எம்பி, செனட்டர்களின் சம்பள உயர்வு மீதான அறிக்கை விரைவில் வெளிவரும்

எம்பி, செனட்டர்கள் ஆகியோரின் சம்பள, அலவன்ஸ் உயர்வு மீதான அறிக்கை அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். இப்போது அவர்களின் சம்பளம் ரிம6,000. இது மற்ற நாடுகளில் கொடுக்கப்படுவதைவிட குறைவானதாகும் என்றாரவர். “கம்போடியா, தாய்லாந்து ஆகியவற்றில் எம்பிகளின் சம்பளம்…

கனி பட்டேய்ல்: ரபிஸி என் கணக்குகளைத் தாராளமாக ஆராயலாம்

சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி விரும்பினால் தம் வங்கிக் கணக்குகளைத் தாராளமாக நுணுகி ஆராயலாம் என்று கூறினார். முன்னாள் கோலாலும்பூர் சிஐடி இயக்குனர் மாட் ஸைன் இப்ராகிம் அண்மையில் செய்த சத்திய பிரமாணத்தில் அப்துல் கனியின் தவறான நடத்தை பற்றிக் கூறியிருப்பது…

கல்விமுறையை அவசரமாக சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது

நாட்டின் கல்விமுறை ,தொழில்துறைகளுக்குத் தேவையான திறன்படைத்தோரை உருவாக்குவதில்லை என்பதால் அதை அவசரமாக “சீரமைக்க” வேண்டும் என்கிறார் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட். “கல்விமுறையை முழுமையாக சீரமைக்க வேண்டியுள்ளது. அங்கே இருப்பவர்கள் பொறுமை இழந்து வருகிறார்கள் என்பதால் அதை அவசரமாக செய்ய வேண்டும். இல்லையேல் இலக்குகளை அடைய…

ஸபாஷால் தண்ணீர் வழங்க முடியாத இடங்களில் ஊராட்சி மன்றங்கள் கைகொடுக்கும்

நாளை குடிநீர் விநியோகம் தடைப்படும்போது ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முடியாத இடங்களில் ஊராட்சி மன்றங்கள் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துதவும். முன்பு பல வேளைகளில் நீர் விநியோகம் தடைப்பட்டபோது ஸ்பாஷால் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில்…

ரோஸ்மா: தனி ஜெட்டில் பயணம் செய்தது பணி செய்வதற்காக; பொழுதுபோக்க…

அரசாங்க ஆதரவில் தனி ஜெட்டில் பயணம் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பணி நிமித்தமாகத்தான் அந்தப் பயணங்களை மேற்கொண்டதாகவும் அவை பொழுதுபோக்குப் பயணங்கள் அல்ல என்றும் கூறினார். நிறைய நிகழ்ச்சிகள் நெருக்கமாக இருந்ததால் வணிக விமானப் பயணங்கள் பொருத்தமாக இரா என்று மலேசிய கெஜட்டுக்கு…

அரசாங்கம்: விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை

பல ஆண்டுகளாக பற்றாக்குறை நிலையிலேயே காலத்தை ஓட்டியாயிற்று. அந்நிலையைத் தொடர விடுவது நல்லதல்ல. அதனால் உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. புத்ரா ஜெயாவில், பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அனைத்துலக வாணிக, தொழில்…

சாலைக்கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பாளர்மீது பழி போடாதீர்

அடுத்த ஆண்டு சாலைக்கட்டணம் உயர்த்தப்படுவதைப் பொதுமக்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சரை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார். பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார்,  அரசாங்கம் நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது என்று கூறி இருந்தார்.. 2011-இலேயே சாலைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்க…

ஐஜிபி: டிபிகேஎல் எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்துக்கு(டிபிகேஎல்) வெளியில் கண்டனக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.  சட்டப்படி அக்கூட்டம் பற்றி ஏற்பாட்டாளர்கள் போலீசுக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை. “2013 அமைதிப்…

