இரயில்வே திட்டம் தொடர்பில் சரவாக் ரிப்போர்ட் கூறும் செய்திக்கு அமைச்சர்…

1எம்டிபி-இன்  கடன்களைச்   சரிக்கட்ட   கிழக்குக்  கரை    இரயில் (இசிஆர்எல்)  திட்டத்துக்கான   செலவுத்  தொகை  ரிம30 பில்லியனிலிருந்து  ரிம60 பில்லியனுக்கு   உயர்த்தப்படும்  என்று   சரவாக்  ரிப்போர்ட்    ஆகக்  கடைசியாகக்  கூறியுள்ளதை  புத்ரா   ஜெயா    மறுக்கிறது. அத்திட்டத்துக்கான   செலவு    குறித்து     அமைச்சரவை    விவாதிக்கவில்லை  என்று   பொதுப்  பணி  அமைச்சர்   படில்லா    யூசுப்  …

‘பிரதமருக்கு எதிரான சதி’ புகார் குறித்து போலீஸ் அம்னோ இளைஞர்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்   அரசாங்கத்தையும்   கவிழ்க்கும்   உயர்-மட்ட   சதித்  திட்டம்   பற்றி   புகார்   செய்துள்ள   அம்னோ  இளைஞர்   உதவித்   தலைவர்   கைருல்   அஸ்வான்   ஹருனை  போலீசார்  விசாரணை   செய்வார்கள். அப்புகார்  பற்றி   வினவிய  மலேசியாகினியிடம்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்   காலிட்  அபு  பக்கார்   இவ்வாறு  …

‘பிரதமரைக் கவிழ்க்க சதி ’ ஸெட்டி, கனி, எம்ஏசிசி தலைவர்மீது…

பேங்க்   நெகாரா  முன்னாள்  ஆளுனர்   ஸெட்டி  அக்தார்    அசீஸ்,   பணி ஓய்வு  பெறவுள்ள   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்   தலைவர்   அபு  காசிம்   முகம்மட் ,  முன்னாள்   சட்டத்துறைத்   தலைவர்  அப்துல்  கனி   பட்டேல்  ஆகியோருக்கு  எதிராக    அம்னோ  இளைஞர்  பகுதி     போலீஸ்  புகார்   ஒன்றைச்  செய்துள்ளது. அம்மூவரும்   பிரதமர் …

ரபிசியின் வலைப்பதிவில் 1எம்டிபி அறிக்கையைப் பதிவேற்றம் செய்தவர் யாரென்பது எம்சிஎம்சி-க்குத்…

rafiziramli.com  வலைப்பதிவைப்  புலனாய்வு  செய்த    மலேசிய   தொடர்பு,  பல்லூடக   ஆணைய(எம்சிஎம்சி)த்தின்   அதிகாரி  அந்த  வலைத்தளத்தின்   நடத்துனர்   யார்  என்பதைத்   தன்னால்  அடையாளம்    காண   முடியவில்லை  என்பதை   ஒப்புக்கொண்டார். பாண்டான்   எம்பி  முகம்மட்  ரபிசி    ரம்லிக்கு  எதிரான  வழக்கில்   இன்று   சாட்சியமளித்த   எம்சிஎம்சி  துணை  இயக்குனர்   முகம்மட்  ஸமிரி  சனிம்…

தெரேசா கொக் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது, ஆதாரமற்றது: நீதிமன்றம்

டிஏபி   சிபூத்தே   எம்பி   தெரேசா   கொக்  எட்டாண்டுகளுக்குமுன்   அஸான்   விவகாரம்   தொடர்பில்  உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ்   ஏழு   நாள்களுக்குத்   தடுத்து   வைக்கப்பட்டது   சட்டவிரோதமானது  என்றும்    எந்த  ஆதாரமுமின்றி   அவ்வாறு   செய்யப்பட்டது   என்றும்    முறையீட்டு  நீதிமன்றம்   இன்று   தீர்ப்பளித்தது. போலீஸ்  அவரைக்   கைது  செய்ததற்குச்  சட்டப்படியான   காரணம்  எதையும்   காண்பிக்கவில்லை   …

