கேஎல்ஐஏ-இல் தங்கியிருந்த சீரியா நாட்டவருக்கு 14நாள் தடுப்புக் காவல்

ஏழு மாதங்களாக 2வது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலைய முனையத்தைத் தங்குமிடமாக்கிக் கொண்டிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீரியா நாட்டவர் ஹசான் அல்-கொண்டார், 14 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாராம். அச் செய்தி உண்மைதான் என்று கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சுல்கிப்ளி ஆடம்ஷா உறுதிப்படுத்தியதாக மலாய்…

சைஃபுல்லின் முதல் ‘அடி’ : அன்வார் ‘கண்ணியமற்றவர்’

பிடி  இடைத்தேர்தல் | தேர்தல் பிரச்சாரத்தின் நான்காவது நாளான இன்று, சுயேட்சை வேட்பாளர் சைஃபுல் புக்காரி அஸ்லான், தனது முன்னாள் முதலாளியும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான அன்வார் இப்ராஹிம் மீது தாக்குதல்களைத் தொடங்கினார். மலேசியாகினி சந்தித்தபோது, அன்வார் ‘கண்ணியம்’ இல்லாத மனிதர் என சைஃபுல் தெரிவித்தார். “இந்த இடைத்தேர்தல்,…

எம்ஏசிசி ரொஸ்மாவை நாளை மீண்டும் அழைக்கலாம், கைது செய்யவும் வாய்ப்புண்டு

முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நாளை மீண்டும் அழைக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 6 மணியளவில், ரொஸ்மாவின் வழக்கறிஞர், கீதன் ராம் விண்சென்ட் எம்ஏசிசி-இடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், அதில் ரொஸ்மா நாளை காலை 11 மணிக்கு எம்ஏசிசி…

நான் அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டதே இல்லை, மகாதிர் பிபிசி-இடம் சொன்னார்

1998-ல், அன்வார் இப்ராஹிமைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கியதற்காக, தாம் அவரிடம் இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். 14-வது பொதுத் தேர்தலில், (ஜிஇ-14) அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியபோது, அன்வாரின் முந்தைய வழக்கு பிரச்சனைகள் எழவில்லை என டாக்டர் மகாதிர்…

மகாதிர் கையெழுத்தில் தேர்தல் அறிக்கை, ஸாம் இரகசியத்தை வெளியிட்டார்

1999-ம் ஆண்டு, துன் டாக்டர் மகாதிர் தனது கையால் எழுதிய, பிஎன் தேர்தல் அறிக்கையை, முன்னாள் தகவல் அமைச்சர் சைனுட்டின் மைடின் இன்று வெளியிட்டார். 19 ஆண்டுகளாக, அதைப் பத்திரமாக அவர் வைத்திருக்கிறார், மகாதிர் தனக்கு கீழ் உள்ளவர்களை முற்றிலுமாக நம்பி இருப்பவர் அல்ல என்பதற்கு ஆதாரமாக அது…

தொலைபேசி, எஸ்எம்எஸ் மோசடிகளை முறியடிப்பதில் அமைச்சு தீவிரம் – கோபிந்த்

தொடர்பு, பல்லூடக அமைச்சு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) வழி நடைபெறும் ஏமாற்று வேலைகளை முறியடிக்க போலீசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று கூறினார். அந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்தும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போலீசுக்கு…

கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்மீது வழக்குத் தொடுப்பது பயனற்றது- நஸ்ரி

கட்சியிலிருந்து வெளியேறிய அம்னோ எம்பிகள்மீது வழக்குத் தொடுப்பது வீண்வேலை என்கிறார் முகம்மட் நஸ்ரி அசிஸ். “ஏனென்றால் இதுபோன்ற நடவடிக்கை இதற்குமுன்பும் எடுக்கப்பட்டது. ஆனால், முடிவு அம்னோவுக்குச் சாதகமாக அமையவில்லை”, என அந்த பாடாங் ரெங்காஸ் எம்பி கூறினார். “அது பயன் தராது. முன்பு நடந்ததுபோலவே அது நீதிமன்றத்தில் தள்ளுபடி…

