இரண்டு நாட்களுக்கு முன்பு செனாய் விமான நிலைய நகரமான தாமான் எகோ பெர்னியாகான் 2 இல்(Taman Eko Perniagaan 2, Senai Airport City) உள்ள ஒரு வளாகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக நிறுவியதாக நம்பப்படும் ஒரு சீன நாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப்ரஹ்மான்…
இடைநிலைப்பள்ளிகளில் மீண்டும் இண்டர்லோக்; தொடர்கிறது போராட்டம்!
கிள்ளான் மாவட்டத்தின் நான்குக்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகளில் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை பெற்றோர் ஆசியர் சங்கம் உட்பட இந்திய அமைப்புகள் கண்டித்துள்ளன. கிள்ளான் மாவாட்டத்தில் எஸ்எ.ம்.கே ராஜா மஹாடி, எஸ்எம்கே ஷா பண்டார் மற்றும் எஸ்.எம்.கே ஸ்ரீஅண்டளாஸ் ஆகிய மூன்று பள்ளிகளும் இண்டர்லோக் நாவலை மாணவர்களுக்கு…
டிப்ஸ்: போதையிலிருந்து விடுபட எளிய வழிகள்!
போதையால் வாழ்க்கைப் பாதை மாறியவர்களின் மனம் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தால் அந்தப் பழக்கங்களில் இருந்து மீள்வது சுலபமே. அதற்கான எளிய வழிகள் இங்கே... * போதை தீமையானது என்பதை முதலில் உணருங்கள். அதனால் உங்கள் குடும்ப நிலை பாதிக்கப்பட்டிருப்பதை சிந்தித்துப் பாருங்கள். பிறகு "நான்…
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்!
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி, அந்நாட்டு தலைமையமைச்சர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் பாகிஸ்தான் நிருபர் ஆமீர் அஹமது கான். "பாகிஸ்தானின் சிவில் மற்றும்…
ஸ்ரீ லங்காவில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு!
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் உள்ள ஆரையம்பதிக் கிராமத்திற்கும் முஸ்லீம் நகரமான காத்தான்குடி-க்கும் எல்லையில் அமைந்துள்ள சுவாமி விவேகாந்தரின் உருவச்சிலை நேற்று (செவ்வாய்கிழமை) காலை சரியாக 10 மணியளவில் மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி…
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு : 35 பேர் பலி!
வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் சந்தை தொகுதியொன்றில் குண்டு வெடித்ததில் 35 பேர்ம பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர். பாகிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் சந்தை. அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம்…
பதவி விலக முடியாது; எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன்:…
சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை…
ராஜபக்சேவின் மைத்துனர் மீது செருப்பு வீச்சு!
இராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் தங்கை கணவர் மீது செருப்பு வீசப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ராஜபக்சேயின் தங்கையின் கணவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவரின் வருகையை அறிந்த அங்குள்ள ம.தி.மு.க. மற்றும் தமிழர் அமைப்பு கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலில் சடங்குகள் முடிவடைந்த…
நக்கீரன் பணிமனை அடித்துநொறுக்கப்பட்டது; அதிமுக மீது குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை பணிமனை, மாநிலத்தை ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நக்கீரன் பத்திரிகைக்கு எதிராக அதிமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நக்கீரன் இதழ்கள் கொளுத்தப்பட்டதாகவும், நக்கீரன் பத்திரிகையை விற்ற கடைகள் மீ்தும் தாக்குதல்…
தேசிய முன்னணி நம் சமுதாயத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது!
[Karanraj Sathianathan] தேசிய முன்னணி இந்திய தலைவர்கள் திரும்பவும் திரும்பவும் இந்த அரசாங்கம் நாம் கேட்பதெல்லாம் செய்கிறது. நஜிப் மிகவும் சிறந்த பிரதமர் என்றும் கூறிவருகிறார்கள். தேசிய முன்னணி அரசாங்கம் நம் சமுதாயதிற்கு நிறைய வேலை, கல்வி, வியாபார வாய்ப்புகளை தருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். இப்பொழுது நமது…
தங்கத்தை தேடும் ஆசையில் 25 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 25 பேர் பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டோனா தீவில் நாப்னாப்பேன் பகுதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக தங்க கனிமத்தை தேடும் பணியில்,…
எதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டதால் தமிழ் இளைஞன் தற்கொலை!
தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலம்பெயர்ந்து சென்றாலும் தஞ்சமடைந்த நாட்டினால் எதிலி அந்தஸ்து நிராகரிக் Read More
தமிழ்ப்பள்ளிகளின் நிலப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சேவியர்
தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதுவரை தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவுசெய்யப்படாமல் உள்ள நிலங்களை அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்வதற்கு சிலாங்கூர் அரசாங்கம் மூலம் நடவடிக்கை…
அரசியல் கைதியாக 32 வருடங்கள்! எதற்காக?
ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக 32 வருடங்கள் இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போ (70) என்பவர் யார்? எதற்காக இந்த தண்டனை? 1963-ல் பல அரசியல் போராளிகள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். அப்படி தடுத்துவைக்கபட்டவர்களில் ஒருவருக்கு மாற்றாக தேர்தலில் நின்ற …
கல்வி என்பது எதற்கு?
நமது அடிப்படை கல்வி அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான். மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில்…
நாடோடிகளாகி.. அகதிகளாகி… எதிர்காலம் கேள்விக் குறியாகி
உள்நாட்டின் போரினால் 1976 மற்றும் 1977 களில் அகதிகளாக வந்த வியட்னாமியர்களுக்கு, மறு குடியேற்றம் நிச்சயிக்கப்படும் வரை எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, வந்த போஸ்னியா, பாலஸ்தீன், மியன்மார் மக்களுக்கும், வெளிநாட்டினர் மெச்சும்படி எல்லாவசதிகளோடு பலருக்கு நிறந்தர வசிப்பிடத் தகுதி…
சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது
சிங்கப்பூரில் அந்நாட்டு தலைமையமைச்சர் லீ சியன் லூங்-கால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புதிய சம்பள வீதங்களின் அடிப்படையில் அவர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்களில்…
IS RAJA PETRA COLLUDING WITH UMNO?
My feelings of disappointment and rage upon seeing the latest RPK collusion with the UMNO press to denigrate Anwar and Pakatan Rakyat were quickly tempered by my wife’s daily email supplement to me: Today’s Contemplation:…
தெற்கு சூடானில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தெற்கு சூடானில் உள்ள பிபோர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பமானதை அடுத்து அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். போட்டிப் பழங்குடியின குழுக்களின் போராளிகள் நெருங்கி வருவதையிட்டு கிராம மக்கள் தமது உயிரை காப்பாற்ற தப்பிச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய…
கொள்கையில் மாற்றமில்லை என்கிறது வடகொரியா
வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கொள்கையில் பெரிய மாறுதலை எதிர்பார்க்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்துக்கு அந்த நாடு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைவராக இருந்த கிம் ஜாங் இல் மரணமடைந்து அவரது இறுதி நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிறகு நாட்டின் அதியுயர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அவரது மகன்…
‘தானே’ புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய 'தானே' என்ற புயலாலும் அப்புயலின் காரணமாகப் பெய்த கடும் மழையாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. புயல் ஏற்படுத்திய பெரும் சேதங்கள் காரணமாய் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, அரசாங்கம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க…
அரபு லீக் பிரதிநிதிகள் கண் முன்னால் லட்சக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் நிலவரத்தை அரபு லீக் பிரதிநிதிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 35 பேர் பலியாகினர். சிரியாவில், மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறை குறித்து, அரபு லீக்…
இலங்கை செல்கிறார் அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம், இலங்கை செல்லவுள்ளதாக இந்திய தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் 20-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இவர் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டாக்டர்…
அடுக்குமாடி மாடும்! கோவணம் வாங்க பணமும்!
[கா. ஆறுமுகம் ] முனுசாமியும், முனியம்மாவும் மலேசியாவில் பிறந்திருந்தும் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இவரோடு சண்முகம், குப்பன், சுப்பன், பெருமாள், அஞ்சலை, மாலதி, பவாணி என்று இன்னொரு 42,000 மலேசிய இந்தியர்களுக்கும் இதே கதிதான். அதேவேளை அண்மையில் குடியேறிய ஆயிரக்கணக்கான அயல் நாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமைகளை வழங்கியுள்ளது.…


