‘கொடுமைக்கு’ ஆளாக்கப்பட்டுள்ள நஜிப்புக்கு ஆதரவாக ஒற்றுமை பேரணி கூட்டுகிறார் அம்னோ…

  தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு ஆதரவாக ஓர் ஒற்றுமை பேரணி புத்ரா ஜெயாவில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு வெளியில் இன்றிரவு நடத்தப்படும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கூறுகிறார். அப்பேரணி இரவு மணி 9 லிருந்து 11…

நஜிப் மீது நாளை குற்றம் சாட்டப்படும், 1எம்டிபி பணிப்படை கூறுகிறது

  முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்று 1எம்டிபி பணிப்படை தெரிவித்துள்ளது. இன்று மாலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நஜிப் மீது நாளை காலை கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று பணிப்படை கூறுகிறது. முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி)…

நஜிப் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்

கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவிலுள்ள அவரது வீட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மதியம் கைது செய்யப்பட்டார் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் முகமட் ஷுக்கிரி அப்துல் கூறினார். எம்எசிசி மேற்கொண்ட எஸ்ஆர்சி இன்டர்நேசனல் மீதான விசாரனையைத் தொடர்ந்து இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

மனக்குழப்பத்தில் ஸெட்டி, குவான் எங் கூறுகிறார்

  நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூற்றுப்படி தமது வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் இருந்தது பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸுக்குத் தெரியும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருந்தது குறித்து ஸெட்டி மனக்குழப்பத்தில் இருக்கிறார். இன்று காலை நிதி அமைச்சில் நடைபெற்ற…

1எம்டிபி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள், தவறினால் நடவடிக்கை: எம்ஏசிசி தலைவர்…

1எம்டிபியிலிருந்து   சட்டவிரோத   பணத்தைப்   பெற்றதற்காக   முடக்கப்பட்ட   வங்கிக்  கணக்குகளுக்குச்   சொந்தக்காரர்கள்     தாமே  முன்வந்து  சம்பந்தப்பட்ட    பணத்தை  ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்திடம்   திருப்பிக்  கொடுக்க     வேண்டும்   தவறினால்   சட்ட    நடவடிக்கை    எடுக்கப்படும்    என்று   அந்த   ஆணையத்   தலைவர்   ஷுக்ரி  அப்துல்  இன்று   எச்சரித்தார். “முடக்கப்பட்ட   கணக்குகளில்   உள்ள   பணம்   1எம்டிபியிலிருந்து   வந்ததுதான்   …

பிடிஎன்: பிஎன் உருவாக்கிய ‘பூதம்’ அதை ஒழித்துக்கட்டுவதே நல்லது

சர்ச்சைக்குரிய   தேசிய   குடிமைப்  பிரிவை(பிடிஎன்)  பிரதமர்துறையின்கீழ்   தொடர்ந்து  வைத்திருக்க   அரசாங்கம்    செய்துள்ள   முடிவைக்  கேட்டு  பினாங்கு   பிகேஆர்    சட்டமன்ற   உறுப்பினர்   ஒருவர்   அதிர்ச்சி   அடைந்தார். புக்கிட்    தெங்கா   பிரதிநிதியான     கூய்  ஹிசியாவ்   லியோங்,   “14வது  பொதுத்  தேர்தலுக்குப்  பிந்திய  புதிய  மலேசியாவில்”   பிடிஎன்னுக்கு   இடமில்லை   என்றார். “அது  வெறுப்பையும்  …

இரண்டு பெரிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் போதுமான இடங்கள் இல்லை

அரசாங்கத்தை    வழிநடத்தும்  பக்கத்தான்    ஹரப்பானில்    பிகேஆரும்  டிஏபியும்தான்   பெரிய   கட்சிகள்.  இரண்டும்   சேர்ந்து    நாடாளுமன்றத்தில்  ஹரப்பான்   கொண்டுள்ள   இடங்களில்   73.6  விழுக்காட்டைப்    பெற்றுள்ளன. ஆனால்,  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  அமைச்சரவையில்  அவற்றுக்கு   ஒதுக்கப்பட்டிருப்பது   50  விழுக்காட்டு   இடங்களே. அமைச்சர்களாகவும்    துணை   அமைச்சர்களாகவும்   இருப்பவர்களில்   பெரும்பாலோர்    பெர்சத்துவையும்   அமனாவையும்  …

ரிம2.6பில்லியன் நன்கொடை: கிட்டத்தட்ட 9 மணி நேரத்தை ஸாகிட் எம்எசிசியில்…

  அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தில் தலைமையகத்தில் (எம்எசிசி) விசாரிக்கப்பட்டார். ஊடகச் செய்திகளின்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ரிம2.6பில்லியன் நன்கொடை வழங்கிய சவுதி அரேபிய அரச குடும்பத்தைத் அவர் சந்தித்ததாக கூறிக்கொண்டது குறித்து,…

408 வங்கிக் கணக்குகளிலுள்ள ரிம1.1பில்லியன் முடக்கப்பட்டுள்ளன, 1எம்டிபி பணிப்படை கூறுகிறது

