மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
பத்து-வில் முன்னாள் மஇகா தலைவர் ஹரப்பானுடன் ஒத்துழைக்கத் தயார்
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் வி.எம். பஞ்சமூர்த்தி தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவளித்தால் அதை வரவேற்பதாகக் கூறினார். பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அல்லது ஹரப்பான் தலைவர்களின் வார்த்தைக்காக அவர் காத்திருக்கிறார். அவர்கள் ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பஞ்சமூர்த்தி மலேசியாகினியிடம் கூறினார்.…
கேஎல்லில் இரண்டு தேர்தல் கூட்டங்கள்- ஒன்றில் வசதி இன்னொன்றில் வசதிக்குறைவு
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகம்மட்டும் நேற்றிரவு கோலாலும்பூரில் இருவேறு இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசினர். பிஎன் கூட்டம் வங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றது. ஹரப்பான் அதன் கூட்டத்தை தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தியது. இரண்டிலும் ஆயிரத்துக்கு …
பிகேஆரில் மீண்டும் பிரச்னை: பினாங்கு இளைஞர் தலைவர் விலகல்
14வது பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் வேளையில் பிகேஆரில் மீண்டும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதன் பினாங்கு மாநில இளைஞர் தலைவர் அஸ்ரோல் சானி அப்துல் ரசாக் பதவி விலகியுள்ளார். அஸ்ரோலுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராகவுள்ள பெர்தாம் உள்பட சில இடங்கள் பெர்சத்துக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது பிடிக்கவில்லை என பிகேஆரின் …
மாட் சாபு இருப்பதே தெரியவில்லை, பிஎன் வேட்பாளர் கூறுகிறார்
மாட் சாபு இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருவதே இல்லை, பிறகு எப்படி இத்தொகுதி மக்களுக்கு அவர் சேவையாற்றுவார் என கோத்தா ராஜா பி.என். வேட்பாளர், வி.குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியினர் வசமானதிலிருந்து அத்தொகுதி எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லையென இன்று செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.…
மகாதிர்: என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு…
இன்று தித்திவங்சா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேசா பாண்டானில் 1,500 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் இழைத்த ஒரு பெரிய தவறை ஒப்புக் கொண்டார். "எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு நஜிப் அப்துல் ரசாக்கை (பிரதமராக) தேர்வு செய்தது.…
நஜிப்: ஜிஎஸ்டி 6% ஜிஇ-க்குப் பிறகும் நிலைத்திருக்கும்
14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகும், ஜி.எஸ்.டி. ஆறு விழுக்காடாகவே இருக்கும் எனத் தற்காலிகப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் பிஎன் வென்றால், ஜி.எஸ்.டி. 9 விழுக்காடு உயரும் என்ற அவதூற்றை எதிர்க்கட்சிகள் பரப்பிவருவதாக அவர் கூறினார். “அவர்கள் விற்பனை, சேவை வரியை 10 + 6%…
இராணுவத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கான பாஸின் திட்டம்
பாஸ் கட்சியின் முன்னாள் படையினரின் விவகாரங்கள் அலுவலகத்தின் (கெராபாட்) தலைவர் முகமட் நாஸாரி மொக்தார் இராணுவப் படைகளின் உறுபினர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாஸ் அதிக அளவிலான முன்னாள் படையினரை தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பாஸ் முன்னாள்…
இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் அதிகப் படியான இடங்கள் என்னவானது?
ஏழை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் உயர் கல்விக் கூடங்களில் அரசாங்கம் அறிவித்த அதிகப்படியான 700 இடங்கள் என்னவானது என பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் கல்வி…
கிட் சியாங்: எனக்கும் மகாதிருக்கும் ஒருவேளை அன்வாருக்கும் இதுவே இறுதிப்…
வயதாகிக்கொண்டே இருப்பதால் தமக்கும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அன்வார் இப்ராகிமுக்கும்கூட இதுவே இறுதித் தேர்தலாக இருக்கக்கூடும் என டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “எனக்கு வயது 77. இந்த 14வது பொதுத் தேர்தல் எனக்கு 12வது தேர்தல். இதுவே எனக்குக் கடைசித் …
இன்றிரவு நஜிப்பும் மகாதிரும் கேஎல் கூட்டங்களில் பேசுவார்கள்
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் தலையாய எதிராளி டாக்டர் மகாதிர் முகம்மட்டும் இன்றிரவு கோலாலும்பூரில் ஒரே நேரத்தில் தேர்தல் கூட்டங்களில் பேசுவார்கள். நஜிப் பிபிஆர் கோம்பாக் சித்தியாவில் பேசுவார். அதற்கு 13கிமீ தொலைவில் பாண்டான் பிளேட் தேசாவில் பெர்சத்து கூட்டம் நடைபெறுகிறது. அதில் மகாதிரும் பெர்சத்து …
தியான் : வேறு வழியில்லை என்றால், மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பேன்
தனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், பாரிசான் வேட்பாளர் அல்லாத மற்ற வேட்பாளர்களைப் பத்து நாடாளுமன்றத்தில் ஆதரிக்கவுள்ளதாக தியான் சுவா தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்ய முடியாத பட்சத்தில், தனது இறுதி முடிவாக அது இருக்கும் என்றும் அவர் கூறினார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியிலிருந்து…
மே தினம் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அனைத்து மலேசியத் தொழிலாளர்களுக்கும் உலகத் தொழிலாளர்களுக்கும் அதன் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது
தியன் சுவாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் கூடினர்
கோலாலம்பூரில் இன்றிரவு நூற்றுக்கணக்கான பிகேஆர் உறுப்பினர்கள் ஒரு மெழுகுவத்தி விழிப்பு நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தியன் சுவாவுக்கு தெரிவித்தனர். தியன் சுவா பத்து நாடாளுமன்ற தொகுதியின் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. அங்கு குழுமியிருந்தவர்கள் அவரின் மே 9 தேர்தலுக்கான திட்டங்கள் பற்றி…
ஶ்ரீராம்: தேர்தல் ஆணையம் புதன்கிழமைக்குள் தவறை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல்…
தேர்தல் நியமன நாளன்று தேர்தல் ஆணையம் இழைத்தத் தவறை எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பானின் ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் தேர்தல் ஆணையத்திற்கு அவரது வழக்குரைஞர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். மேலும்,…
ரயிஸ்: கம்யூனிஸ்ட் தலைவரின் படம் ஓகே, ஆனால் டாக்டர் எம்,…
பெரிய விளம்பரப் பலகைகளிலிருந்து மாகாதிரின் படம் அகற்றப்படுவது பற்றி எழும்பியுள்ள ஏகப்பட்ட குறைகூறல்களில் ஒன்றாக இருப்பது முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திமின் குறைகூறல். இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டரில் மகாதிருக்கு சட்டத்தின்முன் சமத்துவம் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். மசீசவின் 14 ஆவது பொதுத் தேர்தல் விளம்பரப்…
விளம்பரப் பலகையிலிருந்து 60 வினாடிகளில் மகாதிரின் படம் அகற்றப்பட்டது
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு பெரிய விளம்பரப் பலகையில் ஒட்டப்படிருந்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட்டின் படத்தை அமலாக்க அதிகாரிகள் ஒரு நிமிடத்தில் வெட்டி அகற்றினர். எங்களுடைய விளம்பரம் ஒட்டப்படும் பலகையில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது எங்களுக்கு கூறப்பட்டது. மகாதிரின் படத்தை விளம்பரம் ஒட்டும்…
பத்துவில் ஹரப்பான் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று குழம்புகின்றனர்
பத்து எம்பி தியான் சுவா எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாதென்று நிராகரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரின் ஆதரவாளர்கள் இனி எப்படி வாக்களிப்பது என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனர். மலேசியாகினி சந்தித்த வாக்காளர்களில் சிலர் தாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றார்கள். இன்னும் சிலர் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டதற்குக் …
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்காக இசிமீது தியான் சுவா வழக்கு
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பத்து நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதைத் தடுத்த தேர்தல் அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அரசமைப்பு பகுதி 48(1)-இன்படி பத்து தொகுதியில் போட்டியிடும் தகுதி தமக்குண்டு என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தியான் தம் மனுவில் கேட்டுக்கொண்டிருக்கிறார் என …
வேட்பாளர் நியமன மைய விவகாரம்: இசி போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறது
தேர்தல் ஆணையம் (இசி) வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாதது குறித்து இப்போதைக்குக் கருத்துத் தெரிவிக்காது. அச்சம்பவம் தொடர்பில் முழு அறிக்கை கிடைக்க வேண்டும், போலீஸ் விசாரணையும் நடத்தப்பட வேண்டும், அதன் பின்னரே இசி அறிக்கை வெளியிடும். இசி தலைவர் முகம்மட் ஹஷிம், சில தரப்புகள் போலீஸ் …
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டம் முதன்முதலாகப் பாய்ந்தது ஒரு வெளிநாட்டவர்மீது
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படும் முதல் ஆள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். போலீஸ் குறித்து தவறான செய்தியைக் கூறியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹமாஸ் உறுப்பினர் ஃபாதி முகம்மட் அல்-பட்ஷ் இம்மாதத் தொடக்கத்தில் கோலாலும்பூரில் கொலை செய்யப்பட்டபோது போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்குத் தாமதமாக வந்ததாக …
“வாழ்வின் எல்லை, தவறுகளை சரிசெய்ய முயல்வேன்”- கண்ணீர் மல்கும் காணொளியில்…
ஒரு குறுகிய காணொளியில், இரண்டு குழந்தைகளுக்கு விளக்கம் தரும் வகையில் கண்கள் கலங்க, உரையாடும் முன்னாள் பிரதமர் மகாதீர், தான் எதற்காக இந்த அரசியல் மாற்றதிற்காக முன்வந்தார் என்பதை உணர்வுடன் காட்டுகிறது. அய்சா என்ற சிறுமியும் அவளின் அண்ணன் அடாம் என்றவனும் மகாதீருடன் உரையாடும் வகையில் காட்சி அமைந்துள்ளது.…
கிளேருக்கு எதிரான ஹாடியின் வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸலுக்கு எதிராக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் லண்டனில் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு லண்டனில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. வழக்கில் வெற்றி பெரும் என்பதில் பாஸுக்கு 80 விழுக்காடு நம்பிக்கை இருக்கிறது என்று ஹாடி கூறுகிறார். வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது.…
விமானத்தில் சதிவேலை உண்மையே: மீண்டும் வலியுறுத்துகிறார் மகாதிர்
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், லங்காவிக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்த தனியார் ஜெட் விமானத்தில் நாச வேலைகள் நடந்திருப்பதாக தாம் கூறுவது உண்மைதான் என்பதை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். நேற்றிரவு லங்காவியில் ஒரு செராமாவில் பேசிய அவர், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து வாரியம்(சிஏஏஎம்)கூட விமானத்தின் முன் …
























