‘இளவரசர் ஒரு கத்தோலிக்கர்’ எனப் பதிவிட்ட முன்னாள் மலாக்கா சிஎம்…

சிலாங்கூர்  பட்டத்திளவரசர்  தெங்கு  அமிர்  ஷா  கிறிஸ்துவ  சமயத்தைத்  தழுவினார்  என்று  தம் முக நூல்  மற்றும்  டிவிட்டர்  பதிவுகளில்  கூறியதற்காக மலாக்கா  முன்னாள்  முதலமைச்சர்  ரகிம்  தம்பி  சிக்  மன்னிப்பு  கேட்டுக் கொண்டார். சிலாங்கூர்  அரண்மனை  திங்கள்கிழமை போலீசில்  புகார்  செய்ததை  அடுத்து  இது  நடந்தது. “டிவிட்டரிலும் …

இணையத்தில் வரும் செய்திகளை நம்பாதீர்: அமெரிக்காவில் மலேசிய மாணவர்களிடம் பிரதமர்…

வலைப்பதிவுகளையும்  இணையச்  செய்தித்  தளங்களையும்  நம்பி  விட  வேண்டாம்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அமெரிக்காவில்  பயிலும்  மலேசிய  மாணவர்களிடம்  வலியுறுத்தினார். “வலைப்பதிவுகள்  அல்லது  இணைய  செய்தித்  தளங்களில்  இடம்பெறும்  எல்லாவற்றையும்  நம்பக்  கூடாது. அவற்றில்  இடம்பெறும்  பெரும்பாலான  செய்திகள்  வீண்  வதந்திகள்  அல்லது  நிரூபிக்கப்படாத  வெற்றுக் …

முஸ்லிம் என்ஜிஓ: சீனத் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம்

ஹரியான்  மெட்ரோ  கூறியிருப்பதுபோல்   சீனத்  தூதரின்   கருத்துகளுக்காக  அந்நாட்டுத்  தூதரகத்தின்முன்  முஸ்லிம்  பயனீட்டாளர்  சங்கம் (பிபிஐஎம்)  ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதில்லை. இப்போதே மலேசியாவில்  நிறைய  ஆர்ப்பாட்டங்கள்  என்று  குறிப்பிட்ட பிபிஐஎம்  ஆலோசகர்  வாரியத்  தலைவர்  அஸ்வில்  துங்கு  அப்துல்  ரசாக்  இதற்கு  மேலுமா  வேண்டும்  என்று  வினவினார். “வேண்டாம்,  வேண்டாம். …

தூதர் விளக்கமளிப்புக்கு அழைக்கப்பட்டதில் நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை

வெளியுறவு  துணை அமைச்சர்  ரீஸல்  நைனா  மரைக்கான்,  சீனத்தூதர்  ஹுவாங்  ஹுய்காங்கை  வெளியுறவு  அமைச்சுக்கு அழைத்தபோது  நெறிமுறைகளைச்  சரியானபடி  பின்பற்றவில்லை. ஹுவாங்கை  வெளியுறவு  அமைச்சு  விளக்கம்  கேட்பதற்கு அழைப்பதாக  இருந்தால்  மலேசிய  வெளியுறவு  அமைச்சர்தான்  அழைக்க  முடியும், அதுவும் பிரதமருடன்  ஆலோசனை  கலந்த  பின்னரே  அழைக்க  முடியும்  எனச் …

சீனத் தூதர் இடைக்கால வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார்

மலேசியாவுக்கான  சீனாவின்  தூதர்  ஹுவாங்  ஹுய்காங், இடைக்கால  வெளியுறவு  அமைச்சரான  உள்நாட்டு  வாணிப, பயனீட்டாளர்  விவகார  மற்றும்  கூட்டுறவு  அமைச்சர்  ஹம்சா  சைனுடினின்  அலுவலகத்துக்கு  இன்று  காலை  சென்றார். காலை  மணி  11.35க்கு ஓர்  உதவியாளருடன்  அவர்  அங்கு  சென்றார். அவருக்கு  முன்னதாக  முன்னாள்  அமைச்சரும்  சீனா மீதான …

