விரைவு பேருந்து ஓட்டுனர்கள் மீதான புகார்களை வரவேற்கிறது ஸ்பாட்

விரைவு   பேருந்து   பயணிகள்   ஓட்டுனர்   தவறு   செய்வதைக்   கண்டால்   நேரடியாக   தன்னைத்   தொடர்பு   கொண்டு   முறையிடுவதை    நிலப்   போக்குவரத்து    ஆணையம் (ஸ்பாட்)   ஊக்குவிக்கிறது. ஸ்பாட்டின்    தொலைபேசி    எண்    எல்லா    விரைவு   பேருந்துகளிலும்   இருக்கும்.  24-மணி   நேரமும்    தொடர்புகொண்டு   புகார்களைத்    தெரிவிக்கலாம்   என    ஸ்பாட்   பொது   நிர்வாகி (அமலாக்கப்   பிரிவு) …

டெப்பி ரெய்னோல்ட்ஸ், 84, மகள் கேரி ஃபிஷருக்கு அடுத்த நாள்…

ஹாலிவூட்டில்   ஒரு  காலத்தில்   கொடிகட்டி   பறந்த     நடிகை    டெப்பி   ரெய்னோல்ட்ஸ்    நேற்று   காலமானார்.  அவருக்கு   வயது  84. லோஸ்   ஏஞ்சலிஸ்    நகரில்   திடீரென்று    முடக்கு   வாதத்தால்   தாக்கப்பட்டு   மருத்துவமனைக்குக்   கொண்டு   செல்லப்பட்ட   ரெய்னோல்ட்ஸ்   சில  மணி   நேரத்தில்   இறந்தார்   என    அவரின்   மகன்   டோட்   ஃபிஷர்    தெரிவித்தார். ‘Singin’…

பெர்சத்து தலைவர்: பிரதமராவதற்கு முழுத் தகுதி பெற்றவர் முகைதின்

பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)வின்  உயர்   தலைவர்களில்    ஒருவர்,    அடுத்த   பொதுத்   தேர்தலில்   எதிரணி   புத்ரா  ஜெயாவைக்   கைப்பற்றினால்   அக்கட்சித்    தலைவர்   முகைதின்   யாசினே    பிரதமராவதற்கு   மிகவும்   பொருத்தமானவர்    என்கிறார். “எனக்கு  முகைதினை   நன்றாகத்    தெரியும்.  பிரதமராவதற்கு    முழுத்    தகுதி    அவருக்கு   உண்டு”,  என்றவர்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார். …

சகோதரனின் சூதாட்டக் கடன்களால் குடும்பமே தொல்லைப்படுகிறது

செராஸ்,   லோரோங்  ஈக்கான்  மாஸில்   உள்ள    ஒரு   வீட்டில்   உள்ளவர்களுக்குக்   கடன்  முதலைகளால்   தீராத   தொல்லை.  அக்குடும்பத்தைச்  சேர்ந்த  ஒருவர்     ஆ லோங்குகள்     எனப்படும்   கடன்  முதலைகளிடம்   நிறைய   கடன்    பெற்றிருப்பதுதான்   அதற்குக்   காரணம். சம்பந்தப்பட்ட     நபர்   பல    கடன்  முதலைகளிடம்   சுமார்  ரிம300,000    கடன்   பட்டிருக்கிறார்.  கடன் …

பாஸ்: அமனாவின் சாயம் வெளுத்து விட்டது, அது பிகேஆரின் தொகுதிகளைக்…

அமனா   நெகரா(அமானா) வின்   சாயம்   வெளுத்து  விட்டது    என்று   கூறும்   பாஸ்   அது     பிகேஆரின்     தொகுதிகளை   எடுத்துக்கொள்ளப்   பார்ப்பதிலிருந்தே    இதைத்    தெரிந்து  கொள்ளலாம்  என்கிறது. “அவர்கள்(அமனா)   இப்போது  பிகேஆரின்    தொகுதிகளை  அபகரிக்க   நினைக்கிறார்கள்.  இது   நாங்கள்   அமனா  குறித்து   சொல்லியதெல்லாம்   உண்மை   என்பதை   நிரூபிக்கிறது”,  என   பாஸ்   உதவித்  …

ஐவர் கைது, ரிம100,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கடந்த   சனிக்கிழமை,  ஸ்ரீபெட்டாலிங்கில்   இரண்டு   கொண்டோமினியம்களில்   நடத்திய   அதிரடிச்  சோதனையில்   ஐவரைக்  கைது    செய்து    இரண்டு  கிலோகிராம்   போதைப்பொருளைக்  கைப்பற்றியதன்வழி    போதைப்பொருள்  விநியோகக்    கும்பல்  ஒன்றை     போலீசார்  முறியடித்துள்ளனர். அக்கும்பல்   கூட்டரசுத்    தலைநகரிலும்   அதனைச்   சுற்றியுள்ள   பகுதிகளிலுமுள்ள   கேளிக்கை   மையங்களில்   போதைப்பொருள்களை   விற்று   வந்ததாக   நம்பப்படுகிறது     என   கோலாலும்பூர்  …

