மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
‘பிஎன் ஏமாற்று வேலைகளில் ஈடுபடவில்லை, ஜிஇ14 முடிவுகளே சான்று’
14வது பொதுத் தேர்தல் முடிவுகள் பிஎன் ஏமாற்று வேலைகளில் ஈடுபடவில்லை என்பதைக் காண்பிக்கின்றன என அக்கூட்டணியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “அவதூறுகள், நிந்தனைகள் உள்பட தேர்தலின்போது பிஎன் ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் என்றெல்லாம் கூறித் தாக்கினார்கள். “ஜிஇ14 முடிவுகள் பிஎன் எந்தத் தில்லுமுல்லும் செய்யவில்லை என்பதைக் காண்பிக்கின்றன”, …
நஜிப் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்துகிறார்
பராமரிப்பு பிதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.00 அளவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்று அவரது பத்திரிக்கை செயலாளர் ஜோன் லாய் கூறினார். அச்செய்தியாளர் கூட்டம் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும். பராமரிப்பு அமைச்சர்கள் அஹமட் ஸாகிட், தெங்கு அட்னான் தெங்கு…
புதிய அரசாங்கம் பழிவாங்கும் செயலில் இறங்காது, மகாதிர் கூறுகிறார்
இரவு மணி 3.00: அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கின் தவறான செயல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் பழிவாங்கும் செயலில் இறங்கப் போவதில்லை என்று கூறினார். "நாங்கள் பழிக்குப்பழி வாங்கப் போவதில்லை. நாங்கள்…
புதிய பிரதமர் இன்று பின்னேரத்தில் பதவி ஏற்பார், மகாதிர் கூறுகிறார்
இரவு மணி 2.50: புதிய பிரதமருக்கு இன்று பின்னேரத்தில் பதவிப் பிரமாணம் செய்யப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவர் கூறியபடி, பிகேஆரின் தலைவரை, இந்தத் தேர்தலில் ஹரப்பான் பயன்படுத்திய சின்னத்தின் கட்சித் தலைவரை, கூட்டணி சாதாரண பெரும்பான்மையில் வெற்றி…
இசி தலைவர்: சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை, இசி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது
நள்ளிரவு மணி 12.38: தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். சந்தேகத்திற்குரிய ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் மறுத்தார். முடிவுகள் வரும் வரையில் காத்திருப்போம், மற்றும் இங்கே தூங்குவோம்…
பிஎன் கட்சிகளின் இரு தலைவர்களும் நான்கு துணை அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்டனர்
இரவு மணி 9.45: பிஎன் பங்காளித்துவக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா ஆகிய இரண்டின் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய் மற்றும் மஇகாவின் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஆகியோர் தோல்வி கண்டனர். கெராக்கான் தலைவர் மா சியு கியோங் தோல்வியை நோக்கிச்…
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள்: மலேசியாகினியின் மாற்றுவழியின் வழி மீண்டும் இப்பகுதிக்குள் செல்ல முடிந்தது. இரவு மணி 2.04: அம்னோவின் பிறப்பிடமான ஜோகூர், ஹரப்பானிடம் வீழ்ந்து விட்டதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது. ஹரப்பான் 29 இருக்கைகளை வென்றுள்ள வேளையில் பின் 16 இருக்கைகளையும் பாஸ் ஒன்றையும் வென்றுள்ளன. இன்னும் 10 இருக்கைகள்…
வாக்களிப்பு மாலை மணி 5க்கு முடிவுக்கு வந்தது; கூடுதல் நேரம்…
14 ஆவது பொதுத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு மாலை மணி 5.00க்கு முடிவுக்கு வந்தது. வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நிராகரித்தார். வாக்களிக்கும் அறைக்குள் இல்லாதவர்களுக்கு வாக்களிப்பு மாலை மணி 5.00 க்கு மூடப்படும் என்று ஆர்டிஎம்1 நேர்காணல்…
ஐந்து மணி ஆகிவிட்டாலும், வாக்களிக்காமல் போகாதீர், பெர்சே கூறுகிறது
வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர்கள் வாக்களிக்காமல் அந்த இடத்தை விட்டு நகராதீர்கள் என்று பெர்சே கூறுகிறது. ஐந்து மணிக்குப் பிறகும் நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நேரமாகி விட்டது என்று இசி கூறினாலும் அங்கிருந்து கிளம்பாதீர்.
