உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் – யுக்தா…

மும்பை : உலக அழகியும், பிரபல நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.…

தில்லி பாலியல் வல்லுறவு: இளம்பிராய சந்தேக நபர் மீதான வழக்கு…

தில்லியில் சென்ற வருடம் யுவதி ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த இந்தியாவை உலுக்கிய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளம்பிராய குற்றச் சந்தேகநபர் ஒருவர் மீது நடந்துவந்த வழக்கு முடிவடைந்துள்ளது. இந்திய இளம்பிராயத்தார் நீதிவிசாரணை தீர்ப்பாயம் இவ்வழக்கில் தனது தீர்ப்பை ஜூலை 11ஆம் நாள்…

சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது : சீன தளபதி கொக்கரிப்பு

பீஜிங்: ""எல்லை பிரச்னையில், சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது,'' என, சீன ராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சீன பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய - சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, அந்நாட்டு ராணுவ அமைச்சருடன் இன்று அவர்…

பட்டியாலா மகாராஜாவின் வெள்ளிப் பாத்திரங்கள் ஏலம்

பாட்டியாலா மகாராஜாவின் விருந்து பரிமாறும் பாத்திரங்கள் ( டின்னர் செட்) லண்டனில் ஏலத்துக்கு வருகிறது. சுமார் 500 கிலோ எடையுள்ள தங்கம் பூசப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களுக்கு ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்கள் முதல் 2.3 மில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுவதாக கிரிஸ்ட்டிஸ் ஏல நிறுவனம் கூறுகிறது.…

தர்மபுரி கலப்பு திருமணம்: கணவன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

தமிழகத்தை உலுக்கிய தர்மபுரி மாவட்ட கலப்பு திருமணத் தம்பதியரில், கணவன் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் ‌கூறுகின்றனர். தலித் இளைஞரான இளவரசன் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவை அவரது பெற்றொரின் விருப்பத்தை மீறித் திருமணம்…

யோகா மதசார்பின்மையை ஏற்படுத்துகிறது

இந்தியாவில் உருவான யோகா கலை, மதசார்பின்மையை ஏற்படுத்துவதாக கலிபோர்னியாவை சேர்ந்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு…

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல்

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை அளிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு மிகக் குறைந்த விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்படும். உணவுப்…

காவல்துறையில் பாலியல் தொல்லை: தமிழகத்தில் விசாரணைக் குழு

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கின்ற பாலியல் தொல்லை தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரிக்கவென தமிழகத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சீமா அகர்வால் தலைமை வகிப்பார் என…

கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

புதுடில்லி : சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையின் பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர்…

மாவோ தாக்குதல் எஸ்.பி உள்பட 5 பேர் பலி: கூடுதல்…

ராஞ்சி: ஜார்கண்ட்டில் மாவோக்கள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. ஜார்கண்ட் , சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோ.,க்கள் அட்டூழியம் அவ்வப்போது தலை தூக்குவதும் பின்னர் அமைதி ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நக்சல்கள் போலீசாரை குறி வைத்து தாக்குகின்றனர். கடந்த மாதம் சட்டீஸ்கரில்…

குரங்குகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து உணவுகளைத் திருடிச் செல்லும் குரங்குகள் தோட்டங்களை நாசம் செய்வதுடன் சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகின்றன. குரங்குகள் கடிப்பதால் சொறி சிரங்கு முதல் காசநோய் வரை பலவித நோய்கள்…

பெண்கள் மீதான தாலிபான்களின் கொடூர அடக்குமுறை!

பாகிஸ்தானில், மழையில் நனைந்து நடனம் ஆடிய சகோதரிகளை, தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமிகள் ஆடும் காட்சிகள், இணையதளத்தில் வெளியானதைப் பார்த்த பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பழமைவாத கருத்துகளை பின்பற்றும், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், ஏராளமானோர் உள்ளனர். காதல்…

கருணை மனுக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மத்திய அரசு…

புதுடில்லி: "தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி எடுக்கும் முடிவே, இறுதியானது. கருணை மனுக்கள் மீது, ஜனாதிபதி, ஒரு முடிவு எடுத்தபின், அதில், கோர்ட் தலையிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொடூர கொலை வழக்கில், அசாம்…

இந்திய தூதரகத்தை உளவு பார்த்த அமெரிக்க புலனாய்வு துறை

வாஷிங்டன்: இந்திய தூதரகம் உள்ளிட்ட, 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். தற்போது இவர், ரஷ்யாவில் பதுங்கியுள்ளார். இவரை ஒப்படைக்கும் படி,…

ஊட்டச்சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகம்

புதுடில்லி: சர்வதேச அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இந்தியாவில்தான் 40 சதவீதத்தினர் உள்ளனர் என்றும், இதற்கு இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அமல்படுத்துவதில் சீரான வழிகள் பின்பற்றப்படவில்லை என்றும், இந்திய கொள்கைகள் படுமோசமாக இருப்பதாகவும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனடாவை மையமாக கொண்டு…

இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்

புதுடில்லி:இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் உள்ளது. இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம். ரூபாயின் மதிப்பு சரிவு:டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள்…

காவிரி-படுகை மீதேன் திட்டத்தை கைவிடலாம்: அமைச்சர் ஜெயந்தி

தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு மற்றும் நிலக்கரியை எடுக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிடுவதே சரி என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். மத்திய அரசு கடந்த 2010 இல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி எனும் நிறுவனத்துடன்…

அரசே அவமானப்படுத்தலாமா?

இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப்பிடம் போன்ற எல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட்டிருப்பதை…

நிர்வாண கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி காடன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் கைவரிசை காட்டி வருகிறான். வீடுகளுக்கு வெளியில் காம்பவுண்டு சுவருக்கு உட்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சமையல்…

செயல்படாத தலைவர் கருணாநிதி: பரிதி இளம்வழுதி சிறப்பு பேட்டி

சென்னை: கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில், தி.மு.க., சார்பில், ஒரேயொரு, எம்.எல்.ஏ., வாக பரிதி இளம்வழுதி அதிரடியாக பணியாற்றி, தி.மு.க., வுக்கு குரல் கொடுத்தார். 1996 முதல், 2001ம் ஆண்டு வரை துணை சபாநாயகர் பதவி வகித்தார். பின்,…

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா​வில் தொடர்ந்து பயிற்சி!

சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவில் இருந்து விரட்டியடிப்பது நாளுக்குநாள் தொடர்கிறது. ஆனாலும் அவர்களைப் பயிற்சிக்காக வரவழைப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவே தெரியவில்லை. கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தஞ்சாவூரில் இந்திய விமானப்படைத் தளத்தின்…

சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரம் : அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: சி.பி.ஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான அமைச்‌சரைவை பரிந்துரைக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்க வழக்கு குறித்து விசாரணை நடத்தி சி.பி.ஐ., அதன் அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் காண்பித்ததை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. சி.பி.ஐ தற்போது…

நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டர்

ராஜ்நந்கவான்: நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயியை, உன் விருப்பப்படி செத்துப் போ என்று ஒரு மாவட்ட கலெக்டர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி. ராமேஷ்வர், தனக்கு சொந்தமான…