சிலிம் ரிவர் அருகில் ஆம்புலன்ஸ் தடம்புரண்டு ஓட்டுநரும் நோயாளியும் இறந்தனர்

இன்று அதிகாலை சிலிம் ரிவர் அருகில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 368.4 கி.மீ. -இல் ஆம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டதில் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த நோயாளியும் உயிரிழந்தனர். சிலிம் ரிவர் மருத்துவமனை ஊழியர்களான மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்து பற்றி காலை மணி 6.42க்கு தகவல் கிடைத்ததாக பேராக் தீயணைப்பு மற்றும்…

செனட்டரைப் பதவி விலகக் கோரும் தீர்மானத்துக்கு 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு

சபலமூட்டுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என முன்மொழிந்த செனட்டர் முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட் பதவி விலக வேண்டும் என்று கோரும் தீர்மானத்துக்கு இதுவரை 11,000-க்கு மேற்பட்ட கையொப்பங்கள் கிடைத்துள்ளன. Change.org என்னும் அத் தீர்மானத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்த சமூக ஆர்வலர் முஜாஹிடின் சுல்கிப்ளி, பாதிக்கப்பட்டவர்மீதே பழிபோடும்…

மலாய்ப் பண்பாட்டைக் காக்க ‘அராபிசத்தை’ப் புறக்கணிப்பீர்- ரயிஸ் யாத்திம்

முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், மலாய்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமானால் பரவிவரும் “அராபிச(அரபு மயத்தை))த்தை” எதிர்த்துப் போராடுவது அவசியம் என்கிறார். பலர் அரபுக்களையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் துணிய மாட்டார்கள் ஆனால், அரபு வட்டாரம் மலாய்த் தீவகற்பத்தைவிட எந்த வகையிலும் சிறந்ததன்று என்று ரயிஸ் கூறியதாக ஃப்ரி மலேசியா…

ஓராண்டு ஆவதற்குள் யுபிஎம் வாரிய தலைவர் நீக்கப்பட்டது ஏன்?

யுனிவர்சிடி புத்ரா மலேசியா(யுபிஎம்) வாரியத் தலைவர் சைட் ரஸ்லான் சைட் புத்ரா ஜமாலுல்லாயில் பதவிநீக்கம் செய்யப்பட்டது, அதுவும் அவர் பல்கலைக்கழகத்தின் உயர் நிர்வாகத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. த மலேசியன் இன்சைட்டில் வெளிவந்த…

வாருங்கள், வந்து ஜாகிர் நாய்க்குடன் பேசுங்கள்- கிட் சியாங்குக்கு கிளந்தான்…

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விரும்பினால் அவர் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்குடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யத் தயார் என்று கிளந்தான் பாஸ் அரசு அறிவித்துள்ளது. லிம் சமயப் போதகரைக் குற்றவாளி என்று நம்பினால் அவர் கிளந்தான் வந்து அது குறித்து அவரிடமே நேரடியாக…

ஜோகூரில் டிபி பரவலா?-மறுக்கிறார் சுகாதார இயக்குனர்

ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் 70 பேருக்குக் காச நோய் கண்டிருப்பதாக வலைத்தளங்களில் பரவிவருவது பொய்யான செய்தி என்று ஜோகூர் சுகாதார இயக்குனர் டாக்டர் சலேஹுடின் அப்ட் அசீஸ் கூறினார். அப்பகுதியில் 2019 ஜனவரியிலிருந்து ஜூலை வரை அப்பகுதியில் 10 பேருக்கு மட்டுமே அந்நோய் கண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குச்…

உங்கள் கருத்து: ஜாகிர் நாய்க்கை மற்ற நாடுகள் வேண்டாம் என்பது…

அவரை வைத்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியேற்றவும் முடியவில்லை- ஜாகிர் நாய்க்கால் நேர்ந்த இக்கட்டை விவரிக்கிறார் மகாதிர் எஸ்டி: சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை வேறு எந்த நாடும் வா என்று வரவேற்கவில்லையே, அது ஏன் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தமக்குள் கேட்டுக்கொண்டது உண்டா? மற்ற நாடுகள் அவரை…

மகாதிர் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக இருப்பதையே சிலாங்கூர் பெர்சத்து…

சிலாங்கூர் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக் காலத்துக்கும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “14வது நாடாளுமன்றம் முடிவுறும்வரை மகாதிர் பிரதமராக தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். “இதைதான் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியும் அம்னோ, பாஸ் கட்சிகளும் தெரிவித்துள்ளனர்”,…

