இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
முஸ்தாபாவை அடுத்து, ரீனா ஹருனுக்கும் கோவிட்-19 தொற்று
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருனுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாக அவ்வமைச்சு இன்று அறிவித்துள்ளது. "நேற்று இரவு பெறப்பட்ட கோவிட் -19 திரையிடல் பரிசோதனையின் முடிவுகள், அமைச்சருக்குத் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன," என்று அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பிரதமர் இலாகாவின்…
கோவிட் 19 : இன்று 2,433 புதிய நேர்வுகள், 9…
நாட்டில் இன்று, 2,433 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 9 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இது மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 135,992 ஆகவும், செயல் முனைவில் 27,332 பாதிப்புகளைக் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது…
முன்னாள் ம.இ.கா. தலைவர்கள் புதிய என்.ஜி.ஓ. தொடங்கினர், ம.இ.கா.வுக்குப் போட்டியாக…
மஇகாவின் முன்னாள் உயர்த் தலைவர்கள் சிலர், ‘மலேசிய உருமாற்றத் தொண்டு அமைப்பு’ (அரிமா) என்ற புதியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) ஒன்றை உருவாக்கியுள்ள்னர். மலேசியாகினியிடம் பேசிய அதன் தலைவர் பி தியாகராஜன், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு, நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குறிப்பாக…
புதிய கார் வாங்கியதற்காக, பினாங்கு முதல்வர் மன்னிப்பு கோரினார்
கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால், நாடு கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், புதியதாக மெர்சிடிஸ் S560e அதிகாரப்பூர்வக் கார் வாங்கியதற்காக பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ், இன்று பினாங்கு மாநில மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். RM458,000 மதிப்புள்ள, 2019 மாடல் காரை வாங்கியதற்கான முழுப் பொறுப்பையும்…
‘சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், பி.கே.பி. தீர்வு அல்ல’
புக்கிட் மெர்தாஜாம் எம்.பி., ஸ்டீவன் சிம் சீ கியோங், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்துமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். "பி.கே.பி, கடுமையாக்கப்பட்ட பி.கே.பி., நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி. ஆகியவற்றின் பல்வேறு செயலாக்கங்களுக்குப் பிறகும், துரதிர்ஷ்டவசமாக மலேசியாவில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளின்…
‘முஹைதீன் பெரும்பான்மையை இழந்துவிட்டார், உடனடியாக அகோங்கை எதிர்கொள்ள வேண்டும்’ –…
மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து, கூட்டாட்சி அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு, பிரதமர் முஹைதீன் யாசின் மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்ள வேண்டும் என்று பி.கே.ஆர். எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்தார். நேற்று, கிளந்தான் அம்னோ தலைவரும், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான்…
நூர் ஹிஷாம் : 9 நாட்களில் 71 இழப்புகள், நாங்கள்…
இந்த ஆண்டு முதல், மோசமடைந்து வரும் கோவிட் -19 தொற்றுநோயின் அளவு கவலையளிப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். இன்று காலை தனது கீச்சகத்தில், "2020 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இறப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவு. ஆனால், இந்த ஆண்டு…
மாச்சாங் எம்.பி.யின் ஆதரவு இனி முஹைதீனுக்கு இல்லை
கிளந்தான் அம்னோ தலைவர், பெர்சத்து தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதனால், முஹைதீன் யாசினுக்குப் பின்னால் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை இன்று குறைந்தது. கோத்தா பாருவில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான் யாகூப் தனது நிலைப்பாட்டை அறிவித்தார். அஹ்மத் ஜஸ்லானின் இந்த அறிவிப்பினால், தேசியக்…
கோவிட் 19 : இன்று 2,451 புதிய நேர்வுகள், 5…
நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள், தொடர்ந்து ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது, இன்று பிற்பகல் வரை 2,451 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று போலவே, இன்றும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூரில் 564 நேர்வுகள் (23.0 விழுக்காடு), சபாவில் 409…
சிலாங்கூரிலும் பினாங்கிலும், இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் இல்லை
கோவிட் -19 பரவுவலைத் தடுக்க, இவ்வாண்டு சிலாங்கூரில் ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூச நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று சிலாங்கூர் இஸ்லாம் அல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி கணபதிராவ் தெரிவித்தார். திருவிழாவையும், பொங்கலையும் குறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்டு கொண்டாட்டங்களும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டு,…
பி.என். துணைத் தலைவர்களாக, சபா கட்சி தலைவர்கள் இருவர் நியமனம்
பிரதமர் முஹைடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்) சபா தலைவர்கள் இருவரை, பார்ட்டி சோலிடரிட்டி தனா ஆயேர்கு (ஸ்டார்) கட்சியிலிருந்து ஜெஃப்ரி கிட்டிங்கானையும், சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக் லீ’யையும் கூட்டணியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. பெரித்தா ஹரியான் செய்தியின்படி, அவ்விரண்டு சபா…
அம்னோ-பெர்சத்து நெருக்கடி, பாஸ் தலைவர்கள் இன்று விவாதிக்கின்றனர்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, குறிப்பாக பெர்சத்து-அம்னோ உடனான உறவு பற்றி விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியது,. கோலாலம்பூரின் ஜாலான் இராஜா லாவுட்டில், கட்சியின் தலைமையகத்தில், இன்று காலை 10 மணிக்கு அக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்குப் பாஸ் தலைவர், அப்துல் ஹாடி அவாங் தலைமை தாங்கினார்.…
`ஜி.இ. விரைந்து நடத்தவேண்டியதன் தேவை, பி.எச்.டி. படித்தவர்களுக்குப் புரியும்’
பொதுத் தேர்தலை (ஜி.இ) கூடிய விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை உயர் படிப்பு படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் விவரித்தார். தேங்காய் துருவும் தொழிலாளி ஒருவர், கோவிட் 19-ன் காரணமாகத் தற்போது ஜி.இ. தேவையில்லை என்று கூறியதன் தொடர்பில் கருத்துரைத்த மஸ்லான்,…
எச்.எஸ்.ஆர். : மொத்த இழப்பீட்டு கோரிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படலாம்
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்தை நிறுத்துவதற்கான இழப்பீட்டு கோரிக்கையைச் சிங்கப்பூரிலிருந்து அடுத்த சில வாரங்களில் மலேசியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உரிமைகோரலின் அளவை இரு நாடுகளும் உறுதிப்படுத்தி, ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மைஹெச்எஸ்ஆர் கார்ப்பரேஷன் சென். பெர். தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் நூர் இஸ்மால்…
டீசலின் விலை 1 சென் அதிகரித்தது, ரோன்95 மற்றும் ரோன்97…
ரோன்95 மற்றும் ரோன்97 வகை பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே ஒரு லிட்டருக்கு RM1.84 மற்றும் RM2.14 ஆக இருப்பது, ஜனவரி 15 நள்ளிரவு வரை, ஒரு வார காலத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும். அதேவேளையில், டீசலின் சில்லறை விலை முன்பு ஒரு லிட்டருக்கு RM2.01 இருந்தது, ஒரு சென்…
கோவிட் 19 : இன்னும் கடுமையானது, இன்று 2,643 புதிய…
நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து கடுமையான நிலையிலேயே உள்ளது. சுகாதார அமைச்சு இன்று, 2,643 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 16 மரணங்களையும் பதிவு செய்துள்ளது. 2,643 புதிய நேர்வுகளில், 1,666 மலேசியர்களைச் சார்ந்தது (63 விழுக்காடு), 975 மலேசியர் அல்லாதவை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு…
‘கோவிட் -19 மேலாண்மை கட்டுப்பாடு மீறிபோனது’ – பிரதமருக்கு மருத்துவ…
விமர்சனம் | நாட்டில், கோவிட் -19 தொற்றுநோயின் மேலாண்மை ஓர் இருண்ட மற்றும் கட்டுப்பாடற்ற நிலைக்கு வந்துள்ளதைக் கண்டு நாங்கள் கவலை கொண்டுள்ளோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) மற்றும் பிற சுகாதாரத் தலையீடுகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறையவே இல்லை. திரட்டப்பட்ட சம்பவ வீதமும்…
புதிய மெர்சிடிஸ் : விமர்சனத்திற்குள்ளான பினாங்கு முதல்வர்
பினாங்கு முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக, மாநில அரசு ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியதை அடுத்து, சோவ் கோன் இயூ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இளைஞர், விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் சையத் சதிக் அப்துப் இரஹ்மான் உட்பட, இரண்டு இளைஞர் தலைவர்கள் இந்தச் செலவினம் தேவையற்றது என்று விவரித்தனர், குறிப்பாக…
ஸ்ரீ ராமை நீக்க நஜிப் செய்த விண்ணப்பம் ஜனவரி 27-ல்…
1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்டின் (1எம்.டி.பி.) இறுதி தணிக்கை அறிக்கையைத் திருத்திய வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை பிரதான வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் ஜனவரி 27-ம் தேதியன்று விசாரணைக்கு வரும். புதிய விசாரணையின் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால்…
`எஸ்.பி.எம். குறித்து கே.பி.எம். விளக்கமளிக்க வேண்டும்` – புக்கிட் காசிங்…
கோவிட் -19 தொற்றுநோயால், கடந்த ஆண்டு முதல் ஒத்திவைக்கப்பட்ட மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வை அமல்படுத்துவது குறித்து புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கல்வி அமைச்சிடம் விளக்கம் கேட்டார். "எஸ்.பி.எம். 2020-க்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், மிக முக்கியமான…
`நாடாளுமன்றத் தொகுதியை வைத்தே எம்.பி.யைக் குறிப்பிட முடியும்’
நாடாளுமன்றம் கூடும்போது, எம்.பி.க்களை அவரவர் பெயர் சொல்லி அழைக்கவோ அல்லது குறிப்பிடவோ மக்களவை அனுமதிக்கவில்லை என்று ஈப்போ பாராட் எம்.பி. எம் குலசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மாறாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத் தொகுதியின் பெயரால் மட்டுமே அவர்களைக் குறிப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். "கூட்டவிதி 36 (5) நாடாளுமன்ற உறுப்பினரைப் பெயரால்…
கோவிட் 19 : இன்று 3,027 புதிய நேர்வுகள், 8…
சுகாதார அமைச்சு இன்று, 3,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது. ஜொகூர் (1,103) கிள்ளான் பள்ளத்தாக்கை விட (1,039) அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஜொகூரில் புதிய நேர்வுகளில் பெரும்பாலானவை புக்கிட் பாசிர் திரளையைச் (779) சார்ந்தவை, அது மூவார் மாவட்டத்தில் தொடங்கி,…
பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு தாக்கல் செய்யப்படும்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் போது எழுப்பப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரீனா ஹருன் தெரிவித்தார். மசோதா தாக்கலைத் தாமதப்படுத்தியதற்குக் கோவிட் -19 தொற்றுநோயும் ஒரு காரணம் என்று ரீனா மேலும் கூறினார்.…