பேராக்கில் இரண்டு ஷியாக்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்

ஷியாக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. நாளை இரு ஷியாக்கள் பேராக் ஷியாரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். ஷியா போதனைகள் அடங்கிய நூல்களை வைத்திருந்ததாக சூர் அஸா அப்துல் ஹாலிம், 41, முகம்மட் ரிட்சுவான் யூசுப், 31, ஆகிய இருவர்மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேராக்கில்  ஷியா போதனைகளைக் கொண்ட…

சொத்து வரி உயர்வை எதிர்த்து 20,000 கடிதங்கள்

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் 20,000-க்கு மேற்பட்ட கடிதங்கள் இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்(டிபிகேஎல்) தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேபனை தெரிவிக்கும் கடிதங்கள் டிபிகேஎல்-லிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அமைந்திருந்தது. பேரணி மக்கள்…

தேசிய கல்விப் பெருந்திட்டம்: ம.இ.கா என்ன செய்ய வேண்டும்?

-மு. குலசேகரன், டிசம்பர் 16, 2013.   தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெரிய பாதிப்பு இருக்கின்றது என்பதனை ம.இ.கா தலைவர்களும் அதன் கீழ்மட்ட தொண்டர்களும் எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றார்கள்?   தமிழ்ப்பள்ளிகளின் காவலன், தமிழுக்கு குரல் கொடுப்போர் என்றெல்லாம் பறைசாற்றும் ம.இ.கா தலைவர்கள் இந்த புதிய…

பினாங்கின் புதிய வீட்டுவசதி விதிமுறைகளைக் குறைகூறுவது ‘இதயமற்ற செயல்’

பினாங்கில்  கட்டுப்படியான-விலை வீடுகளை வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றைத் திரும்ப விற்பதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளைக் குறைகூறுவோரை முதலமைச்சர் லிம் குவான் எங், சாடினார். அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நாள் நடைமுறைக்கு வரும் அப்புதிய விதிமுறைகள், முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு உதவுவதையும் சொத்து விலை கட்டுமீறி உயர்வதைத்…

சிலாங்கூர் டிஎபி தலைவர் டோனி புவா

  பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சிலாங்கூர் மாநில டிஎபியின் புதிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் தெரசா கோவின் இடத்தை நிரப்புகிறார். "பொறுப்பு மிக்க இப்பதவியை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிஎபி வெற்றி பெற்றுள்ள இக்கட்டத்தில் நான்…

கூச்சிங் கிறிஸ்துவர்கள் கூட்டத்தில் “அல்லா” பதாகைக்கு அனுமதி இல்லை

  கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 6,000 இபான் கிறிஸ்துவர்கள்  குழுமியிருந்த கூச்சிங், போர்னியோ கொன்வென்சன் செண்டர் கூச்சிங் மையத்தில்  "அல்லா" என்ற சொல் எழுதப்பட்டிருந்த பதாகையை அகற்றுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். "கூட்டத்தினர் திகைப்படைந்தனர். எங்களுக்கு தர்மசங்கடமாகி விட்டது", என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான பேட்ரிக் சிபாட் கூறினார். தாங்கள் போலீசாரின்,…

உயர்த்த வேண்டியது பணித்திறனை சொத்துவரியை அல்ல

கோலாலும்பூர் மாநராட்சி மன்றம்(டிபிகேஎல்) வரிகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதை விடுத்து பணித்திறனை உயர்த்த வழிவகை கண்டறிய வேண்டும் என்கிறார் கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் தலைவர் கைரில் நிஜாம் கைருடின். டிபிகேஎல், சிலாங்கூர் ஆகியவற்றின் வருமானம் ஏறத்தாழ சமம்தான் (முறையே ரிம1.69 பில்லியன், ரிம1.63 பில்லியன்). கோலாலும்பூரைக் காட்டிலும்…

ஆலயம் புதிய கட்டிடத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தது

ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம், மேலும் உடைபடாமல் இருக்கவும் கோலாலும்பூர் மத்தியில் இந்துக்களின் வழிபாட்டு மையமாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவும் புதிய திட்டங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆலய நிர்வாகம் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரைச் சந்தித்துப் பேசியது என அதன் ஆலோசகர் எம்.மனோகரன் கூறினார். “குறுகிய…