அர்ஜெண்டினாவின் முன்னாள் அதிபர்மீது ஊழல் குற்றச்சாட்டு

அர்ஜெண்டினா  முன்னாள்    அதிபர்    சிறிஸ்டினா   பெர்னாண்டஸ்  டெ  கிர்ச்சனர்,    அரசாங்கக்   குத்தகைகள்    வழங்கியதில்    ஊழல்    செய்ததாகக்  குற்றம்   சாட்டப்பட்டுள்ளார். அவர்மீதும்   அவரிடம்   நீண்ட   காலம்   திட்ட    அமைச்சராகப்     பணிபுரிந்த   ஜூலியோ   டெ    விடோமீதும்     வழக்கு    தொடர    கூட்டரசு    நீதிபதி   ஜூலியன்  எர்கோலினி    உத்தரவிட்டார். 10பில்லியன்  பெசோக்களுக்குமேல்(யுஎஸ்$643 மில்லியன்)   பெறுமதியுள்ள   …

பேருந்து விபத்துகளைத் தடுக்க யூனியன் ஆலோசனை

பேருந்து,  லாரி    போக்குவரத்து     நிறுவனங்கள்      ஓட்டுனர்களின்     வேலை       முறையை    மாற்றி  அமைக்க   வேண்டும்,  லாரி,  பேருந்து   விபத்துகளைத்   தவிர்க்க    அதுதான்     வழி    என  தீவகற்ப    மலேசியா    போக்குவரத்து   தொழிலாளர்  சங்கம்  (TWU) கூறியது. TWU பல  தடவை    இந்த   ஆலோசனையை   முன்வைத்தது     என்றும்    ஆனால்,  சம்பந்தப்பட்ட     தரப்புகள்   அதைக் …

ஸுனார்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவீர்: அரசாங்கத்துக்கு ஆர்எஸ்எப் கோரிக்கை

அரசாங்கம்  அரசியல்   கேலிச்சித்திர   ஓவியரான   சுல்கிப்ளி   அன்வார்   அல்ஹாஹ்   மீதான   எல்லாக்  குற்றச்சாட்டுகளையும்     கைவிட    வேண்டும்   என   எல்லைகளற்ற    செய்தியாளர்கள்   அமைப்பு (ஆர்எஸ்எப்)   விரும்புகிறது. பாரிசில்   அமைந்துள்ள    அந்த   என்ஜிஓ,    அரசாங்கம்   தேச  நிந்தனைச்   சட்டத்தைக்  காண்பித்து   ஸுனார்     என்ற  பெயரில்   பிரபலமாக    விளங்கும்   சுல்கிப்ளியை   மிரட்டவோ  அச்சுறுத்தவோ  …

இபிஎப் அதன் சந்தாதாரர்கள் அவர்களின் சேமிப்பை விரைவில் கரைத்து விடுவார்களோ…

ஊழியர்  சேமநிதி (இபிஎப்)   அதன்   சந்தாதார்ளை   எண்ணிக்    கவலையடைந்துள்ளது.  அவர்களின்  செலவளிக்கும்  பழக்கம்தான்   அதற்கு  கவலை   தந்துள்ளது. மலேசியர்களின்   வாழ்நாள்   இப்போது   75ஆண்டுகளாகக்   கூடியுள்ளது  ஆனால்,  சந்தாதாரர்கள்   பலர்   பணியிலிருந்து  ஓய்வுபெற்ற   மூன்றிலிருந்து   ஐந்து   ஆண்டுகளுக்குள்  இபிஎப்   சேமிப்பை  முடித்து   விடுகிறார்கள்    எனக்  கோலாலும்பூர்   இபிஎப்   கிளையின்   பணிஓய்வு  …

அனினா எல்லாவற்றுக்கும் விரைவில் விளக்கம் அளிப்பார்

  பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) நிறுவன உறுப்பினரான அனினா சாஅடுடின் அவருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் கட்சியின் ஶ்ரீகண்டி தலைமைப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதற்கும் விரைவில் எதிர்வினையா/ற்றுவார் என்று சினார் ஹரியான் கூறுகிறது. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க அனைவரும் அனினாவுக்கு…

