மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்
இன்று காலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) புதிய தலைவர் சுல்கிப்ளி அஹ்மட், கோலாலும்பூரில், இஸ்தானா நெகராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். சுல்கிப்ளி, 48, முன்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் தேசிய வருவாய் மீட்டெடுப்புக் குழு …
ஐஜிபி-க்கு எதிராக போலீஸ் புகார் செய்யலாமா என ரபிசி ஆலோசிக்கிறார்
1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள ஜோ லோ, உள்பட மற்ற தனிப்பட்டவர்கள்மீது எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ், காலிட் அபு பக்கார்மீது போலீஸ் புகார் செய்ய திட்டமிடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. இவ்வளவு மெதுவாக செயல்படும் போலீஸ் 1எம்டிபி ஊழலைக்…
பொது ஒழுங்கு கெட்டால் அலி திஞ்சுதான் பொறுப்பு: மாணவர்கள் வலியுறுத்து
ஆகஸ்ட் 27-இல் பொது ஒழுங்குக்குக் கேடு ஏற்பட்டால் அதற்கு 'TangkapMO1' பேரணியைக் கண்டித்து ‘சிவப்புச் சட்டை’யினர் நடத்தும் எதிர்- பேரணிதான் காரணமாக இருக்கும் 'TangkapMO1' பேரணியை ஆதரிக்கும் மாணவர்கள் கூறினர். “அன்று ஏதேனும் நிகழ்ந்தால் அலி திஞ்சுதான் பொறுப்பு. “தயவு செய்து எங்களை நாடி வராதீர்கள். அவரைத் தேடிச் …
ஹாங்காங் கடலோரத்தில் ஜோ-லோவின் உல்லாசப் படகு?
மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் ஆடம்பர உல்லாசப் படகான 'Equanimity' ஹாங்காங் வந்திருப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (எஸ்சிஎம்பி) அறிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய படகுகளில் ஒன்றான அது எதற்காக ஹாங்காங் வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை அந்த நாளேடு கூறியது. …
நாம்வீ விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டார்
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ரேப் கலைஞர் நாம்வீ, இயற்பெயர் வீ மெங் சீ, நேற்று கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இன்று பினாங்கு மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். விசாரணைக்காக அவரை நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்க மெஜிஸ்திரேட் நீதிமன்ற பதிவாளர் தாஜுடின் உத்தரவிட்டார். தைவான் சென்று …
‘Aku Melayu’ என்றாலும் எல்லா மலேசியர்களுக்காகவும் போராடுவோம்: கெராக்கான் மெரா…
Pertubuhan Pembela Nasib Melayu (கெராக்கான் மலாயு) தலைவர், ‘அலி திஞ்சு’ பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் அலி பஹாரோம், அந்த அமைப்பின் டி-சட்டையை நேற்றிரவு அறிமுகம் செய்து வைத்தார். அந்தச் சிவப்புநிற டி-சட்டையில் ‘அக்கு மலாயு’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த டி-சட்டையை அணிந்துதான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் …
‘எம்ஏசிசி தலைவர்களில் பெரும்பாலோர் வெளியிலிருந்து வந்தவர்களே’
சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் முன்னாள் அதிகாரி சுல்கிப்ளி அஹ்மட் கடந்த மாதம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ஆணையத்தின் தலைமைப் பதவிக்கு “வெளியிலி”ருந்து ஒருவரை ஏன் அழைத்து வர வேண்டும் எனக் கேள்விகள் கிளம்பின. ஆனால், எம்ஏசிசி- இல் இந்த நடைமுறை ஓன்றும் புதிதல்ல என்கிறார் எம்ஏசிசி-இன் …
இரு சகோதரர்களைச் சித்திரவதை செய்யவில்லை , பேராக் போலீஸ் மறுப்பு
விசாரணைக்கு உதவியாக ஏப்ரல் மாதம் தடுத்துவைக்கப்பட்ட இரு சகோதரர்கள் தடுப்புக் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகச் கூறும் நாளேட்டுச் செய்திகளை பேராக் போலீசார் மறுத்தனர். என்.லெட்சுமணன் 19, என். விக்ரம் ஆகிய அவ்விரு சகோதரர்களும் கொலைமுயற்சி குற்றச்சாட்டின்பேரில் ஏப்ரல் 14 இல் ஆறு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர் என்று …
