அஸ்மின்: விசாரணைகளை வைத்து ஆடமைத் தண்டிக்கக் கூடாது

குற்றத்தை   நிரூபிக்காமலேயே   ஒருவரைத்    தண்டிக்க  முனையக்   கூடாது  என்கிறார்      பிகேஆர்   துணைத்    தலைவர்  அஸ்மின்   அலி. பிகேஆர்     அம்பாங்   இளைஞர்    தலைவர்    ஆடம்   ரோஸ்லி    அண்மையில்   கைது    செய்யப்பட்டிருப்பது   குறித்துக்    கருத்துரைத்தபோது   அஸ்மின்    அவ்வாறு   கூறினார். ஒருவர்   விசாரிக்கப்படுவதை    வைத்து     அவரைக்   குற்றவாளியாக்கி  விடக்  கூடாது   என சிலாங்கூர்   …

நன்யாங்கின் மன்னிப்பை உள்துறை அமைச்சு ஏற்றது

உள்துறை   துணை   அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   முகம்மட்,   அமைச்சு    நன்யாங்   சியாங்   நாளேட்டின்   மன்னிப்பை   ஏற்றுக்கொள்வதாகக்  கூறினார். பாஸ்  கட்சித்   தலைவர்   அப்துல்   ஹாடி   ஆவாங்கையும்   மக்களவைத்   தலைவர்    பண்டிகார்   அமின்   மூலியாவையும்    குரங்குகளாகக்  காண்பிக்கும்    கேலிச்சித்திரத்தை    வெளியிட்டதற்காக    அந்தச்     சீனமொழி    நாளேடு   மன்னிப்பு   கேட்டுக்கொண்டிருந்ததையே    அவர்  குறிப்பிடுகிறார்.…

எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விசாரணை முடிந்து விட்டதாக எம்எசிசி கூறுகிறது

  எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட்டின் மீதான விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் முடித்து விட்டது என்று பிரதமர் இலாகா அமைச்சர் பால் லோ கூறினார். டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்திருந்த பதிலில் பால் இவ்வாறு…

ஸாகிட்: தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நான் கூறியதே இல்லை

  நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று தாம் எந்த ஒரு காலகட்டத்திலும் வற்புறுத்தியதே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று தெரிவித்தார். அதற்கு மாறாக மலேசியாவைப் போன்ற பல்லின சமுதாயத்தில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஸாகிட்…

நஜிப் மலாய்மொழிக்காகப் பேசுகிறார், அதை “ஒற்றுமைக்கான மொழி” என்கிறார்

  மலாய்மொழி "ஒற்றுமைக்கான மொழி" என்பதால் அதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் நஜிப் ரசாக் தற்காத்துப் பேசினார். "நீங்கள் சீன அல்லது இந்திய தாய்மொழிப்பள்ளிக்குச் சென்றாலும்கூட, மலாய்மொழியை நன்றாக பேசும் திறமையை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் (ஏனென்றால்) அது நமது மொழி, ஒற்றுமைக்கான நமது மொழி, நமது அடையாளம்", என்று…

14ஆவது பொதுத் தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி நம்முடையதுதான், கூறுகிறார்…

  14 ஆவது பொதுத் தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள பின் தயாராக இருப்பதாக பிரதமர் நஜிப் கூறினார். அம்னோ மற்றும் பிஎன் தலைவரான நஜிப் ரசாக் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அம்னோவும் பிஎன் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன என்றும் அவற்றின் வலுவான தேர்தல்…

முன்னாள் அம்னோ செனட்டர் எஸாம் 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மற்றும்…

  பார்ட்டி பெபாஸ் ராசுவா (பிபிஆர்) தலைவர் முகமட் எஸாம் முகமட் நூர் 1எம்டிபி கடன்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் இதர 15 பேருக்கு எதிராக யுஎஸ்$3.657 பில்லியனுக்கு ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.…

ஹிசாமுடின் நியமனம் ஸாகிட்டின் “ஐடியா” என்கிறார் பிரதமர் நஜிப்

  தமது ஒன்றுவிட்ட சகோதரர் ஹிசாமுடின் ஹுசேன் பிரதமர் இலாகாவில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து வலம்வந்து கொண்டிருக்கும் ஊகங்கங்களை பிரதமர் நஜிப் நிராகரித்தார். துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் ஹிசாமுடினுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் நஜிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

எஸ்ஆர்சியிடமிருந்து நிதி பெற்றதாக கூறுவதை நஷாருடின் மறுக்கிறார்

பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் இசா எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட்டிடமிருந்து நிதி பெற்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதாகவும், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகூட எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நஷாருடின் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவு…

கைரி: ஹிஷாம் நியமனம் தொடர்பாகக் கூறப்படும் ஊகங்கள் அடிப்படையற்றவை

ஹிஷாமுடின்   உசேனுக்குக்  கொடுக்கப்பட்டிருக்கும்   புதிய   அமைச்சர்   பொறுப்பு   குறித்து     கூறப்படும்    ஊகங்கள்   வேடிக்கையாக   உள்ளன    என்று   கூறிய    இளைஞர்      விளையாட்டு      அமைச்சர்  கைரி      ஜமாலுடின்     அபு   பக்கார்       அவற்றில்   உண்மை   அறவே   இல்லை   என்றார். அம்னோவில்    உள்ள    அனைவரும்   அந்நியமனத்தை    ஆதரிப்பதாக     அவர்   சொன்னார். “அது   ஒளிவுமறைவின்றி   செய்யப்பட்ட  …

யோங்: பண வசதியுடன் இருப்பது குற்றம் என்றால் பல அரசியல்வாதிகளின்…

“வழக்கத்துமாறாக”  பணவசதியுடன்   வாழ்கிறார்  என்பதற்காக    ஒருவரைக்  கைது   செய்ய  சட்டத்தில்   இடமில்லை     என்கிறார்    கெராக்கான்   இளைஞர்  பிரிவுத்  துணைத்    தலைவர்   எண்டி  யோங். இதற்காக  பிகேஆர்    தலைவர்    ஒருவர்   கைது    செய்யப்படுகிறார்   என்றால்    பல   அரசியல்வாதிகளுக்கும்    அதே  நிலைதான்  ஏற்படும்   என்றாரவர். வழக்குரைஞரான    யோங்,    மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  …

18 ஆண்டுகள்: வீடுகளுக்காக பந்தாடப்படும் தோட்ட மக்கள்!

 “பத்தாங் பெர்சுந்தையைச்  சேர்ந்த 5 தோட்டங்களின் தொழிலாளர்கள் கடந்த 18 ஆண்டுகளாக, பெர்ஜயா கோப்பரேசன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் எனக் காத்திருந்தனர்,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறினார். 18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததால், நம்பிக்கை இழந்த…

வீடுகள் கட்டித்தர கொடுத்த வாக்குறுதியை பெர்ஜெயா நிறைவேற்ற வேண்டும், தோட்டத்…

  பெர்ஜெயா கார்ப்பரேசன் அலுவலகம் அமைந்திருக்கும் கோலாலம்பூர் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்கொயருக்கு வெளியில் 200க்கு மேற்பட்ட முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் சிலாங்கூர் பத்தாங் பெர்ஜுந்தைச் சேர்ந்த ஐந்து தோட்டங்களில் வாழ்ந்தவர்களின் நான்கு மற்றும் ஐந்தாவது தலைமுறையினர் ஆவர். அத்தோட்டங்களை பெர்ஜெயா வாங்கி…

‘எஸ்ஆர்சி நிதி கிடைக்கப்பெற்ற முன்னாள் பாஸ் தலைவர் பெயரை ரபிசி…

1எம்டிபி-இன்  முன்னாள்  தூனை   நிறுவனமான   எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்   சென். பெர்ஹாட்டிடமிருந்து    நிதி  பெற்றவர்   முன்னாள்   பாஸ்   துணைத்     தலைவர்   நஷாருடின்    மாட்  இசா  என   பிகேஆர்   உதவித்   தலைவர்    ரபிசி   ரம்லி   இன்று    அறிவித்தார். கோலாலும்பூரில்    செய்தியாளர்   கூட்டமொன்றில்      பெயரை    அறிவித்த   பாண்டான்  எம்பி,  அதன்   தொடர்பில்    சத்திய …

கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக ஜமால் மற்றும் ஒன்பதின்மர்மீது குற்றச்சாட்டு

கடந்த  ஆண்டு   அம்பாங்கில்   பெர்சே  பேரணி   விளக்கக்  கூட்டத்தில்    கலகம்   செய்ததாக     சுங்கை  புசார்    அம்னோ    தொகுதித்   தலைவர்  ஜமால்    முகம்மட்  யூனுஸ்  மீதும்   அவரின்   ஆதரவாளர்கள்   ஒன்பது   பேர்மீதும்   அம்பாங்   செஷன்ஸ்   நீதிமன்றத்தில்   இன்று  குற்றம்    சாட்டப்பட்டது. அவர்கள்மீது  குற்றவியல்    சட்டம்   பிரிவு   147-இன்கீழ்   குற்றம்   சாட்டப்பட்டது. …

சைனுடின்: ஜாஹிட் என்றும் பிரதமர் ஆக முடியாது

அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   என்றும்   துணைப்  பிரதமர்தான்.  அவர்   பிரதமராக    முடியாது.    ஹிஷாமுடின்  உசேன்   சிறப்புப்   பணி   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருப்பது   அதைத்தான்  காண்பிக்கிறதாம்.  முன்னாள்  அம்னோ  அமைச்சர்   சைனுடின்   மைடின்   இவ்வாறு   கூறுகிறார். “அந்நியமனம்     நாட்டின்  வருங்காலம்     ஹிஷாமுடின்   கைகளில்தான்  என்பதை   உறுதிப்படுத்துகிறது. “அவர்   (ஹிஷாமுடின்)  மலேசிய   பிரதமர் …

