மாணவர்கள் கைது : அமைச்சர், துணை அமைச்சர் கண்டனம்

கல்வி அமைச்சில் போராட்டம் நடத்திய மாணவ ஆர்வளர்கள் கைது செய்யப்பட்டதற்கு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று அவர்கள் விவரித்தனர். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து,…

தமக்கு ஒரு வாரிசை பெர்சத்து விரைவில் தேர்ந்தெடுக்கும்: மகாதிர் நம்பிக்கை

பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், தமக்குப் பின் தகுதியான ஒருவர் பெர்சத்து தலைவராவார் என்று நம்புகிறார். “திறமையானவர்கள் தோன்றுவார்கள். விரைவில் அப்படிப்பட்டவர்கள் வரக்கூடும். திறமையானவர்கள் தலைவர்களாவதையே ஊக்குவிக்கிறோம். “பெர்சத்துவில் ஆற்றல்மிக்க இளைஞர்கள் நிறைய உள்ளனர்”, வியாழக்கிழமை சினார் ஹரப்பானுக்கும் மலேசியாகினிக்கும் வழங்கிய கூட்டு நேர்காணல் ஒன்றில்…

பரப்புரை காலம்: இசி மறுமதிப்பீடு செய்யும்

தேர்தல் ஆணையம்(இசி) தேர்தல் பரப்புரைகளுக்கு 21 நாள்கள் ஒதுக்குவது பொருத்தமானதுதானா என்பதை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக ஆணையத்தின் செயலாளர் முகம்மட் இலியாஸ் அபு பக்கார் கூறினார இன்று நடைபெறும் பலாக்கொங் மற்றும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரப்புரைக்கு மிக நீண்ட காலம், 21 நாள்கள்,…

ரஃபிசி: அன்வாருக்கான நாற்காலியைப் பி.கே.ஆர். அடுத்த வாரம் காலி செய்யும்

அன்வார் இப்ராஹிம் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவகுக்கும் வகையில், கடந்த பொதுத் தேர்தலில், பிகேஆர் வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதி ஒன்று அடுத்த வாரம் காலி செய்யப்படும். பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி இத்தகவலை அறிவித்ததோடு, மிக விரைவில் முன்னாள் துணைப் பிரதமர் நாடாளுமன்றம் திரும்புவார் எனவும்,…

ஜொகூர் ம.இ.கா. : இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நாங்கள் பயன்படுத்தவில்லை

இந்திய சமூகத்திற்காக, முந்தைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட RM8 மில்லியன், 14-வது பொதுத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை ஜொகூர் ம.இ.கா. மறுத்துள்ளது. ஜொகூர் மாநில நுகர்வோர், மனித வளம் மற்றும் ஒற்றுமைத் துறை தலைவரான டாக்டர் எஸ். இராமகிருஷ்ணனின் அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என மாநில ம.இ.கா. தலைவர்…

அமைச்சரவை செயல்திறன் : ‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை’, பிரதமர்

புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் செயல்திறன் மற்றும் அடைவுநிலையில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் கூறியுள்ளார். ‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை. முடிந்தால், நான் விரும்புவதை (கட்டளையிட்டதை) நேற்றே செய்து முடித்திருக்க வேண்டும், இன்று அல்ல,” என இன்று பெட்டாலிங்…

‘யு.ஐ.ஏ.எம். தலைவராக டாக்டர் மஸ்லி, கல்வியாளர்களுக்கு ஓர் அவமானம்’

மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (யூ.ஐ.ஏ.எம்.)  தலைவராக டாக்டர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டது, கல்வியாளர் சமூகத்திற்கும் நாட்டின் கல்வி சுதந்திரத்திற்கும் அவமதிப்பான ஒன்று என மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) இளைஞர் பிரிவு கூறியுள்ளது. டாக்டர் மஸ்லி இஸ்லாமியத் துறையில் முதுகலை பட்டமும் நிர்வாகத் தத்துவத்துறையில் முனைவர் பட்டம்…

புதிய குறைந்தபட்ச சம்பளம் 15 மில்லியன் தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறது, டிஏபி…

