பணிஓய்வு வயதை உயர்த்த வேண்டியதில்லை- பிரதமர்

இப்போது 60ஆக உள்ள கட்டாய பணிஓய்வு வயதை 65ஆக உயர்த்த வேண்டிய அவசியமில்லை எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறினார். பணிஓய்வு வயதை உயர்த்துவது இளம் தலைமுறையினரின் பணி உயர்வு வாய்ப்புகளைத் தடுப்பதாக அமையும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானின் கருத்தை…

முஸ்லிம்- அல்லாதார் பொருள்களின் புறக்கணிப்பைக் கைவிடுவீர்- தேசிய வர்த்தக சங்கங்கள்…

மலேசிய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் தேசிய கூட்டிணைப்பு (என்சிசிஐஎம்) எல்லா மலேசியரும் எல்லா எம்பிகளும் முஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிகும் இயக்கத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தலைவர் டெர் லியோங் யாப், அப் புறக்கணிப்பு இயக்கம் வெறுப்பைத் தூண்டிவிட்டு ஒற்றுமையைக் கெடுக்கும் என்றார். மலேசியர்கள் நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க…

அன்வார் : ‘முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைப் புறக்கணியுங்கள்’ பிரச்சாரம் ஆரோக்கியமற்றது

முஸ்லீம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமற்ற நடவடிக்கை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். “நீங்கள் ‘ஹலால்’ தயாரிப்புகளை விளம்பரப்படுத்த விரும்பினால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், இஸ்லாம் அல்லாதவர் பொருட்களை வாங்க வேண்டாம் என்ற இனப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சாரத்தை…

‘டிஏபி-பிஎச் தலைவர்கள் இனவெறி கொண்டவர்கள்’ – சான்றுகளுடன் அம்னோ குற்றச்சாட்டு

நாட்டில் இனவெறி பிரச்சனைகளுக்கு, எதிர்க்கட்சியான அம்னோதான் காரணம் எனும் குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதுவதாக அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், டிஏபி-பிஎச் தலைவர்கள்தான் வெறுப்பு மற்றும் இனவாதம் ஆகியவற்றைத் தூண்டிவிடுகின்றனர் என்பதற்கு அதிகமான சான்றுகள் இருப்பதாகவும் அதன் தலைவர் டாக்டர் அஸ்ரஃப் வஜ்டி கூறியுள்ளார். டிஏபி தலைவர்கள்…

கட்சிக் கூட்டங்களுக்கு வர வேண்டும்: அஸ்மினுக்கு அன்வாரின் கண்டிப்பான உத்தரவு

நீண்ட நாள்களாக கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறார். “அவர் (அஸ்மின்) வேண்டுமென்றே (கூட்டங்களைப்) புறக்கணிக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் கூட்டங்களுக்கு வரவில்லை என்பதுதான். “அதனால் அவருக்குக் கூறிக்கொள்ள…

ஜாகிர் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தடையில்லை-முகைதின்

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அரசாங்கம் தடுக்காது என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். “அவர் வழிபாடு செய்வதற்கோ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கோ தடையில்லை”, என்று முகைதின் செய்தியாளர்களிடம் கூறினார். வரும் சனிக்கிழமை ஜாகிர் மலாக்காவில் கிருபோங் மஸ்ஜித் சீனாவில் சமய நிகழ்வு…

பழைய மகாதீர்! புதிய அன்வார்? – இராகவன் கருப்பையா

யார் என்ன சொன்னாலும் சரி, ஜாக்கிரை திருப்பி அனுப்ப மாட்டேன் என பிரதமர் துன் மகாதீர் மிகவும் பிடிவாதமாக இருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது, காரணம் அது அவரின் முகமூடியை அகற்றி அவர் இன்னமும் பழைய மகாதீர்தான் என்பதை காட்டியுள்ளது.. இந்நாட்டில் எதனை செய்யக்கூடாது என அரசாங்கம்…

