நஸ்ரி: பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை மசீச நிறுத்த…

  ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்குக்கான திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பாஸ் கட்சி நடத்தும் பேரணியை மசீச எதிர்க்க முடியாது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். ஒரு பேரணியை நடத்துவது பாஸின் ஜனநாயக உரிமை என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா…

ஊழல் அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டணை, தாய்லாந்து சிந்திக்கிறது

  தாய்லாந்தில் தேசியச் சீர்திருத்த வழிகாட்டுதல் மன்றம் (NRSA) முன்மொழிந்துள்ள கடுந்தண்டணை அளிக்கும் சட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அரசாங்க அதிகாரிகள் தூக்கில் தொங்க வேண்டி வரும். முன்மொழியப்பட்டுள்ள தண்டணையின்படி ஓர் அரசாங்க அதிகாரி இலஞ்சம் பெற்று நாட்டிற்கு ஒரு மில்லியன் பாட் இழப்பை ஏற்படுத்தினால் அந்த அதிகாரிக்கு மரண…

மீண்டும் பிரதமரா? …இல்லை, இல்லை என்கிறார் மகாதிர்

  எதிரணியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராக ஆய்வுகள் காட்டினாலும் தாம் திரும்பவும் பிரதமர் பதவிக்கு வரும் சாத்தியத்தை முன்னாற் பிரதமர் மகாதிர் நிராகரித்தார். இன்ஸ்டியுட் டாருல் ஏசான் கடந்த டிசம்பரில் மேற்கொண்ட ஓர் ஆயவில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்மைவிட மகாதிர் பிரதமராவதற்கு அதிகமான மலாய்க்காரர்களின் ஆதரவு இருப்பது…

ரபிசி: ஷாரிரின் நியமனம் பெல்டாவில் நிலவரம் சரியில்லை என்பதைக் காண்பிக்கிறது

கூட்டரசு   நில  மேம்பாட்டு   நிர்வாகத்தின் (பெல்டா)  தலைவராக   ஜோகூர்   பாரு   எம்பி   ஷாரிர்    அப்துல்   சமட்டின்        திடீர்   நியமனம்    அங்கு   நிலைமை     சரியில்லை     என்பதைத்தான்     காண்பிக்கிறது   என்று   பிகேஆர்    உதவித்    தலைவர்     ரபிசி   ரம்லி   கூறினார். அந்நிறுவனத்தில்    நிர்வாகக்   கோளாறுகள்   நிகழ்துள்ளதாகக்   கூறிய   அவர்,    அவை   அம்பலப்படுத்தப்பட்டு  வரும் …

பாஸின் சட்டம் 355 பேரணிக்கு வாரீர்: டிஏபிக்கும் அமனாவுக்கும் அழைப்பு

ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட (சட்டம்355)த்  திருத்தத்துக்கு   ஆதரவாக     நடத்தப்படும்    பேரணியில்   கலந்துகொள்ள    அனைத்து   அரசியல்   கட்சிகளையும்   பாஸ்   அழைக்கும். டிஏபிக்கும்    அமனாவுக்கும்கூட    அழைப்பு   உண்டா     என்று   கேட்டதற்கு,  “அனைவருக்கும்   அழைப்பு   உண்டு”,  என   பாஸ்    தகவல்   தலைவர்      நஸ்ருடின்   ஹசான்   தெரிவித்தார். “பேரணியில்   கலந்துகொண்டு    சிறப்புச்  செய்ய   …

பிப்ரவரி 18-இல் சட்டம் 355 ஆதரவுப் பேரணி, பாஸ் நடத்துகிறது

பாஸ்   கட்சி,   ஷியாரியா    நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்ட( சட்டம் 355)த்துக்குக்   கொண்டுவரப்படவுள்ள  திருத்தங்களுக்கு   ஆதரவாக   பிப்ரவரி  18-இல்   ஒரு   பேரணிக்கு   ஏற்பாடு    செய்துள்ளது. இன,  சமய,  அரசியல்   வேறுபாடின்றி   அனைத்து    மலேசியரும்    அதில்    கலந்துகொள்ளலம்    என    பாஸ்  துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்    துவான்   மான்   கூறினார். சுமார் …

நான் கிளந்தானில் ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் கையூட்டுத்தானா? பாஸிடம் சைபுடின் கேள்வி

தாம்   பினாங்கு    முதலமைச்சர்   லிம்  குவாங்   எங்கின்  வியூக   ஆலோசகராக    நியமிக்கப்பட்டிருப்பதை    ஹராகா   டெய்லி  ஒரு   பிரச்னையாக்குவதை     பிகேஆரின்    சைபுடின்   நசுதியோன்   இஸ்மாயில்  விரும்பவில்லை. பாஸ்   கட்சிச்   செய்தித்தாளான ஹராகா   டெய்லி  சைபுடினுக்கு  அப்பதவி   வழங்கப்பட்டதை   ஒரு  வகை  ‘கையூட்டு’   என்று   வருணித்திருந்தது. அது   குறித்து     கருத்துரைத்த    சைபுடின்,   முன்பு   …

‘பாஹ்ரியிடம் எம்ஏசிசி மன்னிப்பு கேட்க வேண்டும்’

 தப்பான    அறிக்கை    வெளியிட்டதற்காக   மலேசிய   ஊழல்தடுப்பு     ஆணையம்  (எம் ஏசிசி)    அதன்  முன்னாள்   இயக்குனர்    பாஹ்ரி  முகம்மட்  ஸின்னிடமும்    பொதுமக்களிடமும்   மன்னிப்பு   கேட்க    வேண்டும்  என   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்   வழக்குரைஞர்   ஹனிப்   காத்ரி   அப்துல்லா   வலியுறுத்தினார். எஸ் ஆர்சி   புலனாய்வும்மீது    தாம்    தெரிவித்த    கருத்துகள்   தொடர்பில்   எம்ஏசிசியின்  …

355 சட்டம்மீதான திருத்தம் குறித்து சரவாக் பிஎன்னுக்கு இன்னும் விளக்கப்படவில்லை

1965 ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்   நீதி)   சட்டம்   அல்லது   சட்டம் 355க்குக்  கொண்டுவரப்படவுள்ள   திருத்தம்   குறித்து    சரவாக்  பிஎன்    தலைவர்களுக்கு  இன்னும்   விளக்கம்   அளிக்கப்படவில்லை    என  த   ஸ்டார் பிரதமர்துறை     அமைச்சர்   நன்சி   ஷுக்ரியை     மேற்கோள்காட்டி    அறிவித்துள்ளது. சரவாக்   தலைவர்களைப்   பொறுத்தவரை    அச்சட்டத்  திருத்தத்தை    நிராகரிப்பதென்னும்   நிலைப்பாட்டில்   உறுதியாக    இருக்கிறார்கள்   …

பிரதமரின் உதவியாளருக்கு எதிரான முக்ரிஸின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றம்,    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  உதவியாளர்   தெங்கு     ஸரிபுடின்    தெங்கு   அஹ்மட்டின்   பத்திரிகை   அறிக்கைகள்மீது   முக்ரிஸ்  மகாதிர்      தொடுத்திருந்த     அவதூறு   வழக்கில்      முதலிரு   பத்திரிகை   அறிக்கைகள்மீதான   வழக்கைத்   தள்ளுபடி   செய்தது. ஆனால்,   மூன்றாவது   நான்காவது      அறிக்கைகள்   கெடாவின்  முன்னாள்     மந்திரி    புசார்     முக்ரிஸைத்தான்  குறிப்பிடுகின்றன   …

