2013-இல் செய்திகளின் நாயகர்………….

கடந்த பத்தாண்டுகளாக மலேசியாகினி வாசகர்கள் அந்தந்த ஆண்டில் செய்திகளின் நாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். எவரொருவர் “அவரது செயல்களால் செய்தித் தலைப்புகளில் இடம்பெற்று, பொதுமக்களிடையே வாத-எதிர்வாதங்களைத் தோற்றுவித்து, நல்லதாகவோ கெட்டதாகவோ ,அரசியலில் தாக்கத்தையும் உண்டுபண்ணுகிறாரோ” அவரே செய்திகளின் நாயகர் ஆகிறார்.  அந்த வகையில் 2013-இல் செய்திகளின் நாயகராக தேர்வு…

ஊடகங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது வழக்குரைஞர் மன்றம்

வார இதழ் த ஹீட் மீதான தடை விதிப்பைக் குறைகூறும் “சில தரப்புகளுக்கு” உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்திருப்பது வருத்தம் அளிப்பதாக வழக்குரைஞர் மன்றம் கூறியது. நிர்வாகத்தின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் கருத்துரைப்பதும் ஜனநாயகத்தின்  இன்றியமையாக் கூறாகும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிரிஸ்டபர் லியோங் கூறினார்.…

பிரதமரின் முகநூலில் அதிருப்தியாளர் கருத்துகள் குவிந்தன

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்தவர்கள் தங்கள் மனக்குறைகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முகநூலில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். பெரும்பாலோர் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்தி அவை மீறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.  

போலீஸ்: என்ஜிஓகள் குண்டுவெடிக்கத் திட்டமிட்டிருப்பதாக சொல்லவில்லை

கோலாலும்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங், டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளும் 4 என்ஜிஓ-கள்  குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன எனத் தாம் சொன்னதில்லை என்கிறார். பேரணியில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் குண்டுகளை வெடிக்கும் அபாயம் இருப்பதை மட்டுமே தாம் சுட்டிக்காட்டியதாக அமர் கூறினார். அவரின் விளக்கம்…

தமிழ்ப்பள்ளிகள் ம.இ.காவின் சொத்து அல்ல! அது மக்கள் சொத்து!

 தமிழ்ப்பள்ளிகள் என்றுமே ம.இ.கா சொத்தாக இருந்ததில்லை. சுதந்திரத்திற்கு பின்பும் சரி முன்பும் சரி அது சராசரி மக்களின் ஆதரவோடு அவர்கள் பிள்ளகள் அங்கு  படிப்பதால்  இன்றுவரை தாக்குப் பிடித்து வந்துள்ளது என்கிறார் ஈப்போ பாராட்  நாடாளுமன்ற உறுப்பினர் .மு.குலசேகரன். மஇகா-வின் ஆரம்பகாலத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது வரலாற்று உண்மை.  ஆனால் வெகுசன…

ஜாஹிட்: பேரணி விவகாரத்தில் விட்டுக்கொடுப்பதற்கில்லை

டிசம்பர் 31-இல் விலை உயர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சி என்று கூறிய  உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி  அவ்விவகாரத்தில் அரசாங்கம் “விட்டுகொடுக்கத் தயாராக இல்லை” என்றார். பேரணியில் மக்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அஹ்மட் ஜாஹிட், பேரணி நடத்தும் திட்டத்தைக் கைவிடுமாறு…

பிஎஸ்எம்: பேரணி தேவையா என்பதை முடிவு செய்வது போலீசின் வேலை…

போலீசின் வேலை பாதுகாப்பை நிலைநிறுத்துவதுதான். விலை உயர்வுகளுக்கு எதிராக மக்கள் பேரணி நடத்தலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதல்ல. “மின்கட்டணம், நெடுஞ்சாலைக் கட்டணம் உள்பட பல்வேறு பொருள்களின் விலை உயர்வுகளுக்கு எதிராக பேரணி நடத்தும் மக்களின் உரிமையைத் தடுக்க போலீஸ் அறிக்கை விடுத்திருப்பது மக்களின் உரிமைகளில் தலையிடும் செயலாகும்.…

2014-இல், என்னவெல்லாம் விலை உயரும்?

ஒரு கண்ணோட்டம்  நாட்டின் பற்றாக்குறை நிலயைச் சரிப்படுத்தும் முயற்சியாக அரசாங்கம், அத்தியாவசிய பொருள்கள் பலவற்றுக்கு கொடுக்கப்பட்டுவந்த உதவித்தொகையை நிறுத்தியது அல்லது  குறைத்தது. அதனைக் “குறுகிய-கால வலிதரும் நடவடிக்கை” என்று  குறிப்பிட்ட அரசாங்கம், நிதிநிலையின் நீண்டகால நன்மையைக் கருதி அதனைச் செய்ய வேண்டியது  அவசியமாயிற்று என்றது. அந்நடவடிக்கையின் தொடர் விளைவாக…

மக்களின் நலனுக்கான போராட்டத்தை இரட்டிப்பாக்க இணைந்து காலடி எடுத்து வைப்போம்,…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், டிசம்பர் 30, 2013.   வணக்கம், அன்புடன் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக சில மாநிலங்களில், மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள இரண்டுக்கட்சி ஆட்சிமுறை, குறுகிய காலத்திலேயே மக்களுக்குச் சிறந்த பயனைத் தந்துள்ளது.…

பினாங்கு பிகேஆர் பிரதிநிதிகள் மலேசியாகினி கட்டிட நிதிக்கு உதவினர்

பெட்டாலிங் ஜெயாவில் புதிய கட்டிடம் வாங்கும் மலேசியாகினிக்கு உதவும் வகையில்  பினாங்கின் பிகேஆர் பிரதிநிதிகள் மூவர் ஆளுக்கு ஒரு கல் வாங்கி உதவினர். ஊடகச்  சுதந்திரத்தை  நிலைநிறுத்தி வரும்  மலேசியாகினிக்கு ஆதரவாக அதன்  ‘ஒரு கல் வாங்குவீர்’ இயக்கத்தில் தாங்களும்  சேர்ந்துகொள்வதாக  அவர்களில் ஒருவரான மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்…

அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி செய்கிறது, வேறு யாருக்கெல்லாம்?

உங்கள் கருத்து  ‘அம்னோவுக்கு வெளியில் இருந்துகொண்டு அம்னோவின் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்புத்தான் பெர்காசா என்பது உலகம் அறிந்த இரகசியம். அது உண்மை என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.’ பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது அமைதி ஏற்பாட்டாளர்: அப்படியானால், பெர்காசாவின் கோணங்கித்தனங்களை உள்துறை அமைச்சு…

ரபிஸியை விசாரணைக்காக அழைத்தது போலீஸ்

போலீசார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். டிசம்பர் 31, விலை-உயர்வுக்கு எதிரான பேரணி தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “டிசம்பர் 31-இல் குறிப்பிட்ட சில இடங்களில் குண்டுகள் வைப்பதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக  அம்னோ வலைப்பதிவுகள் கிளப்பி விட்டிருக்கும்…

டிஏபி: மலேசியா அம்னோவின் சொத்தல்ல

பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறிய குவாந்தான் அம்னோ மகளிர் தலைவி ஜைதோன் மாட்-டை பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு கடிந்து கொண்டார். “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வது ஏன்? “வியர்வைச் சிந்தி நாட்டைக் கட்டி வளர்த்தவர்களைப் பார்த்து நாட்டைவிட்டு…

ஹோலிரோடு தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயம்?, குலா எச்சரிக்கை!

-மு. குலசேகரன், டிசம்பர் 28, 2013.  தைப்பிங்கிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ள சிலாமாவிற்கு  அருகாமையில் அமைந்திருக்கும் ஹோலிரோடு தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி வருகின்ற ஆண்டு மூடப்படும் என்பது உறுதியாகிவிட்டது.   ஒரே ஒரு மாணவனைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பள்ளியானது அந்த மாணவனும் இந்த வருடம் 6…

கம்போங் ரயில்வே: ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத் திட்டத்தைச் சாடுகிறது…

கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்ட இணையச் செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடே (ஃஎப்எம்டி) மீதும் தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) திட்டமிட்டிருப்பதை அரசுசார்பற்ற அமைப்பு ஒன்று சாடியுள்ளது. “செந்தூலில் கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி…

மகாதிர் அவர்களே,செலவைக் குறைப்பதா; எப்படி?

