ஹங்ரி கோஸ்ட் திருவிழா என்று அழைக்கப்படும் தியோங் குவான் போ தோர் திருவிழா, பினாங்கு மாநில பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசியாவிலேயே இந்தத் திருவிழாவிற்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. ஜூன் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அங்கீகாரமானது, பினாங்கு சமூகங்களின்…
மலேசியாகினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பும் சாலே-க்கு செய்தியாளர் கழகம்…
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் மலேசியாகினிக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளதற்கு மலேசிய செய்தியாளர் கழகம் (ஐஓஜே) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாய்க் குறித்து வெளியிட்ட செய்திகளுக்காக மலேசியாகினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சாலே திங்கள்கிழமையன்று கூறி இருந்தார். “உணர்வுகளைச் சீண்டிவிடும் …
பயங்கரவாத-எதிர்ப்புத் தலைவருக்கு ஐஎஸ் கொலை மிரட்டல்
மலேசியாவில் பயங்கரவாத- எதிர்ப்புப் படையின் தலைவரான ஆயுப் கானுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. புக்கிட் அமானிலிருந்த ஆயுப் கானை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடி கொலை மிரட்டலை விடுத்தார் என த ஸ்டார் ஆன்லைன் …
ஏர் ஏசியா 100 ஏர் பஸ் விமானங்களை வாங்குகிறது
ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா 100 ஏ321நியோ ரக விமானங்களை வாங்குகிறது. இந்த வகை விமானங்களில் 240 பயணிகள் பயணம் செய்யலாம். ஏ321நியோ ரக விமானங்கள் ஆசியாவின் மிகப் பெரிய சிக்கன விமான நிறுவனமான ஏர் …
கடை உடைக்கப்படுவதைத் தடுக்க மந்திரி புசாரிடம் மகஜர்
கோலா சிலாங்கூர் ஜாலான் சுங்கை பூலோவில் உள்ள தன் கடை உடைக்கப்படுவதைத் தடுக்கும் கடைசி முயற்சியாக ஜெய் ஸ்ரீ ராஜூ சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி-இடம் மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளார். “நீண்ட காலமாகவே கோலா சிலாங்கூர் மாவட்ட மன்ற(எம்டிகேஎஸ்)த்தின் அனுமதியுடன் கடை வைத்திருக்கிறேன். இந்தக் கடைக்கு …
மகாதிர் தலைமையில் புதிய கட்சி?
பிரதமர் பதவியிலிருந்து விலகிப் பத்தாண்டுகளுக்குமேல் ஆகும் நிலையில் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரின் இப்போதைய எதிரியான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்க தீவிர அரசியலுக்குத் திரும்பக்கூடும் எனத் தெரிகிறது. மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்த டாக்டர் மகாதிர், தமது 91வது அகவையில் அம்னோவின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டு …
மக்கள் ஆதரவைத் திரும்பப் பெற ஹராபான் உறுதி
பக்கத்தான் ஹராபான் அதன் பலவீனங்களைச் சரிசெய்து இழந்த ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாய் அக்கூட்டணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். இன்று பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வான் அசிசா, தேர்தல்களில் மும்முனைப் போட்டி …
முகைதின்: உண்மையில், துரோகி யார்?
