4 நாள் குளிக்காமலிருந்த ஜமால் ‘பெர்சே 7’ தொடங்குகிறார்

சிவப்புச்  சட்டைகள்    தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்    நான்கு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டிருந்தார்.  அந்த   நான்கு   நாள்களும்  அவர்  குளிக்கவில்லை. இன்று  அம்பாங்   போலீஸ்   தலைமையகத்தில்   விடுவிக்கப்பட்டதும்   செய்தியாளர்களைச்   சந்தித்ததும்    ஜமால்  முதலில்   சொன்னது  இதுதான்:   “நான்கு   நாள்களாக    நான்  குளிக்கவில்லை”. நான்கு  நாள்   குளிக்காமல்   தடுப்புக்  காவலில்  …

ஜமாலும் சிவப்புச் சட்டையினரும் விடுவிக்கப்பட்டனர்

தடுத்து  வைக்கப்பட்டிருந்த   பெர்சே  எதிர்ப்பாளரும்    சுங்கை  புசார்  அம்னோ   தலைவருமான   ஜமால்   முகம்மட்  யூனுஸ்    விடுவிக்கப்பட்டார். பெர்சே  பேரணியை   எதிர்க்கும்  சிவப்புச்   சட்டை   இயக்கத்தின்    தலைவரான  ஜமால்    கடந்த  சனிக்கிழமை   அதிகாலை   கைது  செய்யப்பட்டார். விசாரணைக்காக   அவரையும்   அவருடன்  கைதான   மேலும்   மேன்று   சிவப்புச்  சட்டையினரையும்    நான்கு  நாள் …

மரியா தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பினாங்கு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம்

பினாங்கு  முதலமைச்சர்   லிம்  குவான்   எங்,     பாதுகாப்புக்  குற்ற (சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டத்தையும்   அதன்கீழ்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதையும்   கண்டிக்கும்   தீர்மானம்  ஒன்றை   பினாங்கு   சட்டமன்றத்தில்   தாக்கல்   செய்தார். மூன்று  பிள்ளைகளுக்குத்   தாயாரான   மரியா  ஒரு பயங்கரவாதியோ   அரசியல்வாதியோ   அல்ல    என்று  லிம்  குறிப்பிட்டார். …

பாஸ் எம்பி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்

பாஸ்   பொக்கோக்   சேனா   எம்பி   மாபுஸ்   ஒமார்,   சனிக்கிழமை  பெர்சே  5  பேரணியில்   கலந்துகொண்டதற்காகக்    கட்சி   என்ன   நடவடிக்கை   எடுத்தாலும்  அதை   எதிர்கொள்ள  ஆயத்தமாக  உள்ளார். பெர்சே    5  பேரணியில்   கலந்துகொண்ட   கட்சி   உறுப்பினர்களுக்கு   எதிராக   நடவடிக்கை   எடுக்கப்படும்   என   பாஸ்  கட்சித்   தலைவர்   அப்துல்  ஹாடி  ஆவாங்   …

பிபிஎஸ் மீதான அமைச்சரின் உத்தரவை இரத்துச் செய்வதில் பினாங்கு அரசு…

தன்னார்வ   காவல்  படை(பிபிஎஸ்)   ஒரு  சட்டவிரோத  அமைப்பு   என்று   உள்துறை    அமைச்சு    அறிவித்திருப்பதை   இரத்துச்   செய்யும்  முயற்சியில்  பினாங்கு   அரசு   தோல்வி  கண்டது. பினாங்கு   அரசு  செய்து  கொண்ட  மனுவைத்   தள்ளுபடி   செய்த    பினாங்கு  உயர்  நீதிமன்ற  நீதிபதி   ஹதாரியா   சைட்  இஸ்மாயில்    பிபிஎஸ்  ஒரு  கழகம்   என்று …

