மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
நெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்: போலீஸ் எச்சரிக்கை
பாங்கியில் சாலை விபத்து தொடர்பில் இருவர் சர்ச்சையிட்டுக் கொண்டதில் அது ஒருவரின் கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அதை இன விவகாரமாக்கி விடக்கூடாது என்று துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் எச்சரித்துள்ளார். நடந்த சம்பவத்தை போலீஸ் விளக்கி இருப்பதுடன் அதற்குக் காரணமானவர்கள்…
ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டவரைவு: சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்கிறார்
சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்றுக்கு இடமளிக்கும் சட்டவரைவை சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்வதாக மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார். அந்த மறு ஆய்வுக்குப் பின்னரே அந்தச் சட்டவரைவை மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் என்று அவர் இன்று காலை ஷா…
கெடாவில் புயலால் 171 பள்ளிகள் சேதமடைந்தன
கடந்த வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் மழையுடன் வீசியடித்த புயலில் 171 பள்ளிகள் சேதமுற்றதாக மாநில கல்வி, மனிதவள விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் சல்மீ சைட் கூறினார். நேற்றிரவு பத்து மணி வரை கிடைத்த தகவல் அது. லங்காவி, பெண்டாங், சிக், பாலிங், கோத்தா…
சர்ச்சைகள் இருந்தபோதிலும் கல்வி சீர்திருத்தம் தேவை
கறுப்பு காலணிகள் பயன்பாடு, மெட்ரிகுலேஷனில் கோட்டா முறைமை, ஆரம்பப்பள்ளி மலாய் பாடத்தில் ஜாவி எழுத்து என, ஒன்றன்பின் ஒன்றாக பல சர்ச்சைகளில் கல்வி அமைச்சு எதிர்கொண்டு வருகிறது. பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) அரசாங்கம் அமைத்த 15 மாதங்களுக்குப் பிறகு, தொழில்துறை 4.0 புரட்சியால் மலேசியா பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி…
ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் எக்ஸ்கோ தீவிரம்
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) வி.கணபதி ராவ் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் முழு மூச்சாக இருக்கிறார். அதில் அரசியல் வாழ்க்கையையே பறிபோனாலும் கவலையில்லை என்கிறார். கணபதிரா உள்பட மலாய்க்காரர்- அல்லாத எக்ஸ்கோகள் நால்வர் ஒருதலைப்பட்ச மதமாற்றத்துக்கு வழிகோலும் சட்டத் திருத்தங்களை எதிர்ப்பது குறித்து விளக்குவதற்கு அண்மையில் சிலாங்கூர் சுல்தானைச்…
மகாதிருக்கு ஜாகிர் நாய்க் புகழாரம்
நேற்றிரவு கிளந்தான், கோத்தா பாருவில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை வானளாவ புகழ்ந்துரைத்தார். மத்திய கிழக்கில் பெரு வல்லரசுகளான அமெரிக்காவும் யுனைடெட் கிங்டமும் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்டித்த மகாதிரின் துணிச்சலை அவர் பாராட்டினார். “2011-இல் போர் குற்றங்களை…
காட் எழுத்து அமலில் விருப்பத் தேர்வு என்பதற்கு விளக்கம் தேவை-…
தொடக்கநிலைப் பள்ளிகளில் சிறிய மாற்றங்களோடு அரபுச் சித்திர எழுத்துப் பாடத்தை அமல்படுத்த செய்யப்பட்டிருக்கும் முடிவு குறித்து கல்வி அமைச்சு விளக்கம் தர வேண்டும் என்று டிஏபி புக்கிட் அசேக் சட்டமன்ற உறுப்பினர் விரும்புகிறார். கல்வி அமைச்சு அதன் அறிக்கையில் பயன்படுத்தியுள்ள “விருப்பத் தேர்வு” என்ற சொல்தான் குழப்பம் தருகிறது…
புகை மூட்டப் பிரச்னைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை- சமூக…
ஆசியான் நாடுகள் இவ்வட்டார மக்களின் சுகாதாத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் புகைமூட்டப் பிரச்னைக்கு ஒன்றுகூடி முடிவு காண வேண்டும் என்கிறார் பிரபல சமூக ஆரவலர் ஆங் லாய் சூன். திரும்பத் திரும்ப வந்து மிரட்டும் இப்பிரச்னையை ஆசியான் நாடுகள் கடுமையான ஒன்றாகக் கருத வேண்டும். இதன் தொடர்பில் கடந்த ஆண்டுகளில்…
