ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் விடுத்த கோரிக்கைக்கு DAP இளைஞர் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது, அம்னோ தலைவர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி மீது சுமத்தப்பட்டிருந்த 47 ஊழல் குற்றச்சாட்டுகளை கைவிட்ட முடிவை சட்டத்துறைத் தலைமை வழக்கறிஞர் (AG) மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும், ஆதாரங்களும் சட்ட…
1எம்டிபிக்கு உதவுவதற்காக இரயில் திட்டச் செலவுத் தொகை உயர்த்தப்படவில்லை: சீன…
சீனாவின் தொடர்புத்துறை கட்டமைப்பு நிறுவனம்(சிசிசிசி), மலேசிய அரசாங்கம் 1எம்டிபி கடனைக் கட்டுவதற்கு உதவியாக கிழக்குக் கரை இரயில் திட்ட(இசிஆர்பி)த்தின் செலவுத் தொகையை உயர்த்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தது. “ அப்படிக் கூறப்படுவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது” என சிசிசிசி தெரிவித்ததாக ஆஸ்திரேலியன் என்னும் நாளேடு அறிவித்துள்ளது. ஏற்கனவே …
குறைகூறாமல் எங்கள் உரிமைக்குக் குரல் கொடுங்கள்’, சுஹாகாமுக்கு பெர்சே அறிவுறுத்து
மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் புதிய தலைவர் ரசாலி இஸ்மாயில் பெர்சே குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் ஏமாற்றமளிப்பதாக தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அவ்வமைப்பு கூறுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேலி செய்வதையும் பெர்சே தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்துவதையும் விடுத்து, சுஹாகாம் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாராட்டி இருக்க வேண்டும், அமைதிப் …
கோலாலும்பூரில் ‘மலேசிய முதல்நிலை அதிகாரியைக் கைது செய்’ பேரணி
ஆகஸ்ட் 27-இல், ஒரு பேரணி நடத்தி ‘Tangkap Malaysian Official 1 (மலேசிய முதல்நிலை அதிகாரியைக் கைது செய்)’ இயக்கத்தைத் தொடக்கிவைக்கப் போவதாக இளைஞர் அமைப்புகளையும் மாணவர் அமைப்புகளையும் கொண்ட கூட்டமைப்பு இன்று அறிவித்தது. கோலாலும்பூரில் உணவகம் ஒன்றில் நடைபெற்ற அவ்வமைப்பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதன் பேச்சாளர் …
எம்பி: டான்ஸ்ரீ மூவர் பொய்யான தகவல் கொடுத்ததை நிரூபிப்பது எப்படி?
1எம்டிபி குறித்து டான்ஸ்ரீ மூவரும் பொய்யான தகவல் கொடுத்தார்கள் என்பது அம்னோ இளைஞர் துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனுக்கு எப்படித் தெரியும் என்று வினவுகிறார் கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரின் ராஜா அஹ்மட் ஷா. 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கைதான் அதிகாரத்துவ இரகசியச் …
டீசல் விவிலை உயர்கிறது
இன்று நள்ளிரவிலிருந்து டீசல் விலை 1 லீட்டருக்கு 10 சென் உயர்த்தப்பட்டு ரிம1.70 விற்கப்படும். ரோன்95 மற்றும் ரோன்97 விலையில் மாற்றம் ஏதும் இல்லை. அவற்றின் விலை தலா ரிம1.75 மற்றும் ரிம2.10 ஆக தொடரும்.
