27 வயதான ஷானன் ஆன்-ஓய் (Shannon Anne-Ooi), பொது இடத்தில் சட்டவிரோத நோக்கத்திற்காகத் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாக இன்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். சனி இரவு நடைபெற்ற 'ரெயின் ரேவ்' (Rain Rave) நீர் இசை விழாவின் போது, கத்தியை எடுத்து மிரட்டிய ஒரு பெண்ணிடமிருந்து பொதுமக்கள்…
சுல்தானா அமினா மருத்துவமனையின் 21 ஊழியர்களுக்குக் கோவிட் -19 தொற்று…
ஜொகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் (எச்.எஸ்.எ.) 21 சுகாதாரப் பணியாளர்கள், நேற்று முதல் ஜாலான் பெர்சியாரன் அபுபாக்கர் சுல்தான் திரளை சம்பந்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கு நேர்மறையாகப் பதிவாகியுள்ளனர். எச்.எஸ்.எ. இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மட், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ஒரு பதிவின் மூலம்,…
கிளாசிக் சுப்பையா காலமானார் – இந்தியச் சமூகம் ஒரு தமிழ் உணர்வாளரை இழந்தது!
நமது நாட்டின் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் உணர்வுப் பூர்வமாக பங்காற்றிய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் கிளாசிக் சுப்பையா இன்று மாலை (21.8.2021) காலமானர். கோவிட்-19 தொற்றால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் செயற்கை சுவாசமுறை வழி தீவிர சிகிச்சை பெற்று வந்த…
நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றார்
அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றார். இன்று பிற்பகல் 2.29 மணிக்கு, இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முன்னிலையில் இஸ்மாயில் பதவியேற்றார். இந்த நிகழ்வு தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் முகநூல்…
அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்தது : புவா எதிர்க்கட்சியைக் குற்றம்…
அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார் என்ற செய்தி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் டிஏபி தேசியப் பரப்புரை செயலாளர் டோனி புவா, அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததைக் கண்டு அவர் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டினார்.…
22,262 புதிய நேர்வுகள், 223 மரணங்கள்
கோவிட் -19 | இன்று 22,262 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி, ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளை 1,535,286 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்தது. மேலும், இன்று 223 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 13,936- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில்…
புதிய அரசாங்கம் என்றாலும், அவசரகால நிலையை மீண்டும் அறிவிக்க வேண்டும்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். கோவிட் -19 தொற்று மோசமடையக்கூடும் என்பதால், நடவடிக்கை எடுக்க புதிய அரசாங்கம் அமையும் வரை காத்திருக்க நேரமில்லை என்று மகாதீர் கூறினார். "என்னை…
அன்வர் : ஜிஇ15-க்குக் கடினமாக உழைப்பதே எதிர்கட்சியின் சவால்
அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டதால், 15-வது பொதுத் தேர்தலுக்குத் (ஜிஇ15) தயாராவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போது கடினமாக உழைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார். இஸ்மாயிலின் நியமனம் அரசியலமைப்பு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி…
`இஸ்மாயில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்வார்` – டிஏபி நம்பிக்கை
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போரில், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பது, புதியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும் என்று டிஏபி சமாதானத் தொனியில் கூறியுள்ளது. “மாட்சிமை தங்கியப் பேரரசரால், நாட்டின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டதற்கு டிஏபி வாழ்த்து தெரிவிக்கிறது. [caption id="attachment_189879" align="aligncenter"…
23,564 புதிய நேர்வுகள், 233 மரணங்கள்
கடந்த 24 மணி நேரத்தில், 23,564 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். இது மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 1,513,024 ஆகக் கொண்டுவருகிறது. மேலும், இன்று 233 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப்…
நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்பு
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, கடந்த திங்கட்கிழமை பதவி விலகிய முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பைப் புதிய பிரதமராக நியமிக்க ஒப்புதல் அளித்தார். “கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு…
முஹைதீனின் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவு – பாஸ் வரவேற்கிறது, பெர்சத்து தற்காக்கிறது
பாஸ் ஆதரவாளர் மன்றம் (டிஎச்பிபி), அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து, தேசியக் கூட்டணி (தே.கூ.) தலைவர் முஹைதீன் யாசின் சமர்ப்பித்த நிபந்தனைகளை வரவேற்றது. டிஎச்பிபி தலைவர், செனட்டர் என் பாலசுப்ரமணியம், இந்த நிபந்தனை யாரையும் இழிவுபடுத்துவதாக இல்லை, ஆனால் தேசியக்…
கோவிட் -19 : பலியானவர்களை நினைவு கூரும் பேரணியில் பங்கேற்றவர்கள்…