இந்திரா காந்தி தன் மகள் பற்றி அறிந்துகொள்ள ஐஜிபி-யைச் சந்திக்க…

எம்.இந்திரா காந்தி, காணாமல்போன அவரின் மகள் பிரசன்னா திக்‌ஷா-வைத் தேடும் பணியில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோரைச் சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறார். பிரசன்னாவைத் தேடும் பணியை போலீஸ் முடுக்கி விட்டிருப்பதாக அண்மையில் ஐஜிபி கூறியது இந்திராவுக்கு நம்பிக்கையைக்…

காலணிகளை மாற்றிக்கொள்வதுபோல் பிரதமரை மாற்றிக்கொள்ள முடியாது- ஹாடி

பிரதமரை அவசரப்பட்டு மாற்றிக்கொள்ளக் கூடாது, அப்படி மாற்றுவது எளிதல்ல என்கிறார் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். டாக்டர் மகாதிர் முகம்மட் ஐந்தாண்டுக் காலத்துக்கு முழுமையாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றாரவர். பாதி வழியில் அவரை மாற்றுவது நல்லதல்ல. “பிரதமர் பதவி என்பது காலணி அணிவது போன்றதல்ல,…

பேரரசர் அரியணை அமரும் சடங்கில் கலந்துகொள்ளாதது ஏன்? நஜிப் விளக்கம்

நேற்று சுல்தான் அப்துல்லா ரி’ஆதுடின் அல்-முஸ்டபா அரியணை அமரும் சடங்கில் தம்மால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்குக் கடைசி நேர இடமாற்றமே காரணம் என்று நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “காலை மணி 6.30க்கு இருக்கை ஏற்பாடுகளில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “முன்னாள் பிரதமர் என்ற…

பாலியல் காணொளி விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறதே- ஹசான் கரிம்

பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் காணொளி வழக்கில் சட்டம் நியாயமாகவும் விரைவாகவும் செயல்படுவதைக் காண்பிக்க வேண்டும் என பாசிர் கூடாங் எம்பி ஹசன் பிரதமரையும் சட்டத்துறைத் தலைவரையும் ஐஜிபியையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். “போலீசார் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம்…

எம்எம்யு-வில் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் கட்டண உயர்வு நிறுத்தம்

அதிருப்தியுற்ற மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மலாக்கா மல்டிமீடியா யுனிவர்சிடி(எம்எம்யு) இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மாணவர் நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை( student activity fee, SAF) உயர்த்தாதிருக்க உடன்பட்டது. “பரஸ்பர உடன்பாட்டின்படி நடப்பு மாணவர்களுக்கும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும் SAF கட்டணத்தை உயர்த்துவதில்லை என நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது. “ மாணவர்…

நல்லிணக்கத்தைக் கெடுத்து விடாதீர்கள்: மக்களுக்குப் புதிய ஆகோங் நினைவுறுத்து

இன்று புதிய யாங் டி பெர்துவான் ஆகோங்காக அரியணை அமர்ந்த அல்-சுல்தான் ரி’ஆதுடின் பில்லா ஷா, மக்கள் நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒற்றுமையும் நல்லிணக்கமும்தான் நாட்டின் வலிமை; நாட்டைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தூண்கள் என்று மாமன்னர் கூறினார். “நெருப்புடன் விளையாடினால்…

சிங்கப்பூர் பிரதமரின் சகோதரர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு

சிங்கப்பூர்  பிரதமர் லீ சியான் லூங்-குடன் உறவை முறித்துக்கொண்டிருக்கும் அவரின் சகோதரர் புதிதாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சியை ஆதரிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை முகநூலில் பதிவிட்டிருந்த லீ ஹிசியான் யாங், தன் தந்தை லீ குவான் இயூ-வால் தோற்றுவிக்கப்பட்டு தன் சகோதரர் லீ ஹிசியான் லூங் தலைமையில் செயல்படும் மக்கள் செயல் கட்சி…

ஐஜிபி: இந்திரா காந்தி மகளைத் தேடும் முயற்சியை ‘இரட்டிப்பாக்கியுள்ளோம்’