ஷாரிர்: பெல்டாவுக்கா சிக்கலா? அப்படி ஒன்றுமில்லை

கூட்டரசு   நில   மேம்பாட்டு   நிறுவனம்   பெரும்   சிக்கலில்   சிக்கிக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவது    உண்மையல்ல    என்கிறார்   அதன்  தலைவர்   ஷாரிர்   அப்துல்   சமட். பெல்டாவிடம்  ரிம22 பில்லியனுக்குச்   சொத்துகள்   இருப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார். “ரிம22 பில்லியன்  பெறுமதியுள்ள   சொத்துகள்   பெல்டாவிடம்   உள்ளன.  இது  பெருங்கொண்ட  சொத்து. “இதனால்   தெரிவது    என்னவென்றால், …

ஷாபுடின் எம்பி ஆகக்கூடாது, பெண்கள் முழக்கம்

  கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறை குறித்து தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹயா கூறியிருந்த கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து நாடுதழுவிய அளவில் இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் இயக்கங்கள் அவரை அடுத்தப் பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டனர். பாலியல்…

ஹிசாமுடின்: சிண்டுமுடிந்து விடாதீர்

பிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் அரசாங்க தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிண்டுமுடிந்து விடும் வேலையில் இறங்க வேண்டாம் என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏதாவது காரணங்களை உருவாக்கி எங்களுக்குள் சண்டையை தூண்டிவிடும் முயற்சியில் எந்தத் தரப்பினரும் ஈடுபடக்கூடாது, ஏனென்றால்…

பிரதமர் நஜிப், ஹிசாமுடினை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமித்துள்ளார்

  பிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக ஹிசாமுடின் ஹுசேனை பிரதமர் நஜிப் நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக நஜிப் கூறினார். பிரதமர் நஜிப்பின் உறவினரும் அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவருமான ஹிசாமுடின் அவரது தற்போதைய தற்காப்பு அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் பிரதமர்…

போலீஸ் 1எம்டிபி விசாரணையை முடித்து விட்டது : அறிக்கை ஏஜி-இடம்

போலீசார்    1எம்டிபி   மீதான    விசாரணையை   முடித்துக்கொண்டு   அறிக்கையைச்   சட்டத்துறைத்    தலைவர்    அலுவலகத்தில்   ஒப்படைத்து   விட்டது. “சிறிது   காலத்துக்குமுன் (விசாரணையை)   முடித்தோம்”,  என  போலீஸ்  படைத்    தலைவர்     காலிட்  அபு   பக்கார்    இன்று  கோலாலும்பூரில்   கூறினார். 1எம்டிபி-இன்  முன்னாள்   துணை  நிறுவனமான   எஸ்ஆர்சி    இண்டர்நேசனல்    மீதான  புலன்  விசாரணையை   விரைவில் …

1எம்டிபி நிதி கிடைக்கப்பெற்ற முன்னாள் பாஸ் தலைவர் யார்? ரபிசி…

முன்னாள்   பாஸ்     தலைவர்    ஒருவர்    1எம்டிபி-இலிருந்து  நிதி  பெற்றுள்ளதாகக்  கூறியுள்ள  பிகேஆர்  உதவித்    தலைவர்  ரபிசி  ரம்லி   அவரது  பெயரை    நாளை    அறிவிப்பார். “பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்   தனிப்பட்ட   வங்கிக்   கணக்குவழியாக  1எம்டிபி  பணத்தைப்    பெற்ற   முன்னாள்   பாஸ்   தலைவரின்   பெயரை    நாளை    பிற்பகல்  மணி   1.30க்குச்  …

சரவாக்கில் பிஎன் எல்லா இடங்களையும் வெல்லும் வாய்ப்பு உண்டு: அமைச்சர்…

பிரதமர்துறை   அமைச்சர்   ஜோசப்  எந்துலு   பெலாவுன்,    எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   பிஎன்னுக்கு  சரவாவின்   31   நாடாளுமன்றத்   தொகுதிகளையும்   வெல்லும்   வாய்ப்பு  இருப்பதாக   நம்புகிறார். மாநில   பிஎன்  கட்சிகள்  சேகரித்துள்ள  உளவுத்    தகவல்கள்   அப்படி  ஒரு  நம்பிக்கையைத்   தருவதாக   பார்டி  ரக்யாட்   சரவாக் (பிஆர்எஸ்)  துணைத்   தலைவரான  எந்துலு  கூறினார்.…