சிலாங்கூரில் திடீர் தேர்தல் இல்லை: அஸ்மின் திட்டவட்டம்

சிலாங்கூர்   சட்டமன்றம்  கலைக்கப்பட்டு    திடீர்    தேர்தல்   நடத்தப்படலாம்    என்று   கூறப்படுவதை    மந்திரி   புசார்   அஸ்மின்   அலி  மறுத்தார். “சிலாங்கூரில்   திடீர்  தேர்தல்   நடத்தப்படாது”,  என்றவர்   திட்டவட்டமாக    அறிவித்தார். “அதைப்  பற்றி   நாங்கள்  பேசவே  இல்லை”,  என  தாமான்   மெலாவாத்தியில்    செய்தியாளர்களிடம்    அஸ்மின்    தெரிவித்தார். பக்கத்தான்   ஹராபானின்  மூன்று  பங்காளிக்  …

பேரணி இன்னும் முடிவாகவில்லை, பெர்சே தலைவர்

தேர்தல்   சீரமைப்புக்காக  போராடிவரும்   பெர்சே  2.0,    பேரணி   நடத்துவது  குறித்து   இறுதி  முடிவு   இன்னும்  செய்யப்படவில்லை  என   இன்று   கூறியது. பேரணி   நடத்துவது   தொடர்பில்   பெர்சே  மற்ற   சமூக   அமைப்புகளுடன்   கலந்து  பேச  வேண்டியுள்ளது   என   பெர்சே    தலைவர்    மரியா  சின்   அப்துல்லா   மலேசியாகினியிடம்   தெரிவித்தார். பெர்சே   …

சிவில் பறிமுதல் என்றாலும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் பொருள், டிஏபி…

அமெரிக்க   நீதித்துறை   சொத்துகளைப்  பறிமுதல்   செய்ய   சிவில்  வழக்கைத்   தொடுத்துள்ளது  என்றால்   ஒரு  குற்றச்செயல்  நிகழ்ந்துள்ளது  என்றுதான்  பொருள்   என்கிறார்   டிஏபி   எம்பி   ஸ்டீபன்  சிம். “அது   ஒரு  ‘சிவில்  வழக்கு’த்தான்    கிரிமினல்    வழக்கல்ல   என்ற   எதிர்வாதம்   அடிக்கடி  முன்வைக்கப்படுகிறது.      பிரதமர் (நஜிப்  அப்துல்  ரசாக்)கூட   ஒரு  நேர்காணலில் …

அம்ப்ரின்: 1எம்டிபி கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து பிஏசிதான்…

1எம்டிபி  மீதான  இறுதி  கணக்கறிக்கையை    நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்வதா   வேண்டாமா  என்பதைப்    பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)தான்  முடிவு   செய்ய   வேண்டும்  எனத்   தலைமைக்  கணக்காய்வாளர்  அம்ப்ரின்  புவாங்   இன்று   கூறினார். அதிகாரத்துவ  இரகசிய   சட்டத்தின்கீழ்   வரும்   அவ்வறிக்கை   அமைச்சரவை,  பிஏசி    போன்றவற்றின்  பார்வைக்காக    சிறப்பாக  தயாரிக்கப்பட்டது  என்றாரவர். அதனால்தான் …

பிரதமர்: உண்மை இறுதியில் வெளிவரும்

பிரதமர்     நஜிப்    அப்துல்    சராக்,   1எம்டிபி  தொடர்பில்   அமெரிக்க  நீதித்துறை   தொடுத்துள்ள  சிவில்   வழக்குகள்   குறித்து   மக்கள்  மனம்போன   போக்கில்   பேசிக்   கொண்டிருக்கக்   கூடாது   என   மீண்டும்   வலியுறுத்தினார். அதை   அரசாங்கம்   கடுமையான   விவகாரமாகக்     கருதுகிறது  என்று  கூறிய   பிரதமர்    அவ்வழக்கில்    பெயர்   குறிப்பிடப்பட்டவர்கள்    தாங்கள்  குற்றமற்றவர்கள்   என்பதை  …