இந்திரா காந்தியையும் அவரின் மகள் பிரசன்னா திக்‌ஷா-வையும் ஒன்றிணைக்க போலீஸ் உறுதிபூண்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கூறினார். இந்திரா காந்தியின் மகளைத் தேடும் படலத்துக்கு “ஒரு நல்ல முடிவைக் கொண்டுவர வேண்டுமென்பதில்” நேரடி அக்கறை கொண்டிருப்பதாக ஐஜிபி கூறினார். “இவ்விவகாரத்தில் நானே நேரடி கவனம்…

குடியுரிமை விண்ணப்பங்களின் பரிசீலனை சீராக்கப்படும்

குடியுரிமைக்குச் செய்யப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடைமுறைகள் சீராக்கப்பட விருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். இந்தப் புதிய நடைமுறை ஒவ்வொரு விண்ணப்பமும் கவனமாக, நியாயமாக, விரைவாக பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்தும். “நீண்ட காலமாகக் குடியுரிமை இல்லாதிருப்போர் எதிர்நோக்கும் சிக்கல்களை நான் முழுமையாக அறிவேன்”, என்று அமைச்சர் கூறினார். இப்புதிய…

அனுவார்: அம்னோ-பாஸ் சாசனம் மதினா அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும்

செப்டம்பரில் கையெழுத்தாகவுள்ள அம்னோ-பாஸ் ஒத்துழைப்புச் சாசனம் மதினா அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா இன்று கூறினார். அது குறித்து முஸ்லிம்-அல்லாதார் அச்சம் கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் மதினா அரசமைப்பு அவர்களின் நலனையும் பாதுகாக்கிறது என்றவர் தெரிவித்தார். மதினா அரசமைப்பு என்பது நபிகள்…

சுங்கை சிலாங்கூர் தூய்மைக்கேடு சதிநாச வேலை அல்ல- போலீஸ்

சுங்கை சிலாங்கூர் டீசல் எண்ணெயால் துய்மைக்கேடானது ஒரு சதிநாச வேலை அல்ல என்கிறது போலீஸ். ஆற்றைத் தூய்மைப்படுத்துவதற்கு அமர்த்தப்பட்டுள்ள நிறுவனத்தின் ஊழியர்களின் கவனக்குறைவால் அது நிகழ்ந்திருக்கலாம் எனத் தொடக்கநிலை விசாரணைகள் காட்டுவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். விசாரணைக்காக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் தடுத்து…

போகவும் வரவும் அம்னோ தங்குவிடுதி அல்ல- இஸ்மாயில் சப்ரி

கட்சியைவிட்டு வெளியேறிய அம்னோ பிரதிநிதிகள் மீண்டும் கட்சிக்குத் திரும்பிவர விரும்புகிறார்களாம். அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். திரும்பிவரும் அவர்களுக்காக அம்னோ கதவுகள் திறந்தே உள்ளன என்று அந்த பெரா நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால், கட்சியில் அவர்கள் ஏற்கனவே வகித்த பதவிகள் திரும்பக் கிடைக்காது. “சாபாவில்…

துருக்கியில் கிடைக்கும் வாய்ப்புகளை மலேசியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- மகாதிர்

துருக்கி “வான்வெளி, தற்காப்புத் தொழில்துறைகளில்” தொழில்நுட்பத்தை மாற்றிவிட தயாராக இருப்பதை மலேசியா வரவேற்கிறது என்றும் அப்படிப்பட்ட வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்றும் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். துருக்கி குறுகிய காலத்தில் “வான்வெளித் தொழில்களில்” வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டிருப்பது தலைசிறந்த சாதனையாகும் எனப் பிரதமர் குறிப்பிட்டார். “இங்கு விமானங்கள்,…

இந்திராவின் மகளை ‘மறைத்து வைத்துள்ளவர்களிடம்’ விசாரித்தீர்களா? பாஸிடம் இங்காட் கேள்வி

இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் குழுவான இங்காட், இந்திரா காந்தியின் மகளை பாஸுடன் நட்புகொண்ட என்ஜிஓ-கள்தான் மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள தயாராக இல்லை. பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் நேற்று அக்குற்றச்சாட்டை மறுத்து அப்படிக் குற்றஞ்சாட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதற்கு…

‘உண்டி 18 வாக்கெடுப்புக்கு வராத செனட்டர்கள் மன்னிப்பு கேட்க வெண்டும்…

18 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் சட்டவரைவு மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அன்றைய தினம் அவைக்கு வராத செனட்டர்கள் அதற்கான காரணைத்தை அறிவிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “வியாழக்கிழமை வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18க்குக்…