தனி நபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளிலுள்ள மொத்தம் ரிம1.1பில்லியன் பணம் ஜூன் 26 மற்றும் ஜூன் 29 இல் முடக்கப்பட்டுள்ளதாக 1எம்டிபி பணிப்படை கூறுகிறது. இத்தகவல் இதற்கு முன்பு எம்எசிசி 900 வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டதாக வெளிவந்த தகவலுக்கு…

மின்கட்டண உயர்வு வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் ஹரப்பான் நோக்கத்தைப் பாதிக்கும்

அடுத்த   ஆறு  மாதங்களுக்கு   அரசாங்கம்  கட்டணங்களை   உயர்த்தக்  கூடாது,  உயர்த்தினால்   பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யை    அகற்றி    வாழ்க்கைச்   செலவைக்  குறைக்கும்    பக்கத்தான்   ஹரப்பானின்   நோக்கம்   நிறைவேறாமல்   போகும். வணிகத்  துறைக்கான   மின்கட்டணங்கள்   உயர்த்தப்படும்    என்று  அறிவிக்கப்பட்டிருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது   பிகேஆர்   உதவித்    தலைவர்   ரபிசி  ரம்லி   இந்த   எச்சரிக்கையை  …

பொருளாதார அமைச்சர்: சீரமைப்புகள் வளர்ச்சிமீது தாக்கத்தை உண்டுபண்ணலாம்

பக்கத்தான்  ஹரப்பான்    அரசாங்கத்தால்   மேற்கொள்ளப்பட்டிருக்கும்   சீரமைப்புகள்   மலேசியப்   பொருளாதாரத்தில்   தாக்கத்தை   உண்டுபண்ணலாம்    என்கிறார்   பொருளாதார   அமைச்சர்   முகம்மட்  அஸ்மின்   அலி. ஆனாலும்,  அது  வருங்காலத்தில்   நிலையான   வளர்ச்சிக்கு   அடிகோலும். “மலேசியப்   பொருளாதாரம்,  பொதுவாக,   அடிப்படையில்   வலுவானது. பேரியல்  மட்டத்தில்   அது   சிறப்பாக    செயல்படுகிறது.  நிலையான,  வலுவான   பொருளகத் துறையும்  …

பிகேரின் சுகைமி ஷாபி காலமானார்

பிகேரின் சுங்கை  கண்டிஸ்   சட்டமன்ற    உறுப்பினர்   மாட்  சுகைமி   ஷாபி,50,  இன்று  காலை   காலமானார். அவர்  இறந்த   செய்தியைப்    பொருளாதார   விவகார   அமைச்சரும்  பிகேஆரின்   துணைத்      தலைவருமான   முகம்மட்  அஸ்மின்   அலி  முகநூலில்    பதவிட்டிருந்தார். “அல்  பாத்திஹா. உண்மையான  நண்பர்  ஒருவரை  இழந்து  விட்டதை  வருத்தத்துடன்   தெரிவித்துக்  கொள்கிறேன்”, …

13 அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

பெர்சத்துவின்   மூவார்   எம்பி   சைட்   சித்திக்   டிஏபி-இன்  இயோ  பீ  ஹின்  உள்பட   13  புதிய   அமைச்சர்கள்  இன்று  காலை   இஸ்தானா    நெகராவில்   பதவி  உறுதிமொழி   எடுத்துக்  கொண்டனர். 26வயது   சித்திக்  இளைஞர், விளையாட்டுத்துறை   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருக்கும்   வேளையில்   35வயது  இயோ  எரிபொருள்,  தொழில்நுட்ப,  அறிவியல்,  வானிலை  மாற்ற …

ஜாஹிட் விசாரணைக்காக எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

அம்னோ   தலைவர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிட்,  அவரது  குடும்பத்தாருக்குச்  சொந்தமான   அறவாரியம்   குறித்து  வக்குமூலம்   அளிப்பதற்காக   இன்று  காலை    எம்ஏசிசி   தலைமையகம்   வந்தார். அவர்   தம்  மெய்க்காவலருடன்  வந்தார்.   வழக்குரைஞர்கள்   யாரும்    உடன்  வரவில்லை. கட்டிடத்துக்கு   வெளியில்  காத்திருந்த   செய்தியாளர்களைப்  புன்னகையுடன்   நோக்கிக்   கையசைத்தவாறு   அவர்   கட்டிடத்தினுள்   சென்றார்.…

அரேபிய நன்கொடையாளர், அறவாரிய நிதிகள் பற்றி ஸாகிட் விசாரிக்கப்படவிருக்கிறார்

  அவர் தலைமையேற்றிருந்த அறவாரியத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது பற்றி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை நாளை விசாரிக்கப் போகிறது என்று த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது. வட்டாரங்களை மேற்கோள் காட்டிய அச்செய்தி முன்னாள் பிரதமர் நஜிப்…

