சீனாவின் தூதர் புத்ரா ஜெயாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

  கோலாலம்பூரின் பிரபல்யமான சைனாடவுன் என்றழைக்கப்படும் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு நேற்று வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் புத்ரா ஜெயாவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார். பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது ஹுவாங் வெளியிட்ட கடும் வாசங்களைக் கொண்ட அறிக்கை மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று கருதப்படுவதால் அதற்கு…

பெட்டாலிங் ஸ்திரீட்டில் வியாபாரம் 40 விழுக்காடுவரை குறைந்தது

கடந்த  வாரம்   ஹிம்புனான்  ரக்யாட்  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடந்ததிலிருந்து  பெட்டாலிங்  ஸ்திரீட்டில்  வியாபாரம்  30-இலிருந்து 40 விழுக்காடுவரை குறைந்திருக்கிறது  என  கெராக்கான்  பொதுச்  சேவை  மற்றும்  புகார்  பிரிவுத்  தலைவர்  வில்சன்  லாவ்  கூறினார். பேரணி  தொடர்பான அறிக்கைகளும்  செயல்களும்  வணிகர்களுக்கு  அச்சத்தைத்  தந்துள்ளன. பொதுமக்களும் வருவதற்குப் …

பகாங்கிலும் மலாக்காவிலும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

இன்று  காலை  மணி 9-க்கு  நான்கு  இடங்களில்  காற்றின்  தரம்  ஆரோக்கியமற்ற நிலையில்  இருந்ததாக சுற்றுச்சூழல்  துறை  அறிவித்தது.  பகாங்கில்  பாலோக்  பாருவில் காற்றுத்  தூய்மைக் கேட்டுக்  குறியீடு 128ஆக  இருந்தது. மற்ற  மூன்று  பகுதிகள்  வருமாறு:  திரெங்கானுவில்  கெமாமான்(127), பகாங்கில்  இந்திரா  மக்கோடா(116), பண்டாராமலாக்கா(109). காற்றுத்  தூய்மைக்…

போலீஸ்: பெட்டாலிங் ஸ்திரீட்டில் சிகப்புச் சட்டைகள் இல்லை

பெட்டாலிங்  ஸ்திரீட் பகுதியில்  சிகப்புச்  சட்டைகளின்  நடமாட்டம்  இல்லை  எனப் போலீஸ்  அறிவித்துள்ளது. சுற்றுப்பயணிகளைக்  கவரும்  இடங்களில்  ஒன்றான  அங்கு  எல்லாம்  வழக்க  நிலையில்  இருப்பதாக  டாங் வாங்கி  போலீஸ்  மாவட்டத்  தலைவர்  சைனல்  அபு  சாமா  கூறினார். “இதுவரை  பெட்டாலிங்  ஸ்திரீட்  பகுதியில்  வியாபாரம்  எப்போதும்  போலத்தான் …

மகாதிர்: நஜிப் அகற்றப்பட்டால் மட்டுமே பொருளாதாரம் மீட்சிபெறும்

 நாட்டின்  பொருளாதாரம்  மீட்சிபெற  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அகற்றப்பட  வேண்டும்  என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். நலிவுற்று  வரும்  மலேசியப்  பொருளாதாரம்  புத்தெழுச்சி  பெற  இது  ஒன்றே  வழி  என  முன்னாள்  பிரதமர்  தம்  வலைப்பதிவில்  கூறினார். “நாட்டின்  நாணயமும்  பொருளாதாரமும்  மீட்சி  பெற  வேண்டுமானால்  நஜிப் …

சொய் லெக்: ஜமாலைக் கைது செய்யச் சொல்லி மசீச தலைவர்…

மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய், அமைச்சரவைக்  கூட்டத்தில்  கலந்துகொண்டபோது  சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுசைக்  கைது  செய்ய  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  இருக்க  வேண்டும்  என  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்  கூறினார். “இன்று  வெள்ளிக்கிழமை. புதன்கிழமை  நடந்த …