அன்வார்- ஆதரவு கூட்டத்துக்கு வருவோருக்குப் பணமா? மறுக்கிறது டிஏபி

அடுத்த   வாரம்   பிகேஆர்   பெருந்  தலைவர்   அன்வார்   இப்ராகிமுக்கு     ஆதரவு   தெரிவிக்கும்    கூட்டத்தில்    கலந்துகொள்வோருக்கு    ஆளுக்கு   ரிம50  கொடுக்கப்படும்    என்று   கூறும்    இணையச்  செய்தியை   பினாங்கு    டிஏபி   மறுக்கிறது. வாட்ஸ்எப் பில்  வந்த   அனாமதேய    செய்தியை    நம்பி   KLxpress  அச்செய்தி யை   வெளியிட்டிருக்கிறது      என  மாநில   டிஏபி   விளம்பரப்  …

பாஹ்ரியின் கூற்றை மறுத்ததேன், எம்ஏசிசி விளக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை   மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணைய (எம்ஏசிசி)   சிறப்பு   நடவடிக்கை   பிரிவு  இயக்குனர்   பாஹ்ரி    முகம்மட்  சின்,   அதிர்ச்சி    தரும்   செய்தி  ஒன்றை  வெளியிட்டார். 2919-இல்   பணி  ஓய்வு  பெற   வேண்டிய    அவர்   முன்கூட்டியே   ஓய்வு  பெற  முடிவு   செய்ததாகக்  கூறினார்.   அதற்கு    அவர்   தெரிவித்த   காரணம்தான்    அதிர்ச்சி    அளித்தது.  …

அமைச்சின் தலைமைச் செயலாளரும் இரு மகன்களும் ஏழு நாள் தடுத்து…

புத்ரா  ஜெயா   மெஜிஸ்திரேட்   நீதிமன்றம்    ஓர்   அமைச்சின்    தலைமைச்   செயலாளரையும்    அவரின்   மகன்கள்  இருவரையும்   விசாராணைக்காக   ஏழு    நாள்களுக்குத்   தடுத்து    வைத்தது. அரசு   உயர்   அதிகாரி   அவரின்  34,  29  வயது   மகன்களுடன்   காலை   மணி   9.38க்கு    நீதிமன்றம்   வந்தார். அவர்களை   செக்‌ஷன்   117-இன்கீழ்   14   நாள்   தடுத்து  …

தலைமைச் செயலாளர் கைதானார், சரி ஆனால் எஸ்ஆர்சி-இல் யாரும் கைதாகவில்லையே,…

ஓர்   அமைச்சின்   தலைமைச்   செயலாளரைக்  கைது   செய்ததன்வழி   மலேசிய  ஊழல்   தடுப்பு   ஆணையத்தின்   முன்னாள்    அதிகாரி   பாஹ்ரி  முகம்மட்  சின்னின்   பரபரப்பூட்டும்    செய்தியால்   ஏற்பட்டுள்ள    கவலையை -   முடிவுக்குக்  கொண்டு   வந்துவிட   முடியாது   என்கிறார்   பாஸ்  துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்   மான்.. எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்    நிறுவனத்தை   …

சீனப்பள்ளிகளுக்கான ரிம50 மில்லியன் நிதி: பிரச்சனையைத் தீர்த்து வைக்க நஜிப்…

  சீனப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தை விரைவில் தீர்க்கப் போவதாக பிரதமர் நஜிப் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதை மசீச தலைவர் லியோ தியோங் லை தெரிவித்ததாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. லியோவும் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கும் இவ்விவகாரம் குறித்து பிரதமரைச் சந்தித்துள்ளனர்.…

விடுமுறையைக் கழிக்க அரசாங்க ஜெட்டை பயன்படுத்த இது உகந்த நேரமல்ல,…

  பிரதமரின் கும்பத்தினர் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழிக்க அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நஜிப் ரசாக்கை குறைகூறியுள்ளனர். துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் பிரதமர் நஜிப் அரசாங்க ஜெட் விமானத்தை பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார் என்று நஜிப்பை…

