ஹங்ரி கோஸ்ட் திருவிழா என்று அழைக்கப்படும் தியோங் குவான் போ தோர் திருவிழா, பினாங்கு மாநில பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசியாவிலேயே இந்தத் திருவிழாவிற்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. ஜூன் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அங்கீகாரமானது, பினாங்கு சமூகங்களின்…
1எம்டிபி கணக்காய்வர்களுக்கு எதிரான புகார் என்னவாயிற்று? புவா கேள்வி
1எம்டிபி கணக்காய்வாளர்களான கேபிஎம்ஜி-க்கும் டூலிட்டல் மலேசியாவுக்கும் எதிராக தாம் செய்த புகார்கள்மீதான நடவடிக்கைகள் “ஆமை வேகத்தில்” நகர்கின்றன என்று குற்றஞ்சாட்டிய டிஏபி எம்பி டோனி புவா, அது ஏன் என்று மலேசிய கணக்காளர் கழகத் தலைவர் முகம்மட் பயிஸ் முகம்மட் அஸி விளக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் …
காலிட்: புதிய கூட்டணியால் எதிரணியின் பிரச்னைகள் தீராது
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் எதிரணியினர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குப் புதிய கூட்டணி ஒரு தீர்வாக அமையும் என்று நம்பவில்லை. அதில் இணையும் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் சில தரப்புகளை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு தெளிவான கொள்கைகள் கிடையாது என்றாரவர். “இதன் மூலமாக அவர்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு …
எஸ்எம்இ: வருமானம் குறைந்துள்ள வேளையில் ஜிஎஸ்டியால் மேலும் பாதிப்பு
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து சிறிய, நடுத்தரத் தொழில்களின் (எஸ்எம்இ) வருமானம் குறைந்தது 20 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஜிஎஸ்டி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என மலேசிய எஸ்எம்இ சங்கத் தலைவர் மைக்கல் காங் கூறினார். “ரிங்கிட் மாற்று விகிதம் …
டிஎபி இஸ்லாத்தை தாக்கினால், அமனா அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்குமாம்
இஸ்லாத்திற்கு டிஎபி ஒரு மிரட்டலாக உருவெடுத்தால், அமனா அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் என்று அமனா உதவித் தலைவர் ஹசானுடின் முகமட் யூனுஸ் கூறினார். உண்மையாகவே பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் என்று கூறிய அவர், இஸ்லாம் பற்றி டிஎபி தவறு இழைத்திருந்தால் அது பாடம் கற்றுக்கொள்வதற்கு தயாராக…
மகாதிரின் புதிய கட்சி, ஹரப்பான் விவாதிக்கவிருக்கிறது
முன்னாள் பிரதமர் அறிவித்துள்ள புதிய கட்சி பற்றி விவாதிக்க பக்கத்தான் ஹரப்பான் தலைமத்துவ மன்றம் ஒரு கூட்டம் நடத்தவிருப்பதாக டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியை அமைக்கலாம். ஆனால், நாம் அக்கட்சியின் நோக்கத்தை கவனிக்க…
கபீர் ஹார்பி என்றால் கொல்ல வேண்டும் என்பதில்லையாம், அம்னோ இளைஞர்…
பகாங் முப்தி அப்துல் ரஹ்மான ஓஸ்மான் கபீர் ஹார்பி என்ற சொற்களைப் பயன்படுத்திய போது முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாம் என்ற அர்த்ததுடன் கூறவில்லையாம். இந்த விளக்கத்தை இப்போது அளித்தவர் அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் பாதுல் பாரி மாட் ஜாயா. முஸ்லிம் அல்லாதவர்களை கொல்வது அனுமதிக்கப்படுகிறது என்ற…
டாக்டர் மகாதீரின் புதிய கட்சி பதிவுக்கு அரசாங்கம் தடையாக இருக்கக்…
முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது முன்னாள் அம்னோ சகாக்களுடன் சேர்ந்து புதிய கட்சி அமைப்பதற்குத் தடையாக எவ்வகையிலும் மலேசிய அரசாங்கம் இருக்கக்கூடாது என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மலேசியா ஒரு …
முகைதின்: எதிரணி போர் ஓய்வைக் கடைப்பிடித்து பிஎன்னுக்கு எதிராக ஒன்றுபட…
எதிரணியினர் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்தி அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும் என்பதை அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட அதன் துணைத் தலைவர் முகைதின் யாசின் ஒப்புக்கொள்கிறார். ஹராபான், பாஸ் ஆகியவையும் மற்ற தரப்பினரும் அடுத்த பொதுத் தேர்தலுக்காக ஒரு கூட்டு எதிரணியை அமைப்பது குறித்து ஒன்றுகூடி விவாதிக்க …
பிசுபிசுத்துப்போன துருக்கிய இராணுவப் புரட்சி
துருக்கியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இராணுவத்தின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக தெருக்களில் கூடி புரட்சியை முறியடித்தனர். கடலோரமாக விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த எர்டோகன் இன்று அதிகாலை இஸ்தான்புல் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் ஆதரவாளர்களுடன் இருப்பதைத் தொலைக்காட்சிச் செய்திகளில் காண முடிந்தது.…
அரசாங்கத்தை மாற்ற நினைத்தால் அமைதியான வழிகளில் அதைச் செய்ய வேண்டும்:…
தோல்வியில் முடிந்த துருக்கியின் இராணுவப் புரட்சி மலேசியர்களுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட பக்கத்தான் ஹராபான், துருக்கியர்கள் அரசாங்கத்தை மாற்ற விரும்பினால் அமைதி வழிகளில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று கூறியது. “துருக்கியில் இராணுவம் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது ஜனநாயக முறைகளை அப்பட்டமாக மீறும் ஒரு செயல் …
பிஎஸ்எம்: முன்னாள் சர்வாதிகாரியுடன் கூட்டணி இல்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்திருக்கும் பெரும் கூட்டணியில் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) இணையாது. பிஎஸ்எம் குடிமக்கள் பிரகடனத்தை எதிர்க்கிறது. அதனுடன் முன்னாள் சர்வாதிகாரி வழிநடத்தும் எந்த கூட்டணியையும் எதிர்க்கிறது என்று பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் மலேசியாகினியிடம் கூறினார். மகாதிர் அறிவித்திருக்கும்…
புதிய கட்சியை வழிநடத்தும் வலிமை மகாதிருக்கு இல்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட காலமாகிறது என்பதால் விரைவில் அமையவுள்ள புதிய அரசியல் கட்சியை வழிநடத்தும் வலிமை அவருக்கு இல்லை என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி. அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி போன்றோ பிகேஆர் நடப்பில் தலைவர் …
மகாதிரின் புதிய கட்சிக்கு அன்வார் வரவேற்பு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு புதிய கட்சியை அமைப்பது ஓர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். எதிரணியினர் ஒன்றுபட்டிருப்பது முக்கியம் என்பதை வலியுறுத்திய அன்வார், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் போர் …
சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு: அன்வார் வழக்கில் நீதிபதி தீர்ப்பு
சிறையில் உள்ள மலேசியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்த விரும்பினால் அவர்கள் சிறைத் துறை தலைமை இயக்குனருக்கு எழுதி அனுமதி பெற வேண்டும் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. என்றாலும், கடந்த பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலின்போது தாம் வாக்களிக்க அனுமதிக்கப்படாததை …
எம்பி பதவிக்கு முழுக்குப் போடுகிறார் தெங்கு ரசாலி
மலேசியாவில் மிக நீண்ட காலம் எம்பியாக இருந்து வருபவர் தெங்கு ரசாலி. குவா மூசாங் எம்பி ஆன அவர், இதுவே தம் கடைசி தவணை என்கிறார். உத்துசான் மலேசியாவிடம் பேசிய கிளந்தான் இளவரசர் மக்கள் செல்வாக்கு நிறைய இருந்தாலும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் …
பிரான்சில் கூட்டத்தின்மீது லாரி தாக்குதல்: 80பேருக்குமேல் பலி
பிரான்ஸின் நீஸ் நகரில் மக்கள் பேஸ்டில் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வேகமாக ஓடிவந்த ஒரு லாரி வெறித்தனமாக கூட்டத்தில் மோதியதில் 80 பேருக்குமேல் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத -எதிர்ப்பு அதிகாரிகள் அத்தாக்குதல்மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. லாரியில் ஆயுதங்களும் கையெறி …
பிலிப்பீன்ஸ் செல்லும் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு: இந்தோனேசியா பரிந்துரை
அண்மைய மாதங்களாக பிலிப்பீன்ஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடலோடிகள் பலர் கடத்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பிலிப்பீன்சுக்கு ஆபத்து நிரம்பிய வழிகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு இரணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என இந்தோனேசிய தற்காப்பு அமைச்சர் ரியாமிசார்ட் ரியாசூடு பரிந்துரைத்துள்ளதாக வியட்நாம் செய்தி நிறுவனம் (விஎன்ஏ) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் …
உண்மையான எதிரி யார் என்பதை துவான் இப்ராகிம் முதலில் அடையாளம்…
எதிரணியினரிடையே போர் ஒய்வு தேவை என்று பாஸ் துணைத் தலைவர் விடுத்த அழைப்பு காலம்தாழ்த்தி வந்திருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே என்று கூறிய பாஸின் கடும் வைரியான பார்டி அமனா நெகாரா முதலில் அக்கட்சி அதன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்று கூறிற்று. அண்மையில் …
தொழிலாளர் தற்கொலைக்கு முயற்சி: தோட்ட நிறுவனம் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்தது
கடந்த வாரம் தோட்ட நிறுவனமொன்று அந்நிய தொழிலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதை அடுத்து அவருக்குரிய சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டது. “இன்னமும் கொடுக்கப்படாமலிருக்கும் சம்பளத்தையும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ஒரு இழப்பீட்டையும் வழங்க ஒப்புக்கொண்டார்கள்”, என பிஎஸ்எம் துணைத் தலைவர் எம்.சரஸ்வதி கூறினார். பிஎஸ்எம் சம்பளப் பாக்கி பற்றியும் …
சரவாக் ரிப்போர்ட் 1எம்டிபி தணிக்கை அறிக்கையை முழுமையாக வெளியிட்டது
இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தணிக்கை அறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்ட (ஓஎஸ்ஏ)த்தால் பாதுகாக்கப்படும் ஓர் ஆவணமாகும். “தகவல் அளித்தோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க நாங்கள் அறிக்கை முழுவதையும் திரும்பவும் தட்டச்சு செய்தோம். அப்படிச் செய்ததால் …
‘அழுக்குப்பிடித்த’ இந்துக்கள் என்று கூறும் போதனா வில்லைகளை உருவாக்கிய விரிவுரையாளர்…
யுனிவர்சிடி டெக்னோலோஜி மலேசியா (யுடிஎம்)வில், இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரிகம் மீதான பாடத் திட்டத்துக்காக ( தித்தாஸ்) இந்துக்களையும் சீக்கியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாடம் போதிக்கும் பட வில்லைகளைத் தயாரித்திருந்த விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உயர்க் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜுசோ இதைத் தெரிவித்தார். ஒரு சர்ச்சை …
டிஐ-எம்: 1எம்டிபி தணிக்கை அறிக்கைமீதான இரகசியக் காப்பை அகற்ற இதுவே…
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையின் சில பகுதிகள் என்று கூறிக்கொண்டு சரவாக் ரிப்போர்ட் சிலவற்றை வெளியிட்டிருப்பதால் அந்தத் தணிக்கை அறிக்கையின் இரகசியக் காப்புத் தன்மையை அகற்றுவதற்கு இதுவே நல்ல தருணம் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) நம்புகிறது. அந்த அறிக்கை இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதுதான் புரியாத புதிராக …
ஆலயங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன; இம்முறை பேராக்கிலும் கெடாவிலும்
கடந்த இரண்டு மாதங்களில் பினாங்கில் நான்கு ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் இரண்டில்- கெடா, மாஹாங்கிலும் பேராக், செலாமாவிலும்- சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மாஹாங் ஸ்ரீ மகாமுத்துமாரியம்மன் ஆலையத்தில் ஒரு விக்கிரகம் அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஆலய அதிகாரி த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார். அதற்கு …


