சிறைக் கைதி கழிப்பறையில் விழுந்ததால் காயமடைந்தார்: போலீஸ் விளக்கம்

சிறைக்  கைதி   சந்திரன்   முனியாண்டியின்    காயங்களுக்கு   போலீஸ்  காரணமல்ல     அவர்    வழுக்கி  விழுந்ததுதான்   காரணம்     என  தென்  செபறாங்   பிறை   போலீஸ்   தலைவர்    ஷாபி  அப்துல்   சமட்   தெரிவித்தார். அந்த   42-வயது   கைதி   கழிப்பறையில்   விழுந்ததில்   தலையில்   காயம்   பட்டது    என்றும்     அவருக்குத்   தோல் நோய்   இருந்ததால்    சிறையில்   உள்ள  …

மலேசியாவில் தீவிரவாதம் இல்லை– நஜிப்

நாடு   அமைதியுடனும்   நல்லிணக்கத்துடனும்    திகழ்வதை   உறுதிப்படுத்த   மலேசியர்கள்       மிதவாதத்தையே     எப்போதும்   கடைப்பிடித்து  வர  வேண்டும்   என்கிறார்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்.  அப்போதுதான்     அரசாங்கத்தால்     மக்களின்   வாழ்க்கைத்    தரத்தை    உயர்த்த   பல்வேறு   திட்டங்களையும்   வகுக்க   முடியும். மிதவாதம்    இருந்தால்    மட்டுமே    நாட்டின்   பல்லினங்கள்   தடைகளும்   சச்சரவும்    இன்றி  ஒன்றுபட்டிருக்கவும்  …

சாலே: கிட் சியாங், குவான் எங்மீது டிஏபி அடிநிலைத் தலைவர்கள்…

மலாக்காவில்    டிஏபி   பிரதிநிதிகள்   நால்வர்    கட்சியிலிருந்து   விலகியது   அக்கட்சியின்   அடிநிலைத்   தலைவர்களுக்கு   டிஏபி   ஆலோசகர்   லிம்  கிட்  சியாங்   டாக்டர்    மகாதிர்   முகம்மட்டுடன்   கூடிக்குலாவுவது    பிடிக்கவில்லை    என்பதைக்   காட்டுவதாக   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்   கெருவாக்    கூறினார். கிட்   சியாங்மீதும்   தலைமைச்    செயலாளர்   லிம்    கிட்   சியாங்மீதும்    …

பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று ஷரீர் இப்போது கூறுகிறார்

  முன்பு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல் பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று பெல்டா தலைவர் ஷரீர் அப்துல் சமாட் இன்று விளக்கம் அளித்தார். ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஷரீர் அந்த ரிம4.3 பில்லியன் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதற்கான பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறினார். பல செய்தித்தளங்கள் எஃப்ஜிவிஎச்…

மலாக்கா பிரதிநிதிகளின் ராஜினாமாவை டிஎபி வரவேற்கிறது

  மலாக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரதிநிதிகள் டிஎபி கட்சியிலிருந்து விலகிக்கொண்டதை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் டான் கோக் வை வரவேற்றார். அந்நால்வர் கூறிக்கொண்டத்தைப் போல் கட்சி அதன் உண்மையான நோக்கங்களிலிருந்து மாறவில்லை. மாறாக, அந்த நால்வரும்தான் மாறிவிட்டார்கள் என்றாரவர். "அவர்கள் கட்சிக்குள்ளிருக்கும் புற்றுநோய். தங்களுடைய விருப்பத்தற்கிணங்க அவர்கள் கட்சியை…

மலாக்கா டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கட்சி விலகல்

மலாக்காவில்  டிஏபி   சட்டமன்ற/நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நால்வர்   அக்கட்சியிலிருந்து   விலகிக்  கொண்டிருப்பதாக   ஓரியெண்டல்   டெய்லி   ஆன்லைன்   இன்று    அறிவித்தது. கோட்டா   மலாக்கா    எம்பி  சிம்   தோங்  ஹிம்,   டுயோங்    சட்டமன்ற    உறுப்பினர்    கோ   லியோங்    சான்,   பாச்சாங்    சட்டமன்ற    உறுப்பினர்    லிம்  ஜாக்  வொங்,  கெசிடாங்   சட்டமன்ற    உறுப்பினர்   சின் …