தெங்கு அட்னான்: சொத்துகளைப் பகிரங்கமாக அறிவிப்பது குடும்பத்தினருக்கு ஆபத்தாக முடியும்
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தம் சொத்து விவரங்களைப் பகிரங்கமாக அறிவிக்கப் போவதில்லை. அவ்வாறு செய்வது குடும்பத்தினருக்கு ஆபத்தாக முடியலாம் என்றவர் அஞ்சுகிறார். தாமும் கோலாலும்பூர் மேயர் அமின் நோர்டின் அப்துல் அசிசும், பகிரங்கமாக இல்லை என்றாலும்கூட , சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அறிவித்து …
ஒலிம்பிக் பேட்மிண்டனில் மலேசியாவின் தங்கம் வெல்லும் கனவு கலைந்தது
ரியோ ஒலிம்பிக்கில் இன்றிரவு நடந்து முடிந்த பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மலேசியாவின் முன்னிலை பேட்மிண்டன் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சோங் வெய் சீனாவின் முதல்நிலை ஆட்டக்காரர் சென் லோவிடம் தோல்வியுற்றார். கடுமையாக நடந்த போராட்டத்தில் தோல்வியுற்ற லீக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
‘கிரிமினல் யார்?’ : என்ற கேட்ட எம்பிக்கு ஐஜிபியின் ஓன்லைன்…
டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கரை அவமதிக்கும் வகையில் கூறியிருந்த கருத்துக்கு காலிட் மெரியம்-வெப்ஸ்டர் ஓன்லைன் அகராதியைக் காட்டி பதில் அளித்துள்ளார். மைவாட்ச் என்ற என்ஜிஓவின் தலைவர் ஆர். ஶ்ரீ சஞ்சீவனை "கிரிமினல்" என்று ஐஜிபி…
போலீசாரால் அறைந்து, உதைத்து லைட்டரால் சுடப்பட்டதாக இரு இளவயது சகோதரர்கள்…
ஒரு சாட்சிய அறிக்கையில் கையெழுத்து இட வேண்டும் என்பதற்காக தங்களை போலீசார் அறைந்து, உதைத்து, சிகரெட் லைட்டரால் சுட்டு துன்புறித்தினர் என்று இரு இளவயது சகோதரர்கள் கூறினர். அவ்விரு இளைஞர்களின் வழக்குரைஞர், டி. சஷி தேவன், இவ்விவகாரம் குறித்து ஒரு மகஜரை இன்று கோலாலம்பூரில் மனித உரிமைகள்…
1எம்டிபி விசாரணை தொடர்பில் அபு டாபியில் முக்கிய நபர் கைது
1எம்டிபி விசாரணையில் ஒரு முக்கிய நபரான தொழில் அதிபர் காடெம் அல்-குபாய்சி, அபு டாபியில் கைது செய்யப்பட்டார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் பிள்ளை ரிசா அசிசும் தொழில் அதிபர் ஜோ லாவும் ஆகஸ்ட் 22-இல் எதிர்வாதம் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளதை அடுத்து அல்-குபாய்சி கைது …
பிரதமர்: நாட்டுப்பற்று என்பது கொடி பறக்க விடுவதற்கும் மேலே
ஜாலோர் கெமிலாங்கைப் பறக்க விடுவதோ, நாட்டுப் பண்ணைப் பாடுவதோ ருக்குன்நெகராவைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதோ மட்டும் நாட்டுப்பற்றல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். அகப்பக்கத்தில் ஆகஸ்ட் 31 தேசிய நாள் கொண்டாட்டம் பற்றி எழுதியுள்ள நஜிப், நாட்டுப்பற்று என்பது பல நிலைகளைக் கொண்டது என்றார். முதல் …
தேசிய பூப்பந்து இணைகளுக்கு ரோஸ்மாவின் பாராட்டும் ஊக்குவிப்பும்
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், ஒலிம்பிக் பூப்பந்து இறுதி ஆட்டத்துக்குச் செல்லும் கோ வீ செம்- டான் வீ கியோங் இணையைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மலேசிய பூப்பந்து சங்கப் புரவலரான ரோஸ்மா, தாமும் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்றும் குடும்பத்தினரும் இறுதி ஆட்டம் வரை சென்றுள்ள அவ்விருவரையும் …
தெங்கு அட்னானும் கேஎல் மேயரும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரும் கோலாலும்பூர் மேயர் அமின் நோர்டின் அப்துல் அசீசும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என பிகேஆர் தொடர்ப் இயக்குனர் பாஹ்மி பாட்சில் கேட்டுக்கொண்டார். அண்மைய ஊழல் விவகாரத்தை அடுத்து அமைச்சிலும் மாநராட்சி மன்றத்திலும் …