மரியாவை விடுவிக்கக் கோரி எம்பிகள் புக்கிட் அமானுக்குப் படையெடுப்பு

சுமார்  40  எதிரணி     எம்பிகள்,   சோஸ்மா   சட்டத்தின்கீழ்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவை   விடுவிக்கக்  கோரி     புக்கிட்   அமான்  போலீஸ்  தலைமையகம்  நோக்கி   இன்று  ஊர்வலம்  சென்றனர். நாடாளுமன்ற  நுழைவாயிலிலிருந்து  புக்கிட்   அமான்வரை   'Bebaskan Maria' (மரியாவை  விடுதலை  செய்), 'Hentikan Sosma' (சோஸ்மாவை  …

ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: சட்ட திருத்தங்கள் மார்ச்/ஏப்ரல் 2017 இல்தான்…

  ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் இந்திரா காந்தி பெருந்துன்பத்திற்கு ஆளானார். அவரது மூன்று குழந்தைகளும் அவரது ஒப்புதல் இல்லாமலே இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரது கணவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் 2009 ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு…

ஒருதலைச்சார்பான மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டவரைவு

கணவன்/மனைவியரில்   ஒருவர்   இஸ்லாத்துக்கு   மதமாறிய  பின்னர்   எழும்  மணவிலக்கு,  பிள்ளை  பராமரிப்பு  விவகாரங்கள்    தொடர்பான   பிரச்னைகளுக்குத்   தீர்வு  காண்பதற்கு    விரிவான   சட்ட  திருத்தங்களைப்  பரிந்துரைக்கும்   சட்டமுன்வரைவு   இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யப்பட்டது. இச்சட்டத்  திருத்தங்கள்  இஸ்லாத்துக்கு  மதமாறிய   ஒரு  வாழ்க்கைத்   துணை    மணவிலக்கு  பெற   சிவில்   நீதிமன்றத்தில்   மனுச் …

எம்பி: மரியா பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டது ஏன்? விளக்கமளிப்பது…

பெர்சே   தலைவர்    மரியா   சின்   அப்துல்லாமீது   கொடூர  பாதுகாப்புக்  குற்றச்  சட்டம்(சோஸ்மா)  2012  பயன்படுத்தப்பட்டிருப்பது   குறித்து  விளக்கமளிக்க    மறுக்கும்   உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியை   எதிரணி   எம்பி   ஒருவர்   சாடினார். ஜாஹிட்   நேற்று,   உயர்நிலை  பாதுகாப்பு   மிரட்டல்களுக்கு  எதிராக   பயன்படுத்துவதற்காகக்  கொண்டுவரப்பட்ட   அக்கொடூரச்   சட்டம்   மரியாவைத்   தடுத்து …

பெர்சே பேரணி கைது: மேலும் அறுவர் விடுதலை, ஆனால் மரியா…

பெர்சே  பேரணியின்போது  கைதானவர்களில்  மூன்று  பக்கத்தான்  ஹராபான்  பிரதிநிதிகளும்   மூன்று  சமூக   ஆர்வலர்களும்   இன்று  விடுவிக்கப்பட்டனர். “டாங்   வாங்கி   போலீஸ்  நிலையத்தைவிட்டுப்  புறப்படுகிறோம்”  என  பத்து   எம்பி   தியான்   சுவா  டிவிட்டரில்   குறிப்பிட்டிருந்தார்.  அவர்    ஒரு   படத்தையும்  பதிவேற்றியிருந்தார். அதில்  அவருடன்  அம்பாங்   எம்பி   சுரைடா   கமருடின்,   பாசிர் …

பெர்சேக்கு ஆதரவு தேட தேவாலயம் சரியான இடமல்ல -கெராக்கான் இளைஞர்கள்

கெராக்கான்    இளைஞர்    தலைவர்   ஒருவர்,   சமயத்தை    அரசியலுடன்     கலக்காதீர்   என்று   பெர்சே  5 பேரணியில்   கலந்துகொள்ளுமாறு   ஊக்குவித்த   தேவாலயங்களுக்கு  நினைவுறுத்தினார். கடந்த   வாரம்  சில   தேவாலயங்கள்   பேரணி   நடப்பதற்கு  முன்னதாக  வழிபாட்டுக்   கூட்டங்களை   நடத்தி  குறிப்பிட்ட   ஒரு   தரப்பினருக்கே   ஆதரவு   தெரிவித்ததாக  கெராக்கான்  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி …

பெர்சே கைது: எண்மர் விடுவிக்கப்பட்டனர்; மரியா தனி அறைச் சிறையில்…

  கடந்த வெள்ளிக்கிழை பெர்சேயிக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட கடுமமையான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் எண்மர் இன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள்: ஸாப்வான் அனாங், மன்டீப் சிங், முகமட் லூக்மான் நுல் ஹாகிம் ஸுல் ரஸாலி, எஸ். அருட்ச்செல்வன், வோங் சீ வாய், லீ காய் மிங், அனிஸ்…

ஸாகிட்: ஏன் மரியா சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கு…

  பெர்சே 5 பேரணி நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதா க   பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அவரது பெர்சே அலுவலகத்தில் போலீசார் மேற்கொண்ட ஒரு திடீர் சோதனையின் போது தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்…

டிஎன்50, 2020 தூரநோக்குக்கு மாற்றாக அல்ல, கைரி

  2050 தேசிய உருமாற்றம் கொள்கை (டிஎன்50) 2020 தூர நோக்குக்கு மாற்றானது அல்ல என்று இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். பிரதமர் நஜிப் ரசாக்கின் சிந்தனைப்படி டிஎன்50 இன் முதல் கட்டம் எதிர்கால மலேசியாவைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வகைசெய்கிறது…

உத்துசான்: மகாதிரால் மலாய்க்காரர்களை பெர்சே பக்கம் திருப்ப முடியவில்லை

  பேர்சே 5 பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்கள். அவர்கள் டிஎபி ஆதரவாளர்கள்.  இது மகாதிராலும் அவரது ஆதரவாளர்களாலும் மலாய்க்காரர்களை அதிகம் கவர முடியவில்லை என்பதைக் காட்டுகிறது என்று அம்னோ நாளிழதான உத்துசான் மலேசியா கூறுகிறது. பெர்செ 4 க்கிற்கு வந்திருந்தவர்களை விட பெர்சே 5 இல் பங்கேற்றவர்களின்…

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாக்கீர் நாயக்கிற்கு மலேசியா சிவப்புக் கம்பளம்…

-மு. குலசேகரன், நவம்பர் 20, 2016.   சர்ச்சைக்குறிய மத போதகரான ஜாக்கீர் நாயக், தலைமையேற்றிருந்த  இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்திற்கு இந்திய அரசாங்கம் சட்டவிரோத இயக்கனமென கூறி  5 வருடத்திற்கு தடை விதித்துள்ளது. இதன் வழி அவரின் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. மதத்துவேஷம், இளைஞர்களுக்கு வன்முறைப்  போதிப்பது, இனங்களுக்கிடையிலான…

கேஎல்சிசி நோக்கி 20ஆயிரம் மஞ்சள் சட்டையினர்

கோலாலும்பூரில்  ஜாலான்  அம்பாங்    அருகில்  உள்ள   பெட்ரோனாஸ்   இரட்டைக்  கோபுரம் ,  கேஎல்சிசியைச்  சுற்றியுள்ள   பகுதி    மஞ்சள்   நிறமாக  மாறி   வருகிறது. பெர்சேயின்   உத்தரவுக்கிணங்க   அதன்   ஆதரவாளர்கள்   கேஎல்சிசியை   நோக்கிக்  கூட்டம்   கூட்டமாக    சென்று  கொண்டிருக்கிறார்கள். பிற்பகல்   மணி   3.30   அளவில்   சுமார்  20ஆயிரம்   பேர்   அங்குக்  கூடியிருந்தனர். …

‘நல்ல கூட்டம்’ என்று மகாதிர் பாராட்டு

டட்டாரான்   மே  பேங்   வந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  பெர்சே  5  பேரணிக்கு   நிறைய  பேர்  திரண்டு   வந்திருப்பதாக   பாராட்டினார். “நிறைய   பேர்   வந்துள்ளனர்.  அரசாங்கம்தான்   ஆர்ப்பாட்டம்   செய்யும்  மக்களின்   உரிமையைக்   கோழைத்தனமாகத்   தடுக்கப்   பார்க்கிறது. இந்த  உரிமை   அரமைப்பிலேயே   இருக்கிறது”,  என்றாரவர். பேரணியில்   சீனர்கள்தான்   அதிகமா   என்று  …

