கொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.. பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன். நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி,…

பிரான்ஸ் புலி வலையமைப்பு ஜெனிவா பயணம்: கொழும்பு ஊடகம்

மனித உரிமை மன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெனிவா…

புலிகள் பெண்களுக்கு ஆளுமையையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தார்கள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களுற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மன்றத்தினால் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல…

வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருமணம்: சவுதியில் புது சட்டம்

சவுதி அரேபியாவில் “குடும்பம் நடத்துவது எப்படி” என்ற வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற புதிய சட்டம் ஒன்று சவுதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது. இச்சட்டத்தை அனுமதிப்பதா, இல்லையா என சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சவுதி அரேபியாவில்…

To Agong to Save Indians Recognize Hindraf Makkal…

A Petition to Seri Paduka Baginda Yang di-Pertuan Agong Sultan Abdul Halim Mu'adzam Shah By HINDRAF MAKKAL SAKTHI To Uphold The Rights and Legitimate Interests of the Indian Community in Malaysia. Your Royal Highness, We…

ஹாண்டுரஸ் சிறையில் பயங்கர தீ விபத்து; 300 பேர் பலி

ஹாண்டுரஸ் நாட்டின் சிறை ஒன்றில் செவ்வாய்கிழமை (14.2.2012) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முன்நூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவுக்கு வடக்கேயுள்ள கோமயாகுவா நகரில் 1850 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்த நாநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விபத்தை பயன்படுத்திக் கொண்டு…

பூனைக்கு ரிம 15 கோடியில் உயில் எழுதி வைத்த கோடீஸ்வரி

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரிம 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார். கோடீஸ்வரரின் மனைவி மரியா அசுந்தா (94). அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் அநாதையாகத் திரிந்த கறுப்புப் பூனையை வீட்டுக்குக் கொண்டு…

காதல் திருமணம் செய்த கழுதையை கைது செய்த பொலிசார்

கலாசாரத்தை காதலர் தினம் சீரழிப்பதாக கூறி, வட சென்னை இந்து முன்னணி சார்பில், நாய், கழுதைக்கு திருமணம் நடத்தி போராட்டம் நடத்தப்பட்டது. காலை 10 மணியளவில் கொருக்குப்பேட்டை கே.என்.எஸ் டிப்போ அருகே இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் மனோகரன், ஆர்கே நகர் தொகுதி தலைவர் ராஜேந்திரன் உட்பட…

இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரணில்

போர் முடிவின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது. 1956 மற்றும் 1977-களில்…

காதலர் தினத்தில் இளம்காதலன் கொலை; பெண் வீட்டார் நடத்திய வக்கிர…

உலகம் முழுவதும் அன்பை பறிமாறும் இவ்வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து அவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உ.பி. மாநிலம் மீரட் நகர் அருகே இச்சம்பம் நடந்துள்ளது. கேத்வான் நகரை…

சிரியாவில் அனைத்துலக அமைதிப் படை: அரபு லீக் முடிவு; ரஷ்யா…

சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் இராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா.-அரபு லீக் இணைந்த, அனைத்துலக அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது. சிரியாவில், கடந்த 11…

இலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது!

இலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆகயாத்தில் வெடித்து சிதறிய விமானம் இலங்கையின் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட தும்மல சூரிய என்ற பகுதியில் விழுந்து சேதமாகியுள்ளதாக ஆகாயப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.…

ஐரோப்பாவின் ஒசாமா பிணையில் விடுதலை!

பிரிட்டிஷ்-ல் சிறை வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியான ஐரோப்பாவின் ஒசாமா கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான அபு கொத்தடா (வயது 51) ஐரோப்பாவின் ஒசாமா என அழைக்கப்படுகிறார். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் இருந்த அவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்து…

சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களுக்கு அல்-கைதா ஆதரவு

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். காணொளி செய்தி ஒன்றில் உரையாற்றியுள்ள அவர், சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பினர் மேற்கு நாடுகளிலோ அல்லது ஏனைய அரபு நாடுகளிலோ உதவிக்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியுள்ளார். சுதந்திரமான சிரியாவின்…

நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும்

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி,…

தமிழ்நாட்டில் குடிபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை தமிழக காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று கோவையில் இடம்பெற்றுள்ளது. திருச்சியில் நடைபெற்ற தனது நண்பர் இல்லத் திருமணத்திற்கு இலங்கை கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்…

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் நினைவுப் பேருரை

பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய தேசத்துக்கு மட்டுமன்றி இலங்கை உட்பட தெற்காசிய பிரதேசத்துக்கே சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி அடிகளின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நினைவுப் பேருரை நிகழ்வொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த…

இண்டர்லோக் செயற்குழு (நியாட்) அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது!

கடந்த ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் Read More