‘டிஓஜே வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்கள்மீது…
1எம்டிபி தொடர்பாக அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்குகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்போருக்கு எதிராகக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் உறுதி அளித்துள்ளார். ஆனால், 1எம்டிபி- இலிருந்து பணம் கையாடப்பட்டது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றாரவர். “1எம்டிபி-இலிருந்துதான் பணம் கையாடப்பட்டது என்பது நிறுவப்பட்டால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் …
தடுத்து வைக்கப்பட்ட டிபிகேஎல் இயக்குனர் பற்றி என்னிடம் கேட்பது ஏன்?…
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் ஊழல், பணச் சலவை விவகாரம் தொடர்பில் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) இயக்குனர் பற்றி வினவியபோது அவர் சிறிது ஆத்திரப்பட்டார். “அவர்களின் வேலையைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்? “இது …
பேரணி எதற்கும் உதவாது- ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம்: ஜமாலுக்கு மசீச…
ஹிம்புனான் மேரா( சிவப்புச் சட்டைப் பேரணி) ஏற்பாட்டாளர் ஜமால் முகம்மட் யூனுஸ் பேரணி நடத்துவதை விடுத்து நாட்டுக்கு நன்மையளிக்கும் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்யலாம் என மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் வலியுறுத்தினார். “என்னைக் கேட்டால் மலேசியாவுக்குத் தேவை அமைதியும் நிலைத்தன்மையும்தான். அவர் பேரணி நடத்தும் நோக்கத்தை …
நஜிப்: முன்னாள் தலைவரின் வெளியுறவுக் கொள்கை எதிர்ப்புக் குணமிக்கது, தன்னலமிக்கது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை வேறு பாதையில் செல்ல முடிவெடுத்ததாகக் கூறினார். “பழைய அணுகுமுறையை விட்டு விலகி நான் வேறு மாதிரி இருக்க விரும்பினேன். “ஏனென்றால், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பங்காளித்துவத்தை வளர்ப்பதாக இருத்தல் வேண்டும் என …
‘முகம் தெரியாதவர்கள்கூட உறுப்பினர் பாரம் கேட்கிறார்கள்’
பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து) மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார் அதன் இடைக்காலச் செயல்குழு உறுப்பினர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான். அறிமுகம் இல்லாதவர்கள்கூட தம்மை அணுகி உறுப்பினராவதற்கு மனுப் பாரங்களைக் கேட்கிறார்களாம். அக்கட்சியைப் பதிவு செய்வதற்கு சங்கப் பதிவகத்தில் (ஆர்ஓஎஸ்) ஆவணங்களைத் தாக்கல் செய்த நாளான ஆகஸ்ட் …
‘#TangkapMO1’பேரணிக்கு போலீஸ் அனுமதி
'#தங்காப் மலேசியன் அதிகாரி1' பேரணி நடத்துவதற்கு போலீசார் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இப்பேரணி ஆகஸ்ட் 27 இல் கோலாலம்பூர் டாத்தாரன் மெர்டேக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பேரணி டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் அதற்கான அனுமதியை கோலாலம்பூர் நகராட்சி மன்றத்திடமிருந்து (DBK) பெற வேண்டும் என்று…
ரிம1.57 பெறுமதியுள்ள டீசலை ஏற்றிச் சென்ற கப்பல் கடத்தப்பட்டது
900,000 டன் டீசல் எண்ணெயை ஏற்றிச் சென்ற எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று இந்தோனேசிய கடல் பகுதிக்குள் கடத்தப்பட்டதாக மலேசிய கடலாண்மைத் துறை(எம்எம்இஏ) அதிகாரிகள் தெரிவித்தனர். அக்கப்பல், வியர் ஹார்மோனி, இந்தோனேசியாவின் பத்தாமுக்கு அப்பால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எம்எம்இஏ ஓர் அறிக்கையில் கூறியது. கடத்தியவர்களின் அடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியாமலிருக்கிறது …