டிஏபி சீன நாட்டவருக்குக் குடியுரிமை பெற்றுத்தர முயல்கிறதா? மறுக்கிறது என்ஆர்டி

கெப்போங் டிஏபி சீன நாட்டவரைப் பதிவு செய்து அவர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக இணையத்தளத்தில் வலம்வரும் ஒரு காணொளியில் கூறப்பட்டிருப்பதைத் தேசிய பதிவுத்துறை மறுக்கிறது. அக்காணொளியைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. அக்காணொளியில் “கெப்போங் டிஏபி சட்டவிரோத சீனக் குடியேறிகளைப்…

பணி ஓய்வு வயதை உயர்த்தலாமா என்று அரசாங்கம் ஆராயும்

அரசாங்கம் அதன் பணியாளர்களின் ஓய்வு வயதை, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் உள்ளதுபோல், 60-இலிருந்து 65ஆக உயர்த்தலாமா என்று ஆராயும். இவ்விவகாரத்தில் நிதி அமைச்சுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். “ இவ்விவகாரத்தை நிதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். கூடவே எங்கள் கருத்தையும்…

ஜாகிர் நாய்க் மீது விசாரணை: ஏஜிசி உத்தரவுக்குக் காத்திருக்கிறது போலீஸ்

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்மீதான விசாரணை தொடர்பில் அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலக(ஏஜிசி) உத்தரவுக்காகக் காத்திருப்பதாக கூட்டரசு போலீஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறியது. ஜாகிர் நாய்க், இந்திய மலேசியர் பற்றியும் சீன மலேசியர் பற்றியும் தெரிவித்த கருத்துகள் மீது தனித்தனியாக விசாரணை நடத்தியதாக புக்கிட்…

தேசிய ஒற்றுமையைப் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லையே, என்ன தலைவர்கள் இவர்கள்-…

முந்தைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் இப்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்துகொண்டு, பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம், வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேச வேண்டாம் என்று ஆட்சியாளர்கள் எவ்வளவோ வலியுறுத்தியிருந்தாலும் அதை உதாசீனப்படுத்துவதோடு தேசிய ஒற்றுமையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அதை அழிக்கவும் முற்படுவதைக் காண அதிர்ச்சியாக உள்ளது என…

மெர்டெக்கா : நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

'மலேசியாவை நேசியுங்கள்: தூய்மையான மலேசியா' என்றக் கருப்பொருளுடன் அனைத்து மலேசியர்களும் 62-வது தேசிய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் சுதந்திரத் தினத்தையொட்டி தங்கள் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். மலேசியாகினி சில செய்திகளை உங்கள் பார்வைக்காக இங்கு ஒன்றிணைத்துள்ளது. அவை பின்வருமாறு: பி.எச். தலைமை…

உங்கள் கருத்து: மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்தனர், ஆனால் ஹரப்பானால்…

பக்கத்தான் ஹரப்பானால் 2023-இல் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? மலேசியாவைக் காப்போம்: முடியும் . அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாட்டு நடப்பைப் பார்க்கையில் ஹரப்பானுக்கு எதிராக மக்களின் ஆத்திரமும் ஏமாற்றமும் அல்லவா நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால் டிஏபி தலைவர் லிம்…

ஊடகங்கள் பொறுப்புடன் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் – துணை அமைச்சர்

உள்ளூர் ஊடகங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை ஒழுக்கமான மற்றும் பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இன மற்றும் மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் விளையாடக் கூடாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் (எம்.சி.எம்.சி) துணை அமைச்சர் எட்டின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார். ஆயினும், வாசகர்கள் செய்தித்தாள்களை வாங்க…

வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்

அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது  ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம்,  மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை  வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின்  அவலங்களை சரி கட்ட  வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…

டாக்டர் எம், முன்புபோல் மாறிவிடுவார் என்று மக்கள் அச்சம்

16 மாதங்களுக்கு முன்பு, 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) வெற்றி பெற்றபோது, பலரிடம் இருந்த நம்பிக்கையைப் போலவே தனக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார். இருப்பினும், சில தினங்களுக்கு முன், அன்வாருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று மகாதிர் வெளியிட்ட…

