தம் தொகுதியில் நாச வேலைகள் பெருகிவிட்டதாக சட்டமன்ற உறுப்பினர் முறையீடு

பினாங்கு   கெபுன்   பூங்கா   தொகுதி்   சட்டமன்ற  உறுப்பினர்   அவரது    தொகுதியில்    “தீ  வைப்போர்,  நாச  வேலை  செய்வோர்,  அரசியல்  எதிரிகள்  பெருகிவிட்டனர்”   என்கிறார். அத்தீய   சக்திகள்   2013இலிருந்து   அத்தொகுதியில்    தாம்   செய்து  வரும்  நற்பணிகளைக்  கெடுக்கும்  முயற்சியில்   ஈடுபட்டு  வருவதாக   சியா   கா  பெங் (பிகேஆர்-  கெபுன்  பூங்கா)…

மரியாவைப் பாராட்டிய அன்வார் கைது செய்யப்படுவதினின்றும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்றார்

பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா    தடுப்புக்  காவலில்   வைக்கப்பட்டிருப்பதற்குக்  கண்டனம்    தெரிவிப்போர்   வரிசையில்   தற்போது  சிறையில்   உள்ள  பிகேஆர்   ஆலோசகர்   அன்வார்  இப்ராகிமும்   சேர்ந்து  கொண்டிருக்கிறார். மரியாதைக்குரிய   ஒரு   சிவில்   அமைப்புத்   தலைவரான   மரியா  போன்ற  ஒருவரே  பாதுகாப்புச்   சட்டத்தின்கீழ்   தடுத்து   வைக்கப்படும்போது    அதே  நிலை  மற்ற …

மரியாவின் “ஆட்கொணர்” மனு செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது

  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர் மனுவை செவிமடுக்கும். நீதிபரிபாலன ஆணையர் நோர்டின் ஹசான் அவரது அறையில் இந்த முடிவைச் செய்தார். இதற்கு முன்னர் போலீஸ் அதிகாரி தாம் லாய் குவான் மரியாவின் மகன் அஸுமின் முகமட் யுனூஸ் தாக்கல்…

ஐஜிபி: போலீஸ் திடீர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்…

  சோஸ்மா சட்டத்தின் கீழ் பெர்சே தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் நோக்கம் அல்லது சமீபத்தில் நடத்தப்பட்ட பேரணி காரணமல்ல என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் கூறினார். இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட "குழப்பம்" களையப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள…

நாடாளுமன்றத்தில் ஊழல்: லிப் எங் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற   வளாகத்தில்   வாகனங்களை  நிறுத்த  கையூட்டு   கொடுக்க   வேண்டியிருப்பதாகக்   கூறி   மக்களவையில்   பரபரப்பை   உண்டு  பண்ணினார்   லிம்  லிப்   எங்  (டிஏபி- செகாம்புட்). “பொதுமக்களில்  சிலர்   இங்கு  கார்களை  நிறுத்த   முனைகிறார்கள்.   முடிவதில்லை.   ஏனென்றால்   கார்  நிறுத்த   இடங்கள்  இருப்பதில்லை.   பாதுகாவலர்கள்    கார்  நிறுத்தும்   இடங்களை   அடைத்து  வைத்து  …

கிட் சியாங்- மகாதிர் கூடிக்குலாவுவது ‘பல்டி அடிப்பின்’ உச்சக்கட்டம்

டாக்டர்  மகாதிர்   முகம்மட்    தம்மை   இதுகாறும்   குறைகூறி  வந்துள்ள   லிம்  கிட்   சியாங்குடன்   அரசியல்   கூட்டு   வைத்துக்   கொண்டிருப்பது   அரசியல்  ‘பல்டி- அடிப்பு’க்கு    நல்ல   எடுத்துக்காட்டு   என   அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   அப்துல்   ரஹ்மான்  டஹ்லான்    கூறினார். பாதுகாப்புக்  குற்றச்    சட்டம்     பயன்படுத்தப்பட்டது   குறித்து    அறிக்கை  வெளியிட்டிருக்கும்  லிம் …

