பிரதமர்: மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை

மலேசியாவில் மகளிருக்கு தொடக்க காலத்திலிருந்தே சம நிலை கொடுக்கப்பட்டு வந்துள்ளதால் " மலேசியாவில் மகளிர் உரிமை போராட்ட அமைப்புக்கள் தேவை இல்லை" பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டுள்ளார். அவர் இன்று காலை 50வது தேசிய மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அந்த வகையில்…

பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் அவையில் இல்லாதது குறித்து கேள்வி…

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை மக்களவையில் தொடக்கி வைத்தார். அப்போது மக்களவையில் பிரதமர் நஜிப் காணப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். "பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் இங்கு இருப்பதுதான் வழக்கம். ஆனால் விவாதத்திற்கு…

பிரதமர்: புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட…

புக்கு ஜிங்கா- பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை பொருத்தமான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதே வேளையில் பிஎன் கொள்கைகள் நிரூபிக்கப்பட்டவை என்றார் அவர். "புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது," எனக் கூறிய அவர் கோலாலம்பூரில் 44வது…

குவான் எங்: பினாங்கின்மீது நஜிப்புக்கு அன்பு இல்லை

2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். “பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப்…

தேர்தலுக்கு முன்னர் பிரதமர் அன்பளிப்புக்களை அறிவித்துள்ளார்

அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்காளர்களுக்கு நட்புறவான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனல்…

நஜிப்:ஜார்ஜ் கெண்ட் எல்ஆர்டி வேலைக்குப் பொருத்தமான நிறுவனம்

பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக்,  அம்பாங்கில் எல்ஆர்டி விரிவாக்க திட்டத்துக்கான குத்தகையைப் பெற்றுள்ள ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.அந்நிறுவனம் அக்கட்டுமான வேலைக்குப் பொருத்தமற்றதென்று கூறப்படுவதை அவர் மறுத்தார். ரிம1.084பில்லியன் குத்தகை வேலையை மேற்கொள்ளும் தகுதி லயன் பசிபிக்குடன் கூட்டாக செயல்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு…

நஜிப்: சட்டச் சீர்திருத்தங்கள் மனித உரிமைகளுக்கு நட்புறவானவை

"நான் சொல்வதை வைத்து என்னை எடை போட வேண்டாம், நான் செய்வதை வைத்து தீர்ப்புக் கூறுங்கள்" என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டச் சீர்திருத்தங்கள் வழி தாம் பல முனைகளில் மனித உரிமைகளை நிலை நிறுத்தியுள்ளதாக  அவர் சொன்னார். நஜிப் இன்று காலை…

தேர்தல் நாள் தேர்வு அவ்வளவு சிரமமானதா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல், நஜிப் துன் ரஸாக், நாட்டின் 13வது பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க…

‘நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ என்கிறார் நஜிப்

இந்த நாட்டின் எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அதனால் அதனைப் பணயம் வைக்கக் கூடாது. நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது 'பாவம்' (pantang) என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அம்னோ தலைவருமான அவர் நேற்று ஜோகூர் அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசினார். 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி…

தாயிப் கோடீஸ்வரர் (billionaire) எனக் கூறப்படுவதை பிரதமர் நிராகரிக்கிறார்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை சேர்த்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். "எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை," என அவர் இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார். 15…

நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணைக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிறையச்…

பிஎன், அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னொரு தவணைக் காலத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் வழி பிஎன் நாட்டுக்கு இன்னும் நிறைய வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என அவர் சொன்னார். "என்னை நம்புங்கள். மக்கள் ஆதரவுடன் நாட்டை…

நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.

பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். "பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு…

‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’

அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார். அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர் என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு நஜிப் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில்…

கிட் சியாங்: விலகுவதாக தாயிப் அளித்த வாக்குறுதியை நஜிப் உறுதி…

சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சரவாக் மக்கள் இப்போது 'அரசியல் நிலைத்தன்மை,…

மாணவனின் தந்தையைச் சந்திக்கப் பிரதமர் தயார் ஆனால்…

ஆகஸ்ட் 30ம் தேதி மெர்தேக்காவுக்கு முந்திய தினத்தன்று ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தின் போது ஆபாசமான முறையில் கல்லூரி மாணவர் ஒருவர் நடந்து கொண்டது தொடர்பில் அந்த மாணவருடைய தந்தையைச் சந்திக்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருக்கிறார். நஜிப், அவரது மனைவி, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…

பிரதமர்: பக்காத்தானை நிறுத்த ‘சாலைத் தடுப்பை’ போடுங்கள்

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு எதிர்த்தரப்புக் கூட்டணி முயலுவதை முறியடிக்க 'அரசியல் தடையை' அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களும் கூட்டாக ஏற்படுத்த வேண்டும் என நஜிப் ரசாக் இன்று கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்யும் போது பிஎன் கூட்டணி பெரிய அளவிலும் பெருமிதத்துடனும் வெற்றி அடையும்…

மெர்தேக்கா பேரணி மகத்தான வெற்றி என நஜிப் பெருமிதம்

புக்கிட் ஜலில் அரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற 'Janji Ditepati' வெற்றி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அதற்கு முந்திய நாளைப் போல் அல்லாது அந்தக் கூட்டம் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்தது என அவர் சொன்னார். ஆகஸ்ட் 30ம் தேதி இரவு டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழ்ந்த 'Janji…

“நஜிப்பும் அவர் மனைவியும் கேலி செய்யப்பட்டனர்”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் படங்கள் மீது தமது குதத்தைக் காட்டிய பேரணி பங்கேற்பாளர் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என ‘Janji Demokrasi’ பேரணி ஏற்பாட்டாளர்கள் இன்று கூறியுள்ளனர். [காணொளி] நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் கூடியிருந்த இடத்துக்கு எதிர்ப்பக்கத்தில் அந்தச் சம்பவம்…

மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர். “அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே…

நஜிப்பையும் அன்வாரையும் சந்திக்க விரும்புகிறார் வேதமூர்த்தி

இம்மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பிய  இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் தனித்தனியே சந்தித்து இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது பற்றி விவாதிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி கேட்டு இருவருக்கும் எழுதியிருக்கிறார். “அப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண அன்றும்…

‘நஜிப், யூத சார்புடைய ஏஜண்டை நியமித்தது பற்றி விளக்குங்கள்’

அனைத்துலக நிலையில் மலேசியாவின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக யூத சார்புடைய ஆலோசகர் நிறுவனத்தின் சேவையை தமது நிர்வாகம் நியமித்ததற்கான காரணத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது. அண்மையில் யுஎஸ் கார்டியன் பத்திரிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்டுரையாளர் ஜோசுவா டிரெவினோவுடன் வேலை செய்வதற்குப் பதில்…

இணையக் கொத்தர் ( Hacker) அன்வாரை நஜிப்பிடம் ‘மன்னிப்பு’ கேட்க…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ வலைப்பதிவுக்குள் நேற்றிரவு ஊடுருவிய  இணையக் கொத்தர் ஒருவர் அந்த பிகேஆர் மூத்த தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறும் போலி நோன்புப் பெருநாள் செய்தியை பதிவு செய்துள்ளார். அந்தச் செய்தி இல்லை என உறுதி செய்த பின்னர்…