அறிக்கையாளர்கள் எல்லைகள் அற்ற அமைப்பின் (RSF) 2026-ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு பெற்ற 88-வது இடத்திலிருந்து தற்போது 95-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 56.09 புள்ளிகளைப் பெற்றிருந்த மலேசியா, இந்த ஆண்டு 52.73 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மலேசியா…
பினாங்கு என்ஜிஓகளின் போக்கு முதல்வருக்குப் புரியவில்லை
பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், சுயேச்சையாக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசுசாரா அமைப்புகள் சில, மாநில அரசின் கொள்கைகளைக் குறைசொல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டங்களின்போது அவற்றின் பிரதிநிதிகள் விவகாரங்களைப் புரிந்துகொண்டவர்கள்போலத்தான் காணப்படுகிறார்கள்.ஆனால், அதன்பின்னர் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அந்தப் புரிதலைப் பிரதிபலிக்கவில்லை.…
“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்றதாக NFC தலைவர்மீது குற்றம் சுமத்துக”
நேசனல் ஃபீட்லாட் கார்பரேஷன் (NFC) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலைக் கைது செய்து போலீசுக்கும் எம்ஏசிசி அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சுமத்த வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக்கொண்டிருக்கிறது. “முகம்மட் சாலே (ஷாம்சுபரின் இஸ்மாயிலுக்கு) வழங்கிய ரிம1.755மில்லியன் போலீஸ், எம்ஏசிசி அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டதாகும்…
பினாங்கில் 48 புதிய கவுன்சிலர்கள் நியமனம்:ஒருவர் செய்தியாளர்
பினாங்கு மாநில அரசு 2012-2013-க்கு 48 புதிய முனிசிபல் கவுன்சிலர்களை நியமனம் செய்துள்ளது.அவர்களில் ஒருவர் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றின் நிருபரான எஸ்.குணாளன். கொம்டாரில், கவுன்சிலர் பெயர்களை அறிவித்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, குணாளன், 46, 1990-இலிருந்து டிஏபி உறுப்பினர் என்றார். அவர், பிறை தாமான்…
குற்றச்சாட்டுகளை மறுக்க போலீஸ் இணையத்தை நாடியுள்ளது
யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரம் கோரி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு போலீசார் நான்கு வீடியோ ஒளிநாடாக்களை இணையத்தில் சேர்த்துள்ளனர். PDRMsia என்னும் பயனாளி அந்த வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில்…
‘குழப்பமான சூழ்நிலைகளில்’ கண்ணீர் புகைக் குண்டுகள் துங் ஷின் மருத்துவமனைக்குள்…
துங் ஷின் மருத்துவமனை வளாகத்துக்குள் கூடிய பெர்சே 2.0 பங்கேற்பாளர்களைக் கலைக்கும் நோக்கத்துடன் அந்த மருத்துவமனையின் பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தின் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இரசாயனம் கலக்கப்பட்ட நீர் பாய்ச்சப்பட்டது என சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். "மிகவும் குழப்பமான…
புதிய கூலிம் மாவட்ட அதிகாரி மதுபான தடையை நீக்குகிறார்
அரசியல் களத்தில் இருபுறமுள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட கூலிம் மாவட்ட அதிகாரி முகமட் சொஹ்டி சாஆட் தமக்கு முன்பு பதவி வகித்தவர் அறிமுகம் செய்த மதுபான தடையை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். கூலிமுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மாற்றப்பட்ட சொஹ்டி, ஜனவரி…
டிஏபி ஒழுங்கு வாரியம் “டெய்லர்-கேட்”விவகாரத்தை விசாரிக்கும்
பேராக்கை சிறிதுகாலம் பக்காத்தான் ரக்யாட் ஆண்டபோது மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பேராக் டிஏபி செயலாளர் இங்கா கொர் மிங், தம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினார் என்று கூறப்படுவது பற்றி விசாரிக்கும்படி கட்சியின் ஒழுங்கு வாரியத்துக்கு டிஏபி தலைமை உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற மத்திய செயல்குழுக் கூட்டத்தில்…
தாய்ப்பை கைது செய்யும் அதிகாரம் தனக்கில்லை என்கிறது இண்டர்போல்
