சில ஆட்சியாளர்கள் மகாதிர் பிரதமராவதைத் தடுக்க முயன்றார்களாம்

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் பிரதமர் பதவியைத் தமக்குக் கொடுக்க முன்வந்த தகவலை வெளியிட்டதற்காக டாக்டர் மகாதிர் முகட்டின் ஊடக, தொடர்பு ஆலோசகர் காடிர் ஜாசின் அவரைப் பாராட்டினார். “மகாதிர் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்புவதைத் தடுக்க சில…

‘தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்படுவதைத் தடுக்காதீர்’- எதிரணி எம்பிகளுக்கு, செனட்டர்களுக்கு…

தூக்குத் தண்டனை மற்றும் சித்திரவதையை எதிர்க்கும் மலேசிய அமைப்பு(மாட்பெட்), எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் புத்ரா ஜெயாவின் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 1,267 பேருக்கு நல்ல…

ம.இ.கா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல, முகமது ஈசாவுக்கு வாக்களிக்க! சேவியர்

  அம்னோ ம.இ.காவுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதியை, இந்தியர்கள் நல்வாழ்வுக்கு ஏற்படுத்தியுள்ள  இடர்பாடுகளை போர்டிக்சன் ம.இ.கா உறுப்பினர்கள் மறந்து அம்னோவின் முன்னாள் முக்கியத் தலைவரும் போர்டிக்சன் இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளருமான  முகமது ஈசாவுக்கு வாக்களித்து அவர்களின் பொன்னான வாக்குகளை வீணடிக்கக் கூடாது  என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்…

ஆசியான் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில் பாலியில் நிலநடுக்கம்

பாலி ஆசியான் தலைவர்கள் கூட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுலாவுக்குப் பேர்பெற்ற அத்தீவை ரிக்டர் கருவியில் 6.0 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர், பல கட்டிடங்கள் சேதமடைந்தன. ஆசியான் தலைவர்கள் கூட்டம் மட்டுமல்லாமல் அனைத்துலக பண நிறுவனம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டமும்…

லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவதை உறுதிபடுத்தினார்

  லாபுவான் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் ஒஸ்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி பார்டி வார்சான் சாபாவில் சேரப் போவதாக உலவிய வதந்தியை உறுதிப்படுத்தினார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் வாரிசான் தலைமையிலான சாபா அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.…

ஸாகிட் இன்றும் எம்எசிசியால் விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று எம்எசிசி தலைமையகத்தில் அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து பதிவு செய்ய வந்துள்ளார். அவர் காலை மணி 9.15-க்கு வந்தார். அவரது மகள் சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். இன்றைய விசாரணை நேற்று நடந்த விசாரணையின் தொடர்ச்சி…

எஸ்.இலட்சுமணன், ‘செடிக்’ புதிய பொறுப்பாளர் – வேதமூர்த்தி அறிவிப்பு

இந்திய சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) புதிய தலைமை இயக்குநராக எஸ்.இலட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனம் அக்.12-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார். தற்பொழுது தகவல்-பல்லூடக அமைச்சின் பன்னாட்டுப் பிரிவில் செயலாளராக இருக்கும் இலட்சுமணன், நிருவாக மற்றும் அரசதந்திர சேவையில் நீண்ட அனுபவம்…

அம்னோ லாபுவான் எம்பி விலகப் போவதாக வதந்தி

  அஸ்ட்ரோ அவானி அறிக்கையின்படி, அம்னோவின் லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி அக்கட்சியிலிருந்து நாளை விலகப் போகிறார். அந்த அறிக்கையின்படி ரோஸ்மான் பார்டி வாரிசான் சாபாவில் இணையக்கூடும். இதை ரோஸ்மான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆனால் தாம் ஏராளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார். நாளை நான் ஓர்…

நிதி அமைச்சர் ‘சொத்துகளை விற்பதில் வில்லாதி வீரர்’-முன்னாள் நிதி அமைச்சர்…

சொத்துகளை விற்பதென்றால் வேகமாக செயல்படுவாராம் நிதி அமைச்சர் லிம் குவான் எங். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிண்டலடித்துள்ளார். ஆனாலும், டிஏபி தலைமைச் செயலாளரான குவான் எங்கிடம் சொத்துகளை விற்பதில் “கெட்டிக்காரத்தனம் இல்லை” என்று நஜிப் குறிப்பிட்டார். “லிம் பினாங்கு முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வோராண்டும் உபரி பட்ஜெட்டைக்…

கிட் சியாங்: அடக்குமுறைச் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்

அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதை இடைக்காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போர் வரிசையில் டிஏபி இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்கும் சேர்ந்து கொண்டிருக்கிறார். போலீஸ் அரசு-ஆதரவு சமூக ஆர்வலர்கள்மீதும் எதிரணி உறுப்பினர்கள்மீதும் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “அடக்குமுறைச்…

வான் அசிசா: பிரதமர் பதவி  தேடி வந்தது

மே 9 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் பதவி தம்மைத் தேடி வந்ததாக துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். நேற்றிரவு ஜாகார்த்தாவில் அங்கு வாழும் சுமார் 200 மலேசியர்கள் அடங்கிய கூட்டத்தில் வான் அசிசா அந்தத் தகவலை…

மகாதிர்: சில சட்டங்கள் நியாயமற்றவை, ஆனால் சட்டமாக இருக்கும் வரையில்…

  சில சட்டங்கள் நியாயமற்றதாக இருக்கலாம், அவை திருத்தப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மகாதிர், அவை சட்டப் புத்தகத்தில் இருக்கும் வரையில் அச்சட்டங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார். சட்டம் மக்களுக்கு, அரச குடும்பத்திற்கு மற்றும் அரசாங்கத்திற்கு நியாயமானதாக இருக்க வேண்டும் - ஆனால்,…

பிடி-யில் மலாய் வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும்:…

போர்ட் டிக்சன் அம்னோ தலைவர் முகம்மட் பைசல் ரம்லி, அத்தொகுதியில் உள்ள மலாய் வாக்காளர்கள், அதிலும் குறிப்பாக அம்னோவின் 13,000 கட்சி உறுப்பினர்கள், வரும் சனிக்கிழமை அவசியம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “நாங்கள் முன்பே கூறியுள்ளோம் போர்ட் டிக்சனில் வாக்காளராக பதிந்து கொண்டுள்ள எவரும் வாக்களிப்பதை அம்னோ/பிஎன்…

மேலும் விசாரிக்கப்படுவதற்காக ஸாகிட் எம்எசிசிக்கு வந்தார்

  மூன்றாவது முறையாக மேலும் விசாரிக்கப்படுவதற்காக அம்னோ தலைவர் அஹமட் ஹாசிட் ஹமிடி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) இன்று வந்தார். காலை மணி 9.20 அளவில் அங்கு வந்த நேர்ந்த அவரை பத்து நிமிடங்களுக்குப் பின்னர் எம்எசிசி அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர். யாயாசான் அகல்…

உலக சமய பாராளுமன்றக் கூட்டம், வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்

‘உலகைக் காக்க சமயத் தலைவர்கள்’ என்னும் கருப்பொருளில் உலக பாரம்பரிய சமயத் தலைவர்கள் ஒன்றுகூடும் பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கசகஸ்தான் நாட்டிற்கு அக்.9-ஆம் நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அஸ்தானா பெருநகரில் அக்டோபர் 10 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த…

கஞ்சா புற்று நோய்க்கு மருந்தா? ஆதாரமில்லை என்கிறார் துணை அமைச்சர்

கஞ்சாவில் மருத்துவத்தன்மை இருப்பதாகவும் அது புற்று நோய்க்கும் மற்ற நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும் என்றும் கூறப்படுவதைச் சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை மறுத்தார். “புற்று நோயையும் மற்ற நோய்களையும் கஞ்சா குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரமில்லை என்பது (சுகாதார அமைச்சுக்குத்) தெரியும். “கஞ்சா நோய்களைக் குணப்படுத்தும்…

இசி: அன்வாருக்கு பிடி-இல் போட்டியிடும் தகுதி உண்டு

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடும் தகுதி அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாக அந்த ஆணையத்தின் புதிய தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார். ஆனால், பிகேஆர் தலைவர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று யாராவது வழக்கு தொடுத்தால் அது குறித்து நீதிமன்றம்தான்…

லிம்: ரிம1 ட்ரில்லியன் கடனைக் கட்டிமுடிக்க குறைந்தது 3 ஆண்டுகள்…

அரசாங்கம் அதன் கடன்களைக் கட்டி முடிக்கவும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைகளைக் கொடுத்து முடிக்கவும் “குறைந்தது” மூன்றாண்டுகள் பிடிக்கும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார். “ ரிம1 ட்ரில்லியன் கடன் பிரச்னையைத் தீர்க்கவும் திருப்பிக் செலுத்தப்பட வேண்டிய ரிம35பில்லியன் ஜிஎஸ்டி மற்றும் வருமான…

மகாதிர்: கடன்களைக் குறைக்க புது வரிகள்

வருமானத்தைப் பெருக்கப் புது வரிகளைக் கொண்டுவரலாமா என்று அரசாங்கம் ஆலோசிக்கிறது. இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முந்தைய அரசாங்கம் வைத்துச் சென்றுள்ள தேசியக் கடனைக் குறைக்க அது ஒரு வழி என்றார். “அது வேறு வகை வரி, அது (மறைமுகமாக) மக்களின் சுமையைக் குறைக்கும். “அரசாங்கக்…

பொன்னாடையும் வேண்டாம் பூமாலையும் வேண்டாம், வேதமூர்த்தி

“இலக்கு வைத்துள்ள குறிக்கோளை எட்டும்வரை என் தோள்கள் பொன்னாடையை அணியாது; என் கழுத்தும் மலர் மாலையை சுமக்காது” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, தன்னைச் சந்திக்க வரும் அன்பர்களை கனிவுடன் மறுதலிக்கும்போது, மாலையோடும் பொன்னாடை-யைத் தாங்கிய தாம்பூலத்தோடும் வரும் அன்பர்கள் எப்படி வியப்புடன் உணர்கின்றனரோ, அதைப்போன்ற அனுபவம்,…

ஸாகிட் எம்எசிசிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளார்

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை வரும் புதன்கிழமை புத்ரா ஜெயா எம்எசிசி தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. காலை மணி 10-க்கு அங்கு வருமாறு அவருக்கு கூறப்பட்டுள்ளதாக மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது. இது எம்எசிசியுடன் அவரது மூன்றாவது சந்திப்பாகும். கடந்த ஜூலையில்…

மகாதிர்: தேச நிந்தனைச் சட்டம் எப்போது இரத்துச் செய்யப்படும் என்பதைச்…

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேச நிந்தனைச் சட்டம் எப்போது இரத்தாகும் என்பதை அரசாங்கத்தால் துல்லியமாகக் கூற முடியாது என்றார். “தேச நிந்தனைச் சட்டம் அப்படியேதான் உள்ளது. அச்சட்டத்தை அகற்ற நாளாகும். அதற்கிடையில் போலீஸ் அடிக்கடி அதைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். “அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை.…

இன்றைய நிலையில் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் கடினம்- டயிம்

அரசாங்க ஆலோசகர் டயிம் சைனுடின், தாம் இரண்டு தவணைகள் நிதி அமைச்சராக இருந்த காலத்தோடு ஒப்பிடும்போது இப்போது மலேசியப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் சிரமமாகும் என்றார். “புத்துயிர் அளிப்பது இப்போது மிகமிகக் கடினம், சிக்கலானதும்கூட. முந்தைய அரசாங்கம்தான் இப்பிரச்னைக்குக் காரணம், பணம் நிறைய விரயமாக்கப்பட்டிருக்கிறது, களவாடப்பட்டிருக்கிறது”, என்றவர்…