பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கை வீரர்கள் பங்குபெறும் ஆசிய தடகளப் போட்டிகளை ரத்து செய்தார்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை விளையாட்டு வீரர்களும் பங்கு பெறக்கூடும் என்ற நிலையில் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் அப்போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இலங்கை வீரர்களும் பங்கு பெற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக…
ஜெயலலிதா – வைகோ திடீர் சந்திப்பு : காரணம் என்ன?
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் முதல்வர் ஜெயலலிதாவுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத வைகோ, அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ…
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு
வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து இன்றே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை…
ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா நடவடிக்கை
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து இந்தியா 12 ஹெலிகாப்டர்களை வாங்குகின்ற 75 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முறைப்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களில் பதிலும் கோரியிருக்கின்றது.…
அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி 36 பலி
அலகாபாத்: இந்தியாவின் உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் அங்கு 3 கோடி பேர் புனித நீராடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
காஷ்மீர் : பெண்கள் இசைக்குழுவை மிரட்டியவர்கள் கைது
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முழுவதும் பெண்களைக் கொண்ட றொக் இசைக்குழுவைப் பற்றி இணையத்தில் மிரட்டும் கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு இசை விழாவில் தாம் நேரடி நிகழ்ச்சி நடத்தியதை அடுத்து, தமக்கு இணையத்தில் வெறுப்பைக் கக்கும்…
இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது
இந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறுகிறது என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு கூறுகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களிலும், அரசு நடத்தும் சிறார் நல மையங்களிலும் சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது. இந்தியாவில்…
ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே இந்தியாவில் கால் வைக்கக் கூடாது :…
இலங்கை அதிபர் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்ட ஒரு மனித மிருகம் இந்தியாவிற்கு வருவது பாரத நாட்டிற்கே அவமானம். ஆகவே, அவர் இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார் பீகார் ஒபரா தொகுதி…
இந்தியாவில் தேவையற்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள்
இந்தியாவில், அறுவை சிகிச்சைகளிலிருந்து மேலும் கூடுதலாக பணம் பண்ணுவதற்காக, மோசடி டாக்டர்கள் , பெண் நோயாளிகளின் உடலிலிருந்து கர்ப்பப் பைகளை தேவையற்ற நிலையிலும் அகற்றிவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது போல கர்ப்பப்பைகள் அகற்றப்பட்ட சில பெண்கள் பிபிசியிடம் பேசுகையில், இது போல கர்ப்பப்பை அகற்றப்படாவிட்டால், அவர்களுக்கு புற்று…
ஈரானில் பிடிப்பட்ட 29 குமரி மீனவர்கள் விடுவிப்பு
நாகர்கோவில்: வழி தவறிச் சென்று ஈரானில் பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை அந்த நாடு விடுவித்துள்ளது. கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயற்கை சீற்றத்தால் வழி தவறி சென்ற குமரி மாவட்டம் கேரளாவை சேர்ந்த 29…
விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள காட்சிகளின் விவரம்
சென்னை: விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது மடிக்கணினியில் பதிவு செய்துள்ள…
விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது : கமல்ஹாசன்
அரச அதிகாரிகள், முஸ்லீம் குழுக்கள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினரிடையே நடந்த 6 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் ஊடகங்களுடன் பேசியுள்ளார். சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன…
தமிழன் தயாரித்து, நடித்த விஸ்வரூபத்தை தமிழகத்தில் திரையிட முடியாதது அவமானம்
தஞ்சாவூர்: தமிழன் தயாரித்து, உருவாக்கி, நடித்த தமிழ் படத்தை தமிழகத்தில் திரையிட முடியாதது அவமானமாகும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கமல்ஹாசனா் நடிப்பில் திரைக்கு வந்தும், வராமலும் இருக்கும் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15…
கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி
சென்னை : இந்திய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், "வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்" என, குறிப்பிட்டதுதான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஒரு காரணமா என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'விஸ்வரூபம்'…
விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் மீண்டும் தடை!
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வரை மீண்டும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30.01.2013) உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு இந்தப் படம் திரையிடப்படுவதற்கு விதித்த தடையை நீதிபதி வெங்கட்ராமன் நேற்று-செவ்வாய்கிழமை இரவு நீக்கினார். எனினும் வழக்கு…
விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ்
சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தை காணும் ஆவலுடன் தியேட்டர்களின் குவிந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி…
விஸ்வரூபத்திற்கான தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் புதன்கிழமை முதல் வெளியாகலாம் எனக் கூறியுள்ளது . நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி குற்றவியல்…
“கமலை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்”
சென்னை : கமலை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் ஆதரவாக பேட்டி அளித்தும், பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டும் வருகிறார்கள். ஏற்கனவே…
6 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவருக்கு தூக்கு
பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்தவன் இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் திகதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.…
இலங்கை கடற்படை அட்டூழியம் என மீண்டும் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்தியதாக இந்திய ஊடகங்கள் வாயிலாக மீண்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஜெயசந்திரன் (வயது 34), மாரிமுத்து (45), அர்ச்சுனன் (52), முத்துக்குமார் (26), சேகர் (55), முருகன் (35)…
தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாக இலங்கை தமிழர் கைது
தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசி வைத்திருந்ததாகக் கூறி இலங்கை தமிழர் ஒருவரை தமிழக காவல்துறையினர் திருச்சியில் வைத்து கைதுசெய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தூவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டையில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இதன் அருகே ஆசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (45). இலங்கை தமிழரான இவரிடம்…
விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி
கமல் ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம், பல சர்ச்சைகளுக்கிடையே ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த மற்றுமொரு சர்ச்சை இப்போது எழுந்திருக்கிறது. இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள்…
வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்
டில்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய 5 பேருக்கு எதிரான வழக்கை இந்திய நீதிபதி ஒருவர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அந்த 23 வயதான பெண் பின்னர் இறந்துபோனார். இது, இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து தேசிய மட்டத்தில்…