அன்வாருக்கு ஸ்டீவி சானின் ஐந்து கேள்விகள்

பிடி தேர்தல் சுயேச்சை வேட்பாளர் ஸ்டீவி சான், ஐந்து கேள்விகளை முன்வைத்து பிகேஆர் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கும் ஸ்டீவி சான், மே 9இல்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது என்பதால் இவ்வளவு அவசரமாக ஏன் ஓர் இடைத்…

பிகேஆர் தேர்தல் : லேடாங் எம்பி தோல்வியைத் தழுவினார்

நேற்று நடந்த, பிகேஆர் கட்சி தேர்தலில், ஜொகூர், லேடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சேட் இப்ராஹிம் சேட் நோ தோல்வியைத் தழுவினார். பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய லேடாங் தொகுதி தலைவருமான டாக்டர் சோங் ஃபாட் ஃபுல் 541 வாக்குகள் பெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். பிகேஆர்-ஐச் சேர்ந்த…

பிகேஆர் தேர்தல்: லாபிஸ் முடிவுகளை இரத்து செய்ய வேண்டும், ரஃபிசி…

பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர் ரஃபிஸி ரம்லி, மத்தியத்திற்கான லாபிஸ் தொகுதி தேர்தல் முடிவுகளை இரத்து செய்யுமாறு, மத்தியத் தேர்தல் குழுவிடம் (ஜேபிபி) இன்று கோரிக்கை வைத்தார். தற்போது கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் ரஃபிஸி, வாக்களிப்பில் ஜேபிபி அதிகாரிகளின் தலையீடு இருந்ததாகக்  குற்றம் சாட்டியுள்ளார். ஜேபிபி தலைவர்,…

அன்வார்மீது புதிதாக குதப்புணர்ச்சிக் குற்றம் சாட்டும் லொக்மான் ஆடமுக்கு எதிராக…

பிகேஆர் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம்மீது புதிதாக ஒரு குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு என்று முகநூலில் வைரலாகிவரும் செய்தி தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடமுக்கு எதிராக பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார். “அது போர்ட் டிக்சன் இடைத்…

அன்வார் பிடி மக்களுக்கு ‘இறைவனின் அன்பளிப்பு’: முன்னாள் மஇகா தலைவர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் மக்களுக்கு “இறைவன் கொடுத்த அன்பளிப்பு” என்று துதி பாடினார் மஇகா முன்னாள் உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன். நேற்று முதன்முறையாக பக்கத்தான் ஹரப்பான் மேடையில் தோன்றி அதற்கு ஆதரவாக பரப்புரை செய்த சோதிநாதன், வருங்கால பிரதமரைத் தங்களின் எம்பியாக பெறப்போகும் போர்டி…

சட்டவிரோத வாகனமோட்டும் லைசென்சுகளைத் திருப்பிக் கொடுக்க இரண்டு வாரங்களே உள்ளன

சட்டவிரோதமான முறையில் வாகனமோட்டும் லைசென்சுகள் பெற்றவர்கள் அவற்றை சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி)யிடம் ஒப்படைப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன. அதன்பின்னர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு, அவர்களைப் பற்றி முழு விவரம் ஆர்டிடி-யிடம் உள்ளது என்பதையும் நினைவுறுத்தினார். “அந்த வகையில்…

ஹாடி அன்வாரை கேட்கிறார்: ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் இடத்தில்…

  அன்வார் இப்ராகிம் முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்று அன்வாரிடம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கேட்டுள்ளார். நேற்றிரவு போர்ட் டிக்சன், தெலுக் கெமானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவருக்கு (அன்வாருக்கு) ஏன் முஸ்லிம்கள் பெரும்பான்மையிலிருக்கும் இடத்தில் போட்டியிட தைரியமில்லை என்று ஹாடி…

