தமிழ் நிபுணர்களின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது

தமிழகத்தில் இயங்கும் தமிழ் கலாசாரத்துக்கான நிலையம் மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் உலகளாவிய ரீதியில் செயற்படும்…

போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்னா: கேஜரிவால் மிரட்டல்

தங்களது கடமையைச் செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட போலீஸார் மீது வரும் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 10 மணிக்குள் மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அமைச்சகத்துக்கு முன்புறம் அமர்ந்து தர்னாவில் ஈடுபடுவேன் என்று முதல்வர் கேஜரிவால் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளார்.…

பிரதமர் வேட்பாளர் ராகுல் அல்ல என்ற முடிவில் மாற்றமில்லை: சோனியா…

காங்கிரஸின் பிரதமர் பதவி வேட்பாளர் ராகுல் அல்ல என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு இறுதியானது என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார். தில்லி தால்கடோரா விளையாட்டரங்கில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்…

சசிதரூர் மனைவி மரணம்; தற்கொலை என சந்தேகம்

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வெள்ளியன்று இறந்து காணப்பட்டதாக இந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக சஷி தரூர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கிலும் அது தொடர்பான பரபரப்பு விவாதங்கள் நடந்துவந்தன.…

மக்களை முட்டாளாக்கும் ஆம் ஆத்மி, தேறவே தேறாத காங்கிரஸ்! மேனாகாவின்…

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜக எம்பி மேனகா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும்…

காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக ராகுல் நியமனம்

இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்துவார் என்று இன்று அறிவித்துள்ளது. எனினும் பலரும் எதிர்பார்த்தபடி அவரை காங்கிரஸ் கட்சியின் பிரதர் வேட்பாளர் என்று நேரடியாக அறிவிப்பதை கட்சி…

தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின் தங்குகிறதா ?

தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அவர்களில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்குத்தான் தாய்மொழியில், முதல் வகுப்புப் பாடப் புத்தகங்களையே படிக்க முடிகிறது என்று கல்வியின் வருடாந்திரத் தரம் குறித்த ,ஏசர், என்ற அறிக்கை…

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி சந்தன சிலைகளை…

வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சந்தன சிலைகளை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தமிழகம் உட்பட பல்வேறு மாநில கோயில்களில் உள்ள பழங்கால சிலைகளை கடத்தி சென்று நியூயார்க் நகரில் கடை வைத்து விற்று வந்தான். தமிழக…

கேஜரிவால் ஒரு “பொய்யர்’: ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ புகார்

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து "ஆம் ஆத்மி' தலைமையிலான தில்லி அரசு விலகிச் செல்கிறது. முதல்வர் கேஜரிவால் ஒரு பொய்யர் என அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வினோத் குமார் பின்னி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அரசு அமைத்தபோது அமைச்சரவையில் இடம்…

விடுதலையாகும் தமிழக–இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள்

இலங்கை–தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ‘விஷ்வஸ்ட்’…

ஆம் ஆத்மி கட்சி அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்!

ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஓழிப்போம் என்ற கோஷத்துடன் களம் இறங்கி ஓராண்டில் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி,  116 கோடி ஊழல் வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த வழக்கில் தனது தரப்பினருக்கு ஆதரவாக …

பிரதமர் பதவிக்கு தயார்! ராகுல் அதிரடி

கட்சி தலைமை பிரதமர் பதவி கொடுத்தால் அதை ஏற்க தயார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வருகின்ற 17ம் திகதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள்…

பொற்கோவில் தாக்குதல் நடவடிக்கையில் பிரிட்டனும் உடந்தையா?

இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு…

பாகிஸ்தான் இராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் தொடுத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய இராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ தின ஆண்டு விழாவையொட்டி, இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த ஆண்டு பாகிஸ்தான்…

தமிழீழம் ஒன்றே தீர்வு! அந்த இலக்கை அடைய பொங்கல் திருநாளில்…

இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், மனிதகுல…

தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை!…

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 20 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர்.…

நவீனமயப்படும் இந்திய இராணுவ கட்டமைப்பு

மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபோதும், இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கும் பணி தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராணுவ நவீனமயமாக்கலுக்காக 3.25 லட்சம் கோடி ரூபா செலவீடப்பட்டிருக்கிறது. 2013-2014ஆம் ஆண்டு பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட 2.3 லட்சம் கோடி ரூபா நிதியில், ராணுவத்தை நவீனமயமாக்கும்…

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண முயற்சிகள் எடுப்பாரா முதல்வர்…

தமிழக முதலமைச்சர் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரையும், கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அழைத்து, இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் செய்வது நல்லது. இவ்வாறு உலகத் தமிழர் இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ்நாடும் இலங்கையில் உள்ள தமிழீழமும் ஒரே நாடாக…

‘சென்னையில் 20-ம் திகதி மீனவர் சந்திப்பு நடப்பது சாத்தியமில்லை’- இலங்கை

தமிழக-இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக…

அரசியல் களத்தில் மோடி- ராகுல் இருவரும் சூறாவளி பிரசாரம்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் அவரவர் கட்சிக்கு ஆதரவு திரட்டுவது மற்றும் யூகங்கள் வகுப்பது உள்ளிட்டன தொடர்பாக காங்,. துணை தலைவர் ராகுல் ( பிரதமர் வேட்பாளராகலாம்) , பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியார் தங்கள் வழியில் பிரசார பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநில வாரியாக தேர்தல்…

ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியல்ல;அது ஒரு நடைபாதை:ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி: ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியே அல்ல என்றும் அது ஒரு படைபாதை என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இவரே கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வரும் மிகப்பெரிய சக்தி என்றும் மற்ற எல்லா கட்சிகளும் அதனை சாதாரணமாக…

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு…

இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். இவ்வாறு தமிழ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்மைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை சிறையில் வாடும், தமிழக…

சாலையோரவாசிகளுக்கு ஏற்பாடு:கெஜ்ரிவால்

புதுடில்லி : வீடுகள் இன்றி குளிரில் தவித்து வரும் சாலையோர மக்களுக்கு, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பழைய பஸ்களை வீடுகளாக மாற்றி தர உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். திறந்த வெளியில் வசிப்பவர்கள் இந்த பஸ்களை தற்காலிக முகாம்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர்…