பினாங்கு தேவாலய விவகாரத்தைக் கவனிக்க தனி போலீஸ் படை

பினாங்கில்  தேவாலயங்களுக்கு  வெளியில் “ஏசுநாதர்  அல்லாவின் பிள்ளை” என்று  வாசகம்  பொறிக்கப்பட்ட  பதாதைகள்  காணப்பட்டதன்  தொடர்பிலும்  அஸ்ஸம்ஷன்  தேவாலயத்தில்  பெட்ரோல்  குண்டு  வீசப்பட்டது  தொடர்பிலும்  போலீஸ்  இதுவரை  16  புகார்களைப்  பெற்றுள்ளது. “நேற்றிரவு  அசம்பாவிதம்  எதுவும்  இல்லை. அதற்கு  இறைவனுக்கு  நன்றி”,  என மாநில  போலீஸ்  தலைவர்  அப்துல்…

காஜாங்கில் போட்டியிடாதீர்: பிஎன்னுக்கு அன்வார் கோரிக்கை

காஜாங்  இடைத்  தேர்தலால்  வீண்  செலவுதான்  என்று  தேர்தல்  ஆணையம்  நினைக்குமானால்  ‘பிஎன்  அதில்  போட்டியிடாமல்  ஒதுங்கி  இருக்கலாம்’.  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.  காஜாங்கில்  களமிறங்க  ஆயத்தமாகிவரும்  அன்வார்,  பிகேஆர்  “அதன்  பணிகளைத்  தொடர  இடமளித்து” பிஎன் தேர்தலில்  குதிக்காமல்  ஒதுங்கிக்  கொள்ளலாம்  என்றார்.…

காஜாங்கில் அன்வார்தான் போட்டியிடுகிறார்: பிகேஆர்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்தான்  காஜாங்கில்  போட்டி  இடுகிறார்.  இதை  அக்கட்சி  இன்று  உறுதிப்படுத்தியது. சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிமே   பிகேஆர்  தலைமையகத்தில்  அம்முடிவை  அறிவித்தார். அன்வார்  பொறுப்பேற்கும்வரை  “இடைக்காலத்துக்கு” மந்திரி  புசார்  பணியைத்  தாம்  தொடரப்போவதாகவும்  அவர்  சொன்னார். காஜாங்கில்  இடைத் தேர்தலுக்கு …

பொதுப்பணம் விரயம் செய்யப்படுவதைக் குற்றமாக்குவீர்

அரசுப்  பணியாளர்கள்  கவனக்   குறைவால்  பொதுப்  பணத்தை  விரயம் செய்தலைக்  குற்றமாக்க  ஒரு  சட்டம்  கொண்டுவரப்பட்டால்  அதற்கு  தம்  ஆதரவு  நிச்சயம்  உண்டு  என்கிறார்  நாடாளுமன்ற பொதுக்  கணக்குக்  குழுத்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட். ஆனால்,  தவறிழைக்கும்  அரசுப்  பணியாளர்கள்மீது  தலைமைச்  செயலாளரோ,  அமைச்சர்களோ  நடவடிக்கை  எடுப்பார்களானால் …

அன்வார் காஜாங்கில் களமிறங்க பிகேஆர் இளைஞர் ஆதரவு

பிகேஆர்  இளைஞர்  பகுதி,  விரைவில் நடக்கும்  என  எதிர்பார்க்கப்படும்  காஜாங்  இடைத்  தேர்தலில்  அன்வார்  இப்ராகிம்  போட்டியிடுவதை  மட்டுமே  தான்  ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஷம்சுல் இஸ்கண்டர்  முகம்மட்  அகின்  விடுத்துள்ள  அறிக்கை,  அப்துல் காலிட்  இப்ராகிமை  மந்திரி புசார்  பதவியிலிருந்து  அகற்றும்  நாடகம்  விரைவில் …

பதவி பறிப்பா?, அப்படி ஒன்றும் இல்லை, காலிட்

  காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் புரட்சியா என்ற கேள்விக்கு, "அப்படி ஒன்றும் இல்லை", என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார். "ஒரு மந்திரி புசாரின் நியமனத்திற்கு…

முகைதின் நிகழ்ச்சியில் மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு

துணைப்  பிரதமர்  அலுவலகம்  அதன்  செய்தியாளர்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  மலேசியாகினிக்கு  அனுமதி  இல்லை  என்று  கூறித்  தடுத்தது. இன்று  பிற்பகல், பாங்குனான்  பெர்டானா  புத்ராவில் “உயரும்  வாழ்க்கைச்  செலவுகள்” மீது  முகைதின்  யாசின்  செய்தியாளர் கூட்டமொன்றை  நடத்தினார். அதில் செய்தி  சேகரிக்கச்  சென்ற   மலேசியாகினி  செய்தியாளர்   கூட்டத்துக்குச் செல்ல …

