நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
பிஎன் பேச்சுகளுக்குமுன் இன்று அம்னோ உச்சமன்றம் கூடுகிறது
பிஎன் உறுப்புக் கட்சிகள் கூட்டணியைக் கலைக்கக் கோரிக்கை விட்டுவரும் வேளையில் அது குறித்துப் பரிசீலிக்க அம்னோ உச்சமன்றம் இன்று கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டம் நடைபெறுவதை உச்சமன்ற உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு ஹானிபா உறுதிப்படுத்தியதாக த மலேசியன் இன்சைட் கூறியது. அக்கூட்டத்தில் அம்னோ தலைவர்கள், மசீசவும் மஇகாவும் புதிய…
ஏப்ரல் 13-ல், ரந்தாவ் இடைத்தேர்தல்
எதிர்வரும் ஏப்ரல் 13-ம் தேதி, ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் (இசி) முடிவெடுத்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஏப்ரல் 9-ம் தேதியும் நடைபெறும் என இசி தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்தார். ரந்தாவ் இடைத்தேர்தலுக்கு, RM1.8 மில்லியன் செலவாகும்…
நஸ்ரி பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குச் செல்லமாட்டார்
பிஎன் உச்சமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது ஆனால், பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ் அதில் கலந்துகொள்ள மாட்டார். நஸ்ரி கலந்துகொள்ளும் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மசீசவும் மஇகா எச்சரித்ததை அடுத்து நஸ்ரி கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார்.…
புதிய கூட்டணியால் பேராக்கில் ஆட்சி கவிழும் என்று பாஸ் கூறுவது…
அம்னோவும் இஸ்லாமியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்தால் பேராக்கில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி ஆட்டம் காணும் என்ற பேராக் பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடினின் கணிப்பு தப்பு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் சட்டமன்றத்தில் அம்னோ 27 இடங்களையும் பாஸ் மூன்று இடங்களையும் ஆக மொத்தம் 30…
பாஸ், அம்னோ கூட்டுச் சேர்வது பேராக்கிலும் கெடாவிலும் ஹரப்பானுக்கு ஆபத்து
பாஸும் அம்னோவும் முறையாக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பேராக்கிலும் கெடாவிலும் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கும். பேராக், பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடின், அம்னோவும் பாஸும் சேர்ந்து சட்டமன்றத்தில் 30 இடங்களை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஹரப்பானுக்கு 29 இடங்கள்தான். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ…
பிறந்தநாள் அன்று, சாமிவேலு மீது எம்ஏசிசி-யில் புகார் அளிக்கப்படும்
முன்னாள் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர், எம் லோகநாதன், எதிர்வரும் மார்ச் 8-ம் தேதியன்று, கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலுவுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக புகார் செய்ய, லோகநாதன் தேர்ந்தெடுத்துள்ள மார்ச் 8,…
நஸ்ரி அல்லது மசீச, மஇகா – அம்னோவின் தேர்வு எது?