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, நேற்று அறிவிக்கப்பட்ட RM1,050 குறைந்தபட்ச சம்பளத்தைத் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். குறைந்தபட்ச சம்பளத்தில் RM50 அதிகரிப்பு, "15 மில்லியன் மலேசியப் பணியாளர்களை அவமதிக்கும்" ஒன்று, மேலும், அது ஹராப்பான் கூட்டணி கட்சியின் தேர்தல்…

எம்.டி.யு.சி. : அரசாங்கம் ஏழைத் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது

மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் குழுவினர் அல்லது B40 குழுவில் உள்ளவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், 14 மில்லியன் தொழிலாளர்களை ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி வலியுறுத்திய அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன்,…

பெண்களுக்குப் பிரம்படி கொடுப்பதை அமைச்சரவை ஏற்கவில்லை

திரெங்கானுவில் இரண்டு பெண்களுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டதை முறையற்ற தண்டனையாக மலேசிய அமைச்சரவை கருதுகிறது. இஸ்லாமிய போதனைகளின் மைய பொருளே கருணைதான். அதை அந்தத் தண்டனை பிரதிபலிக்கவில்லை. அவ்விரு பெண்களும் முதல்-முறை குற்றவாளிகள் என்பதால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்க வேண்டும், பிரம்படித் தண்டனை கொடுத்திருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் கருத்தாகும்…

மூவாரில் சீனமொழி விளம்பரங்களை ‘வலுக்கட்டாயமாக அகற்றுவதா?’ சைட் சாதிக் எதிர்ப்பு

மூவார் எம்பி சைட் சாதிக், அம்மாவட்டத்தில் காலங்காலமாக சில்லறை வணிகர்கள் பயன்படுத்திவரும் சீனமொழி விளம்பரங்களை “வலுக்கட்டாயமாக அகற்ற” ஊராட்சி மன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடைகளின் தூண்களில் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள சீனமொழி எழுத்துகள் மலாய் மொழி எழுத்துகளைவிட பெரியவையாக உள்ளதால் அவற்றை அழித்துவிடுமாறு கடைக்காரர்களுக்கு மூவார் முனிசிபல்…

குவான் எங் விடுவிப்பு, மலேசியன் வழக்குரைஞர் மன்றம் அதிர்ச்சியடையவில்லை

  ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுவிக்கப்பட்டது தமக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கிஸ் இன்று கூறினார். இன்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் தற்காப்பு வழக்குரைஞர்கள் சமர்பிக்கும் வேண்டுகோள்களுக்கு இணங்கிப் போவது…

புத்ராஜெயா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும், வர்த்தக சம்மேளனம்…

அறிக்கைகள் வெளியீடு மற்றும் கொள்கை அறிவிப்புகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கும் வகையில் அவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்படியும் புத்ராஜெயாவை மலேசிய – சீன வர்த்தக சம்மேளனம் (எம்சிசிசி) கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் சீனா…

அரசியலையும் பல்கலைக்கழகங்களையும் தனித்தனியே வைத்திருக்கும் கொள்கை என்னவானது? அம்னோ தலைவர்…

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக(ஐஐஅயுஎம்)த் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்னோ தலைவர் ஒருவர் அரசியலையும் பல்கலைக்கழகங்களையும் தனித்ததனியே வைத்திருக்கும் அரசாங்கத்தின் கொள்கை என்னவானது என்று வினவினார். மஸ்லீ ஐஐயுஎம் தலைவர் பதவியை ஏற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரீஸால் மரைக்கான் நயினா…

பலாக்கோங் இடைத் தேர்தல் – பாஸ் மசீசவுடன் சேர்ந்து கொண்டது

நேற்றிரவு பலாக்கோங் இடைத் தேர்தல் பரப்புரையில் மசீச வேட்பாளர் டான் சீ தியோங்கிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் ஒரு மசீச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலாறு படைத்தார். மலேசியாவை ஒரு சமயம் சார்ந்த ஆட்சியுடைய நாடாக மாற்றும் பாஸின் இலட்சியத்தை மசீச…

