சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
பார் போற்றும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஈனச்செயல்களா?, கண்டிக்கிறார் சேவியர்
பெர்சே தலைவர் அம்பிகாவிற்கு எதிராகக் கேவலமான ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்களும் இணைவதா? அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தைப் பறிக்கச் சொல்லவும், ஈம சடங்குகளை நடத்தி ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளதன் வழி பெர்காசவுக்கும், அம்னோவிற்கும் துணை போன ம.இ.கா மற்றும் பி.பி.பி உறுப்பினர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.…
பிகேஆர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது சுஹாக்காம் விசாரணையை முறியடிக்கும்…
பெர்சே 3.0 பேரணி தொடர்பில் மூத்த பிகேஆர் தலைவர்கள் மீது அரசாங்கம் வழக்குப் போட்டுள்ளது, சுயேச்சையான விசாரணைகளை முறியடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. "அந்த முக்கியமான விவகாரம் மீது சுயேச்சையான, பாகுபாடற்ற, முழுமையான விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதை முன் கூட்டியே தவிர்க்கும்" நோக்கத்தை அந்த சட்ட நடவடிக்கை…
தைப்பிங்கை நினைக்காதே: பிபிபி-க்கு கெராக்கான் எச்சரிக்கை
தைப்பிங்கில் பிபிபி மூன்றாம் தடவையாக போட்டியிட இடமளிக்கப்போவதில்லை என்று பேராக் கெராக்கான் கூறுகிறது. அதன் தலைவர் சாங் கோ யோவ்ன், தைப்பிங் பிபிபிக்கு உரிய தொகுதி அல்ல என்றார். 2004-இல் அப்போதைய பிஎன் தலைவர் அப்துல்லா அஹ்மட் படாவி கேட்டுக்கொண்டதன்பேரில் கெராக்கான் தைப்பிங்கை பிபிபிக்கு “இரவல் கொடுத்தது” என்றாரவர்.…
பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுப்புச் செய்யும் முயற்சி
மலாக்கா, மெர்லிமாவில், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கலந்துகொள்ளவிருந்த ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசியெறியப்பட்டது பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுக்க சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சியாகும் என்கிறார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி. “அது ஒரு கீழறுப்புச் செயல்.....பெர்காசாவின் பெயரைக் கெடுக்க முயற்சிகள் நடக்கின்றன”, என்று இப்ராகிம்…
ராயிஸ்: சமமான ஊடக வாய்ப்புக்கள் மீதான அமைச்சரவை அறிக்கை தயார்
அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் கொள்கை அறிக்கைகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உதவும் பொருட்டு அரசியல் கட்சிகளுக்கு சமமான ஊடக வாய்ப்புக்களை வழங்குவது மீதான அமைச்சரவை அறிக்கை ஒன்றை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு தயாரித்துள்ளது. அமைச்சுக்கு வேண்டுகோள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அதன் அமைச்சர் டாக்டர்…
“பெர்சே பேரணி, பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி…
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய குழப்பம், பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் காட்டிலும் மோசமானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நீங்கள் ஒப்பு நோக்கினால்…
ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் பாஸ் தள்ளி வைக்கிறது; ஜுன் முதல்…
பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார். அதற்குப் பதில்…
மசீச: பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்தது படுவீழ்ச்சி
சிலாங்கூர், மலேசியாவில் மிகவும் வளர்ச்சிகண்ட மாநிலம் என்ற நிலையிலிருந்து வளர்ச்சிக்குன்றிய மாநிலம் ஆகிவிட்டதாம். சிலாங்கூர் மசீச கூறுகிறது. குப்பை அள்ளும் விவகாரம், காஜாங், கிள்ளான் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் சிலாங்கூர் குடிமக்கள் எதிர்நோக்கும் பல விவகாரங்கள் ஆகியவை இந்நிலைக்குக் காரணங்களாகும் என்கிறார் மாநில மசீச செயலாளர் வொங் குன்…