மரியாமீது சோஸ்மா குற்றச்சாட்டு, அவருடன் கைதான 9 பேருக்குத் தடுப்புக்…

பெர்சே   தலைவர்   மரியா  சின்   அப்துல்லா   பாதுகாப்புக்   குற்ற(சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டத்தின்கீழ்   குற்றம்   சாட்டப்பட்டிருக்கிறார். மலேசியாகினிக்கு    அனுப்பிய    குறுஞ்  செய்தியில்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்  அபு   பக்காரும்   அதை    உறுதிப்படுத்தினார். அவருடன்  கைதான  இதர  ஒன்பது   பேரும்    விசாரணைக்காக   இரண்டு  நாள்கள்  தடுத்து  வைக்கப்பட்டனர். இதனிடையே, …

சிவப்புச் சட்டை: ஜமாலும் இதர இருவரும் நான்கு நாள் தடுத்து…

சிவப்புச்   சட்டை   அணித்   தலைவர்    ஜமால்   முகம்மட்  யூனுசை  நான்கு  நாள்  தடுத்து  வைக்க  அம்பாங்   மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்   இன்று   உத்தரவிட்டது. அம்பாங்  பாயிண்ட்   சம்பவத்துக்காக    அவரும்   மற்ற  இருவரும்   விசாரணைக்காக    தடுத்து   வைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்மூவரும்   ஷா  ஆலம்    தடுப்பு   மையத்துக்குக்  கொண்டு   செல்லப்படுவதாக   அவர்களின்   சட்ட   ஆலோசகர்  …

டட்டாரான் மெர்டேகாவை நோக்கிச் செல்லும் கிட் சியாங், குவான் எங்

இன்று   பிற்பகல்   மணி   இரண்டுக்கு     பிரிக்பீல்ட்ஸ்  போக்குவரத்து  மற்றும்   விற்பனை   மையத்தில்   நூற்றுக்கணக்கான   பெர்சே  பங்கேற்பாளர்கள்   காணப்பட்டனர். டட்டாரான்   மெர்டேகா   நோக்கிச்   செல்வதற்குமுன்    பலர்   உணவகங்களை  நாடிச்   செல்ல     மேலும்  பலர்    இளைப்பாறிக்   கொண்டிருக்கிறார்கள். இதனிடையே,    லிம்  கிட்  சியாங்,  லிம்   குவான்  எங்   உள்பட   டிஏபி  தலைவர்கள்  …

பெர்சே டி-சட்டையில் விமான நிலையம் வந்திறங்கினார் மகாதிர்

சூடான்   நாடு   சென்றிருந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   இன்று   பிற்பகல்   மணி   ஒன்றுக்கு   மலேசியா  திரும்பினார். மகாதிர்   பெர்சே  டி-சட்டை   அணிந்து   விமானத்திலிருந்து   இறங்கும்   படமொன்றை    வலைப்பதிவாளர்   பிர்டுஸ்  அப்துல்லா    பகிர்ந்து   கொண்டிருக்கிறார். ஆனால்,  மகாதிர்   வந்திறங்கியது   சுபாங்   விமான  நிலையமா,   கோலாலும்பூர்   அனைத்துலக   விமான   நிலையமா    என்பது   …

பெர்சே ஓர் எதிரணி இயக்கம்: அஸலினா சாடல்

பெர்சே  மக்களைத்   தூண்டிவிட்டு   தனக்குச்   சாதகமாகப்  பயன்படுத்திக்கொள்கிறதாம்.    பிரதமர்துறை  அமைச்சர்    அஸலினா   ஒத்மான்  கூறினார். அந்தத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பு   இப்போது   ஓர்   எதிரணி   இயக்கமாக   மாறிவிட்டது    என்றவர்      சொன்னார்.