அறிக்கையை விமர்சித்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கிறது சிறீலங்கா அரசு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போ Read More

“போலீஸ் அதிகாரம் கொடுத்தால் என்னைக் கைதுசெய்வார்கள்”: மகிந்த ராஜபக்சே

"மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை" என்று இலங்கை குடியரசு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் 'டக்கன் குரோனிக்கல்' நாளேட்டிற்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை…

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கொழும்பில் கைது

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கிய சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அப்போது சயனைட் உட்கொண்ட…

இலங்கை அறிக்கைகைய நிராகரித்தது அனைத்துலகக் குழு!

மகிந்த ராஜபக்சேவின் நல்லிணக்க ஆணைக்குழு தயாரித்துள்ள அறிக்கையை ICG எனப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழு (International Crisis Group -ICG)  நிராகரித்துள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த மகிந்த ராஜபக்சேவினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ICG நிராகரித்துள்ளதுடன்.…

கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டு; சிங்கள இராணுவ அதிகாரி சாட்சியம்!

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடுமாறு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டார் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள்…

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ரணில்

இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் நீண்டகாலமாக கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேற்று திங்கட்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. ரணிலை எதிர்த்துப்…

மனித உரிமைகள் ஆணையரை இலங்கைக்கு அனுப்புகிறது ஐ.நா!

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக…

ஐ.நா உரையை எழுத்திக் கொடுத்து மகிந்த படித்ததாக தகவல்

இலங்கை  குடியரசுத் தலைவர் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார ( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது. ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி…

மகிந்தவின் கூட்டாளிக்கு ‘மகாத்மா காந்தி’ விருது!

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு 'மகாத்மா காந்தி' விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மகிந்த அரசினால் படுகொலை செய்யப்பட்டு குருதிகூட இன்னும் காயவில்லை; அதற்குள் இனப்படுகொலை செய்தார் என கூறப்படும் மகிந்தவின் நண்பரும் அவரின் கட்சி முதலமைச்சருமான ஒருவருக்கு…

கே.பியை கைதுசெய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவு!

ஆயுதங்கள் கடத்தியமை மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று அனைத்துலக காவல்துறையினரிடம் (interpol) பிடியாணையொன்றை பிறப்பித்துள்ளது. இத்தகவலை இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆட்கள் காணாமற்போதல் சம்பவங்கள்; இலங்கைக்கு 2-ம் இடம்!

ஆட்கள் காணாமற் போதற் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை 2-ம் இடத்தை வகிக்கிறது என்று அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான காணாமற் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும் இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி…

உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயாராம்!

ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவ்வாறானதொரு சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச. குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் இலங்கையில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக்…

விடுதலைப் புலிகளுடன் இந்தியா இரகசிய சந்திப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்திருந்தனர். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா முக்கிய பாத்திரம் வகித்தது. இவ்வாறு நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும்…

பிரச்னைகள் தீரும் வரை இலங்கை செல்ல மன்மோகன் மறுப்பு

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, 'சார்க்' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, மாலத்தீவு வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய தலைமையமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர்கள் மறு குடியமர்த்தும் பிரச்னை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, மன்மோகன்…

சவேந்திர சில்வாவை தூதர் பதவியிலிருந்து தூக்கி வீசுங்கள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணைத் தூதர் மேஜர் ஜனரல் சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பத்து அனைத்துலக மனித உரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித்…

கடைசி நேரத்தில் இந்தியாவை ஏமாற்றிய இலங்கை!

திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது இலங்கை அரசால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும்…

சானல் 4 தயாரிக்கும் “இலங்கையின் கொலைகளம்” பாகம்-2

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை பிரித்தானிய அனைத்துலக ஊடகமான சானல்-4 ஆதாரங்களுடன் வெளியிட்டது. இலங்கையின் கொலைகளம் என்ற தலைப்பில் சானல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பாகம் 2-ஐ தயாரித்து வெளியிடும் பணியில் தற்போது சானல்-4 ஊடகம் ஈடுபட்டுள்ளது. "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற…

இலங்கையில் ரகசிய முகாம்களில் சித்ரவதை

சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில முகாம்கள் இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அனைத்துலக பொதுமன்னிப்பு மன்றம் (Amnesty…