நிதானம் காப்பீர்: கிறிஸ்துவ கூட்டமைப்பு வேண்டுகோள்

பினாங்கு  தேவாலயத்துக்குள்  பெட்ரோல்  குண்டுகள்  வீசிப்பட்ட  சம்பவம்  தொடர்பில்  ஆத்திரம்  கொள்ளாமல்  பொறுமை  காக்க  வேண்டும்  என மலேசிய  கிறிஸ்துவ கூட்டமைப்பு (சிஎப்எம்)  கிறிஸ்துவர்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. “வெறுக்கத்தக்க  செயல்களான”  இதுவும்  இதற்குமுன்  பினாங்கில்  பல்வேறு  தேவாலயங்களில்  ‘ஏசுநாதர்  அல்லாவின்  மகன்’  என்ற  வாசகம்  பொறிக்கப்பட்ட  பதாதைகள்  தொங்கவிட்ட  சம்பவங்களும் …

த ஹீட் மீதான தற்காலிகத் தடை நீக்கப்பட்டது

த ஹீட் மீதான   தற்காலிக  தடை  விதிப்பை  அரசாங்கம்  அகற்றியுள்ளது. பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  துணைவியாரும்   அளவுமீறி  ஆடம்பரச்  செலவு  செய்வதாகக்  கட்டுரை  வெளியிட்டதை  அடுத்து  அவ்விதழுக்குத்  தற்காலிக  தடை  விதிக்கப்பட்டிருந்தது.  தடைவிதிப்பு  நீக்கப்பட்டதைத்  தெரிவிக்கும்  கடிதம் ஒன்று  இன்று  மாலை  அந்த  வார இதழுக்கு …

குலா: அடித்த ஆசிரியரை அடிவாங்கிய துணை அமைச்சர் மன்னித்து விட்டேன்…

  அடித்தவர் ஆசிரியர். அடிவாங்கியவர் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். அவரை இவர் மன்னித்து விட்டதாக கூறுவது ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்னையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அடிவாங்கிய துணை அமைச்சர் கமலாநாதன் கூற்றுப்படி அது அவருக்கும் அடித்த உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர்…

10-அம்சத் தீர்வை மாநிலச் சட்டங்களுடன் இணைக்கலாம்

பிரதமர்துறையில் சமய  விவகாரங்களுக்குப்  பொறுப்பாகவுள்ள  அமைச்சர்  ஜோசப்  குருப், அமைச்சரவையின்  10-அம்சத்  தீர்வுக்கு  ஏற்ப  மாநிலச்  சட்டங்களில்  திருத்தம்  செய்வது  பற்றி  கூட்டரசு, மாநில  அரசுகள்  பேச்சு  நடத்தலாம்  என்று  பரிந்துரைத்துள்ளார்.   “இரண்டையும் (10-அம்சத் தீர்வையும்  மாநிலச்  சட்டங்களையும்) இணப்பதற்கு  ஒரு  தீர்வு   காண்பது  குறித்து  விவாதிக்கலாம்”, என்றவர்  …

பிகேஆர் காஜாங் பிரதிநிதி பதவி விலகல்: அங்கு அன்வார் போட்டியிடுவார்?

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  ஊகம்  பரவி  வரும்  வேளையில்  அதற்கு  மேலும்  வலுசேர்ப்பதுபோல்  பிகேஆர்  பிரதிநிதி  ஒருவர்  தம்  சட்டமன்ற  இடத்தைக்  காலி  செய்துள்ளார். காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ, இன்று  பிற்பகல் பெருந் தலைவர்  அன்வார் …

மஇகா ரமணன் பதவி விலகல்

மஇகா  தலைமை பொருளாளர்  ஆர். ரமணன், நான்காண்டுகளுக்குமுன்  உளவியல்  மருத்துவர்  ஒருவரிடமிருந்து   ரிம5 மில்லியன்  மோசடி  செய்து   பெற்றதாக அண்மையில்  உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத்  தொடர்ந்து  பதவி  விலகினார். தீர்ப்பை  எதிர்த்து  ரமணன்  மேல்முறையீடு  செய்துள்ளார். அதில்  முடிவு  தெரியும்வரை  அவர்  பதவி  விலகி  இருப்பதாக  உத்துசான்  மலேசியாவின் …

தேவாலயத்துக்குள் மொலடோப் குண்டுகள் வீசி எறியப்பட்டன

இன்று  அதிகாலை  பினாங்கு  லெபோ  பார்க்குவார்  அஸ்ஸம்ஷன்  தேவாலயத்துக்குள்  பெட்ரோல்  குண்டுகள்  வீசி  எறியப்பட்டன. அதிகாலை  1.30 மணி அளவில்  மோட்டார்  சைக்கிளில்  வந்த  இருவர் இரண்டு பெட்ரோல்  குண்டுகளை  வீசி  எறிந்ததாக  பினாங்கு  போலீஸ்  தலைவர் அப்துல்  ரஹிம்  ஹனாபியை  மேற்கோள்காட்டி  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்தது.…