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ளதை வெளியில் கசியவிட்டவர்களை அமைச்சர்கள் நம்பிக்கை துரோகிகள் என்று முத்திரை குத்தியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் உண்மையிலேயே யார் துரோகிகள் எனத் தம் முன்னாள் சகாக்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். 1எம்டிபி-இல் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை …
‘மனிதத்தன்மையற்ற’ நூர் ஜஸ்லான்- அன்வார் வழக்குரைஞர் சாடல்
சிறைக்கைதிகள் அவர்களின் குடும்பத்தாரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதில் தவறில்லை என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறியதில் “பரிவில்லை, மனிதாபிமானம் இல்லை” என பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் சாடினார். “கைதிகளுக்குச் சுதந்திரம் இல்லை” என்பதால் அவர்கள் தங்கள் குடும்பத்தாரைத் தொட்டுப்பேசக்கூடாது என்று …
1எம்டிபி தணிக்கை அறிக்கை தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை மறந்தாரா, நஜிப்?-…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்பு 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை வரும்வரை பொறுமையுடன் இருக்குமாறு கூறியதை மறந்து விட்டாரா என்று வினவுகிறார் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின். அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அதன் சில பகுதிகள் அதிகாரத்துவ …
‘என்னிடம் ஆடம்பரக் கார்களா?’- மறுக்கிறார் சுரைடா
தம்மிடம் ஒன்பது ஆடம்பரக் கார்கள் இருப்பதாகக் கூறப்படுவதை வன்மையாக மறுக்கும் பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் அது தீய நோக்கில் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்று சாடினார். தாம் பயன்படுத்தும் கார்களில் ஒன்று ஒரு “சீன தவக்கே”-யுடையது அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுவதும் …
ஐஜிபி: கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க சிறப்புக் குழு
பினாங்கில் தொடரச்சியாக இந்துக் கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார். அக்குழுவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் இவ்விவகாரம் குறித்து தமக்கு நேரடியாகத் தகவல்…
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் டோல் நிறுவனங்கள் ; சாலைப் பயனர்கள் அல்ல
அரசாங்கம் அவசரத் தடங்களைப் பயன்படுத்தும் சாலைப் பயனர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தவறிய சாலைப் பராமரிப்பு நிறுவனங்களைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான். அவசரத் தடங்கள் அவசர வேளைகளில் பயன்படுத்துவதற்காக மட்டுமே என்பதை ஒப்புக்கொண்ட துவான் …
குவான் எங் கட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம்- டிஏபி
டிஏபி, கட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்ய அடுத்த சில வாரங்களில் அதன் மத்திய செயல்குழுக் (சிஇசி) கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். கட்சித் தேர்தல் இவ்வாண்டில் நடந்தால் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமைச் செயலாளர் பதவியைத் துறக்க வேண்டியிருக்கும் …
பினாங்கில் திடீர் தேர்தலா? டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை
டிஏபி அதன் தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங்மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இரண்டு வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. ஒன்று, லிம்முக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய திடீர் தேர்தலை நடத்துவது. இன்னொன்று, பொதுத் தேர்தலுக்குக் …
பங்களா-கேட் வழக்குக் காரணமாக சீனர்கள் வாக்குகள் மீண்டும் எதிரணிக்கே செல்லும்-…
கெராக்கான் தலைவர் மா சியு கியோங், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வீடு வாங்கியதன்மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதை அடுத்து சீனர்களின் வாக்குகள் மீண்டும் டிஏபி பக்கமே திரும்பிச் செல்லும் என்று நினைக்கிறார். 2015 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ரக்யாட்டையும் டிஏபி-யையும் ஆதரித்த சீன வாக்காளர்களில் 85 …
லஹாட் டத்து கடலில் மூன்று இந்தோனேசியர்கள் கடத்தல்
நேற்றிரவு லஹாட் டத்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்தோனேசியர்கள் ஆயுதந் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டார்கள். நள்ளிரவு நேரத்தில் அச்சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது என பெர்னாமா கூறிற்று. அக்கடத்தல் சம்பவம் தொடர்பில் சாபா போலீஸ் ஆணையர் டத்தோ அப்துல் ரஷிட் ஹருன் இன்று பின்னேரம் செய்தியாளர் கூட்டம் …
‘1எம்டிபி மீதான கணக்காய்வாளர் அறிக்கையை வெளியிட்டால் சரவாக் ரிப்போர்ட் செய்த…
அரசாங்கம் 1எம்டிபிமீதான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் தணிக்கை அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதுதான் சரவாக் ரிப்போர்ட் செய்த தவறு என்னவென்பது தெரிய வரும் என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான். 1எம்டிபி இரகசிய ஆவணம் என்றும் அதன் உள்ளடக்கத்தைத் தப்பும்தவறுமாக சரவாக்…
“டூயிட் ராயா” கேலிச் சித்திரத்திற்காக இஙா மீது தேசநிந்தனை விசாரணை
ஹரிராயா கொண்டாட்டத்தின் போது டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான இஙா கோர் மிங் அவரது முகநூலில் குழந்தைகளும் விருந்தினர்களும் "டூயிட் ரயா" பண உறைகளைப் பெறுவது போலவும் அவற்றை இலஞ்சம் பெறுவதற்கு ஒப்பிட்ட கேலிச் சித்திரம் பதிவு செய்ததற்காக தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் படைத்…
ஸாகிர் நாய்க் குறித்து சமயங்களுக்கிடையிலான அமைப்புக்கு எதிராக பெர்காசா போலீஸ்…
பங்களாதேசம், டாக்காவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்கலில் இஸ்லாமிய போதகர் டாக்டர் ஸாகிர் நாய்க்கை தொடர்புபடுத்தியதற்காக மலேசிய புத்த சமயம், கிறிஸ்த்துவ சமயம், இந்து சமயம், சீக்கிய சமயம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் ஆலோசனை மன்றத்திற்கு (எம்சிசிபிசிஎச்எஸ்டி) எதிராக மலாய் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான பெர்காசா போலீஸ் புகார்…
1எம்டிபி தணிக்கை அறிக்கை சூழ்ந்துள்ள இரகசியம் வெளிவர ஆட்சியாளர் மன்றமே…
1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கையை சுற்றியிருக்கும் இரகசியத்தை வெளிக்கொணர ஆட்சியாளர்களின் மன்றம் தலையிட வேண்டும். அதுதான் மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை. கோலதிரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா காமாருல் பாரின் ஷா ராஜா அஹமட் இவ்வாறு கூறுகிறார், ஏனென்றால் அனைத்து அரசாங்க அமைப்புகளையும் கீழறுப்பு செய்து அரசாங்கம்…
1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையை மறைக்க முயல்வதை பேரரசர் தடுக்க…
சரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கை அறிக்கையின் பல பகுதிகளைக் கசிய விட்டிருப்பதைத் தொடர்ந்து கருத்துரைத்த சட்டப் பேராசிரியர் அசிஸ் பாரி, அந்த ஆவணத்தை மக்களிடமிருந்து தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு அளிக்கவில்லை என்று கூறினார். அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஎஸ்)…
சரவாக் ரிப்போர்ட் ஓஎஸ்ஏ ஆவணங்களை வெளியிட்டிருப்பதை போலீஸ் விசாரணை செய்ய…
சரவாக் ரிப்போர்ட் 1எம்டிபி விசாரணையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் சிலவற்றைக் கசிய விட்டிருப்பது குறித்து போலீஸ் விசாரணை செய்ய வேண்டும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். “சரவாக் ரிப்போர்ட் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வரும் ஒரு ஆவணம் தன் வசமிருப்பதாக அறிவித்திருப்பதை போலீஸ் …
பேங்க் நெகராவின் ‘இன்னொரு கடிதத்தை’ வெளியிட்டிருக்கிறது சரசாக் ரிப்போர்ட்
லண்டனைத் தளமாகக் கொண்டு இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி வரும் சர்வாக் ரிப்போர்ட் இப்போது 1எம்டிபி தொடர்பான மேலும் ஒரு முக்கிய ஆவணத்தை வெளிட்டிருப்பதாகக் கூறிக் கொள்கிறது. அது பேங்க் நெகாரா துணை ஆளுனர் எழுதிய இரண்டாவது கடிதம் என்று அது கூறிக்கொண்டது. பேங்க் நெகாராவிலிருந்து பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்கு அனுப்பப்பட்ட …