ஷியாக்களுடன் தொடர்பில்லை என்றால் மாட் சாபுதான் அதை நிரூபிக்க வேண்டும்

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஷியாக்களுடன் தொடர்புண்டு என்று கூறி அது உண்மை என்பதற்கு 10 சான்றாதாரங்களையும் உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது. அது உண்மையல்ல என்றால் மாட் சாபுதான் அதை நிரூபிக்க வேண்டும் என  அமைச்சின் சமய விவகார அதிகாரி உஸ்டாஸ் ஸ்மிஹான் மாட் ஸைன் அல்…

ஜிஎப்ஐ அறிக்கையை அரசாங்கம் மறுக்கவில்லை ஆனால் அதில் ஊழல் என்பது…

குற்றச்செயல்கள், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றின் மூலமாக 2011-இல் ரிம173.84 பில்லியன் மலேசியாவிலிருந்து வெளியேறியது என நிதியியல் கண்காணிப்பு அமைப்பான Global Financial Integrity(ஜிஎப்ஐ) மதிப்பிட்டிருப்பதை  “மறுக்கவில்லை” என்பதை  அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதில் ஊழல் சம்பந்தப்பட்ட பணம் ஒரு சிறு பகுதிதான். ரிம173. 84 பில்லியனில் ஊழல்…

அரசியல் எதிரிகளின் சம்பள உயர்வுக்கு அம்னோ பிரதிநிதிகள் ஆதரவு

பினாங்கு சட்டமன்றத்தில் ஓர் ஆச்சரியம். அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பரம வைரிகளான முதலமைச்சர் லிம் குவான் எங்கும்  ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சம்பள உயர்வு பெறுவதற்கு ஆதரவு அளித்தனர். சம்பள உயர்வுமீதான விவாதத்தில் பேசிய முகம்மட் பாரிட் சாஆட் (பிஎன் -பூலாவ் பெத்தோங்), லிம்முக்கு எல்லாச் சட்டமன்ற உறுப்பினருக்கும்…

ஷியா விவகாரத்தில் பாஸ் அதன் துணைத்தலைவர் மாட் சாபுவுக்கு முழு…

முகம்மட் சாபு ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர் என்பதற்கு உள்துறை அமைச்சு பத்து ஆதாரங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினாலும் பாஸ் அதன் துணைத் தலைவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. அது முன்வைத்த ஆதாரங்கள்  “பலவீனமானவை” என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி(இடம்) கூறினார். “ஏதோ வலுவான ஆதாரங்களைக்…

ஆர்ப்பாட்ட- வெறி வேண்டாம்: ஆத்திரம்கொண்ட கோலாலும்பூர் மக்களுக்கு கூ நான்…

கோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி வரும் சொத்துடைமையாளர்கள் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார். சொத்துமதிப்பீட்டு வரி தொடர்பான புகார்களையும் பின்னூட்டங்களையும் பரிசீலிக்க அவகாசம் தேவை…

குவான் எங் ஒரு சர்வாதிகாரி -அம்னோ எம்பி

பினாங்கில் வீடு வாங்குவோர் குறிப்பிட்ட காலத்துக்குள் வாங்கிய வீட்டை விற்பதற்குத் தடைபோடும் புதிய விதிமுறை  முதலமைச்சர் லிம் குவான் எங் ஒரு சர்வாதிகாரி என்பதை உறுதிப்படுத்துகிறது என அம்னோ தலைவர் ஒருவர் கூறினார். சொத்துடமை என்பதுதான்  மக்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான ஒரே வழி என்றுகூட சொல்லலாம் என…

நஜிப், ரோஸ்மா பற்றிக் கட்டுரை எழுதியதால் ஹீட் பத்திரிகைக்கு பிரச்னை?

பத்திரிகைகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாரி இறைத்துச் செலவு செய்வது பற்றியோ அவரின் துணைவியாரின் ஆடம்பர வாழ்க்கைமுறையைப் பற்றியோ விமர்சித்தால்  தொல்லைதான் போலும். த ஹீட் வார இதழ் நவம்பர் மாதம் “அனைவர் கண்களும் வாரி இறைத்துச் செலவு செய்யும் நஜிப்பின்மீது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை…