தேர்தல் ஆணைய (இசி) விளக்கக் கூட்டம் தேர்தல் ஆரூடங்களைப் பலப்படுத்தியுள்ளது

ஜோகூர் பாரு மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படவிருக்கும் பள்ளிக்கூடங்களை சார்ந்த ஆசிரியர்கள் இன்று இசி என்ற தேர்தல் ஆணையம் நடத்தும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் நெருங்கி வருகிறது என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ளன. வாக்களிப்பு மய்யங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த…

கொம்யூட்டர் ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன

ரயில் நிலையங்களில் ஆளும் கூட்டணியின் ‘dacing’ (தராசு) கொடிகளைப் பறக்க விடுமாறு தான் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே மறுத்துள்ள போதிலும் சில ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறப்பதைக் காண முடிகிறது. கோலாலம்பூரிலிருந்து போர்ட் கிளாங் வரையிலான கேடிஎம் Komuter ரயில் நிலையங்களை மலேசியாகினி…

டாக்டர் மகாதீர் சிறிய அறுவைச் சிகிச்சைக்காக தேசியப் பல்கலைக்கழக மருத்துவ…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சியை அகற்றுவதற்காக இன்று காலை HUKM என்ற தேசியப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவ மய்யத்தின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்துல்லா  சானி முகமட் தலைமையில் மருத்துவக்…

தமிழீழம் தொடர்பில் வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பொன்றை இலங்கையில் அனைத்துலகம் நடத்த வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேல்பட்ட கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை மனுவொன்றை குறித்த அமைப்பு அமெரிக்க அரச துறைக்கு…

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி நிலத்தை சமூகத்தின் அங்கீகாரமின்றி எவரும் தொடமுடியாது

-சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அறிக்கை,  17.4.2012   அன்புடன் வணக்கம், தமிழ்ப்பள்ளிகள் உரிமம் மீது வாசகர்கள் காட்டும் அக்கறையும், ஆர்வமும் நம் சமூகம் பெற்றுள்ள எழுச்சியை உணர்த்துகிறது. உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.    ‘’ இப்பள்ளி அமைந்துள்ள நான்கு ஏக்கர் நிலம் பள்ளி…

‘பாதுகாப்புச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டா என்பதற்கு உத்தரவாதம் இல்லை’

ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு எதுவும் உத்தரவாதம் அளிக்க முடியாது என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 'காப்பு வலயங்களின்' பயன் கூட அப்போதைய அரசாங்கமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் அவற்றுக்கு இணங்க செயல்படுவார்களா என்பதைப்…

மெர்தேக்கா சதுக்கத்தை விட்டு வெளியேற குந்தியிருப்பாளர்கள் மறுப்பு

மெர்தேக்கா சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குந்தியிருப்பாளர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்கள் முகாம்களை கலைத்து விட்டும் அந்தப் பகுதியை 'சுத்தம்' செய்ய வேண்டும் என டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 10 அமலாக்க அதிகாரிகள் ஆணையிட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது பதாதைகளையும் அட்டைகளையும்…

டாக்டர் மகாதீர் அரச குடும்பத்தினர் அதிகாரங்களைக் குறைத்த போது யாரும்…

"சுங்கத் துறை தடுப்புப் பகுதியிலிருந்து கிளந்தான் சுல்தான் சட்ட விரோதமாக தமது Porsche ரக ஆடம்பரக் காரை ஒட்டிச் சென்றது அவற்றுள் ஒன்றாகும்." "மலாய் ஆட்சியாளர்களுக்கு மரியாதை கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" விஜய்47: மலாய் ஆட்சியாளர்களுடைய பாதுகாவலர்களாக அம்னோவும் அதற்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும்…

பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை

12வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் பக்காத்தான் ராக்யாட் வாக்களிக்கப்பட்டதற்கு இணங்க பினாங்கு மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான வழிகள் பற்றி பொது விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது. மாநில அரசாங்கம் தயாரித்துள்ள பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லஸ்லி-யில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான…

பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெற இன்னும் ஒர்…

பினாங்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட ஒர் இடம் பற்றிய விவாதங்கள் மட்டுமே நிகழ வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.  பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெறுவதற்கு அது இன்னும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு மாநில சட்ட மன்ற…