மகாதிர் அன்வாருடன் நட்பு பாராட்டுவதை நினைத்து வெட்கப்படுகிறாராம் இப்ராகிம் அலி

பெர்காசா  தலைவர்   இப்ராகிம்  அலி,      முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்    சிறைவாசத்தில்   உள்ள     அன்வார்  இப்ராகிமுடன்   மீண்டும்   நட்பு  கொண்டிருப்பதை   எண்ணி    வெட்கப்படுகிறாராம். அதனால்தான்  இப்ராகிம்   அலி,   மகாதிரின்  கட்சியான   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா( பெர்சத்து)வில்   சேரவில்லையாம்.   முன்னாள்   தகவல்   அமைச்சர்   சைனுடின்   இப்ராகிம்   அவரது …

மகளிர் அமைப்புகள் ‘மரியாவுக்காக நடைப்பயணம்’

இன்று    காலை   சுமார்  300  பேர்,  பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவின்    விடுதலைக்காக    பாடாங்  மெர்மோக்கிலிருந்து   நாடாளுமன்றத்தை   நோக்கி  நடைப்பயணம்   சென்றனர். பல்வேறு  மகளிர்  அமைப்புகளைச்   சேர்ந்த    அவர்கள்   கருஞ்சிவப்பு,  பெர்சேயின்  மஞ்சள்  நிற  ஆடை  அணிந்து   காலை  மணி  10.45க்கு   நடைப்பயணத்தைத்   தொடங்கி    20  நிமிடங்களில்   நாடாளுமன்றத்தைச்  …

இப்ராகிம் அலியின் நண்பராக இருப்பதற்கு வெட்கப்படும் மகாதிர்

  மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடி வரும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தமது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் தாம் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். "நான் வெட்கப்படுகிறேன். அவர் எனது நண்பர், ஆனால் அவர் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் சேர மறுக்கிறார் ஏனென்றால் நாங்கள் டிஎபியுடன்…

ஹாடியின் மசோதா இவ்வாரம் தாக்கல் செய்யப்படும், ஸாகிட் கூறுகிறார்

  ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தம் செய்வதற்கான மசோதா நாளை அல்லது வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இச்சட்ட திருத்த மசோதாவை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்தார். இத்திருத்தங்கள்…

மரியாவை சோஸ்மாவின் கீழ் கைது செய்ததின் மூலம் அரசாங்கம் அளித்திருந்த…

  அரசாங்கம் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012ஐ (சோஸ்மா) தவறாகப் பயன்படுத்தாது என்று வாக்குறுதி அளித்திருந்தது. பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை அச்சட்டத்தின் கீழ் கைது செய்ததின் மூலம் அரசாங்கம் அந்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். "அந்த எழுத்து…

மரியாவை ஒருநீதிபதியின் முன்கொண்டுவரக் கோரும் ஆட்கொணர் மனு தாக்கல் செய்யப்பட்டது

  சோஸ்மா சட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் தம்மை நீதிபதியின்முன் நிறுத்தக் கோரும் ஆட்கொணர் (Habeas-corpus) மனுவை இன்று தாக்கல் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவரை ஒரு நீதிபதி அல்லது நீதிமன்றத்தின்முன் கொணர்ந்து அவர் உண்மையிலேயே சிறையிலடைக்கப்பட…

4 நாள் குளிக்காமலிருந்த ஜமால் ‘பெர்சே 7’ தொடங்குகிறார்

சிவப்புச்  சட்டைகள்    தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்    நான்கு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டிருந்தார்.  அந்த   நான்கு   நாள்களும்  அவர்  குளிக்கவில்லை. இன்று  அம்பாங்   போலீஸ்   தலைமையகத்தில்   விடுவிக்கப்பட்டதும்   செய்தியாளர்களைச்   சந்தித்ததும்    ஜமால்  முதலில்   சொன்னது  இதுதான்:   “நான்கு   நாள்களாக    நான்  குளிக்கவில்லை”. நான்கு  நாள்   குளிக்காமல்   தடுப்புக்  காவலில்  …

ஜமாலும் சிவப்புச் சட்டையினரும் விடுவிக்கப்பட்டனர்

தடுத்து  வைக்கப்பட்டிருந்த   பெர்சே  எதிர்ப்பாளரும்    சுங்கை  புசார்  அம்னோ   தலைவருமான   ஜமால்   முகம்மட்  யூனுஸ்    விடுவிக்கப்பட்டார். பெர்சே  பேரணியை   எதிர்க்கும்  சிவப்புச்   சட்டை   இயக்கத்தின்    தலைவரான  ஜமால்    கடந்த  சனிக்கிழமை   அதிகாலை   கைது  செய்யப்பட்டார். விசாரணைக்காக   அவரையும்   அவருடன்  கைதான   மேலும்   மேன்று   சிவப்புச்  சட்டையினரையும்    நான்கு  நாள் …

மரியா தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பினாங்கு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம்

பினாங்கு  முதலமைச்சர்   லிம்  குவான்   எங்,     பாதுகாப்புக்  குற்ற (சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டத்தையும்   அதன்கீழ்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதையும்   கண்டிக்கும்   தீர்மானம்  ஒன்றை   பினாங்கு   சட்டமன்றத்தில்   தாக்கல்   செய்தார். மூன்று  பிள்ளைகளுக்குத்   தாயாரான   மரியா  ஒரு பயங்கரவாதியோ   அரசியல்வாதியோ   அல்ல    என்று  லிம்  குறிப்பிட்டார். …

பாஸ் எம்பி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்

பாஸ்   பொக்கோக்   சேனா   எம்பி   மாபுஸ்   ஒமார்,   சனிக்கிழமை  பெர்சே  5  பேரணியில்   கலந்துகொண்டதற்காகக்    கட்சி   என்ன   நடவடிக்கை   எடுத்தாலும்  அதை   எதிர்கொள்ள  ஆயத்தமாக  உள்ளார். பெர்சே    5  பேரணியில்   கலந்துகொண்ட   கட்சி   உறுப்பினர்களுக்கு   எதிராக   நடவடிக்கை   எடுக்கப்படும்   என   பாஸ்  கட்சித்   தலைவர்   அப்துல்  ஹாடி  ஆவாங்   …

பிபிஎஸ் மீதான அமைச்சரின் உத்தரவை இரத்துச் செய்வதில் பினாங்கு அரசு…

தன்னார்வ   காவல்  படை(பிபிஎஸ்)   ஒரு  சட்டவிரோத  அமைப்பு   என்று   உள்துறை    அமைச்சு    அறிவித்திருப்பதை   இரத்துச்   செய்யும்  முயற்சியில்  பினாங்கு   அரசு   தோல்வி  கண்டது. பினாங்கு   அரசு  செய்து  கொண்ட  மனுவைத்   தள்ளுபடி   செய்த    பினாங்கு  உயர்  நீதிமன்ற  நீதிபதி   ஹதாரியா   சைட்  இஸ்மாயில்    பிபிஎஸ்  ஒரு  கழகம்   என்று …

மரியாவை விடுவிக்கக் கோரி எம்பிகள் புக்கிட் அமானுக்குப் படையெடுப்பு

சுமார்  40  எதிரணி     எம்பிகள்,   சோஸ்மா   சட்டத்தின்கீழ்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவை   விடுவிக்கக்  கோரி     புக்கிட்   அமான்  போலீஸ்  தலைமையகம்  நோக்கி   இன்று  ஊர்வலம்  சென்றனர். நாடாளுமன்ற  நுழைவாயிலிலிருந்து  புக்கிட்   அமான்வரை   'Bebaskan Maria' (மரியாவை  விடுதலை  செய்), 'Hentikan Sosma' (சோஸ்மாவை  …

ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: சட்ட திருத்தங்கள் மார்ச்/ஏப்ரல் 2017 இல்தான்…

  ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் இந்திரா காந்தி பெருந்துன்பத்திற்கு ஆளானார். அவரது மூன்று குழந்தைகளும் அவரது ஒப்புதல் இல்லாமலே இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரது கணவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் 2009 ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு…

ஒருதலைச்சார்பான மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டவரைவு

கணவன்/மனைவியரில்   ஒருவர்   இஸ்லாத்துக்கு   மதமாறிய  பின்னர்   எழும்  மணவிலக்கு,  பிள்ளை  பராமரிப்பு  விவகாரங்கள்    தொடர்பான   பிரச்னைகளுக்குத்   தீர்வு  காண்பதற்கு    விரிவான   சட்ட  திருத்தங்களைப்  பரிந்துரைக்கும்   சட்டமுன்வரைவு   இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யப்பட்டது. இச்சட்டத்  திருத்தங்கள்  இஸ்லாத்துக்கு  மதமாறிய   ஒரு  வாழ்க்கைத்   துணை    மணவிலக்கு  பெற   சிவில்   நீதிமன்றத்தில்   மனுச் …

எம்பி: மரியா பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டது ஏன்? விளக்கமளிப்பது…

பெர்சே   தலைவர்    மரியா   சின்   அப்துல்லாமீது   கொடூர  பாதுகாப்புக்  குற்றச்  சட்டம்(சோஸ்மா)  2012  பயன்படுத்தப்பட்டிருப்பது   குறித்து  விளக்கமளிக்க    மறுக்கும்   உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியை   எதிரணி   எம்பி   ஒருவர்   சாடினார். ஜாஹிட்   நேற்று,   உயர்நிலை  பாதுகாப்பு   மிரட்டல்களுக்கு  எதிராக   பயன்படுத்துவதற்காகக்  கொண்டுவரப்பட்ட   அக்கொடூரச்   சட்டம்   மரியாவைத்   தடுத்து …

பெர்சே பேரணி கைது: மேலும் அறுவர் விடுதலை, ஆனால் மரியா…

பெர்சே  பேரணியின்போது  கைதானவர்களில்  மூன்று  பக்கத்தான்  ஹராபான்  பிரதிநிதிகளும்   மூன்று  சமூக   ஆர்வலர்களும்   இன்று  விடுவிக்கப்பட்டனர். “டாங்   வாங்கி   போலீஸ்  நிலையத்தைவிட்டுப்  புறப்படுகிறோம்”  என  பத்து   எம்பி   தியான்   சுவா  டிவிட்டரில்   குறிப்பிட்டிருந்தார்.  அவர்    ஒரு   படத்தையும்  பதிவேற்றியிருந்தார். அதில்  அவருடன்  அம்பாங்   எம்பி   சுரைடா   கமருடின்,   பாசிர் …

பெர்சேக்கு ஆதரவு தேட தேவாலயம் சரியான இடமல்ல -கெராக்கான் இளைஞர்கள்

கெராக்கான்    இளைஞர்    தலைவர்   ஒருவர்,   சமயத்தை    அரசியலுடன்     கலக்காதீர்   என்று   பெர்சே  5 பேரணியில்   கலந்துகொள்ளுமாறு   ஊக்குவித்த   தேவாலயங்களுக்கு  நினைவுறுத்தினார். கடந்த   வாரம்  சில   தேவாலயங்கள்   பேரணி   நடப்பதற்கு  முன்னதாக  வழிபாட்டுக்   கூட்டங்களை   நடத்தி  குறிப்பிட்ட   ஒரு   தரப்பினருக்கே   ஆதரவு   தெரிவித்ததாக  கெராக்கான்  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி …