தப்பியோடிய சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கர் சிக்கினான்

சிறையில் இருந்து தப்பியோடிய சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கரை இன்று கர்நாடகா பொலிசார் மடக்கி பிடித்தனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 40) மீது தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக கொலை, பாலியல் பலாத்காரம் உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜெய்சங்கரை…

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்

கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. அதன் விவரம்: டி.ஆர். பாலு (திமுக): "இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய நாடுகள்…

‘பிரதமர்’ கனவு எனக்கு இல்லை

பிரதமராகும் கனவு எனக்கு இல்லை. வருகிற 2017 வரை குஜராத் முதல்வராகவே நீடிக்க நான் விரும்புகிறேன் என்று நரேந்திர மோடி தெரிவித்தார். வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இவ்விதம் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.…

இந்திய நாவலாசிரியர் சுட்டுக் கொலை

தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் தனது வாழக்கை…

நிலக்கரிச் சுரங்க கோப்புகள் மாயமான விவகாரம்: சிபிஐ முன் பிரதமர்…

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீது தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சிபிஐ முன் தாமாக முன்வந்து ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.…

மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி: ராமதாஸ்

மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்தான் பயன்படுத்தப்படும்…

பெட்ரோலை மிச்சப்படுத்த வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் கலெக்டர்

பீகாரில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து,…

குற்றம் சாட்டப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: மத்திய அரசின்…

புதுடெல்லி, செப். 4- அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதன்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து அப்பீல்…

காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.…

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகள்

கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோர் குறள் பீட விருதுக்குத் தேர்வு…

தனது மனைவியை கொலை செய்ய, காமகொடூரன் ஜெய்சங்கரை தப்பிக்க வைத்த…

பெங்களூர் சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு, ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது. கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன், ஜெய்சங்கர் (வயது 36). காமக்கொடூரனான இவன் தமிழ்நாடு மற்றும்…

குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் 12% உயர்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக தேசிய அளவில் 2012-ஆம் ஆண்டில் 38,172 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1036 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2011-ஆம் ஆண்டோடு, 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிடும்போது 15.3 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும்…

எல்லையில் மோதல்களைத் தவிர்க்க இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மோதல்களைத் தவிர்க்க ஓர் வழிமுறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். மிக அதிக எடை கொண்ட ராணுவத் தளவாடங்களையும் கொண்டு செல்லக் கூடிய அதிநவீன சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து…

கச்சத்தீவு: மத்திய அரசு அலட்சியம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாக தமிழக…

தெலங்கானா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது!

தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர்…

காமலீலைகள் புரிந்த கொடூரன் சிறையிலிருந்து தப்பியோட்டம்!

பல்வேறு பாலியல் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதி ஜெய்சங்கர், பெங்களூரு மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கர்நாடகத்தில் தொடர் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் (எ) சங்கர் (36), பெங்களூரு பரப்பன…

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை: மணிக்கொரு மரணம்

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. 2007…

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தம்

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கே சொந்தம், இலங்கைக்கு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை…

சேதுத் திட்டம்: காங்கிரஸூக்கு கருணாநிதி எச்சரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் (மத்திய அரசு) நிறைவேற்றாவிட்டால், அதன் கையை திமுக விட்டுவிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியை தி.மு.க. அமைக்கப் போவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த தின பொன் விழா…

எல்லை தாண்டி மீன்பிடிக்க உரிமை கோருகிறார் அழகிரி

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கவும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கவும் இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இவரது இந்த கோரிக்கையை இந்திய பிரதமர் வாயிலாக இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தும்படியும், தாமும்…

கச்சத் தீவை மீட்க வேண்டும்: அதிமுக

இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்குள்ளாகி சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களைக் காக்க அந்த நாட்டின்வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை மக்களவையில் அதிமுக உறுப்பினர் எம். தம்பிதுரை வலியுறுத்தினார். இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது: ராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 அப்பாவித் தமிழர்களை இலங்கைக்…

கச்சத் தீவை திரும்பப் பெற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய…

"இந்திய-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது, கேட்பாரற்றுக் கிடந்த கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது அந்நாட்டுக்கே சொந்தமாகிவிட்டது' என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையே 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம்…

பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளிக்கிழமை தெரிவித்தார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு, நடப்புக் கணக்கில் பெரும் பற்றாக்குறை எனப் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை…