கடந்த சனிக்கிழமை தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மீதான தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் டயர் எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலேசிய-தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டிய காவல் துறை…
குண்டர் கும்பலுடன் பிஎன் தலைவர்கள் மூவருக்கு என்ன தொடர்பு?
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக் கூறும் அனாமதேய கடிதம் குறித்து ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு…
இஓ ரத்துச் செய்யப்பட்டதில் குற்றத்தைத் தடுக்கும் பயனான கருவி பறிபோனது
அவசரகாலச் சட்டம்(இஓ) அகற்றப்பட்டதன்வழி போலீசார் குற்றங்களைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருந்த ஒரு கருவியை இழந்து விட்டனர் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறுகிறார். “இப்போது இஓ இல்லாததால் முன்பு செய்ததைச் செய்ய முடியவில்லை. “சிறுசிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால், ‘தலைகள்’ தப்பி விடுகின்றனர்”,…
பாஸ் இளைஞர்கள்: பிஎன்னுடன் கலந்துரையாடல் ஏன்?
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பின்னுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் காட்டுவது குறித்து பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. “முன்பு பாஸ் தலைவரும் மற்றவர்களும் பிஎன்னுடன் பேச்சு நடத்த விரும்பியபோது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அன்வார் அரசாங்கத்துடன் கலந்துரையாட மிகவும் ஆர்வம் காட்டுகிறாரே,…
டிபிகேஎல்-இக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோயில் ஆலோசனை
தங்க முக்கோணத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு, கோயில் சிலைகளை அகற்றியதுடன் ஒரு பக்கத்து நிலத்தையும் எடுத்துக்கொண்ட கோலாலும்பூர் மாநகர் ஆட்சிமன்றத்துக்கு (டிபிகேஎல்) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறது. அது எடுத்துக்கொண்டது அரசின் நிலம், அருகில் மேம்பாட்டுப் பணியில் ஈடுபடும் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது…
குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்
நேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேற்று காலை மணி 7.15க்கு முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என த ஸ்டார் அறிவித்திருந்தது. “அவர் கொல்லப்பட்டதற்கு கேங் 04-க்கும் 08-க்குமிடையில் இடத்துக்காக நடந்த…
செயல்திட்டத்தைத் தாமதப்படுத்துவது ஏன்? பிரதமருக்கு பினாங்கு இண்ட்ராப் கேள்வி
பினாங்கு இண்ட்ராப் தலைவர் கே.கலைச்செல்வம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். “பிஎன் ஏமாற்றிவிட்டதா?” என்று பலரும் இண்டாராபைக் கேட்கிறார்கள் என்றாரவர். “செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன இடர்பாடு? பிஎன் அல்லது நஜிப் கொடுத்த…
போலீஸ்: டிபிகேஎல் பழுது பார்த்தது, உடைக்கவில்லை
கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 101 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்படுவதாகக் கூறும் செய்தியை போலீசார் மறுத்துள்ளனர். கோயிலின் அருகில் ஒரு நடைபாதையை சீர்படுத்துவதற்கு ஏதுவாக சில விக்கிரகங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன என்று அவர்கள் கூறுகின்றனர். பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டிருக்கும் டிபிகேஎல்…
முன்னாள் தலைமை நீதிபதி: அதிகமான தேர்தல் மனு செலவுத் தொகை…
தேர்தல் மனுக்களை விசாரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் விதிக்கும் அதிகமான செலவுத் தொகைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி ஆதரித்துப் பேசியிருக்கிறார். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அவை உதவும் என்றும் அவர் கூறிக் கொண்டார். அதிகமான செலவுத் தொகை தீவிரமாக இல்லாத மனுதாரர்களை தடுத்து நிறுத்தி விடும் என…
கோயில் ‘உடைக்கப்பட்ட’ போது பத்து பேர் கைது (அண்மைய செய்தி)
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் உள்ள 101 ஆண்டுகள் பழமையான கோவிலில் சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த முயன்ற போது மஇகா இளைஞர் தலைவர் டி மோகன், பிகேஆர் போராளி எஸ் ஜெயதாஸ் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து மணி நேரத்திற்கு…
மஇகா தலைவர்: டிபிகேஎல் உடைத்தது கடைகளை கோவிலை அல்ல
கோலாலம்பூர் ஜாலான் பி ரம்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், கோவில் தொடப்படாத வரையில், மேற்கொள்ளப்பட்ட உடைப்பு வேலைகள் சரியானது தான் என்று மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். மஇகா தலைவராக போட்டியின்றி தேர்வு பெற்ற பின்னர் அந்தச் சம்பவம்…
அம்னோ குடும்பத்தில் பிறந்தவர், இன்று டிஏபி-இன் வளரும் நட்சத்திரம்
டயனா சோப்யா முகம்மட் டாவுட், அம்னோவில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், இன்று அவர், கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர். சட்டம் பயின்றவரான டயனாவுக்கு, பூமிபுத்ராக்களுக்கென்றே உள்ள யுஐடிம்-இல் ஏற்பட்ட அனுபவம் இதற்கு ஒரு காரணம். “எனக்கு யுஐடிஎம்-இல்…
பழனிவேல் போட்டியின்றி மஇகா தலைவராக தேர்வு
ஜி.பழனிவேல் மஇகா தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இன்று நண்பகல் வேட்பாளர் நியமனம் முடிவு வந்தபோது அவருக்கு எதிராக எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பழனிவேலை எதிர்ப்பார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அவரை வழிமொழிபவராக மாறியுள்ளார். பழனிவேல் 617 நியமனங்களைப் பெற்றார்.
கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வந்ததை அம்னோ நிராகரிக்கிறது
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் விவாதிக்கப்படுவதற்குத் தேசியப் பிரச்னைகள் ஏதுமில்லை என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். "எல்லாம் வெறும் அரசியல். அன்வார் விவாதம் நடத்த விரும்பினால் அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்." "அவரைப் பொறுத்த வரையில் எல்லாம் அரசியலே.…
கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆர் ஜெயதாஸ் கைது
கோலாலம்பூர், ஜாலான் பி.ரமலியில் அமைந்துள்ள ஓர் இந்து கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் மற்றும் கோயில் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர்…
தமிழ்ப்பள்ளிகளுக்கு 2,000 ஏக்கர் நிலம்: ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றவில்லை?
-மு. குலசேகரன், ஆகஸ்ட் 31, 2013. 2000 ஏக்கர் நிலத்தை பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகிக்கும் என்று இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த இரு வருடங்களாக இந்த நிலம் அரசியல் சார்புடையவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று நான் தொடர்ந்து…
நாடு மெர்தேக்காவைக் கொண்டாடும் வேளையில் எதிர்காலம் நன்றாக இல்லை என…
மலேசியாவின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்காது என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார். காரணம் 'நாட்டில் தீவிரவாதப் போக்கும் இனவாதப் பிளவுகளும்' தொடருவதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார். மலேசியர்கள் இன்று மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வேளையில் விடுத்துள்ள உரையில் லிம் அவ்வாறு கூறியிருக்கிறார். பொது…
தண்டா புத்ரா விஷயத்தில் ‘தடுமாற்றம்’ ஏன் ?
தண்டா புத்ரா திரைப்படம் மீது எழுந்துள்ள சர்ச்சையைக் கையாளுவதில் முதலமைச்சர் லிம் குவான் எங் 'தடுமாறியிருப்பதாக' Anak Merdeka Permatang Pauh என அழைக்கப்படும் மலாய் இளைஞர் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அந்தத் திரைப்படத்தை காட்ட வேண்டாம் என லிம் முதலில் உத்தரவைப் பிறப்பித்து விட்டு பின்னர்…
டீசல் சிந்தியதால் ஏற்பட்ட நீர் வினியோக நெருக்கடி கட்டுப்பாட்டிலுள்ளது
டீசல் எண்ணெய் சிந்தியதால் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நீர் வினியோக தடங்கல் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறுகிறார். தற்போதைய நிலவரப்படி, டீசல் எண்ணெய் ஆற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் காணப்படும் டீசல் எண்ணெய்யின் அளவு மிகக் குறைவாகவே…
சபாஸ் அபாய அறிவிப்பு: டீசல் எண்ணெய் சிந்தியதால் நீர் வினியோகம்…
சிந்திய டீசல் எண்ணெய் வினியோகிக்கப்படும் நீரில் கலந்து விட்டதால் சிலாங்கூர் மாநிலமும் கோலாலம்பூரும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று முஷரிகாட் பெக்கலான் ஆயர் சிலாங்கூர் (சபாஸ்) இன்று அபாய அறிவிப்பு செய்துள்ளது. சிந்திய டீசல் எண்ணெய்யால் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றுக்கான நீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்…
‘சிறிய விவகாரம்’என்ற கமலநாதனுக்குக் கடுமையான கண்டனம்
எஸ்கே பிரிஸ்தானா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சிறுமைப்படுத்தியதாக கல்வி துணை அமைச்சர் பி,கமலநாதானை டிஏபி உதவித் தலைவர் குலசேகரன் கடுமையாகச் சாடியுள்ளார். கமலநாதன் அதனைச் “சின்ன விசயம்” என்று வியாழக்கிழமை குறிப்பிட்டது அதற்குமுன்னர் அவர் கொண்டிருந்த நிலைபாட்டுக்கு முரணாக உள்ளது என்று ஈப்போ பாராட் எம்பியுமான குலசேகரன் கூறினார். “அவ்விவகாரம்…
மஇகா இளைஞர் பிரிவு: குண்டர் கும்பல்களை முறியடிப்பதில் அரசாங்கம் இனவாரியான…
நாட்டில் குண்டர் கும்பல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இன வாரியான போக்கை அரசாங்கமும் போலீசும் பின்பற்றுவதாக மஇகா இளைஞர் பிரிவு இன்று வருணித்துள்ளது. குண்டர் கும்பல்களில் 28,926 மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அந்தப் பிரிவின் செயலாளர் சி சிவராஜா ஏதாவது செய்யப்பட…
தலைமையாசிரியருக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? மசீச குமுறல்
மாணவர்கள் மிரட்டப்படுவதாகக் கூறப்படுவதன் தொடர்பில் எஸ்கே பிரிஸ்தானா தலைமையாசிரியருக்கு எதிராகக் கல்வி அமைச்சோ சிலாங்கூர் கல்வித் துறையோ நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏமாற்றமளிப்பதாக மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறுகிறார். பத்து மாணவர்கள் அங்கிருந்து இடம் மாறிச்செல்ல முற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அந்த முன்னாள் கல்வி துணை அமைச்சர்,…
மலேசியாவுக்குள் வங்காள தேசத் தொழிலாளர்கள் ‘கொண்டு வரப்படுவதாக’ பிகேஆர் சொல்கிறது
கேள்விக்குரிய சுற்றுப்பயண விசாக்களை வழங்குவதின் மூலம் ஆயிரக்கணக்கான வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவுக்குள் கொண்டு வர அரசாங்க அதிகாரிகள் வகுத்துள்ள ஒரு திட்டத்துக்கு உதவியாக கூடுதல் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு மாத சுற்றுப்பயண விசா என அழைக்கப்படும் ஆவணத்துடன் ஆயிரம் வங்காள தேசத் தொழிலாளர்களைக்…