ஊழல் ஹராமானது, நாட்டையே அழித்துவிடும் – மகாதிர்
தம் முன்னாள் கட்சியான அம்னோவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்துவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்கள் ஊழலை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அம்னோ அதன் தலைவர் நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடி வருகிறது என்றாரவர். “அதுதான் இப்போது அம்னோவின் போராட்டமாகும். அதனால்தான் …
அமைச்சர்: அம்னோவை ஒழிக்கவே மகாதிர் புதுக் கட்சி அமைக்கிறார்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் புதிய கட்சி அமைக்க முனைந்திருப்பது அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகும் என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். மகாதிரின் முயற்சியை வரவேற்ற அவர், போட்டி நல்லதுதான், அது மேலும் கடுமையாக உழைக்க அம்னோவையும் பிஎன்னையும் உசுப்பி விடும் என்றார்.…
பினாங்கில் திடீர் தேர்தல் இல்லை
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்தும் திட்டத்தை டிஏபி கைவிட்டிருப்பதாக முதல் அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார். “அத்திட்டத்துக்கு பிகேஆர் ஒத்துக்கொள்ளவில்லை, அதுதான் காரணம்”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். அத்திட்டத்துக்கு பிகேஆரில் ஆதரவு இல்லை என்பதை அதன் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான …
குடிநுழைவுத் துறையைத் துப்புரவுபடுத்த ஆர்சிஐ தேவை: புதிய தலைவருக்கு அறிவுறுத்து
குடிநுழைவுத் துறை நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம், அத்துறையின் புதிய தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி அதனைத் துப்புரவுபடுத்த அரச விசாரணை ஆணையம் தேவை என்ற கோரிக்கையை ஏற்று அதற்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துறையில் …
1எம்டிபி-இன் பெயர் டிஓஜே அறிக்கை முழுக்கக் காணப்படுகிறது
1எம்டிபிக்கும் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) வழக்குக்கும் சம்பந்தமில்லை என்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கூற்று “அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறிய டிஏபி, அந்த நிதி நிறுவனத்தின் பெயர் நீதிமன்ற ஆவணம் முழுக்க விரவிக் கிடப்பதாக தெரிவித்தது. “உண்மையைச் சொல்லப்போனால் 1எம்டிபி இன்றி அந்த 136-பக்க வழக்குக்கு அடிப்படையே …
1எம்டிபி மீதான பிகேஆர் விளக்கக் கூட்டங்களில் முகைதின்
1எம்டிபி ஊழலை எளிய மொழியில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க பிகேஆர் நாடு முழுக்க ஏற்பாடு செய்யும் விளக்கக் கூட்டத்தொடரில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கலந்து கொள்வார். பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் ஒரே மேடையில் காட்சியளித்த முகைதின், நகர்புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் கவனம் …
கேஜே: ‘டான்ஸ்ரீ மூவர்’மீதான போலீஸ் புகாருக்கும் அம்னோ இளைஞர் பகுதிக்கும்…
அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் பிரதமரைக் கவிழ்க்கும் முயற்சி என்று கூறிக்கொண்டு அதன் தொடர்பில் செய்த போலீஸ் புகாருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார். அது கைருல் அஸ்வான் தனிப்பட்ட முறையில் செய்த போலீஸ் புகார் …
உளநோய் உள்ளவர்களுக்கு போக்கமோன் கோ விளையாட்டு உதவும்
இணையத்தில் பிரபலமாக விளங்கும் போக்கமோன் கோ விளையாட்டு உளநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமையும் என்கிறார் உளநோய் வல்லுனர் ஒருவர். “மனக் கலக்கம், மனச் சோர்வு முதலிய மனநிலைகளைக் குணப்படுத்த இது உதவுகிறது”, என கோலாலும்பூர் அனைத்துலக உளநோய் மையத்தின் தலைமை உளநோய் ஆலோசகர் டாக்டர் எட்வர்ட் சான் கூறினார்.…
எம்பி: கிளந்தான் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதா? அம்னோவின்…
கிளந்தானில் திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை மறுதலித்த கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப், மாநில அரசு பிரச்னை எதனையும் எதிர்நோக்கவில்லை என்றார். “திடீர் தேர்தல் நடத்தும் அளவுக்கு பாஸ் மாநில அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்பதற்கு ஆதாரமில்லை. வேண்டுமானால் மற்ற …