சிலாங்கூர் எம்பி பதவியை எடுத்துக்கொள்ளவில்லை: அன்வார் மறுப்பு

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியை அப்துல்  காலிட்  இப்ராகிமிடமிருந்து   எடுத்துக்கொள்ளப்போகிறார்  என்று  உலவும்  செய்தியை மறுத்தார்.  அதை வெறும்  ஊகம்  என்று  ஒதுக்கித்தள்ளிய  அன்வார்,  கடந்த  வாரம்  காலிட்டைச்  சந்தித்தது  அவரது  பதவி  விலகல்  பற்றிப்  பேசுவதற்கு  அல்ல  என்றார். “ஒவ்வொரு …

அல்லாஹ் சர்ச்சைமீது நோ-காலிட் விவாதம் இரத்து

‘அல்லாஹ்’ சர்ச்சை  தொடர்பில்  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமாருக்கும்  மாநில  பாஸ் தலைவர்  காலிட்  சமட்டுக்குமிடையில்  நடைபெறவிருந்த  விவாதம்  இரத்துச்  செய்யப்பட்டது.  மலாய்   நாளேடான   சினார்  ஹரியான்  ஏற்பாட்டில் இன்று  பிற்பகல்  மணி  2க்கு  அது  நடப்பதாக  இருந்தது. ஆனால், அது  இரத்துச் செய்யப்படுவதாக  நேற்றிரவு  அறிவிக்கப்பட்டது. …

பெர்னாஸை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுவதை முக்ரிஸ் தடுக்க வேண்டும்

பாடிபிராஸ்  நேசனல்  பெர்ஹாட் (பெர்னாஸ்)-டைப்  பங்குச்சந்தை  பட்டியலிலிருந்து  அகற்றும்  முயற்சியை  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்  தலையிட்டுத்  தடுக்க வேண்டும்  என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது.  மலேசியாவின்  நெற்களஞ்சியம்  என்று  போற்றப்படும்  மாநிலத்தின்  விவசாயிகளைப் பாதுகாக்க  அது  அவசியம்  என  அலோர்  ஸ்டார்  எம்பி  குய்  ஹிஸியாவ்  லியோங்  கூறினார்.…

பதற்ற நிலைக்கு பினாங்கு அம்னோ காரணமல்ல

பினாங்கு  அம்னோ, அங்கு பதற்றமிக்க  சூழல்கள்  உருவானதற்கு  அதுதான்  காரணம்  என்று  கூறப்படுவதை  மறுத்துள்ளது.  ஆனால்,  பதற்றத்தை  உண்டுபண்ணியவர்களின்  மனநிலையைப்  புரிந்துகொண்டிருப்பதால்  அவர்களுக்கு  ஆதரவளிப்பதாக  அது  கூறிக்கொண்டது.  செபராங்  ஜெயாவிலும்  அல்மாவிலும் நடந்த  பேரணிகளுக்கும்  தனக்கும்  தொடர்பில்லை  என்று  கூறிய  அது,  ஜனவரி  18  பேரணியில்,  ‘டிஏபி  தலைவர்களின் …

தம்மை தாக்கிய அம்னோகாரரை மன்னித்து விட்டார் கமலநாதன்

  தம்மை தாக்கிய உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு உதவி செயலாளர் முகமட் ரிஸுவான் சுகாய்மியை துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் மன்னித்து விட்டார். இவ்விவகாரம் தமக்கும் அவருக்கும் இடையிலானதாகும். நடந்த சம்பவம் நோக்கமற்ற உணர்ச்சி வசப்பட்ட செயல் என்று அவர் கூறினார்.

பதற்ற நிலை மே 13 அளவை நெருங்கி விட்டது, அன்வார்…

  இந்நாட்டில் பதற்ற நிலை மே 13 க்கு முந்திய கலவர அளவை எட்டியுள்ளது என்று கூறிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆளும் கூட்டணியுடன் ஒரு தேசிய உடன்பாடு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "மே 13, 1969 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேசிய பேரிடருக்குப் பின்னர் இப்போது…

“சுகாதாரமற்ற” சூழ்நிலையால் உதயகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்

  காஜாங் சிறைச்சாலையில் நிலவும் சுகாதாரமற்ற சூழ்நிலையால் தாம் சொறி சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடியும் தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். மரண தண்டணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதில் ஜனவரி 15 ஆம்…

பாஸ் இளைஞர்: காலிட்-அஸ்மின் மோதல் பக்கத்தானின் தோற்றத்தை பாதித்துள்ளது

  சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பக்கத்தானுக்கு பாதகமான விளம்பரத்தை தரும் என்பதால் அவர்கள் தங்களுக்கிடையிலான வேறுபாட்டை களைய வேண்டும். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர்…

“அல்லா” தடை சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது

  தமது 10 அம்சத் திட்டம் முஸ்லிம்-அல்லாதவர்கள் 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநில சட்டங்களுக்கு ஆட்பட்டது என்று பிரதமர் நஜிப் அறிவித்த அடுத்த நாள் அச்சட்டங்களுக்கு முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "மாநிலங்களின்…