கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) நிர்வகிக்கப்படும் மக்கள் வீட்டுவசதி திட்டத்தின் (PPR) கீழ் வீடுகளைப் பெறுவதற்காக சுமார் 3,000 விண்ணப்பதாரர்கள் இன்னும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக கூட்டாட்சி பிரதேசங்கள் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். தலைநகரில் பி.பி.ஆர் (PPR) வீடுகளுக்கான காத்திருப்புப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்வதாகவும்,…
மாற்று இடத்தில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணி நடத்த போலீஸ் அனுமதி
ஞாயிற்றுக்கிழமை ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 பேரணி, குவாந்தானில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் அல்லாமல் அதே சாலையில் உள்ள எம்பிகே4 திடலில் நடைபெறும். இன்று காலை பகாங் போலீசுடன் ஒரு மணி நேரம் வாதித்தபின்னர் இம்முடிவு செய்யப்பட்டதாக ஹிம்புனான் ஜிஜாவ் இயக்கக்குழு உறுப்பினர் கிளெமெண்ட் சின் கூறினார். “புதிதாகக் கொண்டுவரப்பட்ட…
பெல்டா குறித்து வாதமிடத் தயாரா?-இசா சமட்டுக்கு பிகேஆர் சவால்
பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பில் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று பெல்டா தலைவர் இசா சமட்டுக்கும் பெல்டா விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கும் பிகேஆர் சவால் விடுத்துள்ளது. நாட்டில் பொதுவிவாதமிடுவது இப்போதைய போக்காக இருப்பதால் அதற்கேற்ப இப்படி ஒரு…
DAP: “அரசாங்கம் புதிய கணக்கு முறை மூலம் பட்ஜட்டை சிதைத்துள்ளது”
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்னும் மாயையான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் 'புதிய கணக்கு முறை' ஒன்றை உருவாக்கியுள்ளதாக டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. பெரும் செலவுகளைக் கொண்ட பல திட்டங்கள் அரசாங்கத்துக்கு முழுமையாக சொந்தமான அல்லது அதற்கு பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு "வெளிமயமாக்கப்பட்டுள்ளன"…
பிகேஆர் தனது வார இறுதி விவாதங்களை குவாந்தானுக்கு மாற்றுகிறது
பிகேஆர் இந்த வார இறுதியில் பேராக், லுமுட்டில் தான் நடத்தவிருந்த விவாதங்களை பாகாங், குவாந்தானுக்கு மாற்றியுள்ளது. அந்த விவாதங்களில் பங்கு கொள்ளும் 130 பேராளர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Himpunan Hijau 2.0 பேரணியிலும் கலந்து கொள்வதற்கு உதவியாக அந்த இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த…
நஜிப்: சபா ஆர்சிஐ பற்றி இன்னும் ‘பரிசீலிக்கப்படுகிறது’
சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். "நாங்கள் அதனைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்," என அவர் நேற்றிரவு அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம்…
உங்கள் கருத்து: ‘தாஜுடின் தீர்வில் எல்லாம் ஒரே மர்மம்’
"நல்ல ஆளுமை என்றால் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதுவும் 500 மில்லியன் ரிங்கிட் வராத கணக்கில் எழுதப்படும் போது" டாக்டர் மகாதீர்: தாஜுடின் ஜிஎல்சி தீர்வில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிரூபியுங்கள் லிம் சொங் லியோங்: தாஜுடின் ராம்லி தீர்வு கறை படைந்தது என்பதை நாம்…
Himpunan Hijau பேரணி இடத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது
குவாந்ததனில் Himpunan Hijau 2.0 பேரணி நிகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் அவசரம் அவசரமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மூன்று நாட்களில் அங்கு கூடவிருக்கும் வேளையில் அங்கு வேலி கட்டப்பட்டுள்ளது. குவாந்தான் நகராட்சி மன்றத்தின்…
‘சில தேர்தல் மாற்றங்கள் 13வது பொதுத் தேர்தலில் அமலாக்கப்படாமல் போகலாம்’
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ள விரிவான மாற்றங்கள் அமலாக்கப்படுவது 13வது பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பதைப் பொறுத்துள்ளது. இவ்வாறு பிஎஸ்சி தலைவர் டாக்டர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். சில மாற்றங்கள் செய்யப்படும் வேளையில் சில மாற்றங்கள் அடுத்த பொதுத் தேர்தலில்…
காலித் இப்ராஹிம்: பக்காத்தான் மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் ஏன் அழைக்கப்படவில்லை…
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூட்டத்தில் பக்காத்தான் மாநிலங்களின் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கோரியுள்ளார். பக்காத்தான் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் அந்தக் கூட்டத்தில்…
மார்ச் மாதம் புரோட்டனுக்குப் புதிய உரிமையாளர்கள்
புரோட்டோன்மீது கஜானா நேசனல் பெர்ஹாட்டுக்குள்ள உரிமையை டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட்டுக்கு மாற்றிவிடும் நடவடிக்கை மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று தேசிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். Read More
வின்சண்ட் டான் பெர்ஜெயா கார்ப்பரேசனிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார்