‘அடிப் குடிம்பத்தினருக்கு ஏஜி மன்னிப்பு கேட்டால் போதும், சிறை செல்ல…
முன்னாள் தீயணைப்பு வீரர், முஹமட் அடிப் முஹமட் காசிமின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான விசாரணையில், அரசு சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தோமஸ் மன்னிப்பு கேட்டால் போதும் என்று அவர்தம் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். தோமஸ்-ஐ சிறையில் தள்ளுவது அவர்களது நோக்கம் அல்ல என்று அடிப் குடும்பத்தினரின் வழக்குரைஞர் ஹனிஃப்…
‘லைனஸ்’-ஐ விரட்ட முடியாது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள்’
நிபுணர்களின் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒருசில தரப்பினரின் செயலுக்காக, மலேசியாவில் முதலீடு செய்ய அழைத்த பிறகு, ‘லைனஸ்’ அரியமண் சுரங்கத் தொழில் நிறுவனத்தை ‘விரட்ட’ முடியாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். மலேசியாவில், அதன் செயல்பாடுகளுக்காக லைனஸ் RM1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாக…
சிறார் மதமாற்றத்துக்குப் பெற்றோர் இருவரின் ஒப்புதல் தேவை- டிஏபி வலியுறுத்து
சிறார்களை இஸ்லாத்துக்கு மதமாற்ற பெர்றோர் இருவரின் சம்மதம் தேவை என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். “எங்கள் நிலைப்பாடு தெள்ளத் தெளிவானது. நாங்கள் கூட்டரசு அரசமைப்பையும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பையும் பின்பற்றுகிறோம் அவை சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோர் இருவரது ஒப்புதலும்…
சிலாங்கூர் அரசிலிருந்து டிஏபியை நீக்குவீர்- பாஸ் இளைஞர் தலைவர் கோரிக்கை
பாஸ் இளைஞர் துணைத் தலைவர் அஹமட் ஃபாட்லி ஷாரி, சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து டிஏபி-யை வெளியேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். “மந்திரி புசார் ஆட்சிக்குழுவில் மாற்றங்களைச் செய்ய சிலாங்கூர் சுல்தானின் அனுமதியைப் பெற்று டிஏபி கட்சியினரை வெளியேற்ற வேண்டும், அத்துடன் அதே கட்சியைச் சேர்ந்த சிலாங்கூர் சட்டமன்றத் தலைவரையும் தூக்க வேண்டும்”,என்று…
நஜிப்பின் மகன் நஸுபுடின்மீது ரிம37.6 மில்லியன் வருமான வரி வழக்கு
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் ரிம1.69 மில்லியன் வருமான வரியை வசூலிக்க புத்ரா ஜெயா முயன்று வரும் வேளையில் அவரின் புதல்வர் முகம்மட் நஸிபுடின் முகம்மட் நஜிப்மீது ரிம37.6 மில்லியன் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருமான வாரியம் வழக்கு தொடுத்துள்ளது. நஸிபுடின் 2011,…
பாக்காத்தானை விமர்சிக்க வேண்டும். ஆனால், ஆக்கப் பொறுத்த நாம், ஆறப்பொறுக்க…
'அடுத்த பொதுத்தேர்தல் வரட்டும், பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியதுதான்.' இதுபோன்ற கூக்குரல்கள் அண்மைய காலமாக சற்று அதிகமாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. புதிய அரசாங்கம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, என்ற ஆதங்கம் ஆதரவாளர்களிடையே வலுத்துவருவது உண்மைதான். ஆனால் 'ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்க வேண்டாமா' என்பதற்கு…
காட் எழுத்துமுறை: கல்வி அமைப்புகள் ஏற்கவில்லை, திட்டத்தைத் தள்ளிவைக்கச் சொல்கின்றன
காட் எழுத்து வடிவ அறிமுகத் திட்டத்துக்குத் தமிழ், சீனக் கல்வி அமைப்புகள் “ஒருமித்த ஆதரவு” கொடுத்ததாகக் கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங் கூறிக் கொண்டிருந்தாலும் அந்த அமைப்புகள் தொடக்கநிலைப் பள்ளிகளில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன. தியோ நேற்று…
பிரதமர் பதவி ஒப்படைப்பு: தேதி திட்டவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்- பெர்சேயும்…