ஐஜிபி மட்டுமே 1எம்டிபி பற்றிக் கருத்துரைக்க முடியும், பணி ஓய்வு…

அமெரிக்க  நீதித்துறை   1எம்டிபி  தொடர்புடைய   சொத்துகளைப்  பறிமுதல்   செய்ய    தொடுத்துள்ள   சிவில்   வழக்குகள்   குறித்து    கருத்துரைக்கக்கூடிய   ஒரே   போலீஸ்    அதிகாரி   இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்   அப்  போலீஸ்   காலிட்  அபு   பக்கார்   மட்டுமே. புக்கிட்   அமானில்,    பணிஓய்வு  பெறும்   வணிகக்  குற்றப்   புலன்  விசாரணைத்  துறை  (சிசிஐடி)  தலைவர்  மொர்டாட்ஸா …

பிரதமர்: 1எம்டிபி சமூக நலத் திட்டங்களுக்கு நிறைய உதவியுள்ளது

பல   குறைகூறல்களுக்கு  இலக்காகியுள்ள   1எம்டிபி   சமூக   நலத்   திட்டங்களுக்கு    நிறைய  உதவி   இருப்பதைப்     பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்    சுட்டிக்காட்டினார். 1எம்டிபி    அதன்    நன்கொடை   வாரியமான   1எம்டிபி   அறக்கட்டளை   மூலம்    வெள்ளத்   துயர்   துடைப்புப்   பணிகளுக்கும்     சேதமடைந்த   வீடுகளைப்  பழுதுபார்க்கவும்      மீனவர்களுக்கு    உதவவும்    மில்லியன்  கணக்கில்    செலவிட்டிருக்கிறது    என்று  …

நஜிப்பின் பெயரைச் சொல்லுங்கள், வெளிநாடுகளுக்கு மகாதிர் அறிவுறுத்து

முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    அமெரிக்கா,   ஆஸ்திரேலியா   முதலிய   நாடுகள்   1எம்டிபி    மோசடி   தொடர்பில்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கின்  பெயரைச்   சொல்லி  அவருக்குத்  தலைக்குனிவு   ஏற்படுத்தத்   தயங்கக்   கூடாது  என்றார். “பல  நாடுகள்       இவை   எல்லாவற்றுக்கும்   பிரதமர்தான்   காரணம்    என்று   வெளிப்படையாகக்  கூறத்    தயங்குகின்றன   என்பதை  …

அம்பிகா: நஜிப் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்

  மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார். மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர். எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே…

ஷாரிஸாட், மலேசியர்கள் மதியற்ற மாடுகள் அல்ல

  வனிதா அம்னோ தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் 1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள சொத்து பறிமுதல் வழக்குகள் அந்நியர்களின் குறிக்கிடுதல் என்று கூறியிருந்ததற்கு முன்னாள் பிரதமர் மகாதிரின் வழக்குரைஞர்களில் ஒருவர் மலேசியர்கள் மாடுகளைப் போல் மதியற்றவர்கள் அல்ல என்று எதிர்வினையாற்றினர். அமெரிக்க நீதித்துறையின் சொத்து பறிமுதல் வழக்குகள்…

அம்பிகா: வழக்குகள் சிவில் செயல்முறையில் இருந்தாலும் அவை கிரிமினல் நடத்தைகளை…

  அமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி விவகாரத்தில் தொடுத்துள்ள வழக்குகள் சிவில் செயல்முறையிலானது என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை சிவில் வழக்குகளானாலும் குற்றம் சார்ந்த (கிரிமினல்) நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அம்பிகா நினைவுறுத்தினார். இவ்வழக்குகள் முழுவதிலும் மோசடி, கூட்டுச் சதி செய்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள…

பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த பிகேஆரின் பதிலுக்காக டிஏபி காத்திருக்கிறது

பினாங்கில்   திடீர்   தேர்தல்   நடத்த   பிகேஆர்  உடன்பட    வேண்டும்,  அதற்காக   டிஏபி  காத்திருப்பதாக     அதன்   தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்   எங்  கூறினார். அக்கட்சிகளிடையே   ஒரு  கருத்திணக்கம்   காணப்பட்டதும்   திடீர்   தேர்தல்  பற்றி    அறிவிக்கப்படும்   என   செய்தியாளர்களிடம்   லிம்    தெரிவித்தார். “டிஏபி  திடீர்   தேர்தல்   நடத்தப்பட   வேண்டும்   என்று …