ஒற்றுமை அரசாங்கமா? அது முடிந்து விட்டது, ஸாகிட் கூறுகிறார்

அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக வருவது "முடிந்து விட்டது" என்று அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். "இல்லை, இல்லை, ஒற்றுமை அரசாங்க விவகாரம் முடிந்து விட்டது, ஓகே, நான் எனது இறுதி உரையில் கூறியது போல்", என்று அம்னோ பொதுக்கூட்டம் இன்று முடிவுற்ற பின்னர்…

ஹரப்பான் ஆட்டம் கண்டுள்ளது, நமக்கு சான்ஸ் இருக்கு, அம்னோவை விட்டு…

அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங்கள். நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினார். ஹரப்பானில் நடக்கும் உள்போராட்டம் வெடித்து மத்திய அரசை ஆபத்தான நிலைக்கு…

மகாதிர் முழு ஐந்தாண்டு தவணைக்கும் பிரதமராக இருக்க வேண்டும், ஹாடி…

  பிரதமர் மகாதிர் முகமட் தொடர்ந்து ஐந்து ஆண்டுகால தவணைக்கும் பிரதமராக இருந்து நாட்டை நிருவாகம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று கூறினார். சில தரப்பினர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உட்பட, பிரதமர் பதவியை அடைவதற்காக…

பிடி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கலின் போது, பிஎஸ்எம் #1050…

பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட RM1050 குறைந்தபட்ச சம்பளத்தை எதிர்த்து, இன்று காலை, போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை, பதாகைகளுடனும் சுட்டறிக்கைகளுடனும் அங்குக் கூடியிருந்த அவர்கள், RM1050…

பிடி இடைத்தேர்தல் : ஒருவர் தகுதி இழப்பு, எழுவர் போட்டி

அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவிடும் வகையில், டான்யால் பாலகோபால் அப்துல்லா போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு, போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக மண்டபத்தில் அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பானைச்…

இசா சமாட்: பிடியை அம்னோ வேண்டாம் என்றது, நான் எடுத்துக்…

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாரான இசா சமட், அம்னோ போர்ட் டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணித்ததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தான் போட்டியிடுவதாகக் கூறினார். “இது என் சொந்த ஊர். இந்தத் தொகுதி காலியாக உள்ளது. அம்னோ போட்டியிட மறுக்கிறது. “அதனால் போர்ட் டிக்சன்காரனான நான் வாய்ப்பைப்…

ஊழல் தலைவர்களே கெளரவமாக வெளியேறுவீர்: அம்னோ இளைஞர் தலைவர் முழக்கம்

அம்னோ ஏஜிஎம்   அம்னோ இளைஞர் தலைவர் அஷிராப் வாஜ்டி டுசுக்கி, ஊழல் தொடர்புள்ள தலைவர்கள் கெளரவமாகக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். “எல்லா நிலைகளிலுமுள்ள அம்னோ தலைவர்களுக்கு அம்னோ இளைஞர்கள் ஒன்றை நினைவுறுத்த விழைகின்றனர்- ஊழலில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் கெளரவமாக விலகிக் கொள்ள வேண்டும். “கட்சியைக்  கவசமாகப் …

சைபூலுக்கு எதிராகக் காட்டுக்கூச்சல்

போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், முகம்மட் சைபூல் புகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டபோது மட்டும் கூடியிருந்த பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டனர். அவரின் பெயரைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏளனம்…

முன்கூட்டிக் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு எஸ்எஸ்டி வசூலிக்கும் டெல்கோ-கள் மீது…

மலேசியர்களுக்கு விற்கப்படும் முன்கூட்டி கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகளுக்கு விற்பனை, சேவை கிடையாது. இந்த வரி-விலக்கை அமல்படுத்த தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வரி-விலக்கு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். “தொலைத் தொடர்பு நிறுவனங்கள்…