சீனத் தூதர்: விஸ்மா புத்ரா அழைத்ததா? ஊடகங்கள்தாம் அப்படிக் கூறிக்கொண்டிருக்கின்றன

சீனாவின்  தூதர்  ஹுவான்  ஹுய்காங்,  விஸ்மா  புத்ரா  விளக்கம்  கேட்பதற்காக  தம்மை  அழைத்திருப்பதாக   நாளேடுகளைப்  பார்த்துதான்  தெரிந்து  கொண்டதாகக்  கூறினார். அவர்  பெட்டாலிங்  ஸ்திரீட்டுக்கு  வருகை  மேற்கொண்ட  விவகாரத்துக்குத்  தீர்வு  காணப்பட்டு  விட்டதா  என்று  வினவப்பட்டதற்கு அது ஒரு  பிரச்னையே  அல்லவென்றும்  அவர்  நிராகரித்தார். “அது  எப்போது ஒரு …

ஜமால்: அடுத்த பேரணி காஜாங்கில்

லாக்- அப்பிலிருந்து  இப்போதுதான்  வெளிவந்திருக்கும்  மலாய்  என்ஜிஓ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்,  அடுத்த  “பிரம்மாண்டமான”  பேரணியை  காஜாங்கில்  நடத்தத்  திட்டமிட்டுள்ளார். பிகேஆர்  தலைவரும்  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினருமான   டாக்டர்  வான்  அசிசா வான்  இஸ்மாயில் தேர்தெடுக்கப்பட்டு  ஈராண்டுகள்  ஆகியும்  தேர்தல்  வாக்குறுதிகளை  இன்னும்  நிறைவேற்றவில்லையாம்.  அதுதான்  அங்கு …

பெர்காசா: மலேசிய சீனர்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலிகள்

  மலேசிய சீன சமூகம் மிக அதிர்ஷ்டசாலியானது ஏனென்றால் அச்சமூகம் வேற்றுமை காணல் மற்றும் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் ஆகியவற்றை அது தாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. ஆகவே, பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு கடந்த வாரம் வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் கூறிய கருத்துகள் தேவையற்றவை என்று பெர்காசா தகவல்…

மாத்தியாஸ் சாங் விசாரிக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது

  முன்னாள் பிரதமர் மகாதிரின் முன்னாள் அரசியல் செயலாளர் மாத்தியாஸ் சாங் இன்று பிற்பகல் மணி 2.00 க்கு போலீசாரால் விசாரிக்கப்படுவதாக இருந்தது. அது இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தம்மை போலீசார் இன்று பிற்பகல் மணி 2.00 க்கு விசாரிக்க இருப்பதாகவும் தாம் கைது செய்யப்படலாம் என்றும் அவர் நேற்று…

உத்துசான்: சீன தூதர் விபச்சாரிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும், பெட்டாலிங்…

  செப்டெம்பர் 25 இல் சீனாவின் தூதர் ஹுவாங் ஹூய் காங் கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு வருகையளித்த போது தெரிவித்த கருத்துக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அவரை கடுமையாகச் சாடியுள்ளது. பெட்டாலிங் ஸ்டிரீட் பிரச்சனைக்கு மாறாக அவரது நாட்டின் விபச்சாரிகள் மீது அவர் கவனம் செலுத்த வேண்டும்…

கிம்மா ஒரே வகைப்பள்ளி முறையை ஆதரிக்கிறது

  இந்நாட்டில் ஒரே வகைப்பள்ளி முறைக்கு மலேசியன் இந்தியன் முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) ஆதரவு அளிக்கிறது என்று அதன் தலைவர் செனட்டர் சைட் இப்ராகிம் காதர் இன்று கூறினார். மாணவர்களிடையே ஒற்றுமையை பெருமளவிற்கு உருவாக்க ஒரே வகைப்பள்ளி முறை சிறப்பானதாக இருக்கும். மேலும், அது வேறுபட்ட சமூகங்களுக்கிடையிலான தேசிய…