யுஇசி சான்றிதழ் அங்கீகாரம்: அரசு மலாக்காவைப் பின்பற்ற வேண்டும்

  ஒருங்கிணக்கப்பட்ட சோதணைச் சான்றிதழ் (யுஇசி) மாநில பொதுச் சேவைக்கு தகுதியளிக்கும் முறையான சான்றிதழ் என்று மலாக்கா மாநில அரசு எடுத்துள்ள முன்மாதிரியை பெடரல் அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸாகாரி மாநில பொதுச் சேவையில் நுழைவதற்கு யுஇசி…

அம்னோ தேர்தல் முடிவுகள் (2018 – 2021 தவணை)

  அம்னோ தேர்தல் முடிவுகளின் முழுப் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்று பதவியிலிருக்கும் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நேற்றிரவு கூறினார். நிரந்தத் தலைவர்: பவுடின் அமிருல்டின் (பதவியி இருப்பவர்). தலைவர்: அஹமட் ஸாகிட் ஹமிடி துணைத் தலைவர்: முகமட் ஹசான் உதவித் தலைவர்கள்:…

நிதிக் கையாடல் தொடர்பில் முன்னாள் அம்னோ அமைச்சர்மீது எம்ஏசிசி விசாரணையாம்

அறக்கட்டளை  ஒன்றிலிருந்து    நிதிக்  கையாடல்   செய்ததாகக்  கூறப்படும்  முன்னாள்   அமைச்சர்  ஓருவரை  மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)    விசாரணைக்கு    அழைக்கும்   என   எம்ஏசிசி  விசாரணை   இயக்குனர்    சிமி  கனி   கூறினார். அவர்  நஜிப்   அரசாங்கத்தில்   மூத்த    அமைச்சராக    இருந்தவர்,  அம்னோவின்   உயர்த்   தலைவர்களில்   ஒருவர்    என்றவர்   சொன்னதாக   சினார்   ஹரியான்  …

ஜொகாரி: தலைவர்களின் ஆணவப் பேச்சு, அதுதான் அம்னோ அனுபவிக்கிறது இப்போது

தலைவர்களின்   ஆணவப்போக்குக்காக   மக்கள்   அம்னோவைத்   தண்டித்து   விட்டார்கள்    என்கிறார்   முன்னாள்   அமைச்சர்   ஜொகாரி  அப்துல்   கனி. கட்சித்   தலைவர்களின்  ஆணவப்பேச்சுத்தான்  14வது  பொதுத்   தேர்தலில்   படுதோல்வியைக்   கொண்டு  வந்தது   என்றாரவர். “சில   இடங்களில்  நாம்தான் (அம்னோ   தலைவர்கள்)  மகத்தானவர்கள்   என்று    நினைத்துக்  கொண்டிருந்தோம். அதனால்   மனம்போன  போக்கில்   பேசினோம்.…

கணக்காய்வாளர் அறிக்கையை இரகசியமாக வைத்திருந்தது தப்பாப் போயிற்று: நஜிப் ஒப்புதல்

முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்,   1எம்டிபி   மீதான   தலைமைக்  கணக்காய்வாளர்(ஏஜி)   அறிக்கையை  இரகசிய  பாதுகாப்புச்    சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்    வைக்க   தம்  அரசாங்கம்    செய்த   முடிவு   தப்பாகப்   போயிற்று    என்றார்.  அறிக்கையை  வைத்து   எதிர்க்கட்சிகள்  வேண்டத்தகாத   கதைகளை  கட்டிவிடலாம்   என்று   அஞ்சியதால்   அதை   இரகசியாக  வைக்கத்   தீர்மானிக்கப்பட்டது. வேடிக்கை  என்னவென்றால்,  …

ஹரப்பான் தலைவர்களே, தேர்தல் வாக்குறுதியைப் பின்பற்றுங்கள், தேசிய பாதுகாப்பு மன்றத்தை…

  கடுமையாக விமர்சிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) சட்டம் 2016 தொடர்ந்து, சில மாற்றங்களுடன், பயன்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்திருந்த கருத்துக்கு பல பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹரப்பானின் 14 ஆவது பொதுத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தபடி…

நீர்மூழ்கி ஊழலும் அல்தான்துயா கொலையும் விசாரணை செய்யப்படும் – தற்காப்பு…

ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழலும் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அல்தான்துயா  கொலையும்  மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் முகமாட் சாபு கூறியுள்ளார். இந்த ஊழல் சம்பந்தமாக நேற்று சுவராம் என்ற மனித உரிமை இயக்கம், தற்காப்புத்துறையின் அமைச்சர் முகமட் சாபுவுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தை அவரது அலுவலகத்தில் …

சாகிட் அமிடியின் எண்ணம் ஈடேறுமா?

‘ஞாயிறு’ நக்கீரன், அம்னோவின் பண்பட்ட தலைவர்களாக இப்பொழுது இருவர் வலம் வருகின்றனர். இளைஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பிற்குப் பின் தேசியத் தலைவர் பொறுப்பிற்கு ‘ஒரேத் தாவாக’ தாவ எண்ணம் கொண்டிருக்கும் கைரி ஜமாலுடினும் துங்கு இரசாலியும்தான் அந்த இருவர். அம்னோ தற்பொழுது அடைந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் உண்மையை…