உங்கள் கருத்து ‘குத்தகைகளுக்கு வெளிப்படையான டெண்டர்முறை கிடையாது, அம்னோ அல்லக்கைகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது- எல்லாம் மகாதிர் ஆட்சியின் எச்சங்கள்’ விலைகளை உயர்த்தாமல் செலவுகளைக் குறைப்பீர்: அரசாங்கத்துக்கு மகாதிர் அறிவுறுத்தல் விழிப்பானவன்: செலவுகளைக் குறைக்க முடிந்தால் எந்தத் தொழிலதிபராவது குறைக்காமல் இருப்பாரா? சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு தரப்புக்கு…

செய்தியாளர்களின் ‘சிகப்பு பென்சில்’ போராட்டம்

சினம் கொண்ட ஊடக இயக்கம் (கெராம்), வாராந்திர செய்தி இதழான த ஹீட் மீதான தடைவிதிப்புக்கு எதிர்ப்பது உள்பட, பத்திரிகைச் சுதந்திரம் கோரி அடுத்த சனிக்கிழமை கண்டனக் கூட்டமொன்றை நடத்தும். ‘சிகப்பு பென்சில்’ என்ற தலைப்பில் அக்கண்டனக் கூட்டம் கோலாலும்பூரில் நடைபெறும் என நேற்றிரவு நடைபெற்ற ‘ஊடகத்துக்குச் சுதந்திரம்…

பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் நிதிஉதவி செய்கிறது

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி அளிக்கிறதாம். சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹ்யா இவ்வாறு கூறினார். இந்த நிதியுதவியைப் பகிரங்கப்படுத்திய பெல்டா தலைவர் இசா சமட்டை அவர் சாடியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. “கட்சி மூத்த தலைவர் என்ற…

அரசுக் கவிழ்ப்பு முயற்சி என்று கூறி விலை உயர்விலிருந்து கவனத்தைத்…

பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணியை “அரசாங்கத்தைக் கவிழ்க்கும்” பேரணி என முத்திரை குத்துவது பேரணியின் உண்மையான நோக்கத்திலிருந்து “கவனத்தைத் திருப்பும்” முயற்சியாகும் என துருன் தலைவர் அஸான் சபார் கூறினார். “நாங்கள் அமைதியாக ஒன்றுகூடுவோம். சினமூட்டும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். அரசாங்கத்தைக்…

த ஹீட் தடைவிதிப்பில் பிரதமர் தலையிட வேண்டும்

வார இதழான த ஹீட் தடைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில்(பிஎப்ஐ) மலேசியாவின் தகுதிமதிப்பீடு மியான்மாரைவிடவும் தாழ்ந்து போகலாம். டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், ரிப்போர்டர்ஸ் வித்தவட் போர்டர்ஸ் அமைப்பின் 2011/2012  பத்திரிகைகளின் தரவரிசையில்…

‘த ஹீட்’ தடைவிதிப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது

வார இதழான த ஹீட்- டுக்குத் தடை விதித்தது மனந் திறந்த விவாதங்களுக்கு இடமளிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்கிறார் யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) விரிவுரையாளர் மஸ்லி மாலிக். அச் செய்தித்தாளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் நோக்கில்  உள்துறை அமைச்சு அந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றாரவர். “நிர்வாக, அரசியல் விவகாரங்களில்…

அது மக்கள் நடத்தும் பேரணி, அதனால் அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை

பல்வேறு பொருள்களின் விலை உயர்வுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும்  டிசம்பர் 31 பேரணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாதிருக்கலாம்,  ஆனால் அதற்காக பேரணி நடத்த முன்மொழிந்த என்ஜிஓ-வான துருன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. “எங்களைப் பொறுத்தவரை,  பேரணி மக்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.  நாங்கள் அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்.  நாங்கள்…

கெராக்கான்: பிஎன் பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்

பிஎன் அரசாங்கம்,  மலாய் மேலாதிக்கத்துக்குப் போராடி வரும் அமைப்பான பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பதன்வழி தனக்குத் தானே குழிபறித்துக்கொள்கிறது என கெராக்கான் கூறியது. அது வாக்காளர்களால், நகர்ப்புறங்களில் மலாய் வாக்காளர்களால்கூட புறக்கணிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்றது வருணித்தது. பிஎன் நோக்கங்களுக்கு எதிரான ஓர் அமைப்புப்போல் பெர்காசா செயல்பட்டு வந்துள்ளது எனக்…