ஒரு மாதம் கெடு கொடுத்து கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வேலை…

 பக்கத்தான்  ஹராபான்  கூட்டணியில்    சேர்வது   குறித்து   விரைவில்   முடிவெடுக்க   வேண்டும்     என்று    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    அழுத்தம்   கொடுப்பதை     நிறுத்தும்படி    பாஸ்   கூறியுள்ளது. அவ்விவகாரத்தில்   ஒரு   மாதத்துக்குள்   முடிவு    செய்ய    வேண்டுமென    பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)   அவைத்  தலைவர்   பாஸுக்கு   கெடு  விதித்திருப்பது    முறையல்ல    …

எப்ஜிவி-இன் ரிம4.3 பில்லியன் எங்கே? ஷாரிர் கேள்வி

புதிதாக   நியமிக்கப்பட்ட   பெல்டா  தலைவர்   ஷாரிர்  அப்துல்   சமட்   பெல்டா   குளோபல்    வெண்ட்சர்ஸ்  முதல் பொதுப்பங்கு வெளியீடு(ஐபிஓ)  செய்தபோது  கிடைத்த   ரிம4.3 பில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது   என்பது  மர்மமாக   உள்ளது   என்றார். “பெல்டா   பங்குச்   சந்தையில்   பட்டியலிடப்பட்டபோது   அதற்கு  ரிம6   பில்லியன்  கிடைத்தது........அதிலிருந்து  ரிமா1.7 பில்லியன்  பெல்டா  குடியேற்றக்காரர்களுக்காகச்  …

யுஇசிக்கு அங்கீகாரம் இல்லை என்று அரசாங்கம் முடிவாகச் சொல்ல வேண்டும்,…

  மலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா யுஇசி (Unified Examination Certificate) என்ற தேர்வுச் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது "தேசிய ஒற்றுமை" என்ற கருத்துக்கு எதிராகச் செயல்படுவதாகும் என்று கூறிய பெர்காசாவின் கல்விப்…

14வது பொதுத் தேர்தலில் டிஏபி- யை ‘ஆச்சரியப்படுத்துங்கள்’: செராஸ் வாக்காளர்களிடம்…

கூட்டரசுப்  பிரதேசத்தில்   தொடங்கப்பட்டிருக்கும்   கெண்டூரி    ரக்யாட்   1  நிகழ்ச்சித்    தொடரில்   முதலாவது   நிகழ்வு   இன்று    புடு  உலு   மக்கள்   வீடமைப்புத்   திட்ட(பிபிஆர்)ப்    பகுதியில்    நடைபெற்றது.  அதில்  கலந்து   கொண்ட    கூட்டரசு    அமைச்சர்    தெங்கு   அட்னான்   தெங்கு   யாக்கூப்,  வாக்காளர்கள்    அந்த    நாடாளுமன்றத்   தொகுதியை    பாரிசான்   நேசனலிடமே   திருப்பிக்   கொடுக்க   …

தென் பிலிப்பீன்ஸ் நில நடுக்கத்தில் நால்வர் பலி

நேற்று   பின்னேரம்   பிலிப்பீன்சின்   மிண்டானாவ்   தீவைத்   தாக்கிய    நில   நடுக்கத்தில்   நால்வர்   உயிரிழந்தனர்   100க்கு   மேற்பட்டோர்    காயமடைந்தனர். கட்டிடங்கள்   சில    சேதமடைந்ததாகவும்    பல    இடங்களில்    மின்  விநியோகம்    தடைப்பட்டதாகவும்   அதிகாரிகள்    தெரிவித்தனர். அந்நிலநடுக்கம்  சூரிகாவ்   நகருக்கு   13கிலோ   மீட்டர்  தொலைவில்   10கிலோ   மீட்டர்    ஆழத்தில்   மையம்     கொண்டிருந்ததாக     யுஎஸ்  …