மொராய்ஸ் இறப்புக்குக் காரணத்தை அறிய விரும்புகிறார்கள் உறவினர்கள்

காலஞ்சென்ற  அந்தோனி  கெவின்  மொராயிஸின்  இறப்புக்கான   காரணத்தை  அறிந்துகொள்ள  விரும்புகிறார்கள்  அவரின்  உறவினர்கள். அதனால்தான் அவர்கள் அவரின்  உடலைப்  பெற்றுக்கொள்ள  மறுப்பதாக  போலீசார்  விளக்கமளித்துள்ளனர். கோலாலும்பூர்  பொது  மருத்துவமனையின் தடயவியல்  மருத்துவத்  துறை  அதை  உறுதிப்படுத்த  வேண்டும்  என  அவரின்  குடும்ப  உறுப்பினர்கள்  விரும்புவதாக  போலீஸ்  படைத்  துணைத் …

அம்னோ பொதுப்பேரவையில் இனவாதப் பேச்சைத் தவிர்ப்பீர்: மசீச கோரிக்கை

செப்டம்பர்  16  சிகப்புச்  சட்டைப்  பேரணியைத்  தொடர்ந்து  டிசம்பரில்  நடைபெறும்  அம்னோ  பேராளர்  கூட்டத்தில் (ஏஜிஎம்) உறுப்பினர்கள்  “ஆர்வமிகுதியினால்  இனவாதம்  பேச”த்  தொடங்கி விடக்கூடாது. “அம்னோ பொதுப்பேரவையில் அம்னோ  சகாக்கள்  அரசியல்  செல்வாக்கு  பெறும்  ஆர்வத்தில் இனவாதம்  பேசக்  கூடாது  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்”, என  மசீச  செனட்டர் …

ஜமால்: நாளைய பெட்டாலிங் ஸ்திரிட் பேரணிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலவரம்  வெடிக்கலாம்  என்று  இரண்டு  நாள்களுக்குமுன்  எச்சரித்த   சுங்கை  புசார்   அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  அப்பேரணிக்கும்  தமக்கும்  தொடர்பில்லை  என்கிறார். “திட்டமிடப்பட்டுள்ள  அப்பேரணியில்  நான்  சம்பந்தப்படவில்லை  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன். “அப்படி  ஓர்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றால்  கலவரம்  வெடிக்கலாம்  என்ற  என்னுடைய  கவலையைத்தான் …

‘தெரு ஆர்ப்பாட்டம் என்று மிரட்டுவதை நிறுத்துவீர்’

சிகப்புச்  சட்டை  ஆர்ப்பாட்டக்காரர்கள், நாளை பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  மற்றொரு   பேரணி நடத்தப்போவதாக மிரட்டுவதை நிறுத்திக்  கொள்ள வேண்டும் என  உள்துறை  துணை அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட் கூறியுள்ளார். . சிகப்புச்  சட்டையினர்  என்ன  சொல்ல  நினைத்தார்களோ  அதைக்  கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பேரணியிலேயே  சொல்லி விட்டனர் …

நஜிப் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்ள நியூ யோர்க் சென்றார்

மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், ஐநா  பொதுப்  பேரவையின்  70வது  கூட்டத்தொடரில்  கலந்துகொள்வதற்காக  நேற்று  நியூ யோர்க்  சென்றடைந்தார். நஜிப்பையும்  அவரின்  துணைவியார் ரோஸ்மா  மன்சூரையும்   வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்,  அமெரிக்காவுக்கான   மலேசியத்  தூதர்  ஆவாங்  அடேக்  ஹுசேன், ஐநாவில்  மலேசியாவின்  நிரந்தரப்  பேராளர்  ரம்லான் …

ஜமால்மீது போலீஸ் விசாரணை

சனிக்கிழமை,  பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலகம் வெடிக்கலாம்  என்று  கூறிய சுங்கை பெசார்  அம்னோ  தொகுதித் தலைவரான ஜமால் முகமட் யுனூஸ்மீது  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்   எங்-கும்  இதர பல  டிஏபி  உறுப்பினர்களும்  போலீசில்   புகார்  செய்துள்ளனர். நேற்று  ஜமால்  அவ்வாறு  கூறினார்  என்றும்  அதன்  தொடர்பில்  பொலீசார் …

பக்கத்தானின் பொதுக் கொள்கைக் கட்டமைப்புக்கு பிஎஸ்எம் ஆதரவு

பக்கத்தான்  ஹராபானின்  பொதுக்  கொள்கைக்  கட்டமைப்புடன்  பார்டி  சோசலிஸ்  மலேசியா (பிஎஸ்எம்)வுக்கு  உடன்பாடு  இல்லை  என்று  சில  எதிரணித்  தலைவர்கள் கூறிக்  கொண்டிருப்பதை  அக்கட்சியின்  முன்னாள்  தலைமைச்  செயலாளர்  எஸ். அருட்செல்வன்  நிராகரித்துள்ளார். பக்கத்தானின்  பொதுக்  கொள்கை  தம்  கட்சிக்கு  ஏற்புடையதே  என்று  கூறிய  அருட்செல்வன்  2013-இலேயே  பக்கத்தானின் …

கைருடின் பல மாதங்கள் சிறையில் இருக்க நேரலாம்

நேற்று  பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு நடவடிக்கை)ச்  சட்டத்தின்கீழ்(சோஸ்மா)  மீண்டும்  கைது செய்யப்பட்ட  முன்னாள்  அம்னோ உறுப்பினர்  கைருடின்  அபு  ஹசான்  பல மாதங்கள்  சிறையில்  பூட்டி  வைக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாக  மனித  உரிமை  வழக்குரைஞர்   ஷியாரெட்ஸான்  ஜொஹான்  கூறினார். அது  எப்படி  என்றால்,  சோஸ்மாவின்கீழ்  பத்து  கவான்  அம்னோ  தொகுதியின் …

ஜமால்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெட்டாலிங் தெருவில் கலகம்

பெட்டாலிங் தெருவில் போலியான பொருள்கள் விற்பனை செய்தலுக்கும் மற்றும் அந்நிய வியாபாரிகளுக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோலாலம்பூரில் சுற்றுப்பயணிகளை அதிகமாகக் கவரும் அத்தெருவில் கலகம் வெடிக்கும் என்று சுங்கை பெசார் அம்னோ தலைவரான ஜமால் முகமட் யுனூஸ் கூறுகிறார். அவர் இந்த எச்சரிக்கையை இன்று அம்பாங் மாவட்ட…

பிஎன் ஆதரவாளர்கள்: மகாதிர் மகன்கள் பெரும் பணக்காரர்களானது எப்படி?

டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  புதல்வர்கள்  செல்வந்தர்களாக  விளங்குவது  எப்படி  என்பதை  மலேசிய  ஊழல்- தடுப்பு ஆணையமும்  போலீசும்  விசாரிக்க  வேண்டும். இதனை  வலியுறுத்திய  பிஎன்  ஆதரவாளர்  சங்கத்தின் துணைத்  தலைவர்  லீ  நான் சாங்,  முன்னாள்  பிரதமரின்  புதல்வர்கள்  மொக்சானி-யும்  மிர்சானும்  மலேசியாவின்  மிகப்  பெரிய  பணக்காரர்கள்  வரிசையில்  …

மசீச முக்கிய விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்க வேண்டும்

மசீச,  நாளை,  அதன்  தலைவர்களுக்காக  ஏற்பாடு  செய்துள்ள  சிறப்பு  விளக்கமளிப்புக்  கூட்டத்தில்  பல்வேறு  தேசிய  விவகாரங்களில்  ஒரு  தெளிவான  நிலைப்பாட்டை  எடுப்பதுடன்  சீனச்  சமூகத்தின்  எண்ணங்களையும்  எடுத்துரைக்க  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை  வலியுறுத்திய  மசீச முன்னாள்  உதவித்  தலைவர்  கான்  பெங்  சியு,  அக்கட்சி,  1மலேசியா  மேம்பாட்டு …