நேற்று, கோவிட் -19 தொற்றுக்குப் பலியானவர்களை நினைவுகூரும் பேரணியில் பங்கேற்றதற்காகப், போலீசாரால் கைது செய்யப்பட்ட 31 ஆர்வலர்களும் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டனர். கோவிட் -19 தொற்றின் போது, பேரணிகளைத் தடுக்கும் விதிகளை மீறியதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் RM2,000 - மொத்தம் RM62,000 தண்டம் விதிக்கப்பட்டது. அந்த இளைஞர்கள் குழுவில்…
அம்பிகா : ‘ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்’
மலேசியாவில் இப்போது 13,000 உயிர்களைக் கொன்ற கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், நச்சு அரசியல் மற்றும் நிர்வாகத் திறமையின்மை பற்றிய கவலையில், அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிய பிரதமர் ஓர்…
Who is playing ‘Brutus’ in our politics? –…
Tan Sri Muhyiddin Yassin is no longer the Prime Minister of Malaysia, however, he is the Caretaker Prime Minister until a suitable person who commands the confidence of the majority in the House of Representatives…
மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு புதிய பிரதமர் அறிவிக்கப்படலாம்
மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் அல்-அப்துல்லா அல்-முஸ்தபா ரியாத்துதீன் பில்லா ஷா, இன்று மலாய் ஆட்சியாளர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பை நடத்திய பிறகு, புதிய பிரதமரை நியமிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, ஒன்பது சுல்தான்கள் அடங்கிய சிறப்பு கூட்டத்திற்கு மாமன்னர் தலைமையேற்பார். எம்.பி.க்களின்…
நிறுவன சீர்திருத்தங்களைத் தொடர வேண்டுமென சுஹாகாம் புதிய அரசுக்கு வலியுறுத்தியது
நியமிக்கப்படும் புதிய பிரதமரும் அரசாங்கமும், அரசு நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்புவதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறியது. பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வில் கோவிட் -19 ஏற்படுத்திய தாக்கங்களைக் கையாள்வதில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றாலும், புதிய…
தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் பொதுத் தேர்தல் – அஹ்மத் மஸ்லான்
நேரடி செய்தி | இன்று, மாட்சிமை தங்கிய மாமன்னர், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கத்தின் பகுதியாக இருந்த அல்லது ஆதரவாக இருந்த 114 எம்.பி.க்களை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில், அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு அவர்களின் ஆதரவை அகோங் உறுதி செய்வார்…
எதிர்க்கட்சிகளை அரண்மனை அழைக்கவில்லை
மாட்சிமை தங்கியப் பேரரசரின் உத்தரவுக்கு இணங்க, அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைக் குறிப்பிட்டு வாக்களிக்கும் செயல்முறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று இஸ்தானா நெகாராவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. நேற்று, இஸ்மாயில் சப்ரி யாகோப்பை ஆதரிக்கும் தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கக் கட்சிகள் இஸ்தானா நெகாராவுக்கு…
பி.எம். & தி.பி.எம்.-ஆக பிரதமர் வேட்பாளர்கள் இஸ்மாயில் மற்றும் அன்வர்…
மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் தேசியக் கூட்டணி (தே.கூ.) ஆகிய இரண்டு கூட்டணிகளைச் சேர்ந்த இரண்டு பிரதமர் வேட்பாளர்களையும், பிரதமர் மற்றும் துணைப் பிரதமராக, ஒரு 'கலவை அமைச்சரவை' அமைக்க பரிந்துரைத்தார். அந்த இஸ்கண்டார் புத்ரி எம்பி எந்தப் பெயரையும்…
ஜாஹித் விலகியதால், இஸ்மாயில் சப்ரி பரிந்துரைக்கப்பட்டார் – அஹ்மத்
இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் பெயர் பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன்பு, அந்த அம்னோ துணைத் தலைவரின் பெயர் முதலில் மூன்றாவது இடத்தில் இருந்தது என்று அகமது மஸ்லான் கூறினார். அம்னோ தலைமைச் செயலாளரின் கூற்றுப்படி, நேற்றிரவு கட்சி கருத்தில் எடுத்துகொண்ட முக்கியப் பெயர் அவர்களின் தலைவர் அஹ்மத் ஜாஹித்…
105 எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுபட்டு அன்வாருக்கு ஆதரவு
எதிர்க்கட்சிகளின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்வருக்கு இப்போது உள்ள ஒரே பணி, மக்களவையில் பெரும்பான்மை பெற குறைந்தது ஆறு எம்.பி.க்களைப் பெறுவதுதான். 88 பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களைத் தவிர, அன்வருக்கு இப்போது வாரிசான், பெஜுவாங், சரவாக் பெர்சத்து கட்சி…
22,242 புதிய நேர்வுகள், சபா மற்றும் பினாங்கில் நேர்வுகள் அதிகரிப்பு
கோவிட் - 19 | கடந்த 24 மணி நேர நேரத்தில், 22,242 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபா (2,413) மற்றும் பினாங்கு (1,867) இரண்டும், இன்று அதிக நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன. சபாவில் உள்ள மக்கள்தொகையில் 17 விழுக்காட்டினர் மட்டுமே கோவிட்…
பிரதமராக இஸ்மாயில் சப்ரி – பாஸ் ஒருமனதாக ஆதரவு
அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமராக ஆதரிக்கவும் பரிந்துரைக்கவும் பாஸ் இன்று ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது. பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், கட்சி பிரமாண அறிக்கையுடன் (எஸ்டி) தயாராகி வருவதாகக் கூறினார். "பாஸ் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கிறது, நாங்கள் சில…
