சாக்லைட்டைத் திருடிய தாய்க்கு 14 நாள் சிறைத் தண்டனை

  கிறிஸ்துமஸ் தினத்தன்று பத்து சாக்லைடைத் திருடிய நான்கு குழந்தைகளின் தாயாருக்கு இன்று கோலாலம்பூர் மஜிஸ்டிரேட் நீதிமன்றம் 14 நாள் சிறைத் தண்டனையும் ரிம200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராத்தொகையைக் கட்டத் தவறினால் கூடுதல் நாங்கு நாள் சிறைத் தண்டனைக்கும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை அளித்த மஜிஸ்டிரேட் உம்ஸாருல் அந்-நுர்…

வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியரும் இபிஎப்-பில் சேரலாம்

வெளிநாடுகளில்  வேலை   செய்யும்  மலேசியர்கள்   1மலேசியா  பணிஓய்வுச்  சேமிப்புத்   திட்ட(எஸ்பி1எம்)த்தின்வழி     ஊழியர்   சேமநிதிக்குச்  சந்தா    செலுத்திச்   சேமிக்க   முடியும். 55வயதுக்குக்  கீழ்ப்பட்டவர்கள்  இபிஎப்    சந்தாதாரராக     தங்களைப்   பதிவு    செய்து  கொண்டு   பணிஓய்வு   பெறும்   வரையில்   சந்தா    செலுத்தி   வரலாம்   என   ஜோகூர்   இபிஎப்   கிளை   பணி ஓய்வு      ஆலோசக  …

கட்டண உயர்வால் விபத்துகள் குறையாது: ஸ்பாட்டுக்குப் பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தல்

பேருந்து   கட்டணத்தை  உயர்த்துவது    பேருந்து   விபத்துகளைக்  குறைக்கும்   என  நிலப்  போக்குவரத்து     ஆணையம் (ஸ்பாட்)    கூறியிருப்பதற்கு   மலேசிய   பயனீட்டாளர்   சங்கம்  (மாகோனாஸ்)   எதிர்ப்புத்    தெரிவித்துள்ளது. “அன்றாடத்    தேவைகளை    நிறைவேற்ற  முடியாமல்   மக்கள்  அல்லல்   பட்டுக்கொண்டும்   விலைவாசி    உயர்ந்து    கொண்டும்   போகும்    நடப்புப்   பொருளாதாரச்  சூழலில்     பேருந்து   கட்டணத்தை   உயர்த்துவது …

பிரிம் ஒருவகை ஊழல் என்பதை வான் அசிசா ஒப்புக்கொள்ளவில்லை

முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   பந்துவான்   ரக்யாட்    1மலேசியா( பிரிம்  உதவித்  தொகை)  ஒருவகை   ஊழல்    என்று  கூறியிருப்பதை    எதிரணித்    தலைவர்   டாக்டர்   வான்   அசிசா   வான்   இஸ்மாயில்   மறுக்கிறார். “அரசாங்கம்   மக்களுக்குக்  கொடுக்கும்   எதுவும்    மக்களிடமே   கொடுக்கப்பட  வேண்டும்,  அது   ஊழலாகாது.  அதைப்  பெற   மக்களுக்கு …

இடைநீக்க உத்தரவு செல்லாது என்று அறிவிக்கக் கோரி யுஎம் மாணவர்கள்…

அனிஸ்   ஷாபிக்     உள்பட,   யுனிவர்சிடி  மலாயா(யுஎம்)  மாணவர்கள்   நால்வர்    தங்களை  அப்பல்கலைக்கழகம்    இடைநீக்கம்     செய்தது     அரசமமைப்புக்கு  விரோதமான    செயல்    என   அறிவிக்கக்  கோரி    உயர்  நீதிமன்றத்தில்    மனு    தாக்கல்    செய்துள்ளனர். அனிஸ்  ஷாபியும்     லுக்மான்   நுல்  ஹகிம்   சுல்  ரசாலியும்    இறுதி   ஆண்டு   மாணவர்கள்.  கடந்த    ஆகஸ்ட்   மாதம்  …

சரவாக்கில் டிஏபி, பிகேஆருக்கிடையில் தொகுதி பரிமாற்றம்

சரவாக்   டிஏபியும்   பிகேரும்   தொகுதிகள்   சிலவற்றைப்  பரிமாறிக்கொள்ளலாம்   என  போர்னியோ   போஸ்ட்    செய்தி   வெளியிட்டுள்ளது. “நேற்று   (மாநில   டிஏபி   தலைவர்)   சொங்   சியான்    ஜென்      என்   வீட்டுத்   திறந்த   இல்ல   உபசரிப்பில்    கலந்துகொண்டார்.   இருவரும்  ஜனவரி    நடுப்பகுதியில்   சந்தித்துப்   பேச   ஒப்புக்கொண்டோம்.  அனேகமாக   இது   பற்றிப்  பேசலாம்”,  என  …

