மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
பிடிபிடிஎன் கடனைச் செலுத்தாதவர்களுக்குப் பயணத் தடையை மீண்டும் கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது
உயர்க்கல்விக் கடன் நிதிக்கழகம் பிடிபிடிஎன், கடனைச் செலுத்தாதவர்களுக்கு முன்னர் செய்ததுபோல் பயணத் தடை விதிக்கலாமா என்று ஆலோசிக்கிறது. கல்விக் கடனைத் திரும்பப் பெறப் பல்வேறு வழிகள் ஆராயப்படுவதாக ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பிடிபிடிஎன் அமைச்சரவையிடம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றும், அவற்றுள் கடன் செலுத்தாதவர்கள்…
அரசாங்க ஊழியர்களுக்கு ராயா போனஸ் உண்டு- மகாதிர்
அரசாங்கம் அதன் பணியாளர்களுக்கு அய்டில்பித்ரி போனஸ் கண்டிப்பாக வழங்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். ஆனால், எவ்வளவு கொடுக்கப்படும், எல்லாருக்குமே கொடுக்கப்படுமா என்பனவற்றை அவர் தெரிவிக்கவில்லை. அது பின்னர் அறிவிக்கப்படும் என்றார். “அரசாங்கப் பணியாளர்களுக்க்கு அய்டில்பித்ரி போனஸ் உண்டு. அதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்”, என்றவர்…
ஐஎஸ்-தொடர்புக் கும்பல் ஆடிப் பெயரைத் தவறாக பயன்படுத்தி க் கொண்டிருக்கிறது…
மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்-தொடர்புடைய கும்பல், அதன் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் ஆடிப் முகம்மட் காசிமின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அடிப்பின் குடும்பத்தினருக்கும் ஆடிப்பின் மரணத்துப் பழிவாங்கத்தான் மலாய்க்காரர்-அல்லாதாரின் வழிபாட்டுத் தளங்களைத் தாக்கத் திட்டமிட்டதாக ஐஎஸ்-தொடர்புடைய கும்பல் கூறிக்கொள்வதற்கும் தொடர்பில்லை.…
திடீர் தேர்தல் வரலாம் : தெங்கு ரசாலி எச்சரிக்கை
அம்னோ ஆலோசனை மன்றத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, திடீர் பொதுத் தேர்தல் வரும் சாத்தியம் இருப்பதால் அம்னோ அதற்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குத் தயாராவது என்றால் பாஸுடனும் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடனும் இட ஒதுக்கீடுமீது பேச்சு நடத்துவதும் அதில் அடங்கும் என்று…
மலேசியத் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை
மலேசியா ஜப்பானுடன் செய்துகொள்ளவுள்ள ஒத்துழைப்புக் குறிப்பாணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். அந்தக் குறிப்பாணை மலேசியா அதன் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப வகை செய்யும். “ஜப்பானுடனான எம்ஓசி வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். மலேசியர்களுக்கு வெளிநாட்டில்…
அன்வாரைத் தற்காக்கிறார் அஸ்மின்
அன்வார் இப்ராகிம் ஒரு முன்னாள் கைதி என்பதால் அவர் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா என்று பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கேள்வி எழுப்பியது பொறுப்பற்றதனம் என்று பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். பிகேஆர் தலைவர் அரச மன்னிப்பு பெற்றார் என்பதையும் மறந்து டஹ்கியுடின்…
‘விடுப்பு எடுத்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்யுங்கள்: அமைச்சர்களுக்கு பெர்சே அறிவுறுத்து
அமைச்சர்களும் கட்சித் தலைவர்களாக உள்ள அரசுப் பணியாளர்களும் வேலை நேரத்தில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட விரும்பினால் விடுப்பு எடுத்துக்கொண்டு அதைச் செய்யலாம் என பெர்சே பரிந்துரைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பரப்புரைக் கட்டுப்பாடுகள் அமைச்சர்கள் வேலை நேரத்தில் பரப்புரை செய்வதைத் தடுப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறைப்பட்டுக்…
ஜாஹிட், ஹிஷாம், இஸ்மாயில் ஆகியோரின் ஜிஇ 14 வெற்றிமீது விசாரணை…
டிஏபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இராணுவ வாக்காளர்கள் மாற்றிவிடப்பட்டது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுவதையும் அதனால் அத்தொகுதிகளின் முடிவுகளைச் செல்லாது என்று அறிவிக்கலாமா என்பதையும் தேர்தல் ஆணையம்(இசி) ஆராய வேண்டும் என்று விரும்புகிறார். பிஎன் அமைச்சர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(பாகான் டத்தோ),…
நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் : தற்காப்பு அமைச்சு எம்ஏசிசி-இடம் புகார்
தற்காப்பு அமைச்சு அதன் நிலங்கள் மாற்றிவிடப்பட்டதில் ஊழல்கள் நிகழ்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம் ஏசிசி)த்திடம் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. 16 இடங்களில் நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் அவ்விவகாரம் தொடர்பில் விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது. தற்காப்பு அமைச்சர்…
கடப்பிதழைத் திரும்பப் பெறும் ஜாஹிட்டின் முயற்சி தோல்வி
பண முறைகேடு, நம்பிக்கை மோசடி, ஊழல் குற்றங்கள் என 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி பறிமுதல் செய்யப்பட்ட அவருடைய கடப்பிதழைத் திரும்பப் பெறும் முயற்சியில் தோல்வியுற்றார். மெக்கா சென்று உம்ரா செய்வதற்காக அந்தக் கடப்பிதழ் அவருக்குத் தேவைப்பட்டது. அவரது முறையீட்டைச் செவிமடுத்த…
ஜோகூர் அரசுப் பணியாளர்களுக்குப் பெருநாள் சிறப்பு உதவி
ஜோகூர் மாநில அரசுப்பணியாளர்கள் மாநில அரசிடமிருந்து நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவி பெறுவார்கள் என்று மந்திரி புசார் டாக்டர் ஸாருடின் ஜமால் இன்று அறிவித்தார். உதவி தொடர்பான மற்ற விவரங்களை மாநிலச் செயலாளர் அஸ்மி ரொஹானி அறிவிப்பார் என்றவர் சொன்னார். அந்த உதவி அய்டிபிட்ரி-க்கு முன்பு கொடுக்கப்படும்…
பாஸ் கட்சியினர் கட்சி விவகாரங்களை பகிரங்கமாக விவாதிக்கத் தடை
பாஸ் அதன் உறுப்பினர்கள் கட்சி விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கத் தடை விதித்துள்ளது. கட்சி தொடர்பான ஆலோசனைகளோ விமர்சனங்களோ கருத்துகளோ கட்சிக்குள்ளேயே வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “இதுதான் கட்சியின் கட்டொழுங்கு. கட்சி பேச்சுச் சுதந்திரத்தை அனுமதிக்கிறது…
மெட்ரிகுலேசனை அகற்றுவீர்: கெராக்கான் வலியுறுத்து
கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், மெட்ரிகுலேசன் கல்வியை அகற்றிவிட்டு எஸ்டிபிஎம் தேர்வைப் பல்கலைக்கழக நுழைவுக்கான பொதுவான தகுதியாக வைக்க வேண்டும் என்று கூறுகிறார். எது சரியோ அதைச் செய்யும் அரசியல் துணிவு பக்கத்தான் ஹரப்பானுக்கு வேண்டும் என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “மாணவர்கள், எல்லாருமே மலேசியர்களே, அவர்கள் நியாமற்ற…
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா போனஸ்
பினாங்கு அரசு அதன் ஊழியர்கள் நோன்புப் பெருநாள் சிறப்புப் போனஸாக அரைமாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 பெறுவார்கள் என இன்று அறிவித்தது. விழா காலத்தையும் விலைவாசி உயர்ந்து கொண்டே இருப்பதையும் கருத்தில்கோண்டு இந்தச் சிறப்புப் போனஸ் வழங்கப்படுவதாக முதலமைச்சர் செள கொன் இயோ கூறினார். சிறப்புப் போனஸுக்காக…
சிசிஐடி தலைவர் மஸ்லான் மன்சூர் துணை ஐஜிபி-ஆக நியமனம்
புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலனாய்வுத் துறை(சிசிஐடி) இயக்குனர் மஸ்லான் மன்சூர் துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் பலீசாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்துல் ஹமிட் படோரின் இடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மே 5-இலிருந்து அமலுக்கு வருகிறது. படோர் மே 4-இல் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசாக பணி உயர்வு…
நிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் தற்காப்பு அமைச்சர்களை விசாரிக்க…
தாம் அமைச்சராக இருந்த காலத்தில் இராணுவ நிலங்கள் மாற்றி விடப்பட்டதில் தாம் ஆதாயம் அடைந்ததாக நிரூபிக்க முடியுமா என்று முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் சவால் விடுத்திருப்பதை அபத்தமானது என்று முன்னாள் படைவீரர் சங்கமான பெட்ரியோட் வருணித்தது. நிலம் மாற்றிவிடப்பட்டதில் ஹிஷாமுடின் பயனடைந்தாரா இல்லையா என்பது போலீஸ்…
ரமலான் மாதத்தில் உணவகங்களை மூடுவது ஓர் ஆலோசனையே- கிளந்தான் எம்பி
கிளந்தானில் ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவு 8.30இலிருந்து 10 மணிவரை மூடுவது ஓர் உத்தரவல்ல, வெறும் ஆலோசனைதான் என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப். கடைகளை மூட வேண்டும் என்பதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இந்த மாற்றம். இதன் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுக்குப் புதிய அறிவிக்கை…
அன்வாரை முன்னாள் கைதி என்பது தப்பா? தகியுடின் கேள்வி
பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒரு முன்னாள் கைதி என்று குறிப்பிட்டதில் தவறில்லை என்கிறார். அது தவறு என்று சொல்வோர் நீதிமன்ற வழக்கைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார். “என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்வோர் சட்டத்தையும் உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும் என்று…
சண்டாகானில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன-பங்
நேற்றைய சண்டகான் இடைத் தேர்தலில் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனவாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ரடின் கூறிக்கொள்கிறார். “சில வாக்காளர்கள் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகள் உணமையா என்று ஆராய்கிறோம்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. நேற்று நடந்த சண்டாகான் நாடாளுமன்றத் தொகுதி…
‘மகாதிரை விடுங்கள் ஐயா, அவர் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கட்டும்’-…
டாக்டர் மகாதிர் முகம்மட் எவ்வளவு காலத்துக்குப் பிரதமராக இருப்பார் என்ற சர்ச்சையில் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் ஈடுபடக்கூடாது என்று பார்டி பிரிபூமி மலேசியா(பெர்சத்து) உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினார். மகாதிர் விலகிக்கொள்ள விருப்பமில்லாமல் பிரதமர் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்…
சண்டாகான் இடைத் தேர்தல்: நண்பகல்வரை 32 விழுக்காட்டினர் வாக்களித்தனர்
சண்டாகான் இடைத் தேர்தலில் இன்று நண்பகல் வரை வாக்களித்தோர் எண்ணிக்கை 32 விழுக்காடு ஆகும். 39,684 வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் 70விழுக்காட்டினராவது வாக்களிக்க வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. காலையில் வானிலை நன்றாக இருந்தது. பிற்பகலில் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத்…
சண்டாகான் தேர்தல் பரப்புரைமீது 13 புகார்கள்
சண்டாகான் இடைத் தேர்தல் பரப்புரைமீது போலீ ஸ் 12 புகார்களையும் எம்ஏசிசி ஒரு புகாரையும் பெற்றதாக தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அஸ்ஹார் ஹருன் தெரிவித்தார். “எனக்குத் தெரிந்து நேற்றுவரை 12 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. எல்லாமே சிறுசிறு புகார்கள், அனுமதி பெறாமல் பரப்புரை செய்தார்கள், போட்டியிடாத கட்சியின் சின்னங்கள்…
சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க தனி அமைப்பு
அரசாங்கம் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனிக்க சிறுவருக்கான ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிடுகிறது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். இப்போது சமுக நலத் துறையில் சிறுவர் நலத் துறை ஒன்று இருக்கிறது. ஆனால், அதற்கு அளவுக்கு அதிகமான பொறுப்புகள் உள்ளன…
