முதலீட்டு மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் ஒருவர் கைது

ரிம10.5 மில்லியன்  இழப்புக்கு   இட்டுச்  சென்ற   ஒரு   முதலீட்டு   மோசடி   விவகாரம்    தொடர்பில்  14  பேர்  கைது   செய்யப்பட்டார்கள்.  அவர்களில்   ஒருவர்   நடிகர். புக்கிட்   அமான்   வணிகக்  குற்றவியல்  விசாரணைப்  பிரிவின்   துணை  இயக்குனர்   தாஜுடின்   முகம்மட்  ஈசா  இதனை  உறுதிப்படுத்தினார். “44வயது  நடிகர்தான்   அத்திட்டத்தின்   சூத்திரதாரிக்கு  வலது …

பெட்டாலிங் ஜெயாவில் குடிநீர் விநியோகத்தில் தடை

அவசர   பழுதுபார்க்கும்  வேலைகள்   நடப்பதால்   பெட்டாலிங்   ஜெயாவின்   சில   பகுதிகளில்   குடிநீர்   விநியோகத்தில்   தடை   ஏற்படும். பழுதுபார்க்கும்   வேலைகள்   இன்று  நண்பகல்  12க்குத்   தொடங்கி   இரவு   மணி   7வரை   நடக்கும்   என    ஷரிகாட்  பெக்காலான்   ஆயர்   சிலாங்கூர்  சென்.  பெர்ஹாட் (சபாஷ்)  ஓர்   அறிக்கையில்   தெரிவித்தது. “செக்‌ஷன்  1-இலிருந்து …

நஜிப்புக்கு ‘அமைதியான அதரவாளர்கள்’ நிறைய உண்டு, அமைச்சர்

பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கின்   தலைமைத்துவத்தின்மீது  நம்பிக்கை   கொண்ட    ஆதரவாளர்கள்   நிறைய  பேர்  உண்டு ,  அவர்கள்  எல்லாம்  அமைதியாக  இருக்கிறார்கள்   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக். “நஜிப்  அவர்களே,   மலேசியர்களில்   பலர்    உங்களுக்கு   ஆதரவாக   இருக்கிறார்கள்.  ஆனால்,  விவாதங்களால்   பலன்  ஏதுமில்லை   என்பதை  …

ஊழல் வழக்கு குறித்துக் கருத்துரைக்கக் கூடாது: குவான் எங்குக்கு இறுதி…

சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி   அலி,  ஊழல்  குற்றச்சாட்டை   எதிர்நோக்கியுள்ள   பினாங்கு   முதலமைச்சர்    லிம்   குவான்    அவரது  வழக்குக்   கருத்துரைப்பதை    நிறுத்திக்   கொள்ள  வேண்டும்  என   எச்சரித்துள்ளார். வழக்குக்  குறித்துக்     கருத்துரைக்க     வேண்டாம்   என   ஊடகங்கள்   மூலமாகவும்   அவரின்   வழக்குரைஞர்களின்    மூலமாகவும்     எச்சரிக்கை   விடுக்கப்பட்டும்கூட   டிஏபி   தலைமைச்   செயலாளர்  …

1எம்டிபி விவகாரம்மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஒரு வாரக் கெடு

டிஏபி   எம்பி   லிம்   லிப்  எங்   அமெரிக்க    நீதித்துறை(டிஓஜே)   தொடுத்துள்ள   1எம்டிபி  தொடர்பான   சிவில்   வழக்கில்   பெயர்  குறிப்பிடப்பட்டவர்களுக்கு   எதிராக    போலீசில்   புகார்   செய்துள்ளார். “டிஓஜே-யும்  எப்பிஐ (அமெரிக்கப்  புலனாய்வுப்  பிரிவு)-யும்   யாரைக்  குறிப்பிட்டிருக்கின்றவோ   அவர்கள்மீது ,   குறிப்பாக     பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்   மாற்றான்  மகன்   ரிஸா  …