நஜிப் மீதான விசாரணை தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் மலேசிய போலீசை…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  இதர  சிலருக்கும்  எதிராக  அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் grand jury (வழக்கு  தொடுக்கப்  போதுமான  ஆதாரங்கள் இருப்பதை ஆராயும் குழு) விசாரணை  தொடர்பில்  அமெரிக்க  அதிகாரிகள்  மலேசியப்  போலீசாரை  இன்னும்  தொடர்பு  கொள்ளவில்லை  எனப்  போலீஸ்  படைத்  துணைத்  தலைவர்  நூர் ரஷிட்  இப்ராகிம் …

அமைச்சு: அன்வாரின் உடல்நலன் நல்லாவே கவனிக்கப்படுகிறது

சுகாதார  அமைச்சு,  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின் உடல்நலனைப்  பராமரிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டிருக்கும்  நடவடிக்கைகளை  விளக்கி  அறிக்கை  ஒன்றை  விடுத்துள்ளது. அன்வாரின்  குடும்பத்தார்  அவரது  தோள்பட்டை  வலிக்குத்  தகுந்த  சிகிச்சை  அளிக்கப்படாவிட்டால்  சுகாதார  அமைச்சின்  துணைத்  தலைமை  இயக்குனர்  டாக்டர்  ஜெயேந்திரன்  சின்னதுரைமீது  புகார்  செய்யப்போவதாகக்  கூறியதை  அடுத்து …

ஒற்றுமை ஓங்க ஒரே வகைப்பள்ளி வேண்டும், பெர்காசா கோரிக்கை

  மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் பெர்காசா நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே வகைப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணியில் சீனமொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து பெர்காசாவின் இக்கோரிக்கை வெளிவந்துள்ளது. மலேசியாவில் இன உறவுகள் நன்றாக இல்லை, ஏனென்றால்…

பக்கத்தான் ஹராபான் அன்வார் பிரதமராவதை விரும்புகிறது

புதிதாக  அமைக்கப்பட்டிருக்கும்  எதிரணிக்  கூட்டணியான பக்கத்தான்  ஹராபான்,  அதன்  முதல்  நடவடிக்கையாக  சிறையில்  உள்ள அன்வார்  இப்ராகிம்தான் பிரதமருக்கான  அதன்  வேட்பாளர்  என அறிவித்துள்ளது. அதாவது,  பொதுத்  தேர்தலில்  அது  வெற்றிபெற்றால்  அன்வார்  பிரதமராவார். இதனை  அறிவித்த  நாடாளுமன்ற  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்…

டேய்லர் பல்கலைக்கழகத்துக்கு உதவிச் சம்பளத்தை நிறுத்துவதில் இனவாதம் தெரிகிறது: மசீச…

வருங்காலத்தில்  டேய்லர்'ஸ்  பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  உதவிச்  சம்பளம்  வழங்குவதில்லை  என  மஜ்லிஸ்  அமானா  ரக்யாட்  செய்துள்ள  முடிவில்  இனவாதம்   பளிச்சிடுகிறது  என  மசீச  சாடியது. அதனை  அறிவித்த  புறநகர்,  புறநகர்  மேம்பாட்டு அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்,  அவர்  “இனவாதி”  என்பதை  மேலும்  உறுதிப்படுத்திக்  கொண்டிருக்கிரார்  என  மசீச …

அமெரிக்காவில் நஜிப் மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துகள்மீது விசாரணை

அமெரிக்க  அதிகாரிகள்  பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள்  புரிந்துள்ளதாகக்  கூறப்படும்  ஊழல்களை  ஆய்வு செய்வதாக  நியூயோர்க் டைம்ஸ் (என்ஒய்டி)   தெரிவித்துள்ளது.. பிரதமரின் வளர்ப்பு மகன்  ரிசா  அசீசுக்குச்   சொந்தமான  நிறுவனம்  அண்மைய  ஆண்டுகளில்  அமெரிக்காவில் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் நஜிப்பின்  குடும்ப  நண்பர்  ஒருவரின் …