ஹங்ரி கோஸ்ட் திருவிழா என்று அழைக்கப்படும் தியோங் குவான் போ தோர் திருவிழா, பினாங்கு மாநில பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசியாவிலேயே இந்தத் திருவிழாவிற்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. ஜூன் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அங்கீகாரமானது, பினாங்கு சமூகங்களின்…
பில் காயோங் கொலை தொடர்பில் ஐவர் கைது
ஜூன் 21-இல், பிகேஆரின் மீரி கிளை செயலாளர் பில் காயோங் லூத்தோங்கில் கொலையுண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் ஐவரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். 22க்கும் 41வயதுக்குமிடைப்பட்ட அவர்களில் நால்வர் ஆண்கள், ஒருவர் பெண். அந்த ஐவரும் நேற்றிரவும் இன்று காலையும் செய்யப்பட்டதாக சரவாக் சிஐடி தலைவர் எஸ்ஏசி தேவ் …
சீனர்களிடையே மதிப்பைக் கூட்டிக்கொள்ள அஸ்மின் அதிகம் செய்ய முடியும்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் அடைவுநிலைமீது மெர்டேகா மையம் நடத்திய ஆய்வில் மந்திரி புசார் நன்றாகவே செயல் படுகிறார் என்று பெரும்பாலோர் கருத்துத் தெரிவித்திருந்தாலும் மலாய், இந்திய வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில் சீனர்களில் 54 விழுக்காட்டினர் மட்டுமே அவர்மீது திருப்தி கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், சீனர்களில் 54 …
பினாங் டிஎபி: குவான் எங் பதவி துறக்க வேண்டியதில்லை
பினாங் முதலமைச்சர் குவான் எங் பதவி துறக்கவோ விடுமுறையில் செல்லவோ வேண்டியதில்லை என்று பினாங் மாநில டிஎபி இன்று முடிவெடுத்துள்ளது. இன்று காலையில் குவாங் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவான் எங்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை.…
எரிபொருள் விலை கூடுகிறது
நாளையிலிருந்து எரிபொருள் விலை அதிகரிப்பு காண்கிறது. ஒரு லீட்டர் ரோன்95 ரிம1.75 க்கும், ரோன்97 ரிம2.10 க்கும் மற்றும் டீசல் ரிம1.60 க்கும் விற்கப்படும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் விலை உயர்வு இதுதான்.
எம்டியுசி: விமான நிறுவனம் ராயாவுக்கு முன்பே பணியாளர்களின் சம்பளப் பாக்கியைக்…
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), ஒரு விமான நிறுவனம் அதன் பணியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பாக்கியை ஹரி ராயாவுக்கு முன்பே கொடுத்தாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 300 பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கான சம்பளமும் ஆறு மாதங்களாக அலவன்சுகளும் கொடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறினார்கள்.…
அடுத்த பொதுத் தேர்தலில் பல்முனைப் போட்டிதான், வேறு வழியில்லை- அமனா
பார்டி அமனா ரக்யாட், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னையும் பாஸையும் எதிர்த்து பல்முனைப் போட்டிகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதை அதன் பக்கத்தான் ஹராபான் தோழமைக் கட்சிகளுக்கு நினைவுபடுத்தியது. இதனை எதிர்கொள்ள கூட்டணி தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அமனா தொடர்பு இயக்குனர் காலிட் சமட் நேற்றிரவு ஒரு …
ஹரி ராயா ஜூலை 6 என்றால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை…
ஜூலை 6-இல் ஹரி ராயா கொண்டாடப்பட்டால் ஜூலை 8 அரசுப் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை கொடுக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா அறிவித்தார். ஆனால், ஹரி ராயா ஜூலை 5 என்றால் சிறப்பு விடுமுறை கிடையாது.
குவான் எங்மீது விரைவாக செயல்பட்டதுபோல் 1எம்டிபி விசயத்தில் செயல்படாதது ஏன்?…
அதிகாரிகள் அதிவேகமாகச் செயல்பட்டு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்மீது நடவடிக்கை எடுத்திருக்கும் விதத்தைச் சமூக அமைப்புகள் குறைகூறியுள்ளன. அவ்விவகாரம்மீது தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டிருக்கும் பெர்சேயும் ஊழல் எதிர்ப்பு அமைப்பான சி-4ம், மற்ற ஊழல் வழக்குகளில், 1எம்டிபி ஊழல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பில்லியன் ரிங்கிட் நன்கொடை …
குவான் எங், பாங் லி குற்றச்சாடுகளை மறுத்து விசாரணை கோரினார்
பினாங்கு மாநில முதலமைச்சர் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பினாங்கு ஜியோர்ஜ் டவுன் செசன்ஸ் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பின்னர், சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்பாண்டியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வழக்கை பினாங் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சம்மதம்…
போலீசார் விடுவிக்கப்பட்டது மலேசியாவின் மனித உரிமை கடப்பாட்டின்மீது சந்தேகம் கொள்ள…
மலேசியா எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரும் கடப்பாட்டில் அக்கறை கொண்டிருக்கிறது என அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. என். தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அது இப்படி வினவியது. அந்நால்வரும் 2013--இல், போலீஸ் காவலில் …
குவான் எங் நீதிமத்திற்கு கொண்டுவரப்பட்டார்
போலீசாரும் எம்எசிசி புடைசூழ பினாங் மாநில முதலமைச்சர் குவான் எங் இன்று காலையில் நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். மலேசிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் 2009 செக்சன் 23 மற்றும் குற்றவியல் சட்டம் செக்சன் 165 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்.…
குவாங் எங் கைது செய்யப்பட்டார்
பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் எதிரிப்பு ஆணயத்தால் (எம்எசிசி) இன்று மாலை கைது செய்யப்பட்டார். குவான் எங் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் நாளை காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் அவரின் தந்தையும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம்…
காரில் சென்று கொண்டிருந்த நிறுவன மேலாளர் சுடப்பட்டார்
சிரம்பானிலிருந்து கோலாலும்பூரில் உள்ள தம் அலுவலகத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்த ஒரு நிறுவனத்தின் பொது மேலாளர் இன்று சுடப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் ஆறு தடவை அவரை நோக்கிச் சுட்டனர் என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் கூறினார். வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் தேசா …
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் நஜிப் சிலாங்கூரைத் திரும்பக் கைப்பற்றுவார்
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் வெற்றி பெறுவார், சிலாங்கூரைக்கூட அவர் திரும்பக் கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார் நஜிப்பின் மிகப் பெரிய எதிரியான டாக்டர் மகாதிர் முகம்மட். “இப்போதைக்கு எதிரணி சீர்குலைந்து கிடக்கிறது. அவர்கள் (தேர்தலைச் சந்திக்க) தயாராக இல்லை. பிஎன்னிடம் இருப்பதுபோன்ற தேர்தல் …
அடுத்த தேர்தலுக்கு மிகப் பெரிய கூட்டணி அமைக்க பிஎஸ்எம் திட்டம்
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தொழிற்சங்கங்கள், என்ஜிஓ-கள், பல்வேறு சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு மாபெரும் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் முன்வைத்திருக்கிறார். இல்லையேல், நடப்பு நிலவரம் தொடரும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் அனைவருக்கும் தோல்வி நிச்சயம் என்றவர் எச்சரித்தார். நேற்றிரவு …