சுங்கை சிப்புட்டில் பிஎன் வெல்லக்கூடும், ஹரப்பானின் ‘விவேகமற்ற முடிவே’ காரணம்…
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு தவணை வென்றுள்ள டாக்டர் டி.ஜெயக்குமார் இம்முறை அத்தொகுதி கைமாறக்கூடும் என்று அஞ்சுகிறார். எதிரணி வாக்கு சிதறுவதால் ஒரு காலத்தில் முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலுவின் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியை பிஎன் மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என்றாரவர். “பிஎஸ்எம் மட்டும் பிஎன்னை …
இசி தலைவர்: இசி முத்திரை குத்தப்படாத வாக்குச்சீட்டுகள் செல்லத்தக்கவையே
தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா, இசி முத்திரை குத்தப்படாத வாக்குச்சீட்டுகளும் செல்லத்தக்கவையே என்று உறுதி கூறினார். இதன் தொடர்பில் ஒரு புகார் வந்திருப்பதாக தெரிவித்த ஹஷிம் அப்படிப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஏற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிக்கு உண்டு என்றார். “அங்கு …
நண்பகல்வரை தேர்தல் முறைகேடுகள் குறித்து மூன்று புகார்கள்
இன்று வாக்களிப்பு தொடங்கிய நான்கு மணி நேரத்தில் தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. வாக்குச் சீட்டுகளில் அடையாளக் குறி இருந்ததாக இரண்டு புகார்கள். இன்னொன்று தன் பெயரைப் “பயன்படுத்தி” அடையாளம் தெரியாத ஒருவர் முன்கூட்டியே வாக்களித்து விட்டுச் சென்று விட்டார் என்ற புகார். பினாங்கில் …
சிலாங்கூரில் ஹரப்பானுக்கே பெரும்பான்மை: அஸ்மின் நம்பிக்கை
சிலாங்கூர் பராமரிப்பு மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி பக்கத்தான் ஹரப்பான் சிலாங்கூரில் “குறைந்தது” 40 இடங்களையும் நாடு முழுக்க 112 இடங்களையும் கைப்பற்றும் என்று ஆருடம் கூறியுள்ளார். “சிலாங்கூரில் மும்முனைப் போராட்டங்கள் இருந்தாலும் குறைந்தது 40 இடங்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கை எனக்குண்டு. “பலமுனைப் போட்டி பற்றிக் கவலையில்லை, …
நல்ல செய்திகளாக சொன்ன நஜிப் பணத்துக்கு என்ன செய்வார்? மகாதிர்…
நேற்றிரவு வாக்களிப்பு நாளுக்கு முன்னதாக ஆற்றிய உரையில் பல நற்செய்திகளைச் சொன்ன பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பணத்துக்கு என்ன செய்யப் போகிறார் எனக் கேள்வி எழுப்பினார் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். “மனத்தை மகிழ வைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார், வரிகளைக் குறைத்துள்ளார், நிறைய செலவிடப் …
அரைக்கால் சட்டையுடன் வந்த வாக்காளரைத் தடுத்த அதிகாரியை குவான் எங்…
பகான் நாடாளுமன்ற தொகுதியில் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவரை இசி அதிகாரி வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தார். அந்த அதிகாரியை பினாங்கு பராமரிப்பு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடினார். அந்த அதிகாரி வாக்களிக்க வந்த ஒரு நடுத்தர வயது வாக்காளரை…
மகாதிர்: வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்
லங்காவி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மகாதிர் முகமட் அவரது கருப்பு நிற பிஎம்டபுள்யு காரில் அவரது துணிவியாருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். 100 க்கு மேற்பட்டோர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் "துன் நீடூழி வாழ்க" என்று குரலெழுப்பினர். அவர்களில் ஒருவர் நாங்கள் இங்கு வருவதற்கு…
நஜிப்பின் தேர்தல் இறுதி நேர நற்செய்தி: வரி விலக்கு, விடுமுறைகள்,…
நாளை நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் மக்களுக்கு மூன்று கடைசி- நேர "நற்செய்தியை" நஜிப் அறிவித்தார். அந்நற்செய்திகள் - 26 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரி குறைப்பு; அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறைகள்; மற்றும் ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 5 நாள்-கட்டணம் இல்லாத டோல்கள். இந்த…
மலாய்க்காரர்கள் நஜிப்பினால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் அவர்களின் பெருமையை மீட்க…
நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் மலாய்க்காரர்கள் அவர்கள் இழந்து விட்ட பெருமையை மீட்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் வாக்களிப்புக்கு முன்னதான அவரது இறுதி உரையில் கூறினார். "மலாய்க்காரர்களுக்கு இந்தத் தேர்தல் ஓர் அரசியல் கட்சிக்கு வெறும் வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல, அது ஓர்…
எம்டியுசியின் ஆதரவு ஹரப்பானுக்கு இல்லை, பிஎன்-னுக்கு, அதன் தலைவர் கூறுகிறார்
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (எம்டியுசி) ஆதரவு பாரிசான் நேசனலுக்குத்தான், ஏனென்றால் பராமரிப்பு பிரதமர் தொழிலாளர்களுக்கு அதிகமாகச் செய்திருக்கிறார் என்று அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சோர் கூறுகிறார். நாட்டின் 14 மில்லியன் தொழிலாளர்களும் அவர்களின் வாக்குகளை பக்கத்தான் ஹரப்பானுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் அளிக்க வேண்டும் என்று…
டைம்: ஹரப்பான் வெற்றி பெறும், ஆனால்…
மக்களிடமிருந்து பெற்ற கருத்துகள் அடிப்படையில் பக்கத்தான் ஹரப்பான் நாளை நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என்று முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனினுடின் கூறினார். ஆனால், பிஎன் புத்ரா ஜெயாவை அதன் பிடியில் வைத்துக்கொள்வதற்கு அதனால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். நான் எங்கு…
ரபிடா: நஜிப் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதாக நான் உணர்கிறேன்
பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் என்று தாம் உணர்வதாக முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் தெரிவித்தார். தலைமைத்துவத்தில் அமர்த்தப்பட்டவர்களின் செயல்களும், தவறான நடத்தைகளும் தம்மை துயரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. நஜிப் எடுத்துக்கொண்ட நம்பிக்கை மற்றும் நேர்மை மீதான சபதத்தை மீறி விட்டதால், அவர் தமக்கு நம்பிகைத் துரோகம்…
வாக்களிக்க தாய்லாந்து மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர், தானா மேரா பாஸ் கூறுகிறது
நாளை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க 200 லிருந்து 300 தாய் மக்கள் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தானா மேரா பாஸ் கூறுகிறது. அவர்கள் ஐந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றுடன் ஓர் அரசியல் கூட்டணியின் சின்னம் ஒட்டப்பட்ட இரண்டு கார்கள் வந்தன என்றும், அவர்கள் அனைவரும் தேசிய பயிற்சிக்…
பாரம்பரிய இந்திய வர்த்தகர்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர் அனுமதி துணைப் பிரதமருக்கும்…
‘ஞாயிறு நக்கீரன், இந்திய பாரம்பரிய வர்த்தகர்களும் தொழில் முனைவர்களும் ஆள்பல பற்றாக் குறையால் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் தற்பொழுது முப்பதாயிரம் தொழிலாளர்களை வெளிநாட்டில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்வதற்காக மத்தியக் கூட்டரசு அனுமதி அளித்துள்ளதற்கு மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(பிரிமாஸ்)…