சீனாவின் தூதர் புத்ரா ஜெயாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

  கோலாலம்பூரின் பிரபல்யமான சைனாடவுன் என்றழைக்கப்படும் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு நேற்று வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் புத்ரா ஜெயாவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார். பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது ஹுவாங் வெளியிட்ட கடும் வாசங்களைக் கொண்ட அறிக்கை மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று கருதப்படுவதால் அதற்கு…

பெட்டாலிங் ஸ்திரீட்டில் வியாபாரம் 40 விழுக்காடுவரை குறைந்தது

கடந்த  வாரம்   ஹிம்புனான்  ரக்யாட்  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடந்ததிலிருந்து  பெட்டாலிங்  ஸ்திரீட்டில்  வியாபாரம்  30-இலிருந்து 40 விழுக்காடுவரை குறைந்திருக்கிறது  என  கெராக்கான்  பொதுச்  சேவை  மற்றும்  புகார்  பிரிவுத்  தலைவர்  வில்சன்  லாவ்  கூறினார். பேரணி  தொடர்பான அறிக்கைகளும்  செயல்களும்  வணிகர்களுக்கு  அச்சத்தைத்  தந்துள்ளன. பொதுமக்களும் வருவதற்குப் …

பகாங்கிலும் மலாக்காவிலும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

இன்று  காலை  மணி 9-க்கு  நான்கு  இடங்களில்  காற்றின்  தரம்  ஆரோக்கியமற்ற நிலையில்  இருந்ததாக சுற்றுச்சூழல்  துறை  அறிவித்தது.  பகாங்கில்  பாலோக்  பாருவில் காற்றுத்  தூய்மைக் கேட்டுக்  குறியீடு 128ஆக  இருந்தது. மற்ற  மூன்று  பகுதிகள்  வருமாறு:  திரெங்கானுவில்  கெமாமான்(127), பகாங்கில்  இந்திரா  மக்கோடா(116), பண்டாராமலாக்கா(109). காற்றுத்  தூய்மைக்…

போலீஸ்: பெட்டாலிங் ஸ்திரீட்டில் சிகப்புச் சட்டைகள் இல்லை

பெட்டாலிங்  ஸ்திரீட் பகுதியில்  சிகப்புச்  சட்டைகளின்  நடமாட்டம்  இல்லை  எனப் போலீஸ்  அறிவித்துள்ளது. சுற்றுப்பயணிகளைக்  கவரும்  இடங்களில்  ஒன்றான  அங்கு  எல்லாம்  வழக்க  நிலையில்  இருப்பதாக  டாங் வாங்கி  போலீஸ்  மாவட்டத்  தலைவர்  சைனல்  அபு  சாமா  கூறினார். “இதுவரை  பெட்டாலிங்  ஸ்திரீட்  பகுதியில்  வியாபாரம்  எப்போதும்  போலத்தான் …

மகாதிர்: நஜிப் அகற்றப்பட்டால் மட்டுமே பொருளாதாரம் மீட்சிபெறும்

 நாட்டின்  பொருளாதாரம்  மீட்சிபெற  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அகற்றப்பட  வேண்டும்  என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். நலிவுற்று  வரும்  மலேசியப்  பொருளாதாரம்  புத்தெழுச்சி  பெற  இது  ஒன்றே  வழி  என  முன்னாள்  பிரதமர்  தம்  வலைப்பதிவில்  கூறினார். “நாட்டின்  நாணயமும்  பொருளாதாரமும்  மீட்சி  பெற  வேண்டுமானால்  நஜிப் …

சொய் லெக்: ஜமாலைக் கைது செய்யச் சொல்லி மசீச தலைவர்…

மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய், அமைச்சரவைக்  கூட்டத்தில்  கலந்துகொண்டபோது  சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுசைக்  கைது  செய்ய  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  இருக்க  வேண்டும்  என  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்  கூறினார். “இன்று  வெள்ளிக்கிழமை. புதன்கிழமை  நடந்த …

