எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இழுவைப்படகுகளை பயன்படுத்தமாட்டோம்!- இந்திய மீனவர்கள் இணக்கம்

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழக மீனவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நேற்று சென்னையில் இடம்பெற்ற சந்திப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது. இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் காரணமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.…

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?

திருச்சி: நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக திருச்சி சிறையில் கைதிகள் பேசிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வருகிறார். அவருக்கு இருமுறை கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.…

திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவியின் காலில் விழுந்து…

டெல்லியில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் மகளிர்  மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளவர் சந்தீப் குமார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ரீத்து வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவி…

நடுரோட்டில் ஊசலாடிய வாலிபரின் உயிர்! ஓடி வந்து முதலுதவி கொடுத்த…

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து…

கடவுளின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்? ராஜ்நாத்…

டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில சிறுபான்மையினர் ஆணையங்கள் கூட்டு மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக பேசியுள்ளார். டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுபான்மையின பிரிவுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், தாய் மதத்துக்கு திரும்புதல்…

மாநிலங்கள் விரும்பினால் முந்தைய சட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம்: மோடி

2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை விவசாயிகள் பலனடையும் வகையில் மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை விரும்பாத மாநிலங்கள், தாராளமாக முந்தைய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்தலாம்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வானொலி நிகழ்ச்சியான மான்கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு அவர்…

தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு…

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு போதும் செயல்படாது. எனவே, 28 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது. மீத்தேன் எடுப்பதற்கான…

ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை – சீமான்

ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை… மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்! – செந்தமிழன் சீமான் மீத்தேன் பிரச்னை குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை…

கர்நாடகா அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில்…

சென்னை: கர்நாடகா அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி  கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகள், மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.…

அடங்காத கேரளம்…முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வாம்!!

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடைந்தால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளது என்றும் கேரள மாநில அரசு கூறி வருகிறது.…

இந்திய – சிறிலங்கா கடல் எல்லையை அடையாளப்படுத்தும் கருவிகளை பொருத்த…

சிறிலங்கா இந்திய கடல் எல்லையை மீனவர்களால் அறிந்துக் கொள்ளும் வகையிலான அடையாளப்படுத்தல் கருவிகளை எப்போது பொருத்துவீர்கள் என்று, சென்னை உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. இது தொடர்பான மனு ஒன்றை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.ஞானேஸ்வரன் தாக்கல் செய்திருந்தார். 400க்கும் அதிகமானவர்கள் எல்லைத்தாண்டி சென்றமையால்…

ரேபரேலியில் ரயில் கவிழ்ந்து: 22 பேர் பலி; 150 பேர்…

ரேபரேலி வாரணாசியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற வாரணாசி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், ரேபரேலியில் விபத்தில் சிக்கியது. இதில், சம்பவ இடத்தில் 15 பேர் பலியாயினர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். .வாரணாசி - டேராடூன் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…

ஐ.எஸ் பிடியில் 39 இந்தியர்கள்? துருக்கியிடம் உதவி கோரும் இந்தியா

ஐ.எஸ் பிடியில் சிக்கியுள்ள 39 இந்தியர்களை மீட்க உதவுமாறு துருக்கிக்கு, இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், வேலை செய்து வந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுட் கவுசொக்லுவுடன்(Mevlut Cavusoglu) பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ்…

மறைமுகப் போரைக் கைவிட வேண்டும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மறைமுகப் போர் தொடுப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தினால் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புச் சூழல் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த…

விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டோம்: அமைச்சர் கட்கரி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் மீதான பயத்தை விவசாயிகள் நீக்கிவிடுங்கள், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த செயலையும் செய்யாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சமிக்சா அதிவேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்படும், விவசாயிகளுக்கு…

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் வரும் 24ம் தேதி நடத்த தமிழக அரசு ஒப்புதல்  தெரிவித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு  தீர்வு காணும் வகையில் இருதரப்பு…

கிரானைட் புகார்களை விசாரிக்க 19 பேர் கொண்ட குழு அமைப்பு:…

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான அதிகாரிகள் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையின் போது கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் சகாயத்திடம் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி…

நிலம் கையகப்படுத்தும் மசோதா ஓட்டெடுப்பில் ஆஜராகாத எம்.பி.க்களிடம் மோடி கண்டிப்பு

டெல்லியில் நேற்று காலை பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஓட்டெடுப்பின்போது, சபையில் ஆஜராகாத 25 எம்.பி.க்களின் பெயர்களை வெங்கையாநாயுடு வாசித்தார். அவர்கள் எழுந்து நின்றனர்.…

கள்ள நோட்டா? நல்ல நோட்டா?… கண்டறிய முடியாத அளவுக்கு துல்லியமாக…

டெல்லி: கள்ள நோட்டுக்களின் புழக்கத்தைத் தடுக்க நாடு முழுவதும் காவல்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தி விடலாமா என்ற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. போலி ரூபாய் நோட்டு தொடர்பான பல வழக்குகளை கையாண்டு கொண்டுள்ள…

மீண்டும் மீண்டும் “சுடும்” ரணில்… இந்தியா அமைதி காப்பது ஏன்?

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சுடுவோம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் இதற்கு இந்தியத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனமும் செலுத்தப்படாதது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், அத்துமீறி…

மாநிலங்களவையில் நிலம் கையக மசோதாவை எதிர்க்க வேண்டும்: எதிர்க் கட்சிகளுக்கு…

மாநிலங்களவையில் நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு எதிர்க் கட்சிகளை சமூக சேவகர் அண்ணா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் கையக மசோதா தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளதாக அவரது உதவியாளர் விநாயக் பாட்டீல்,…

நமது வாழ்க்கை முறை தவறாகப் போயிருப்பதற்கு கெஜ்ரிவாலின் உடல்நிலைதான் நல்ல…

பெங்களூர்: நமது தவறான, படபடப்பான வாழ்க்கை முறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே மிகச் சிறந்த உதாரணம் என்று பெங்களூரைச் சேர்ந்த ஜிந்தால் இயற்கை மருத்துவக் கழகத்தின் முது நிலை மருத்துவர் டாக்டர் பபீனா நந்தகுமார் கூறியுள்ளார். தற்போது கெஜ்ரிவாலின் உடலிலிருந்து பெருமளவிலான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.…

ஆம்பளைகளை ‘வரதட்சணை கேஸில்’ மாட்டிவிட்டு ஹாயா இருக்க நினைக்கும் பெண்களே..…

டெல்லி: வரதட்சணை கொடுமையை சமரசத்துக்குள்பட்ட குற்றமாக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண் அல்லது அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளித்தால்,…