வெளிநாட்டு என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் முகமட்டை கைது செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தபோதும் உள்நாட்டு அதிகாரிகள் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்கிறது பன்னாட்டுக் குற்றவியல் போலீஸ் அமைப்பு (இண்டர்போல்). மலேசியாவில் மிக நீண்டகால முதலமைச்சராகவுள்ள தாயிப்பை கைது செய்ய வேண்டும் என்று அனைத்துலக…
நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து தாயிப் வழக்கை மீட்டுக்…
செய்தி இணையத் தளமான மலேசியாகினிக்கு எதிராக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சம்ர்பித்த அவதூறு வழக்கை, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீட்டுக் கொண்டுள்ளார். தாயிப் குடும்பத்துடன் தொடர்புள்ளது எனக் கூறப்பட்ட ரீஜண்ட் ஸ்டார் என்ற ஹாங்காங் நிறுவனத்துக்கு ஜப்பானிய கப்பல்…
“அது அன்வாரைப் பற்றியது அல்ல, அநீதி சம்பந்தப்பட்டது”
"அது அன்வாரை பற்றியது மட்டுமல்ல. சாதாரண மக்களை அரசாங்கம் அலட்சியமாக அகங்காரத்துடன் நடத்துவது சம்பந்தப்பட்டதாகும்." குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படும் நாளில் பக்காத்தான் தனது வலிமையைக் காட்டும் சீனாபுத்ரா: நேர்மையற்ற ஊழல் ஆட்சிக்கு எதிரான வன்முறை இல்லாத ஆர்ப்பாட்டமாக அது இருக்கும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது…
ஆர்பிகே நேர்காணல்: எம்சிஎல்எம்முக்கு இன்னொரு பேரிடி
எம்சிஎல்எம்மின் தலைவர் ராஜா பெட்ரா கடந்த வார இறுதியில் அளித்த நேர்காணலின் விளைவாக எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு அதன் சுயேட்சை வேட்பாளர் திட்டத்தின் கீழ் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎம்எம்) தேர்வு செய்திருந்த இருவர் அதிலிருந்து விலகிகொண்டுள்ளனர். "நான் மலேசியன் சிவில் லிபெர்ட்டிஸ் மூவ்மெண்டிருந்து விலகிக்கொள்வதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன்",…
அன்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க பக்காத்தான் தயாராக…
குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் போது தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து எதிர்த் தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை. "நான் மட்டுமின்றி அஜிஸாவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் டிஏபி மூத்த…
மருத்துவ மனை மீது நீர் பாய்ச்சப்பட்டதை அதிகாரி ஒப்புக் கொள்கிறார்
கடந்த ஆண்டு ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியின் போது ஜாலான் புடுவில் நீர் பாய்ச்சும் சாதனங்கள் பயன்படுத்திய எப்ஆர்யூ என்ற கலகத் தடுப்புப் போலீஸ் அதிகாரி ஒருவர், தமக்கு அந்த சுற்று வட்டத்தில் துங் ஷின் மருத்துவமனை இருப்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.…
நீக்கப்பட்ட யூபிஎஸ்ஐ மாணவர் தங்கும் விடுதியில் தொடர்ந்து இருப்பார்
யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris தங்கும் விடுதி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட மாணவர் ஒருவர், அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்கப்படும் வரையில் தாம் தொடர்ந்து அந்தத் தங்கும் விடுதியில் தாம் இருக்கப் போவதாக கூறியுள்ளார். ஜனவரி முதல் தேதி யூபிஎஸ்ஐ வளாகத்துக்கு வெளியில் நிகழ்ந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது…
“ஆர்ப்பாட்டக்காரர்கள் சொல்வது தவறு, நிலம் எங்களுடையது”
கோயில் ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டதாக பட்டர்வொர்த் குடியிருப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு இந்து அறவாரியம், சம்பந்தப்பட்ட நிலம் தனக்குச் சொந்தமானது என விளக்கமளித்துள்ளது. பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் கீழ் வருகின்ற பட்டர்வொர்த் அறவாரியத்துக்குள் அந்த நிலம் இருப்பதாக இந்து அறவாரிய நிர்வாக இயக்குநர்…
கூலிம் மது தடை:கெடா அரசைக் கீழறுக்கும் செயலா?
கூலிம் மாவட்ட நிர்வாகம் இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து மது விற்பனையை நிறுத்திவைக்க செய்துள்ள முடிவு, கெடா அரசைக் கீழறுக்கும் ஒரு செயலாகும் என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அது, மாவட்ட அலுவலகம் கெடா அரசுக்கோ அதன் ஆட்சிக்குழுவினருக்கோ தெரிவிக்காமல் தன்மூப்பாக எடுத்துள்ள ஒரு முடிவு என்று…
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் வழக்கில் தீர்ப்பு வெள்ளிக்கிழமை
தென்னாப்ரிக்கர்கள், சிங்கப்பூரியர்கள் போல் அல்லாது வெளிநாடுவாழ் மலேசியர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. இதனை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த வழக்குரைஞர் எட்மண்ட் போன்(இடம்), வெளிநாடுகளில் உள்ள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்காத ஒரு சில காமன்வெல்த் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றார். “என் கட்சிக்காரர்கள் தொகுதியில் இல்லா…
அஸ்மின்: யார் இந்த RPK எங்களுக்கு ஆணையிட?
கட்சி இந்தத் திசையில்தான் போக வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற ராஜா பெட்ரா கமருடினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. “கட்சிக்குக் கட்டளை இட ராஜா பெட்ரா யார்? அவர் ஓர் உறுப்பினராகக்கூட இல்லை. நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பும் அறுந்து போய்விட்டது.”…
யூபிஎஸ்ஐ மாணவர், தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார்
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idrisல் நிகழ்ந்தகுந்தியிருப்பு மறியலில் சம்பந்தப்பட்ட அந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அவருடைய தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த மறியல் போலீசாருடன் கைகலப்பில் முடிவடைந்தது. அந்த மாணவர் நேற்று போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ள…
முன்னாள் ஆகாயப்படை அதிகாரி நீதிகேட்டு பேரரசருக்கு மகஜர் சமர்பிப்பார்
பணி ஓய்வுபெற்ற ஆகாயப்படை சார்ஜெண்ட் ஒருவர், தமது 17 போலீஸ் புகார்களுக்கும் எவ்வித ஆதாரமுமில்லை என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து நீதி கேட்டு பேரரசருக்கு மகஜர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். பைசல் ஜீனோங் அப்துல்லாவும்,47, அவரின் குடும்பத்தாரும் மகஜரை அரண்மனையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து…
குதப்புணர்ச்சி வழக்கு ll தீர்ப்பு வழங்கப்படும் போது பக்காத்தான் வலிமையைக்…
எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட், தனது தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இந்த மாதம் 9ம் தேதி கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டுள்ளது. "அன்வார் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிக்க 100,000 ஆதரவாளர்களை பக்காத்தான் ராக்யாட் களத்தில் இறக்கும்,"…
ஜைட்: ராஜா பெத்ரா, அன்வாரைக் குறை கூறுவது நியாயமில்லதாது
ராஜா பெத்ரா கமாருதின், எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை கடுமையாகக் குறை கூறி விட்டு வலுவான எதிர்த்தரப்புத் தேவை எனச் சொல்வது முற்றிலும் பொருத்தமற்றது என முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறுகிறார். எதிர்த்தரப்பு தொடர்பாக ராஜா பெத்ரா வெளியிட்ட அறிக்கைகள் மீது அவர் கருத்துரைத்தார். அந்த…
ஆர்ப்பாட்டம் செய்த மாணவரின் கார் தாக்கப்பட்டது
வார இறுதியில் யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸில் (யுபிஎஸ்ஐ) போலீசாரால் தாக்கப்பட்ட மாணவரான முகம்மட் சப்வான் அனாங், தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் தம் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாகக் கூறினார். ஜனவரி 1 அதிகாலை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றபோது அந்த கெனாரி கார் யுபிஎஸ்ஐ கிழக்கு…