எம்எசிசி அமைச்சின் தலைமைச் செயலாளரை கைது செய்துள்ளது

  ஊழல் குற்றத்திற்காக "டத்தோக்" பட்டம் பெற்றுள்ள ஓர் உயர்மட்ட அரசாங்க அதிகாரியை மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையம் யுஎஸ்எ சுபாங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்துள்ளது என்று த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது. இலஞ்சம் பெறுவதற்காக 50 வயதான பெடரல் அமைச்சின் தலைமைச் செயலாளரான…

காலிட் சாமாட்: பாஸ் முக்கோணப் போட்டியைத் திணிக்க முயல்கிறது

  அமனா கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிராக பிகேஆரையும் பெர்சத்துவையும் பாஸ் கட்சி மிரட்டி வருவதன் மூலம் அடுத்தப் பொதுத் தேர்தலில் முக்கோண போட்டியைத் திணிக்க அக்கட்சி முயல்கிறது. இருக்கை ஒதுக்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் இருப்பதால் அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடுமையான விளைவுகளைச்…

பள்ளி ஆண்டு தொடங்கி விட்டது ஆனால் சீனப்பள்ளிகளுக்கான நிதி இன்னும்…

  சீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்கு 2016 ஆண்டுக்கு மத்திய அரசாங்கம் வழங்க உறுதியளித்திருந்த நிதி இருக்குமிடம் எங்கே என்று பினாங்கு முதல்வர் லிம் எங் குவாங் கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது புத்தாண்டின் மூன்றாவது நாளில் இருக்கிறோம், ஆனால் மத்திய அரசாங்கம் அந்நிதியை இன்னும் கொடுக்காமல் இருக்கிறது. "அவர்கள் 2016 ஆம்…

அமைச்சு: டீசல் இல்லாததால் 369 பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லை

  டீசல் இல்லாததால் சரவாக்கில் மொத்தம் 369 கிராமப்புற பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லாமல் போய்விட்டது. டீசல் விநியோகம் செய்ய வேண்டிய குத்தகையாளர்கள் அவர்களுடைய குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டில் முடிவுக்கு வருவதற்கு முன்பு டீசல் விநியோகம் செய்யத் தவறி விட்டனர் என்று கல்வி அமைச்சு கூறுகிறது. 30…

நூருல் ஜஸ்லான்: அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை பிரதமருக்கு…

  பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழித்தனர். அதற்கு அரசாங்க ஜெட் விமானத்தை நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தியதை துணை உள்துறை அமைச்சர் தற்காத்துள்ளார். நஜிப் பிரதமர் என்ற முறையில் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்…

சீனப்பள்ளிகளுக்கு நிதி: புத்ராஜெயாவுக்கு கடன் கொடுக்க பினாங்கு அரசு முன்வந்துள்ளது

  பினாங்கு மாநில அரசு புத்ராஜெயாவுக்கு ரிம50 மில்லியன் கடன் கொடுக்க இன்று இரண்டாவது முறையாக முன்வந்துள்ளது. நிதி பற்றாக்குறையினால் சீனமொழிப்பள்ளிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனை கல்வி அமைச்சு முடக்கியுள்ளது. பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில அரசு 2008 ஆம் ஆண்டிலிருந்து உபரி…

நான் இனவாதியா? நிரூபியுங்கள்- அம்னோவுக்கு கிட் சியாங் சவால்

டிஏபி   பெருந்   தலைவர்  லி   கிட்  சியாங்   அம்னோவுக்கும்   அதன்   கையாள்களுக்கும்   சவால்   விடுத்துள்ளார்.  கடந்த  51 ஆண்டுகளில்   தம்    எழுத்திலும்    பேச்சிலும்   “மலாய்க்காரர்களின்  எதிரி,   இஸ்லாத்துக்கு   எதிரி,  மலாய்   ஆட்சியாளர்களுக்கு    எதிரி”   என்பதற்கான   ஆதாரம்  எங்காவது    இருந்தால்   தேடிப்  பிடித்துக்   காட்டுங்கள்,  பார்க்கலாம்   என்பதுதான்  அவர்  விடுத்துள்ள   …