ஊரே கற்பழித்த ஆதிவாசிப்பெண்: திரினமூல் காங்கிரஸ் உறுப்பினருக்குத் தொடர்பு?

மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜித் மண்டலின் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது. பிர்பம் மாவட்டம் சபல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஆதிவாசிப் பெண் ஒருவர், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த…

சென்னையில் நாளை தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை: ஜெயலலிதா

சென்னையில் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெறும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழக மீனவர் சங்கங்கள் கோரிக்கை…

ஜார்கண்டில் அரசு அதிகாரிகள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்

ராஞ்சி, ஜன. 26-இந்தியாவில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பழங்குடியின மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கூறி வரும் இடது சாரி மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,…

நாங்கள் கருப்பாக இருந்தால் பிரச்சனையா? கலங்கும் ஆப்பிரிக்க பெண்கள்

கருப்பாக இருப்பதால் இந்தியாவில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது என்று ஆப்பிரிக்க நாட்டு பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிர்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உகாண்டா, நைஜீரிய நாட்டு பெண்கள் பாலியல் தொழில் செய்வதாகவும், போதைப்பொருள் கடத்துவதாகவும் கூறி, கடந்த 15ம் திகதி சட்ட அமைச்சர் சோம்நாத்…

தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி

சென்னை, ஜன. 25–தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம்…

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன்: பழங்குடியினப் பெண்

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளார். அபராதத் தொகையைத் தன்னால் செலுத்த…

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி மக்களுக்கு…

ஐ.மு.கூட்டணி தடுமாற்றம் : ஆம் ஆத்மி கட்சி அகராதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ அகராதியாக செயல்படுகிறது. அதனால், மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது  என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார். இதுபற்றி அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: அரசியலில் கடந்த…

கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை! – இந்திய மத்திய…

கச்சத்தீவு கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் தாக்கல்…

பழங்குடி சமூகத்திற்கு வெளியே காதலித்த பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு தண்டனை

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த பழங்குடி பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பழங்குடியினத்தை சாராத ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர்…

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல்தான் பிரதமர்

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் பதவியை ஏற்பார் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ப. சிதம்பரம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

“பைத்தியக்கார முதல்வர்’ கேஜரிவால்: சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் "பைத்தியம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கடுமையாக சாடியுள்ளார். தில்லி போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கிய தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது. முதல்வரே போராட்டத்தில் ஈடுபட்டதற்கு காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து…

சாதி மாறித் திருமணம் செய்த மகனிடம் நஸ்ட ஈடு கோரும்…

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் தெய்திருக்கிறார். சித் நாத் சர்மா என்னும் ஒரு வழக்கறிஞர், தனது மகனான ''சுஸாந்த் ஜசு'' ஒரு கோடி ரூபாய்கள் நஸ்ட ஈடு தரவேண்டும்…

அரசு மீது பழி போட்டு தங்களை பலப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள்:…

டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார். லாலு பிரசாத் யாதவ், நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள். டெல்லி, நாட்டின் தலைநகர்.…

போராட்டத்தை கேஜரிவால் திரும்பப் பெற்றார்

கடமை தவறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி "ஆம் ஆத்மி' கட்சித் தொண்டர்களுடன் வீதியில் இறங்கி தர்னா நடத்திய தில்லி முதல்வர் கேஜரிவால் தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை இரவு திரும்பப் பெற்றுக் கொண்டார். அவரால் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இரு காவல் ஆய்வாளர்களை நீண்ட விடுப்பில் செல்லவும், தில்லி…

வீரப்பன் “கூட்டாளிகளின்” மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை இரத்து செய்தது. இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள்…

இலங்கைக்கு கப்பல் விற்பனை மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது…

  மதுரை: இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்க மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு  தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இலங்கைக்கான மத்திய  வெளியுறவுத்துறை இணை செயலாளர் மயானக் ஜோஷி பதில் மனுத்தாக்கல்…

ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்தை மத்திய அரசு அளித்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஜைன சமூகப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் சந்தித்து, தங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர்…

வீதிக்கு வந்த தில்லி அரசு

கடமை தவறியதாகக் கூறப்படும் தில்லி போலீஸார் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, நாடாளுமன்றம் அருகே உள்ள சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் தர்னாவில்  ஈடுபட்டு வருகிறார். முதல்வரும்,அமைச்சர்கள் 6 பேரும்  திங்கள்கிழமை போராட்டம் நடத்திய…

முதல்வர் பதவியின் கண்ணியத்தை கெஜ்ரிவால் காப்பாற்ற வேண்டும்: ஷிண்டே எச்சரிக்கை

புதுடெல்லி, ஜன. 20- டெல்லியில் கடமையைச் செய்யாத 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார்…

பெண்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்

அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் சென்னை மந்தை வெளியில் இன்று நடந்தது. கூட்டத்தில் 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது,   ‘’இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய…

மோடியால் முடியாது: காங்கிரஸ் பதிலடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி நேற்று பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக அறிவிக்கும் பிரதமர் பதவி வேட்பாளர் யாரும், பிரதமர் ஆனது கிடையாது. அவர்கள் அனைவரும்…

மோடி தான் அமெரிக்காவின் அடுத்த நெருக்கடி : டைம்ஸ் பத்திரிக்கை…

வாஷிங்டன் : இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகோட் மீதான விசா விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவிற்கு இந்தியா தரப்பில் எழுந்துள்ள அடுத்த நெருக்கடி பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என பிரபல டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு விசா மறுக்கும் விவகாரம் அமெரிக்காவின் அடுத்த…