிரங்கமாக தங்களது சொத்து விவரங்களை அறிவித்தனர். என்றாலும் ஆட்சி மன்றத்தில் பேராளர் அல்லாத உறுப்பினர்களான மாநிலச் செயலாளர், மாநில நிதி அதிகாரி, மாநில சட்ட ஆலோசகர் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவில்லை.…

கோர்பாஷேவ்-வைப் பின்பற்றுங்கள் என நஜிப்-புக்கு அறிவுரை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ தீவிரவாதிகளை ஒதுக்கி விட்டு,  அந்நடவடிக்கை அதிகாரத்தை இழப்பதற்கு வழி கோலும் என்றாலும், தமது சீர்திருத்த திட்டங்களை தொடர்ந்து அமலாக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சரும் மூத்த அம்னோ தலைவருமான அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்க ஊழலையும் நண்பர்களுக்கு…

யார் அந்தக் குண்டுகளை வைத்தார்கள்? வழக்கமாக யார் மீது சந்தேகம்…

"தாங்கள் பேரணி நடத்தும் இடத்துக்கு 901 ஆதரவாளர்கள் ஏன் குண்டுகளை வைக்க வேண்டும்? அப்படிச் செய்வது சொந்த வீட்டுக்குள் குண்டுகளை கொண்டு வருவதற்கு இணையாகும்." "குண்டுகள் 901 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிணைக்கப்படுகின்றன" விக்டர் ஜோஹான்: அந்த "அதிகம் நம்ப முடியாத" வட்டாரம் உத்துசான் மலேசியாவிடம் இவ்வாறு கூறியது: "…

மலாக்கா கீத்தா கிளை கலைக்கப்பட்டது; உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்

கீத்தா (Kesejahteraan Insan Tanah Air) கட்சியின் மலாக்கா கிளையைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கிளை கலைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்தக் கிளைக்கு இது நாள் வரை தலைவராக இருந்த கர்னல் (ஒய்வு பெற்ற) ஹஷிம் பூத்தே வெளியிட்டார்.…