பெர்சே தலைமையில் என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பதைத் தெளிவாக உரைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. பெர்சேயுடன் அங்காத்தான் பீலியா இஸ்லாம் மலேசியா(அபிம்), காபோங்கான் பெர்திண்டாக் மலேசியா(ஜிபிஎம்) ஆகியவற்றையும் உள்ளக்கிய அக்கூட்டணி, இன்று வெளியிட்ட ஒரு திறந்த…
‘காட்’ எழுத்து வடிவ கலையைக் கற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதா- ரபிடா சாடல்
தேசிய பொருளாதார நடவடிக்கை மன்ற உறுப்பினர் ரபிடா அசிஸ் நான்காம் ஆண்டு பகாசா மலேசியா பாடத்தில் காட் எழுத்து வடிவ கலை அறிமுகப்படுத்தப்படுவதை ஏற்கவில்லை. சித்திர எழுத்து வடிவத்தைக் கற்றுக்கொள்ளும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்துவது முறையல்ல என்றாரவர். இன்று பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனத்தில் உரையாற்றிய அந்த முன்னாள் அமைச்சர்,…
பாஸ்: ஒத்துப்போகாத டிஏபி அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
டிஏபி அமைச்சர்கள் அமைச்சரவையின் முடிவுடன் ஒத்துப்போவதில்லை என்றும் அப்படி ஒத்துப்போகாதவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, நான்காம் ஆண்டு மாணவர்களின் பகாசா மலேசியா பாடத்தில் அரபுச் சித்திர எழுத்தின் அறிமுகம் போன்ற விவகாரங்களில் அவர்கள்…
பெர்சத்து தலைவர்களின் இரகசியக் கூட்டத்தில் மகாதிருக்கு ஆதரவு
நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பெர்சத்து கட்சியின் எம்பிகள், செனட்டர்கள், மந்திரி புசார்களின் கூட்டமொன்றை நடத்தினார். அக்கூட்டத்தின் படங்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்ட இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் அகூட்டம் மகாதிருக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டதாக பதிவிட்டிருந்தார். “மகாதிருக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம்.…
மகாதிர் கேட்டுக்கொண்டால்கூட எம்பி ஆக மாட்டேன் – ஷாஹிடான் சகோதரர்
பட்டம், பதவிகளில் ஆசையில்லாதவர் தம்பூன் தூலாங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம். பெர்லிஸ் மந்திரி புசார் பதவி அளித்தால்கூட வேண்டாம் என்கிறாரவர். பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷஹிடான் காசிமின் சகோதரரான இஸ்மாயில், பெர்சத்துவில் இணைந்தது பற்றி மலேசியாகினியிடம் விவரித்தார். “மீண்டும் மந்திரி புசார் வேட்பாளராகும் எண்ணம் எனக்கு இல்லை.…
முன்னாள் எம்பி: பாசிர் கூடாங் நெருக்கடிக்கு யார் காரணம் என்பது…
ஜோகூர் மந்திரி புசார்(எம்பி) டாக்டர் ஷாருடின் ஜமால் பாசிர் கூடாங் துய்மைக்கேட்டுப் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதை முன்னாள் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டின் வரவேற்கிறார். ஆனால், அதில் இன்னும் சில விவகாரங்களுக்கு விளக்கம் தேவைப்படுவதாக அந்த அம்னோ உதவத் தலைவர் சொன்னார். “முக்கியமாக, தூய்மைக்கேட்டுக்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை…
தீபக்கின் சிவில் வழக்கைத் தள்ளுபடி செய்வதா என்பதை நீதிமன்றம் அக்டோபரில்…
ஒரு வணிகரான தீபக் ஜெய்கிஷன், தொடுத்துள்ள ரிம52.6 மில்லியன் சிவில் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் அப்துல் ரசாக் மற்றும் நால்வர் செய்துள்ள மனுமீது கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அக்டோபர் 23-இல் தீர்ப்பளிக்கும். வாய்மொழி வாதங்களைக் கேட்ட பின்னர் நீதிபதி அசிமா ஒமார் அந்த தேதியை முடிவு…
சிலாங்கூர் ஆலயச் சண்டை: 16பேர் கைது,இன்னும் சிலர் தேடப்படுகிறார்கள்
நேற்றிரவு சுங்கை டாரா ஆலயச் சண்டையில் ஒருவரின் கை பகுதி வெட்டுண்டது. சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16பேரை போலீஸ் தடுத்து வைத்துள்ளது . அச்சம்பவம் தொடர்பில் இன்னும் சிலர் தேடப்படுகிறார்கள். பெஸ்தாரி ஜெயாவில் ஆலய இரத ஊர்வலத்தின்போது இரு கும்பல்களுக்கிடையில் வாய்ச்சண்டை முற்றிச் சண்டையில் முடிந்ததாக சிலாங்கூர் குற்றப்…
