பெர்ஜெயா கார்ப்பரேசன் பெர்ஹாட்(பி-கார்ப்), அதன் நிறுவனரும் நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருப்பருமான வின்சண்ட் டான் சீ இஅவுன், பணி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார் என்று அறிவித்துள்ளது. டான், கடந்த ஆண்டு ஜனவரியிலேயே தலைமை செயல் அதிகாரியாக தம் மூத்த புதல்வர் ரோபின் டான் இயோங் சிங்கை நியமனம்…
பாஸ் இஸ்லாமிய நாட்டை வற்புறுத்தாது என டிஏபி வாக்குறுதி
பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த பாஸ் முயற்சி செய்யும் என்ற அச்சத்தை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அகற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக அந்த இஸ்லாமியக் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க முயலாது எனக் கூறியிருக்கிறார். பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில்…
சிங்கப்பூர் அரசியல்வாதி பதவிஇழப்பை ஒப்புக்கொண்டார்
கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிங்கப்பூர் மாற்றரசுக் கட்சி அரசியல்வாதி,யாவ் ச்சின் லியோங், தாம் நாடாளுமன்ற எம்பி பதவியை இழந்துவிட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
ஒர் இமாம் காலணியை எறிந்தது, ‘விழித்துக் கொள்ளுங்கள்’ என்பதற்கான அறைகூவல்
"நீதித் துறை இனிமேல் மாறத் தொடங்கும் என நம்புவோம். அவரது காலணி மாற்றத்தைக் கொண்டு வரும் என எண்ணுவோம்." வெளியேற்றப்பட்டது மீதான வழக்கில் இமாம் நீதிபதிகள் மீது காலணியை வீசினார் செரி பன்: நீதிபதிகள் மீது காலணிகளை அல்லது பொருட்களை எறிவது தவறாகும். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் அவர்…
என்எப்சி, இயக்குனர்களின் ஒப்புதலின்றி கொண்டோ-களை வாங்கியது
நேசனல் ஃபீட்லோட் கார்பரேசன்(என்எப்சி), அதன் இயக்குனர் வாரியத்துக்குத் தெரியாமலேயே சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது என த சன் நாளேடு அறிவித்துள்ளது. Read More
ஆர்சிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் அதன் அதிகாரங்கள் இன்னும் பரிசீலிக்கப்படுகின்றன
அடையாளக் கார்டு திட்டம் தொடர்பில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது அண்மைய சபா பயணத்தின் போது அறிவிக்கவில்லை. என்றாலும் அந்த ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை சபா மாநிலத்தைச் சேர்ந்த பிஎன் தலைவர் ஒருவர் உறுதி…
ஹிம்புனான் ஹிஜாவ்:குவாந்தானுக்கு வெளியில் 4பேரணிகள்
ஞாயிற்றுக்கிழமை குவாந்தானில் நடத்தப்படும் லினாஸ்-எதிர்ப்பு Himpunan Hijau 2.0 -க்கு ஆதரவாக நாடு முழுக்க பல பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. Read More
“HRP கட்சியின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது என்ன அவ்வளவு சிரமமா ?”
"பதில் அளிக்குமாறு உள்துறை அமைச்சரைக் கட்டாயப்படுத்துவதற்கு ஒருவர் நீதி மன்றம் செல்ல வேண்டும் என்ற நிலை வெட்கக்கேடானது. அது அகங்காரம் இல்லையா ?" HRP கட்சியை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் காலக் கெடு விஜய்47: HRP என்ற மனித உரிமைக் கட்சி…
ஜாத்தி (Jati), இஸ்லாமியப் போராளியா அல்லது வெறும் அம்னோ கைப்பாவையா…
அண்மையில் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான ஜாத்தி (Jalur Tiga-Jati) யின் உண்மையான நோக்கங்கள் குறித்து கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாம், மலாய்க்காரர்கள், அரசர் அமைப்பு முறை ஆகியவற்றுக்குப் போராடுவதற்காக…
Himpunan Hijau பேரணியில் சேர வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு…
குவாந்தானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் Himpunan Hijau என்னும் பசுமைப் பேரணியில் பாகாங்கில் உள்ள அரசாங்க ஊழியர்கள் பங்கு கொள்ளக் கூடாது. அவர்கள் அதற்குப் பதில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்கு சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என மாநிலச் செயலாளர் முகமட் சபியான் இஸ்மாயில் கூறினார்.…
ஹிண்ட்ராப் மீதான வழக்கை மீட்க சுஹாக்காமிடம் குறிப்பாணை
இண்டர்லோக் நாவலை மலேசியப் பாட திட்டத்திலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீதான வழக்கை மீட்க, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் குறிப்பாணையை (memorandum) மலேசியா மனித உரிமை கழகத்திடம் (SUHAKAM) ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் வழங்குவர் என்று அதன் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மணிமாறன் தெரிவித்தார். மலேசிய…
FGVH-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கிளந்தான் தடுக்கும்
கிளந்தான் மாநிலத்தில் உள்ள 55,500 ஏக்கர் நிலத்தை பெல்டா தோட்ட நிறுவனம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு வழக்குரைஞர் குழு ஒன்றை மாநில அரசாங்கம் நியமிக்கும். அந்தத் தகவலை இன்று பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா வெளியிட்டார். வரும் மே மாதம் புர்சா மலேசியா…
FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை பெல்டா குடியேற்றக்காரர்கள் ஆட்சேபித்தனர்
FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நெகிரி செம்பிலானில் உள்ள பாலோங் 4, 5, 6 ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடியேற்றக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘Umno-BN penipu’, ‘Felda penipu’, ‘Umno-BN died and RIP’,…