மசீச தலைவரே, நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர், தேவாலயங்கள் கூட…

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மசீச தலைவர் லியோ தியோங் லாய்க்கு மலேசியாவிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் தலைவர்கள் கூட 1எம்டிபி மற்றும் இதர தற்போதைய பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர் என்பதை நினைவூட்டினார். இந்நாட்டிலுள்ள தேவாலயத் தலைவர்கள் மட்டுமல்ல, இங்கிலாந்திலுள்ள தேவாலயங்கள், வத்திக்கான் ஆகியவற்றிலிருந்து உலகிலுள்ள நிச்சயமற்ற…

ரஃபிஸி பெல்டா-ஈகல் கொள்முதல் ஒப்பந்தத்தை வைத்து பிஎன் அரசை வீழ்த்தப்…

  இந்தோனேசியாவிலுள்ள பிடி ஈகல் ஹை பிளன்டேசனில் 37 விழுக்காடு பங்கை வாங்குவதற்கு பெல்டா போட்டிருக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி பின் அரசாங்கத்தை வீழ்த்தும் திட்டம் ஒன்றை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி வைத்திருக்கிறார். இந்தோனேசியா பிளன்டேசனில் அந்நிறுவனத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தும் உரிமையை அளிக்காத 37 விழுக்காடு பங்கை யுஸ்$505.4…

தாய்லாந்தில் 12ஆவது சுனாமி நினைவு நாள்

தாய்லாந்தில்   இன்று,    2004  டிசம்பர்    26-இல்  14    நாடுகளைத்   தாக்கிப்  பேரழிவை   ஏற்படுத்திய   இந்தியப்  பெருங்கடல்    சுனாமியின்   12அம்  ஆண்டு   நினைவுநாள்   அனுசரிக்கப்பட்டது. சுனாமியால்   பாதிக்கப்பட்ட   புக்கெட்,   க்ராபி,   பாங்-ங்கா,  ரனோங்,   சாதுன்,   ட்ராங்   ஆகிய   ஆறு   மாநிலங்களிலும்   வழிபாடுகள்   நடத்தப்பட்டு   புத்த  பிட்சுகளுக்குப்   பிச்சை   இடுதல்   முதலிய  …

திரெங்கானுவில் வெள்ளம்

நேற்றிலிருந்து   பெய்யும்   மழையால்   திரெங்கானுவின்  கெமாமானில்     வெள்ளம்  பெருகியது.  வெள்ளத்தால்   பாதிக்கப்பட்ட    46பேர்    இன்று  காலை   மூன்று   துயர்த்  துடைப்பு   மையங்களுக்கு    அப்புறப்படுத்தப்பட்டனர். “ஆறு  குடும்பங்கள்   எஸ்எம்கே   பத்ருல்  ஆலம்    ஷாவிலும்   ஈபோக்கில்  உள்ள  கம்போங்   பத்து   9  பாலர்   பள்ளியிலும்   உள்ளன.  ஒரு  குடும்பம்   மட்டும்    புக்கிட் …

பிரிமுக்கு முன் வாங் ஏஹ்சான் இருந்ததை மகாதிருக்கு நினைவுபடுத்துகிறார் சாலே

பந்துவான்  ரக்யாட்   1மலேசியா(பிரிம்)   உதவித்   தொகை   வழங்கப்படுவது   ஊழல்  என்று   முன்னாள்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்    முகம்மட்   கூறுவது    வியப்பளிப்பதாகக்  கூறுகிறார்    சாலே  சைட்   கெருவாக்.  ஏனென்றால்   மகாதிர்      பிரதமராக  இருந்தபோது   அவரும்    இப்படிப்பட்ட   திட்டங்களைக்  கொண்டு  வந்ததுண்டு  என்றாரவர். மகாதிர்   திரெங்கானுவுக்கு    Wang Ehsan  வழங்கியதை   அவர்  …

கைருடின்: முகைதின் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிலிருந்து முதலில் விடுபட வேண்டும்

பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா (பெர்சத்து)  தலைவர்    முகைதின்  யாசின்,    அவர்   மணமான  ஒரு  பெண்ணுடன்   கள்ளத்தொடர்பு   வைத்திருந்தார்   என்ற  குற்றச்சாட்டிலிருந்து   தம்மை   விடுவித்துக்  கொள்வது   முக்கியம்   என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது. பாலியல்   விவகாரம்  காரணமாக   கட்சி    நிறுவுனர்களில்     ஒருவரான  அனினா   சாடுடின்   ஸ்ரீகண்டி   தொகுதித்   தலைவர்   பதவியிலிருந்து   அகற்றப்பட்டிருப்பதாகக்  …