அம்னோவின் கீழ் இயங்கிய ‘பெமுடா அகாடமி’யின் RM428,500-ஐ அரசு கைப்பற்றியது

1எம்டிபி ஊழலுடன் தொடர்பு உண்டு என்பதால், ‘பெமுடா அகாடமி ’ யின் RM428,500 பணத்தை அரசாங்கம் கைப்பற்ற உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. துணை அரசு வழக்குரைஞர் முஹமட் ஃபரேஸ் ரஹ்மான், அரசு தரப்பு விண்ணப்பத்தை அவர்கள் எதிர்க்கவில்லை என்று அறிவித்ததை அடுத்து, அந்தப் பணத்தின் உரிமையை இரத்து…

‘ராயிஸுக்கு முன், கிட் சியாங் மீது நடவடிக்கை எடுங்கள்’

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று நம்பும் அதன் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், ஒருதலைப்பட்சமாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகட்டை நஜிப் ரசாக் வலியுறுத்தினார். அந்த முன்னாள் பிரதமரின் கூற்றுப்படி, யாரையாவது முதலில் தண்டிக்க வேண்டுமானால், அந்த நபர் டிஏபி…

டாக்டர் எம் – அமைச்சரவையில் அன்வார்? தற்போதைக்குக் காலியிடம் இல்லை.

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தனது அமைச்சரவையில் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அங்கம் வகிக்கமாட்டார் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சூசகமாக தெரிவித்தார். "அமைச்சரவையின் (உறுப்பினர்களில்) எண்ணிக்கையில் எந்த மாற்றமும் அதிகரிப்பும் இல்லை. “இராஜினாமா செய்ய விரும்புவதாக யாரும் கூறாததால், எங்களுக்குக் காலியிடம் இல்லை (அன்வாரை ஆதரிக்க),"…

அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு- முஸ்டபா

முன்னாள் அமைச்சர் முஸ்டபா மீண்டும் அமைச்சராவார் என்று வதந்தி உலவுகிறது. அது குறித்து அவரிடமே கேட்டதற்குப் பதிலளிக்காமல் நழுவிய அவர், அதை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு என்றார். அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுவது பற்றியும் அவர் கருத்துரைக்க மறுத்தார். “அதெல்லாம் பிரதமரின்…

கடன்களைத் திரும்பப் பெற அரசாங்க அமைப்புகளின் உதவியை நாடுகிறது பிடிபிடிஎன்

தேசிய உயர்க் கல்வி கடனுதவி நிறுவனம் (பிடிபிடிஎன்) கொடுத்த கடன்களைத் திரும்பப் பெற, அரசாங்க அமைப்புகளுடன் கலந்து பேசி வருகிறது. குறிப்பாக நெடுநாளாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கடனைத் திரும்பப் பெற மாறுபட்ட அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார். “கடன் வாங்குவோரில்…

திருமணமாகாத தாயார்களுக்கு உதவ சினிமா விளம்பரம்

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, திருமணமாகாமலேயே குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு உதவ விளம்பரப் படமொன்றைத் தயாரித்துள்ளது. அந்த 30-வினாடி காணொளி குறித்து நேற்று டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்த துணை அமைச்சர் ஹன்னா இயோ, அதை சிசுக்கள் வீசியெறியப்படுவதைத் தடுக்கும் அமைச்சின் ஒரு முயற்சி என்று வருணித்திருந்தார். “மணமாகாமல்…

கிட் சியாங் : புதிய மலேசியாவை மறந்து, நான் பின்வாங்க…

தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால், அரசியலில் இருந்து விலக அழைப்புகள் உருவாகியுள்ளதை லிம் கிட் சியாங் உணர்ந்துள்ளார். பல தசாப்தங்களாகப் போராட்டம் மற்றும் தியாகம் குறித்து பேசிய லிம், மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்க மாட்டேன் என்றும் புதிய மலேசியாவின் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்களை விட்டுவிட…