பிஎன் –னின் உறுப்புக்கட்சிகளான மசீச மற்றும் மஇகா இரண்டும், அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், தாங்கள் அக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளன. மசீச மற்றும் மஇகா உயர் தலைவர்களால், இன்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், பிஎன் தலைமைச் செயலாளராக நஸ்ரி நியமிக்கப்பட்டது நியாயமற்றது…
பொறுமை காக்க: மசீச, மஇகா-வுக்கு அம்னோ இளைஞர்கள் அறிவுறுத்து
அம்னோ இளைஞர் பிரிவு, பாரிசான் நேசனலின் மூன்று உறுப்புக் கட்சிகளில் மற்ற இரண்டுமான மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணி அமைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாமென்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு கட்சிகளும் கட்சிநலனை விட மக்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர்…
பத்துமலை ஆலய அதிகாரி ஒருவர் கைது
நேற்றிரவு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் ஆலய அதிகாரி ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டதுடன் அந்த அதிகாரியையும் கைது செய்தனர். எம்ஏசிசி அதிகாரிகள் இரவு மணி 7.45க்கு கோட்டா டமன்சாராவில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்ட நபரை விசாரணைக்கு இட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. எம்ஏசிசி-யைத் தொடர்பு…
புதியக் கூட்டணி – மசீச , மஇகா யோசனை
பிஎன் -னிலிருந்து விலகி, புதிய கூட்டணி ஒன்றை அமைக்க மசீச மற்றும் மஇகா ஆராய்ந்து வருகிறது. பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ், இனவாத உணர்வைத் தூண்டும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு, அம்னோ ‘அமைதி’ காத்து வருவதைத் தொடர்ந்து, இம்முடிவை அவ்விரு கட்சிகளும் எடுத்துள்ளன. மசீச மற்றும்…
அம்னோ, பாஸ்-ஐ விட, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிடாதீர்கள், பிஎச்-க்கு…
சனிக்கிழமையன்று, செமினி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாக, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிட வேண்டாம் என டிஏபி செயற்குழு உறுப்பினர், ரோனி லியு பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நினைவூட்டினார். "செமினியில் தோல்வியுற்ற பயத்தில், சில பிஎச் தலைவர்கள், அதிக மலாய்க்காரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். “அம்னோ, பாஸ்-ஐ விட அதிக…
பிரதமர் விரைவில் மாற்றப்படுவது நல்லது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், செமிஞ்யே இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததை அடுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உடனடியாக பிரதமராக்கப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார். ஆளும் கூட்டணிமீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அது அவசியம் என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் கூறினார்.…
ஸ்ரீராம் ரந்தாவில் நிறுத்தப்படுவாரா? பிகேஆர் உச்ச ஆட்சிக்குழு முடிவு செய்யும்
ரந்தாவ் இடைத் தேர்தலில் ரெம்பாவ் பிகேஆர் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீராமைக் களமிறக்குவதா அல்லது வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாமா என்பதை பிகேஆர் உச்ச ஆட்சிக்குழு முடிவு செய்யும். அதை விவாதிக்க, உச்ச ஆட்சிக்குழு விரைவில் கூட்டம் நடத்தும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான்…
ரிம250 புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்: மஸ்லீ…
கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், முன்பு 1மலேசியா புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்ட (பிபி1எம்) த்தின்கீழ் ரிம250 ரொக்க உதவி வழங்கப்பட்டதுபோல் அடுத்த ஆண்டுவாக்கில் மீண்டும் வழங்கப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார். இப்போது, உயர்க்கல்வி மாணவர் உதவித் திட்ட(பிபிபிடி)த்தின்கீழ் மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை…
சுரங்கப் பாதைத் திட்டத்தில் ஊழல் என்பது ராஜா பெட்ராவின் ‘கற்பனை’
பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக மலேசியா டுடே இணையத்தளம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதை செனித் கட்டுமான குழுமம்( CZC) மறுக்கிறது. அந்த இணையத்தளத்தை நடத்திவரும் ராஜா பெட்ரா கமருடின், பினாங்கு போக்குவரத்து பெருந் திட்டத்தின் ஒரு பகுதியான பினாங்குத் தீவைத் தலைநிலத்துடன்…
மஇகா : பாஸ், பிஎன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளும் செயலை…
செமினி இடைத்தேர்தலில் பிஎன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஸ் மற்றும் பிஎன் உறுப்புக்கட்சிகளைக், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகப் ‘பயன்படுத்தி’க் கொள்வதை அம்னோ நிறுத்த வேண்டுமென்று, மஇகா மத்தியச் செயலவைக் கேட்டுக்கொண்டது. மாறாக, தெளிவான முறையில், பாஸ் கட்சியுடன் இணைந்த ஒரு புதியக் கூட்டணியைப் பிஎன் அமைக்க வேண்டும், ‘தற்காலிக கிம்மிக்ஸ்’…
கஞ்சா வைத்திருந்த இன்வோக் பணியாளர்கள் இருவரும் அதன் முன்னாள் பணியாளர்…
இன்வோக் மலேசியா ஆய்வு நிறுவனத்தின் பணியாளர்கள் இருவரும் அதன் முன்னாள் பணியாளர் ஒருவரும் 75 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக நேற்றிரவு செந்தூல் தாமான் முத்தியாராவில் ஒரு கொண்டோமினியத்தில் கைது செய்யப்பட்டனர். அக் கைது சம்பவத்தை உறுதிப்படுத்திய செந்தூல் போலீஸ் தலைவர் எஸ்.சண்முகமூர்த்தி சின்னையா, 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான…
‘ திறந்த டெண்டர் முறையில் வழங்கப்பட்ட குத்தகையில் எங்கிருந்து வந்தது…
பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் கொன்ஸோர்டியம் செனித் பியுசிஜி(Consortium Zenith BUCG ) சென்.பெர்ஹாட்டுக்கு திறந்த டெண்டர் முறையில்தான் வழங்கப்பட்டது என்றும் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “திறந்த டெண்டர் முறையில் வழங்கப்பட்டது என்பதால் அதில் ஊழல் எப்படி…
மகாதிர்: செமிஞ்சேயில் பிஎன் வெற்றிக்குக் காரணம் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நேற்றைய செமிஞ்யே இடைத்தேர்தலில் அம்னோ-பாஸ் ஒத்துழைப்புத்தான் பிஎன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொள்கிறார். “14வது பொதுத் தேர்தலில் (அச்சட்டமன்றத் தொகுதியில்) நாங்கள் வெற்றி பெற்றோம், அப்போது பாஸும் அம்னோவும் பிரிந்து கிடந்தன அதனால் அவற்றால் கூடுதல் வாக்குகள் பெற முடியவில்லை”, என மகாதிர்…
தோல்வி என்றாலும் செமிஞ்யேயில் மேம்பாட்டுப் பணிகள் தொடரும்: எம்பி உத்தரவாதம்
நேற்றைய இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் செமிஞ்யேயில் வெற்றிபெறத் தவறிவிட்டாலும் அத்தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடரும். செமிஞ்யேக்கான மேம்பாட்டுப் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு மாநில பட்ஜெட்டிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார். “அவை எல்லாம் இடைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டவை அல்ல, மாநில பட்ஜெட்டில் ஏற்கனவே…
பிஎன் வசமானது செமினி சட்டமன்றம்
செமினி இடைத்தேர்தல் | இன்று நடந்து முடிந்த வாக்கெடுப்பில், செமினி சட்டமன்றத் தொகுதி நாற்காலி மீண்டும் பிஎன் கைவசமானது. பொதுத் தேர்தல் நிர்வாக அதிகாரி, முகமட் சாயுத்தி பாக்கார், பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹானாஃபியின் வெற்றியை, காஜாங் நகராண்மைக் கழக ஶ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிஎன்–இன்…
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளை ஒரே மாதிரியாக பாருங்கள்- வீ
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பாராமல் அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகவே பார்க்க வேண்டும் என மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். மக்களவையில் மலாய்க்காரர்- அல்லாத எம்பிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசன் கூறியது குறித்துக் கருத்துரைத்தபோது…
செமிஞ்யே தேர்தல்: ஒரு மணிவரை 50விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்
தேர்தல் ஆணையம் செமிஞ்யே இடைத் தேர்தலில் பிற்பகல் மணி ஒன்றுவரை வாக்களித்த வந்தவர் எண்ணிக்கை 50 விழுக்காடு என்று அறிவித்துள்ளது. அத்தொகுதியில் மொத்தம் 54,503 வாக்காளர்கள் உள்ளனர் இதனிடையே தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்கார் அசிசான் ஹாரு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின்…
