சீனர்களின் உரிமைகளைத் தொலைத்து துரோகம் இழைக்காதீர்: குவான் எங்குக்கு லியோ…

தன்னைச் சீனராக அல்லாமல் ஒரு மலேசியராகவே கருதுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியதை மசீச தலைவர் லியோ தியோங் லாய் சாடினார். “நான் சீனன் அல்ல, மலேசியன் என்று லிம் கூறியதைக் கேட்டு வருந்துகிறேன். மிகவும் வருந்துகிறேன். “லிம்முக்கும் டிஏபிக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் -நாம்…

கைபேசி Prepaid சேவைகளுக்கு எஸ்எஸ்டி-இலிருந்து விலக்கு

தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்(டெல்கோ) முன்கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்குச் சேவை வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. டெல்கோ-கள் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)க்கு மாறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அமைச்சு கூறியது. சேவை வரி(எஸ்எஸ்டி) 2018…

மஇகா கஹாங் இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது

  கோலாலம்பூரில் தேர்தல் நீதிமன்றம் ஜோகூர் கஹாங் சட்டமன்ற இருக்கையை பிஎன் வேட்பாளர் ஆர். வித்தியநாதன் தன்வசம் வைத்துக்கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கில் வித்தியநாதன் தாக்கல் செய்திருந்த தொடக்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி முகமட் நாஸ்லான் முகமட் கஸாலி, பெர்சத்துவின் வேட்பாளர் நூர்லிகான் அரிப்பின் தாக்கல் செய்திருந்த மனுவை…

குவான் எங் விடுவிக்கப்பட்டது மீது ஒரு வழக்குரைஞர் விசாரணை கோருகிறார்

  நிதி அமைச்சர் லிம் குவான் எங் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிருந்து விடுவிக்கப்பட்டதற்கு சட்டத்துறை தலைவர் அலுவகம் அளித்திருந்த விளக்கத்தை நிராகரித்த ஒரு வழக்குரைஞர், இந்த வழக்கு கைவிடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குணமலர் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஜே. குணமலர் சட்டத்துறை தலைவர்…

அமைச்சர் : பல்கலைக்கழகம் , பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தின் ஒரு…

நாடாளுமன்றம் l பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் (AUKU) சட்டம் 1971, பிரிவு 15 மற்றும் 16 ஆகியவற்றை அகற்றுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்கிறது. இச்சட்டங்கள் வளாகத்தில் அரசியல் சுதந்திரத்தை தடுக்கிறது என்று கூறப்படுகிறது. கல்வி அமைச்சர், மஸ்லி மாலேக் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான்…

அன்வார்: பெடரல் அரசாங்கம் மாநில ஷரியா சட்டங்களை மாற்ற முடியாது

  திரங்கானு மாநிலத்தின் ஷரியா சட்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அல்லது அவற்றை மாற்றும் நிலையில் பெடரல் அரசாங்கம் இல்லை, ஏனென்றால் அவை மாநில ஆளுமைக்கு உட்பட்டவை என்று பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் கூறினார். கடந்த திங்கள்கிழமை, ஓர் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு…

போனஸ் கொடுப்பதற்காக அரசாங்கம் கடன்பட முடியாது

அரசாங்க அதிகாரிகளுக்குப் போனஸ், ஊக்கத் தொகை மற்றும் வெகுமதிகள் வழங்குவதில், நாட்டின் நிதியியல் திறன் மற்றும் நிலைப்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நாட்டின் வருவாய் அதிகரித்து இருந்தால் மட்டுமே அவை வழங்கப்படும் எனத் துணை நிதியமைச்சர் அமீருட்டின் ஹம்ஷா கூறினார். “வருவாய் அதிகம் இருந்தால், நாம் கொடுக்கலாம். “கடன்பட்டு…

குவான் எங் வழக்கு – நடுநிலை தவறாமல் சட்டத்தைக் கையாண்டேன்,…

  நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்லது அந்த முடிவில் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை சட்டத்துறை தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் மற்றும் வணிகர்…