உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது: மன்மோகன் சிங் உறுதி
இந்தியாவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 1991-ம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற ஏற்றுமதி - இறக்குமதியில் நிலையின்மை பிரச்னை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)…
லஷ்கர் பயங்கரவாதி கைது
மும்பை, ஹைதராபாத், தில்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் (எ) துண்டா (70) கைது செய்யப்பட்டார். நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியும், தேடப்படும் முதல் 20…
இந்திய தளத்தை அமெரிக்க உளவு விமானங்கள் பயன்படுத்த நேரு அனுமதித்தார்
அமெரிக்க உளவு அமைப்பின் விமானங்கள் இந்தியாவில் உள்ள விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னாள் பிரதமர் நேரு அனுமதி அளித்தது இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பிடம் இருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆவணக்…
கனடா நகர சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்
கனடாவில் வின்னிபெக் நகரில் உள்ள சாலை ஒன்றுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 67வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடந்த விழாவில் வின்னிபெக் நகர மேயர் சாம் காட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மனித உரிமைகள் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவது…
இந்திய ரூபாயும், பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவு
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளால், நாட்டின் பங்குச் சந்தைகள் வெகுவாகச் சரிந்துள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சிகண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 700 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. வர்த்தக முடிவில் 18,600 புள்ளிகள் என்ற அளவை அது எட்டியுள்ளது. இதனால் இன்றைய…
கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் மதுரையில் கைது
மதுரையிலிருந்து கச்சத்தீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப்போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர்…
நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து விவாதிக்கத் தயாரா?
நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து விவாதிக்கத் தயாரா என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து புஜ்ஜில் உள்ள கல்லூரியின் சுதந்திர தினவிழாவில் மோடி பேசியது: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா மீது தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் துணிச்சலான நடவடிக்கையை…
எல்லைப் பிரச்சினை : கலக்கத்தில் மோரே தமிழர்கள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கும் மியான்மாருக்கும் இடையேயான எல்லையில் முள்வேலிகளை அமைக்கும் பணியில் இந்தியத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பணியில் பெருமளவு முடிந்த நிலையில், எல்லப்புறத்தில் இருக்கும் மோரே நகரில் வசிக்கும் தமிழர்கள் கலக்கமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. எல்லைகள் குறிக்கப்பட்டு அந்தப் பகுதியிலும் வேலிகள் அமைக்கப்படும் போது மோரே…
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: சிறப்பு தூதர் தேவையில்லை
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்க சிறப்பு தூதர் தேவையில்லை என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வன்முறைச் சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தமாட்டோம் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.…
முல்லை பெரியாறு அணையை இடிக்க உத்தரவிட முடியாது
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு கருத்துத் தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சந்திரமௌலி குமார் பிரசாத், மதன் பி. லோகுர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்னிலையில் புதன்கிழமை…
தமிழகத்தில் கொத்தடிமைகளாக உள்ள ஆயிரக்கணக்காவர்களை மீட்க மாநிலம் தழுவிய செயல்திட்டம்…
இந்தச் செயல்திட்டத்தை யுனிசெஃப் உட்பட பல அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துள்ளன. மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது பல்வேறு புதிய வடிவங்களில் கொத்தடிமை முறை வளர்ந்துள்ளதாக யுனிசெஃப் அதிகாரியும் இந்தத் திட்டத்தில்…
இந்திய நீர்மூழ்கி கப்பலில் தீ : 3 அதிகாரிகள் உட்பட…
மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பான கப்பல் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலுக்குள் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஐஎன்எஸ்…
பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது திருமலை
ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வராததால் செவ்வாய்க்கிழமை திருமலை வெறிச்சோடிக் காணப்பட்டது. திருமலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கடந்த 38 வருடங்களாக ஆந்திர போக்குவரத்துத் துறை திருமலைக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால்…
அமைதிப் பேச்சு: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா
பாகிஸ்தானிடமிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்திருந்தாலும், வன்முறையும் பயங்கரவாதமும் இல்லாத சூழலில் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எல்லையில் 5 வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா பாகிஸ்தானிடையே அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையை பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய வெளியுறவுத்…
மணிப்பூரை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் போராட்டம்: இயல்பு…
மணிப்பூர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மணிப்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் நாகா பிரிவினர் தனி மாநிலம் கோரி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்காரணமாக அங்கு…
இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா. தலையிடும்: பான் கி-மூன்
இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி-மூன், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் எடுத்துவரும் முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் அவர், அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியதாவது: ""எல்லையில் நடந்த…
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்: ஏ.கே.அந்தோனி
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏ.கே.அந்தோனியிடம் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து…
அடம் பிடிக்கும் இலங்கையால் பாதிப்பு : பிழைப்பு தேடி கேரளா…
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில், 56 நாட்களாக வாடும் மீனவர்களை விடுவிக்காமல், அந்நாட்டு அரசு பிடிவாதமாக இருக்கிறது. பயத்தில் மீன் பிடிக்க செல்வதற்கு படகு உரிமையாளர்கள் பலர் முன்வராததால், வேலையின்றி தவிக்கும் தமிழக மீனவர்கள், கேரளாவுக்கு செல்கின்றனர். மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம்,…
மணல் மாபியாவை அழிக்க வந்த “பெண் கடவுள்’
இன்று நாடு முழுவதும், பரபரப்பாகப் பேசப்படும் பெயர், துர்கா சக்தி நாக்பால். 28 வயதே நிரம்பிய, இந்த இளம் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் துணிச்சலும், போராட்ட குணமும், அவரை, நாட்டின் மிகப் பெரிய வி.ஐ.பி.,யாக்கி உள்ளது. உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், துணை கலெக்டராக பணியாற்றிய துர்கா, அங்கு,…
காங்கிரஸூக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்
காங்கிரஸூக்கு எதிராக இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று குஜராத் முதல்வரும், பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவருமான நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பரம்பரை ஆட்சிக்கு நாம்…
எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு…
ஆந்திரத்தின் 8 வட்டங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும்!
தமிழர்கள் அதிகம் வாழும் ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும்…
கோர்காலாந்து தனி மாநில கோரிக்கை: போராட்டக்காரர்களுக்கு மம்தா கெடு
கோர்காலாந்து தனி மாநிலம் கோரி நடந்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை 72 மணி நேரத்துக்குள் நிறுத்தாவிட்டால் கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மேற்கு…