போலீஸ்: பயங்கரவாதிகள் என்றால் அருகில் உள்ள கேளிக்கை விடுதிகளைத் தாக்கி…
பூச்சோங் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் செயலல்ல ; அது குண்டர் கும்பல் சச்சரவுடன் தொடர்புடையது என்று போலீசார் வலியுறுத்துகிறார்கள். “ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த எண்ணியிருந்தால் அதற்குப் பக்கத்திலேயே இன்னொரு கேளிக்கை விடுதி இருக்கிறது, அப்போது அங்கு 80, 90…
நஜிப்பை இடி அமினுக்கு ஒப்பிட்ட மகாதிரிடம் போலீஸ் விசாரணை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உகாண்டா சர்வாதிகாரி இடி அமினைப் போன்றவர் என்று வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை போலீசார் விசாரணை செய்கிறார்கள். இதனை உறுதிப்படுத்திய மகாதிரின் வழக்குரைஞர் புத்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா …
பகாங் மாநில முப்தியின் அறிக்கையின் பிரதிபலிப்பா பூச்சோங் ஜெயா குண்டு…
மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் நாட்டை மிக ஆபத்தான காலத்தை நோக்கி இட்டுச் செல்கிறார் என்பதற்கு சான்றாக பூச்சோங் ஜெயா ப்போல்வட் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இன சமய விவகாரங்களை தூண்டும் ஆபத்தான போக்கினை எல்லா மலேசியர்களும் நீண்டக்காலமாக தவிர்த்து வந்துள்ளனர். …
பங்: செம்போர்னாவில் உறுப்பினர்கள் வெளியேறியதுபோல் பாகோ, கெடா அம்னோவிலும் நிகழ்ந்து…
பாகோ எம்பி முகைதின் யாசினும் கெடா முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் கட்சிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பாகோவிலும் கெடா அம்னோவிலும் உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்சியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பங் மொக்தார் ரடின் …
ஹுஸ்னியும் வாஹிட்டும் 1எம்டிபி ஊழலுக்குப் பயந்து ஓடினார்களா? மாபுஸ் கேள்வி
1எம்டிபி ஊழல் சர்ச்சை தொடரும் வேளையில் நிதி விவகாரங்களைக் கவனித்து வந்த இரு அமைச்சர்கள் , ஹுஸ்னி ஹனட்ஸ்லாவும் அப்துல் வாஹிட் ஒமாரும் பதவி விலகியது ஏன் என்று பாஸ் எம்பி மாபுஸ் ஒமார் கேட்கிறார். “ஹுஸ்னியும் வாஹிட்டும் பதவி விலகியது ஆயிரத்தொரு கேள்விகளை எழுப்புகிறது..... நாட்டை உலுக்கிக்…
‘மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கத்தில் சேர வாரீர்’- ஹுஸ்னிக்கு ஜைட் அழைப்பு
டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தலைமையில் செயல்படும் மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கத்தில் சேர்ந்து கொள்ள முன்னாள் இரண்டாவது நிதி அமைச்சரான ஹுஸ்னி ஹனாட்ஸ்லாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜைட் இப்ராகிம். ஹுஸ்னி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய செய்தி அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அவர் அம்னோ பொருளாளர் பதவி உள்பட அம்னோவிலும் பிஎன்னிலும் …
அமைச்சரவை சீரமைப்பு: சரவாக் தலைவர்களுக்கு ஏமாற்றம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்த அமைச்சரவை சீரமைப்பு சரவாக் தலைவர்கள் பலருக்கு ஏமாற்றமளித்துள்ளது. பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) மூத்த உதவித் தலைவர் டக்லஸ் உங்கா எம்பாஸ், தாம் காலி செய்த தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சுக்கு ஒரு சரவாக்கியர்தான் நியமிக்கப்படுவார் என்று …
‘காஃபீர் ஹர்பி’ விவகாரத்தில் பகாங் சுல்தான் மெளனம் கலைய வேண்டும்
பகாங் முப்தி இஸ்லாத்தை எதிர்க்கும் முஸ்லிம்- அல்லாதார் ‘காஃபீர் ஹர்பி’ என்று முத்திரை குத்தியிருப்பது குறித்து பகாங் சுல்தான் கருத்துரைக்க வேண்டும் என அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களில் சுல்தான்களே இஸ்லாமிய சமயத் தலைவர்களுமாவர் என்பதால் பகாங் முப்தி மாநில சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டவராகிறார்.…


