சாதி மாறித் திருமணம் செய்த மகனிடம் நஸ்ட ஈடு கோரும்…

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் தெய்திருக்கிறார். சித் நாத் சர்மா என்னும் ஒரு வழக்கறிஞர், தனது மகனான ''சுஸாந்த் ஜசு'' ஒரு கோடி ரூபாய்கள் நஸ்ட ஈடு தரவேண்டும்…

அரசு மீது பழி போட்டு தங்களை பலப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள்:…

டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார். லாலு பிரசாத் யாதவ், நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள். டெல்லி, நாட்டின் தலைநகர்.…

போராட்டத்தை கேஜரிவால் திரும்பப் பெற்றார்

கடமை தவறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி "ஆம் ஆத்மி' கட்சித் தொண்டர்களுடன் வீதியில் இறங்கி தர்னா நடத்திய தில்லி முதல்வர் கேஜரிவால் தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை இரவு திரும்பப் பெற்றுக் கொண்டார். அவரால் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இரு காவல் ஆய்வாளர்களை நீண்ட விடுப்பில் செல்லவும், தில்லி…

வீரப்பன் “கூட்டாளிகளின்” மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை இரத்து செய்தது. இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள்…

இலங்கைக்கு கப்பல் விற்பனை மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது…

  மதுரை: இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்க மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு  தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இலங்கைக்கான மத்திய  வெளியுறவுத்துறை இணை செயலாளர் மயானக் ஜோஷி பதில் மனுத்தாக்கல்…

ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்தை மத்திய அரசு அளித்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஜைன சமூகப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் சந்தித்து, தங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர்…

வீதிக்கு வந்த தில்லி அரசு

கடமை தவறியதாகக் கூறப்படும் தில்லி போலீஸார் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, நாடாளுமன்றம் அருகே உள்ள சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் தர்னாவில்  ஈடுபட்டு வருகிறார். முதல்வரும்,அமைச்சர்கள் 6 பேரும்  திங்கள்கிழமை போராட்டம் நடத்திய…

முதல்வர் பதவியின் கண்ணியத்தை கெஜ்ரிவால் காப்பாற்ற வேண்டும்: ஷிண்டே எச்சரிக்கை

புதுடெல்லி, ஜன. 20- டெல்லியில் கடமையைச் செய்யாத 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார்…

பெண்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்

அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் சென்னை மந்தை வெளியில் இன்று நடந்தது. கூட்டத்தில் 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது,   ‘’இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய…

மோடியால் முடியாது: காங்கிரஸ் பதிலடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி நேற்று பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக அறிவிக்கும் பிரதமர் பதவி வேட்பாளர் யாரும், பிரதமர் ஆனது கிடையாது. அவர்கள் அனைவரும்…

மோடி தான் அமெரிக்காவின் அடுத்த நெருக்கடி : டைம்ஸ் பத்திரிக்கை…

வாஷிங்டன் : இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகோட் மீதான விசா விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவிற்கு இந்தியா தரப்பில் எழுந்துள்ள அடுத்த நெருக்கடி பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என பிரபல டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு விசா மறுக்கும் விவகாரம் அமெரிக்காவின் அடுத்த…

ஆஸ்திரேலிய சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும்

ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள…

விமான நிலைய குப்பைத்தொட்டியில் மூன்று கிலோ தங்கம் மீட்பு

ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தின் கழிவறைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட மூன்று கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விமான நிலைய ஊழியர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர். மாட்டிக்கொள்வோம் என்ற…

தமிழ் நிபுணர்களின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது

தமிழகத்தில் இயங்கும் தமிழ் கலாசாரத்துக்கான நிலையம் மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் உலகளாவிய ரீதியில் செயற்படும்…

போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்னா: கேஜரிவால் மிரட்டல்

தங்களது கடமையைச் செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட போலீஸார் மீது வரும் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 10 மணிக்குள் மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அமைச்சகத்துக்கு முன்புறம் அமர்ந்து தர்னாவில் ஈடுபடுவேன் என்று முதல்வர் கேஜரிவால் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளார்.…

பிரதமர் வேட்பாளர் ராகுல் அல்ல என்ற முடிவில் மாற்றமில்லை: சோனியா…

காங்கிரஸின் பிரதமர் பதவி வேட்பாளர் ராகுல் அல்ல என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு இறுதியானது என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார். தில்லி தால்கடோரா விளையாட்டரங்கில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்…

சசிதரூர் மனைவி மரணம்; தற்கொலை என சந்தேகம்

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வெள்ளியன்று இறந்து காணப்பட்டதாக இந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக சஷி தரூர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கிலும் அது தொடர்பான பரபரப்பு விவாதங்கள் நடந்துவந்தன.…

மக்களை முட்டாளாக்கும் ஆம் ஆத்மி, தேறவே தேறாத காங்கிரஸ்! மேனாகாவின்…

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜக எம்பி மேனகா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும்…

காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக ராகுல் நியமனம்

இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்துவார் என்று இன்று அறிவித்துள்ளது. எனினும் பலரும் எதிர்பார்த்தபடி அவரை காங்கிரஸ் கட்சியின் பிரதர் வேட்பாளர் என்று நேரடியாக அறிவிப்பதை கட்சி…

தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின் தங்குகிறதா ?

தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அவர்களில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்குத்தான் தாய்மொழியில், முதல் வகுப்புப் பாடப் புத்தகங்களையே படிக்க முடிகிறது என்று கல்வியின் வருடாந்திரத் தரம் குறித்த ,ஏசர், என்ற அறிக்கை…

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி சந்தன சிலைகளை…

வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சந்தன சிலைகளை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தமிழகம் உட்பட பல்வேறு மாநில கோயில்களில் உள்ள பழங்கால சிலைகளை கடத்தி சென்று நியூயார்க் நகரில் கடை வைத்து விற்று வந்தான். தமிழக…

கேஜரிவால் ஒரு “பொய்யர்’: ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ புகார்

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து "ஆம் ஆத்மி' தலைமையிலான தில்லி அரசு விலகிச் செல்கிறது. முதல்வர் கேஜரிவால் ஒரு பொய்யர் என அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வினோத் குமார் பின்னி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அரசு அமைத்தபோது அமைச்சரவையில் இடம்…

விடுதலையாகும் தமிழக–இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள்

இலங்கை–தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ‘விஷ்வஸ்ட்’…