மொராய்ஸ் இறப்புக்குக் காரணத்தை அறிய விரும்புகிறார்கள் உறவினர்கள்

காலஞ்சென்ற  அந்தோனி  கெவின்  மொராயிஸின்  இறப்புக்கான   காரணத்தை  அறிந்துகொள்ள  விரும்புகிறார்கள்  அவரின்  உறவினர்கள். அதனால்தான் அவர்கள் அவரின்  உடலைப்  பெற்றுக்கொள்ள  மறுப்பதாக  போலீசார்  விளக்கமளித்துள்ளனர். கோலாலும்பூர்  பொது  மருத்துவமனையின் தடயவியல்  மருத்துவத்  துறை  அதை  உறுதிப்படுத்த  வேண்டும்  என  அவரின்  குடும்ப  உறுப்பினர்கள்  விரும்புவதாக  போலீஸ்  படைத்  துணைத் …

அம்னோ பொதுப்பேரவையில் இனவாதப் பேச்சைத் தவிர்ப்பீர்: மசீச கோரிக்கை

செப்டம்பர்  16  சிகப்புச்  சட்டைப்  பேரணியைத்  தொடர்ந்து  டிசம்பரில்  நடைபெறும்  அம்னோ  பேராளர்  கூட்டத்தில் (ஏஜிஎம்) உறுப்பினர்கள்  “ஆர்வமிகுதியினால்  இனவாதம்  பேச”த்  தொடங்கி விடக்கூடாது. “அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ  சகாக்கள்  அரசியல்  செல்வாக்கு  பெறும்  ஆர்வத்தில் இனவாதம்  பேசக்  கூடாது  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்”, என  மசீச  செனட்டர் …

ஜமால்: நாளைய பெட்டாலிங் ஸ்திரிட் பேரணிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலவரம்  வெடிக்கலாம்  என்று  இரண்டு  நாள்களுக்குமுன்  எச்சரித்த   சுங்கை  புசார்   அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  அப்பேரணிக்கும்  தமக்கும்  தொடர்பில்லை  என்கிறார். “திட்டமிடப்பட்டுள்ள  அப்பேரணியில்  நான்  சம்பந்தப்படவில்லை  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன். “அப்படி  ஓர்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றால்  கலவரம்  வெடிக்கலாம்  என்ற  என்னுடைய  கவலையைத்தான் …

‘தெரு ஆர்ப்பாட்டம் என்று மிரட்டுவதை நிறுத்துவீர்’

சிகப்புச்  சட்டை  ஆர்ப்பாட்டக்காரர்கள், நாளை பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  மற்றொரு   பேரணி நடத்தப்போவதாக மிரட்டுவதை நிறுத்திக்  கொள்ள வேண்டும் என  உள்துறை  துணை அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட் கூறியுள்ளார். . சிகப்புச்  சட்டையினர்  என்ன  சொல்ல  நினைத்தார்களோ  அதைக்  கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பேரணியிலேயே  சொல்லி விட்டனர் …

நஜிப் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்ள நியூ யோர்க் சென்றார்

மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், ஐநா  பொதுப்  பேரவையின்  70வது  கூட்டத்தொடரில்  கலந்துகொள்வதற்காக  நேற்று  நியூ யோர்க்  சென்றடைந்தார். நஜிப்பையும்  அவரின்  துணைவியார் ரோஸ்மா  மன்சூரையும்   வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்,  அமெரிக்காவுக்கான   மலேசியத்  தூதர்  ஆவாங்  அடேக்  ஹுசேன், ஐநாவில்  மலேசியாவின்  நிரந்தரப்  பேராளர்  ரம்லான் …

ஜமால்மீது போலீஸ் விசாரணை

சனிக்கிழமை,  பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலகம் வெடிக்கலாம்  என்று  கூறிய சுங்கை பெசார்  அம்னோ  தொகுதித் தலைவரான ஜமால் முகமட் யுனூஸ்மீது  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்   எங்-கும்  இதர பல  டிஏபி  உறுப்பினர்களும்  போலீசில்   புகார்  செய்துள்ளனர். நேற்று  ஜமால்  அவ்வாறு  கூறினார்  என்றும்  அதன்  தொடர்பில்  பொலீசார் …