‘கிள்ளான் தடுப்புக் காவல் மரணம் ஒரு கொலை என வகைப்படுத்தப்பட…

தடுப்புக்   காவலில்   இருந்தபோது   உயிரிழந்த   எஸ்.பாலமுருகன்     குடும்பத்தாரின்    வழக்குரைஞர்கள்   அந்த   இறப்பு   மீதான விசாரணை   விரைவாகவும்   சுதந்திரமாகவும்  நடைபெற   அது      ஒரு  கொலையாக      வகைப்படுத்தப்பட   வேண்டும்    என்கிறார்கள். பாலமுருகன்   வட   கிள்ளான்   போலீஸ்   நிலையத்தில்   இறந்து   நான்கு   நாள்கள்   கடந்து   விட்டன.  அதன்    தொடர்பில்    இதுவரை    ஒரு   போலீஸ்காரர்கூட  …

மூத்த அமைச்சர் விலகலா? அது குறும்புப் பேச்சு- முஸ்டபா சாடல்

மூத்த    அமைச்சர்    ஒருவர்    பதவி    விலகுவதாக   உலவும்    வதந்திக்குப்  பொதுமக்கள்    செவிசாய்க்கக்  கூடாது     என   அனைத்துலக  வாணிக,  தொழில்   அமைச்சர்   முஸ்டபா   முகம்மட்   வலியுறுத்தினார். “தேர்தல்   நெருங்க   நெருங்க   இப்படிப்பட்ட    அதிகபிரசங்கித்தனங்கள்   அதிகமாகும்.   சமூக   வலைத்தளங்களில்   பரப்பிவிடப்படும்    இப்படிப்பட்ட     செய்திகளை   மலேசியர்கள்   நம்பிவிடக்  கூடாது”,  என்று   நேற்றிரவு   கோட்டா  …

நஜிப்: மேன்டரின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

  மலேசியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். சீனமொழியான மேன்டரினைக் கற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை பிரதமர் நஜிப் வலியுறுத்தினார். சீனா இன்று உலகளவில் ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. மேன்டரின் மொழியைக் கற்றுக்கொள்வது அந்நாட்டினுடனான நமது உறவை வலுப்படுத்தும் என்று நேற்று கூச்சிங்கில் எஸ்ஜேகே(சீ) சங்…

ஸைட் இப்ராகிம்: சொந்தக் கருத்துகள் கூறுவதை நான் நிறுத்த வேண்டியுள்ளது

  மகாதிர் முகமட்தான் எதிரணியின் நடப்பில் தலைவர் என்று கூறியதற்காக கடுமையாகக் கடிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் இனிமேல் தமது சொந்தக் கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திகொள்ள வேண்டியுள்ளது என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஏளனத் தொனியுடன் தமது பதிலை டிவிட் செய்துள்ளார். மகாதிர் எதிரணியின் நடப்பில் தலைவர்…

தேசிய பத்திரிகையாளர் தினத்துக்கு ஊடகவியலாளர்கள் வரவேற்பு

மலேசியா   தேசிய  பத்திரிகையாளர் தினம்  ஒன்றைக்  கொண்டிருக்க    வேண்டும்   என்று  தொடர்பு, பல்லூடக   அமைச்சர்    சாலே சைட் குருவாக் முன்மொழிந்திருப்பதை   ஊடகவியலாளர்கள்   வரவேற்கின்றனர். மலேசிய   தேசிய   செய்தி நிறுவனமான   பெர்னாமாவின்   பொது   மேலாளர்  சுல்கிப்ளி சாலே,   அது    நடைமுறை   சாத்தியமான,      காலத்திற்கு   ஏற்ற  பரிந்துரை   என்று அவர் சொன்னார்.…

இராமசாமி: சுப்ராதான் தைப்பூசத்தில் அரசியலைக் கலக்கிறார்

மஇகா    தலைவர்    டாக்டர்   எம்.சுப்ரமணியம்தான்    சமயத்தில்   அரசியலைக்  கலப்பதாக   பினாங்கு   துணை  முதலமைச்சர்  II பி.இராமசாமி    சாடியுள்ளார். ஆன்மிகம்    பேசும்    சுப்ரமணியம்   அதைப்  பின்பற்றவில்லை    என்று  இராமசாமி  விளாசினார். “இந்தியர்களைக்   கைவிட்டு    வெளிநாட்டவரான    செட்டியார்களை   ஆதரிக்கும்   அவர்   எந்த     ஆன்மிகத்தைப்   பற்றிப்   பேசுகிறார்?”,  என   இராமசாமி   வினவினார். “உண்மையான  …

குவான் எங் தைப்பூசத்தில் பேசியது சினமூட்டும் பேச்சு: மஇகா தலைவர்…

பினாங்கு   தைப்பூசத்   திருவிழாவில்   பினாங்கு   முதலமைச்சர்  லிம்   குவான்   எங்   ஆற்றிய   உரை     உணர்ச்சியைத்   தூண்டுவதாக    இருந்தது     என   மஇகா   தலைவர்    சாடினார். நேற்று   பினாங்கு    தண்ணீர்மலை   கோயிலுக்குச்    சென்றபோது   அவரது   உரையைக்   கேட்க   நேரிட்டது   என  சுப்ரமணியம்    கூறினார். “நான்  பினாங்கு   தண்ணீர்மலை   கோயில்    வளாகத்தினுள்   நுழைந்ததும்  …

ஜைட்: பார்டி கித்தா, ‘நான் செய்த ஒரே தவறு’

முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்  இப்ராகிம்,  பார்டி   செஜாத்ராஆன்   இன்சான்   தானா  ஆயர்(கித்தா)      அமைத்ததுதான்   தான்    செய்த   தவறு,  அதுவும்    ஒரே   தவறு    என்பதை    ஒப்புக்கொள்கிறார். நிதியியல்      இணையத்தளமான    iMoney-க்கு    நேர்காணல்    வழங்கிய   அவரிடம் , பிகேஆரிலிருந்து   விலகியதும்   அவர்   பார்டி   கித்தா   அமைக்க   முடிவெடுத்தது   குறித்து   வினவப்பட்டது.…

தடுப்புக்காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரியை இடைநீக்கம் செய்ய சுவாராம் கோரிக்கை

மலேசிய   மனித   உரிமைக்  கழகமான   சுவாராம்,     தடுப்புக்  காவலில்   அடிக்கடி   உயிரிழப்பு   நேர்வதை    எண்ணி  வருத்தமுறுகிறது. இதை    இன்று   ஓர்     அறிக்கையில்    தெரிவித்த   அக்கழகம்,   புதன்கிழமை   வட  கிள்ளான்   போலீஸ்    தலைமையகத்தில்    மரணமடைந்த   எஸ்.பாலமுருகனின்   வழக்கில்   சம்பந்தப்பட்ட   விசாரணை  அதிகாரி(ஐஓ)யை    பதவி  இடைநீக்கம்   செய்ய   வேண்டும்   என்றது. “தடுப்புக் …

மகாதிர்: முகைதின் பாராட்டியது நஜிப்பின் அம்னோவை அல்ல

மலேசியாவின்    மேம்பாட்டுக்கு    அம்னோவும்   பிஎன்னும்தான்   காரணம்    என்று   பார்டி   பிரிபூமி  பெர்சத்து    மலேசியா (பெர்சத்து)  தலைவர்   முகைதின்   யாசின்   பாராட்டியதும்    பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்  துதிபாடிகள்   துள்ளிக்  குதித்தார்கள்   என   டாக்டர்   மகாதிர்    மகாதிர்   முகம்மட்    கூறினார். ஆனால்,    முகைதின்   பாராட்டியது   அன்றையை   அம்னோ/பிஎன்னை.  இவர்களோ   இப்போதைய   …

ஹமிடி: தைப்பூசத் திருவிழா சுற்றுப்பயண வளர்ச்சித்திட்டத்தின் ஒரு பொருளாக ஊக்குவிக்கப்பட…

  துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, குறிப்பாக இந்தியச் சுற்றுப்பயணிகளையும் உலகம் முழுவதிலுமுள்ள இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களையும், இந்நாட்டில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா ஒரு சுற்றுப்பயணத் திட்டத்தின் பொருளாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலமுருகன் மரணம்: இஎஐசி விசாரிக்கும்

  நேற்று காலையில் தடுப்புக்காவல் சிறையில் மரணமடைந்ததாகக் கூறப்படும் எஸ். பாலமுருகன் மரணம் குறித்து இஎஐசி (Enforcement Agency Integrity Commission)என்ற நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும். "இச்சம்பவத்தை இஎஐசி கடுமையானதாகக் கருதுகிறது. ஆகவே, இந்த விசாரணை வெளிப்படையாக, சுயேட்சையாக மற்றும் சார்பற்ற முறையில் நடத்தப்படும்", என்று இஎஐசி தலைவர்…