எம்ஏசிசி அதிகாரிகளிடம் வெறுப்பு காட்டப்படுகிறதே என பெர்சே தலைவர் வேதனை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சில தரப்புகளுக்கு அவர்களின் முயற்சிகள் பிடிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். “எம்ஏசிசி அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள், ஊழலை எதிர்க்கும் கடப்பாடு கொண்டவர்கள். அவர்களின் முயற்சிகள் …
அபு காசிம்: ‘சதி’ புகார் குறித்து பேசாதீர் என்று வழக்குரைஞர்…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட் பிரதமர் நஜிப் ரசாக்கையும் மலேசிய அரசாங்கத்தையும் வீழ்த்துவதற்காக உயர்மட்ட அளவில் சதி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எந்த ஓர் எதிர்வினையும் ஆற்றமாட்டார். "நான் எனது வழக்குரைஞனருடன் ஆலோசனை நடத்தினேன். அவர் என்னை பேசாமல்…
1எம்டிபி கணக்குகளை இலவசமாக தணிக்கை செய்ய “சார்ட்டெட் அக்கவுண்டன்” ரபிசி…
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றச்சாட்டுகளில் அமிழ்ந்திருக்கும் 1எம்டிபிக்கான புதிய கணக்காய்வர் குழுவில் சேர்ந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு தகுதி பெற்ற சார்ட்டெட் அக்கவுண்டன். அவர் Institute of Charted Accountants England and Wales மற்றும் Malaysian Institute…
‘பிரதமருக்கு எதிரான சதி” மீதான புகார் பற்றி அம்னோ இளைஞர்…
உயர்மட்ட அளவில் பிரதமர் நஜிப்பிக்கு எதிராக சதி செய்யப்படுவதாக அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி போலீசார் அவரின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்தனர். கைருலின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை ஐஜிபி காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். "ஆம்.…
ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக அசிஸ் பாரி…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து இருப்பதால் யாங்-டி-பெர்த்துவான் அகோங்கும் ஆட்சியாளர்கள் மாநாடும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட பேராசிரியர் அசிஸ் பாரி வேண்டுகோள் விடுத்ததற்காக அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார். அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை புக்கிட் அமான்…
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் கனியின் வழக்குரைஞராக நியமனம்
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல், பிரதமரைக் கவிழ்க்க சதி செய்ததாக அம்னோ இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்ததை அடுத்து மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் இரகுநாத் கேசவனைத் தம் வழக்குரைஞராக நியமித்துள்ளார். “நான்தான் அப்துல் கனியைப் பிரதிநிதிக்கிறேன். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமுன்னர் அறிவுறுத்தலுக்குக் …
ராயர் தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்
பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம், மாநிலச் சட்டமன்றத்தில் ‘celaka Umno’ என்று கூறியதற்காக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த தேசிய நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று விடுவித்தது. அரசுத் தரப்பு ராயருக்கு எதிராக தெளிவான ஆதாரங்களைக் காண்பிக்கவில்லை என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் …
NOW அமைப்பின் அக்மால் நசிருக்கு எதிரான ஜமில் கீரின் வழக்கு…
அமைச்சர் ஜமில் கீர் National Oversight Whistleblower(NOW ) அமைப்பின் இயக்குனர் அக்மால் நஸ்ருல்லா முகம்மட் நசிருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அனாதைகளுக்கும் ஏழை மக்களுக்குமான பணத்தை அமைச்சர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று அக்மால் நசிர் கூறியிருந்ததற்காக …
பொகா சட்டம்மீதான நீதிமன்றத் தீர்ப்புக்கு சுஹாகாம் பாராட்டு
1959 ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் ஒருவரைத் தடுத்து வைப்பதற்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) பாராட்டியுள்ளது. அச்சட்டத்தின்கீழ் மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் தடுத்து வைக்கப்பட்டது செல்லாது என்று செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது …


